Apr 29, 2006

தேன்கூட்டில் ரோசாவசந்த்தும் சில பின்னூட்டங்களும். (29 Apr 06)

இந்தப்பதிவின் தலைப்பு உங்களைத் திசை திருப்புவதற்காக அல்ல.

இது நிறைய நாட்களாகவே நான் எழுத எண்ணியிருந்த விஷயம், இன்றைய தேன்கூட்டில் ரோசாவசந்தைப்பற்றி எழுதப்பட்டிருந்ததைப் படித்ததும் அதிகமாகத் தூண்டப்பட்டேன்.

ஒரு வலைப்பதிவரை எந்தப்பெயர் கொண்டு அழைப்பது? இது ஒரு முக்கியமான விஷயமா என சிலருக்குத் தோன்றலாம். நான் என்னையே முன்னிறுத்தி இதை அலசுகிறேன்.

என் முழுப்பெயர் சுரேஷ் பாபு என்று இருந்தாலும், பாபு என்று அழைப்பது என் குடும்பத்தினர் மட்டுமே. அவ்வாறு அழைப்பது என் குடும்பத்தினருக்கு மட்டுமே ஆன உரிமை என்று நான் நினைப்பதால், வேறு யாரும் என்னை அவ்வாறு அழைத்தால் நான் துணுக்குறுவேன் (அப்படின்னா என்ன சார்?), அதிக உரிமை எடுக்கப் பார்க்கிறார்கள் என்று நினைப்பேன்.

பினாத்தல் என்பது விளையாட்டாக ஆரம்பித்து, இப்போது சற்றுப் பிரபலம் அடைந்துவிட்ட நிலையில், வலையில் அறிமுகமான நண்பர்களோ, புதியவர்களோ கூட, பினாத்தல் என்று அழைத்தால் வித்தியாசமாக உணர்வதில்லை - அதே நேரத்தில் என்னை அலுவலகத்திலோ வீட்டிலோ யாராவது "பினாத்தல்" என்றால் நிச்சயம் கோபம் வரத்தான் செய்யும்.

என்ன சொல்ல வருகிறேன் என்பதை மிகவும் குழப்பவில்லை என்றே நினைக்கிறேன். யாரையும் அவர்கள் அறிவித்த, வெளிப்படையாக்கிய பெயரில் அழைப்பதே நியாயம். நமக்கு அவர் பற்றி அதிகம் தகவல்கள் தெரிந்திருக்கலாம், சிறு வயது பட்டப்பெயர்கள் தெரிந்திருக்கலாம், அவர் கணவன் / மனைவி அழைக்கும் செல்லப்பெயர்களும் தெரிந்திருக்கலாம் - ஆனால் பொதுவில் விவரிக்கும்போது அவர் பொதுவாக வைத்துள்ள, வெளிப்படுத்தியுள்ள பெயர் மூலமே அழைக்கவேண்டும் என்பது என் கருத்து.

ரோஸா வசந்த்தை தலைப்பில் இழுத்ததற்குக் காரணம் - தேன்கூட்டில் இன்று அவர் பெயரை அறிவித்து இருப்பது. அவர் பெயர் இதுதான் என்று அவருடைய ப்ரொபைலிலோ, எந்தப்பதிவிலுமோ அறிவித்திராத (அறிவிக்கவில்லை என்பது நான் பார்த்த வரையில்) நிலையில், இங்கேதான் அவர் பெயரை நான் பார்க்கிறேன். எனக்கு எந்தப் பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை எனினும், இந்தப்பெயர் ரோசாவின் பதிவுகளைப் படிக்கும் சில புதியவர்களின் மனதில் சில முன்முடிவுகளை ஏற்படுத்தக்கூடும், அது அவர் பதிவின் தாக்கத்தை கூட்டவோ குறைக்கவோ செய்யும் என்று நான் நினைக்கிறேன். தேன்கூடு அவர் அனுமதியுடன் இப்படி வெளிப்படுத்தியிருந்தால், இந்தப்பதிவுக்காக மன்னிப்புக் கோருகிறேன், உடனடியாக நீக்கியும் விடுவேன்.

