Apr 15, 2006

பொட்டி வந்தாச்சு! (15Apr06)

பொட்டி வந்தாச்சு! இப்போ பாருங்க!

தேர்தல் வந்ததால் யாருக்கு பயனோ யாருக்கு நஷ்டமோ தெரியவில்லை, பினாத்தலின் பாடு யோகமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

நமது தலைவர்களின் பேச்சுக்களும் அறிக்கைகளும் "மாத்த வேணாம், அப்படியே சிரிச்சுக்கலாம்" வகை நகைச்சுவைதான் என்றாலும், நக்கல் நையாண்டிக்கு தேர்தல்காலக் காட்சிகள் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து, தூக்கத்தைத் துரத்துகின்றன.

அடுத்த கட்டமாக, பினாத்தலார் முழுநீளத் திரைப்படங்கள் தயாரிப்பதில் இறங்கப்போகிறார்! முதல் கட்டமாக, கதையின் ஒன் லைன் (அப்படின்னா என்னாங்கோ?), சில வசனங்கள், முக்கியமாக, முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப்போகும் மூத்த தலைவர்களையும் தேர்ந்தெடுத்து விட்டார்.

தயாரிப்பாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் - வெற்றிக்கு நானும், என் சக வலைப்பதிவாளர்களும் உத்திரவாதம். (தோழர்களே, உங்களை நம்பிக் கொடுத்த வாக்கு - தவற விட்டுவிடாதீர்கள்)

நான்கைந்து படங்களுக்கான யோசனை தயாராக இருந்தாலும், கோப்பின் அளவு அதிகமாகப் போவதால், ஒவ்வோர் படமும் ஒவ்வோர் பதிவாக இடப்போகிறேன். இன்று:

DPA Talkies பெருமையுடன் வழங்கும் ஆய்த எழுத்து..

(ஸ்பீக்கர் ஆன் செய்து கொள்ளவேண்டும்.)

பார்த்து ரசியுங்கள்.

அடுத்த ரிலீஸ் - வைகோ, தயாநிதி மாறன் கலக்கும் "அன்னியன்"

7 பின்னூட்டங்கள்:

நன்மனம் said...

அய்யா சுரேஸு, எப்படி இப்பிடி கலக்கறீங்க, நல்ல வேல வீட்டுல பாத்தேன், வாய் விட்டு சிரிக்க வசதியா.

ஆவலுடன் அடுத்ததை எதிர் நோக்கும், .... மன்ற தலைவர்.

ஸ்ரீதர்

RS said...

ஹா ஹா ஹா... கலக்குங்க...

துளசி கோபால் said...

டைட்டில் மட்டும்தானா? சீக்கிரமா அடுத்த பகுதியைப் போடுங்க.

100 நாள் ஓடப்போகுது. வெற்றிக்கேடயம் தயார் பண்ணி வச்சுறவா?

Geetha Sambasivam said...

படம் நல்லாத்தான் இருந்தது. ஆனால் voice சரியாக இல்லை. மணிரத்னம் படம் என்பதால் இந்தப் பிரச்னை என்று நினைக்கிறேன். சரியான all rounder நீங்க. மத்த பட ரிலீஸும் தேர்தலுக்கு முன்னால் வெளியிடுங்க.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நன்மனம் ஸ்ரீதர்.

நன்றி சுந்தர் ராம்ஸ் (சுந்தர ராமசாமியே என் பதிவைப் படிக்கிறாரா?)

துளசி அக்கா - டைட்டில் எடுத்துட்டு, உங்களைப்போன்ற வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் உதவியோட முழுப்படமும் எடுத்துட வேண்டியதுதான்.. எப்ப பணம் அனுப்பறீங்க.

கீதா, மணிரத்னம் படமுன்னு சொல்லி எனக்கு ஒரு சப்பைக்கட்டுக்கு சான்ஸ் கொடுத்ததற்கு நன்றி. ஆனால் என் குரல் மிமிக்ரிக்கு ஒத்துவரவில்லை என்பதால் பொய்க்குரலில் பேசுவதால் வரும் பிரச்சினையே அது!

லதா said...

// DPA Talkies பெருமையுடன் வழங்கும் ஆய்த எழுத்து.. //

DPA என்றால் துபாய் பினாத்தல் அண்ணாச்சி தானே?
:-)))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி லதா.

எப்படியெல்லாம் சிந்திக்கறீங்கபா!நம்ம தொண்டர்களும் நம்ம ரேஞ்சைத் தாண்டிதான் இருக்காங்க!

 

blogger templates | Make Money Online