தேன்கூடு இந்தப்பதிவைப்பார்த்து உடனடியாக நீக்கியும் விட்டார்கள் - அவர்களின் புரிதலுக்கு என் நன்றி.

ரோசா வசந்த்தின் அனைத்துப்பதிவுகளையும் படித்தவன் என்ற முறையில், அவர் கருத்துக்களை வெளிப்படுத்தும் விதம் எனக்கு மிகவும் பிடித்த விதம். அவர் உபயோகிக்கும் சில அதீதமான சொற்றொடர்கள் கூட கருத்தை வன்மையாக வெளிபடுத்துவதற்காகவே பயன்படுத்துகிறார் என்பதால் அவற்றீன் நேரடிப்பொருளை இழந்து அதன் குறியீட்டுப்பொருளை மட்டுமே காட்டும். (ஆண்குறியை அறுக்கச் சொன்னது உள்பட); ஆனால் அவர் பெயர் வெளியாவது (அவர் அனுமதியுடனோ, இல்லாமலோ) நிச்சயமாக் சில முன்முடிவுகளை சிலருக்கு எடுக்கத் தோன்றவைக்கும் எனவே நினைக்கிறேன்.

இன்னொரு உதாரணமாக, முகமூடி என்பவர் யார் என்பதிலோ, அவர் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவரா என்பதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால், ஆர்வமுடையவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள், தாங்கள் கற்பனை செய்துள்ள பிம்பத்தை அவர் மேல் ஏற்றத்துடிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். டோண்டு அவர்கள் முகமூடியைப்பார்த்திருக்கலாம், ஆனால், இப்படி ஒரு டெஸ்கிரிப்ஷன் கொடுப்பதற்கு முகமூடியிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்பது என் கருத்து. அவர் அப்படிச் செய்திருந்தால் அதற்கும் மன்னிப்புக் கோருவேன், பதிவை நீக்குவேன். (டோண்டுவும் இதற்கு விளக்கம் அளித்துவிட்டார்)

சினிமா நடிகன் திரைக்குப் பின்னால் என்ன செய்கிறான், எந்த நடிகையுடன் ஓடுகிறான் என்பதை அறியத் துடிக்கும் கிசுகிசு மனோபாவம் உள்ளவர்கள் இங்கே நிறையப்பேர். இப்படி இருக்கையில், நாம் அறிந்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர் நேரடியாக வெளியிடும் வரையில் மற்றவர் வெளிப்படுத்தக்கூடாது என்பது என் எண்ணம்.

உங்கள் கருத்து? கருத்துக்களை இங்கேயே இடுகிறேன், சில எடிட்டிங் தேவைப்பட்டதால். புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

#அதற்காகத்தான் பெயரிலி பின்னூட்டங்களையும் ஏற்றுக் க... அதற்காகத்தான் பெயரிலி பின்னூட்டங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் :-)
மா சிவகுமார்

இதற்கும் பெயரிலிப்பின்னூட்டங்களுக்கும் என்ன சம்மந்தம் சிவகுமார்? நான் பெயரிலிப் பின்னூடங்களை ஏற்றுக்கொள்கிறேனே?

#தன் பெயரை ரோசா வசந்த் பொது தளங்களில் பயன்படுத்தி இருக்கிறார்.அவர் தனது அடையாளத்தை மறைத்ததில்லை.
(செல்வன்)

நன்றி செல்வன், உங்கள் பின்னூட்டத்தில் இருந்து பெயரை மட்டும் நீக்கி இருக்கிறேன்.

#இப்பொழுது மாற்றப்பட்டுவிட்டது போல இருக்கு. ஆர்.வெங... இப்பொழுது மாற்றப்பட்டுவிட்டது போல இருக்கு. ஆர்.வெங்கடேஷ், சிஃபி. காம்மில் இருப்பதாய்முதலில் வந்து பின் மாற்றப்பட்டது. நாலைந்து நாட்களுக்கு முன்பு, என் பதிவு அறிமுகம் இருந்தது. ஆனால் பெயர் உஷா ராமசந்திரன் என்று இருந்தது. மெயில் அடிக்கலாம் என்றிருந்தேன், நேரமில்லாமல்விட்டுப் போனது.

(ramachandranusha)

நன்றி உஷா. ராமச்சந்திரன் உஷாதான் சரியா? எனக்கும் தெரியவில்லை:-(

#ரொம்ம்ப பினாத்துறீங்க போங்க...
துணுக்கு உறுதல் : அப்படின்னு பே...அப்படின்னு பாக்குறது...ஒரு மாதிரி நொந்த லுக்கு குடுக்கறது..

(ரவி)

ஆஹா ரவி, உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து துணுக்குற்றேன்.

#அவசியமே இல்லாத விசயம். ரோசா வசந்த் என எழுதுகிறார் என்றால் அப்படித்தான் போடணும். முதன்முதலாய் இன்னாரது ஜாதி இன்னது என்று ஒருவர் எழுதிப் படித்தபோது கூட அரியண்டமாய்/அருவருப்பாயே இருந்தது. நிச்சயமாய் அது எந்த நோக்கத்தில் எழுதப்பட்டாலும் கிசுகிசு மனோபாவம்தான்.

(ஒரு பொடிச்சி)

அதேதான் நானும் சொல்றேன் பொடிச்சி.

#babu...(chumma naachukkum!!!)
suresh.....nalla padhivu...
enakkum kooda sila per ner la eppadi iruppanga...,ivanga namalluku close frienda irundha evlo nalla irukkum.....evlo comedy pannaraare.nijamaave sense of humor oda life a deal pannuvaangalaa....eppadi pala maadhiri thonum.....(is it wrong to feel this way??.i dont know>>>>)

நாம் அறிந்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர் நேரடியாக வெளியிடும் வரையில் மற்றவர் வெளிப்படுத்தக்கூடாது என்பது என் எண்ணம்
neenga sollardhu sari dhaan...
Radha
(Radha Sriram)

நன்றி ராதா!

#_____எங்கே போட்டுருக... பினாத்தலாரே,
(துளசி கோபால்)

துளசி அக்கா - இப்போ எங்கேயுமே போடலே:-))

#தேன்கூட்டில் சரி செய்துவிட்டார்கள். இப்போது உங்கள் பதிவு மூலம்தான் அவர் பெயர் தெரிகிறது :)

மற்றபடி அறியப்பட்ட பெயரிலேயே அறிமுகம் தருவது நாகரீகம். மற்ற விவரங்களால் பதிவுகள் புரிதலில் தாக்கம் இருக்கக் கூடாது; இருந்தால் அது படிப்பவர்களின் வளர்ச்சியின்மையை காட்டுகிறது.
மணியன்

மணியன், இப்போது நானும் எடுத்துவிட்டேன்.

#______ & __________பர்ப்பனர்கள் என்பது உபரித்தகவல். (Anonymous)

நன்றி அனானிமஸ், இந்தத் தகவல் தெரிந்ததால், நான் யு பி எஸ் சி பாஸ் செய்வது நிச்சயமாகிவிட்டது!

#தேன்கூட்டில் அந்தப் பெயரை நீக்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால், இந்தப் பரிந்துரை வாசகர்கள் செய்வது. அவர்களுக்கு தெரிந்த வலைப்பதிவரை பற்றிச் சொல்லும்போது அவரது பெயரையும் சொல்லி இருக்கலாம். அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் ரோஸாவசந்தும் தனது பெயரை மறைத்து எழுதியது இல்லை. அவர் ராயர் காப்பி கிளப் குழுமத்தில் எழுதும் மடல்களில் அவரது பெயர் இருப்பதை கண்டிருக்கிறேன்.

முன்முடிபுகளை எடுப்பவர்கள் ஒரிஜினல் பெயரை வெளியில் சொல்லாவிட்டாலும் அவரது ஜாதகத்தைத் தேடிக் கண்டுபிடித்தாவது எடுப்பார்கள். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது :-).
(KVR)

நன்றி கே வி ஆர், நானும் சரி செய்து விட்டேன். முன் முடிவுகளை எடுப்பதற்கு நாம் உதவி செய்யாமல் இருக்கலாம் அல்லவா?

#"டோண்டு அவர்கள் முகமூடியைப்பார்த்திருக்கலாம், ஆனால், இப்படி ஒரு டெஸ்கிரிப்ஷன் கொடுப்பதற்கு முகமூடியிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்பது என் கருத்து. அவர் அப்படிச் செய்திருந்தால் அதற்கும் மன்னிப்புக் கோருவேன், பதிவை நீக்குவேன்."

சந்திப்பிலேயே நான் அது பற்றி பதிவைப் போடப் போவதாகக் கூறிவிட்டேன். முகமூடி அவர்கள் அதற்கு எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை. அவர் உண்மை பெயரை கூறவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. பி.கே.எஸ்.தான் முகமூடி என்று போலி டோண்டு என்ற இழிபிறவி கூறியிருந்தது. அப்படியெல்லாம் இல்லை என்று அவனுக்குக் கூறவே நான் எழுதிய வரிகளைச் சேர்த்தேன். வேறு ஒன்றும் இல்லை.

நீங்கள் எழுதியதிலும் எந்தத் தவறும் இல்லை. ஆகவே மன்னிப்பு எல்லாம் கேட்கத் தேவையில்லை, பதிவையும் நீக்கத் தேவையில்லை.

உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டத்தை இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பைப் பற்றி நான் எழுதியுள்ள இந்தப் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/blog-post_26.html
அன்புடன்,டோண்டு ராகவன்
(dondu(#4800161)) 12:01 PM

புரிதலுக்கு நன்றி டோண்டு

#சுரேஷ், உங்கள் அக்கறைக்கு நன்றி. உங்கள் பதிவின் மூலமாகவே தேன்கூட்டில் என்னை பற்றி இன்று எழுதியிருந்ததை படித்தேன்.

நான் படிக்கும்போது என் பெயர் நீக்கப் பட்டுவிட்டது.எனது இயற்பெயரை நான் பொதுவில் சொல்ல விரும்பியதில்லை என்பது உண்மைதான். ஆனால் அது வாசிப்பவருக்கு ஏற்படுத்தும் பிம்பம் பற்றியதால் அல்ல. என் அடையாளம் பொதுவில் தெரிந்தால், என் கருத்துக்களால் எனக்கு ஏற்பட வாய்புள்ள சில பிரச்சனைகளால்தான்.

ஆனல் அது குறித்து பெரிய ஜாக்கிரதை உணர்வை நான் மேற்கொண்டதில்லை. திண்ணை ஒரு முறை (என் மின்னஞ்சலில் இருந்து) பதிப்பித்தது. அதிலிருந்து நானே பதிப்பிக்க வேண்டாம் என்று நானே சொல்ல வேண்டி வந்தது. பிறக் ராயர் காப்பி கிளப்பில் நான் அனுப்பிய மடலில் என் பெயர் இருந்தது. அதனால் இது யாருக்கும் தெரியாத தகவல் அல்ல. மேலும் மிக எளிதாக இணையத்தேடலில் என்னை பற்றிய முழுவிவரங்களை (ஜாதி பற்றி அல்ல) அடைய முடியும். அவ்வாறு அடைந்து அதை வேறு வேறு இடங்களில் அனானிகள் எழுதியும் உள்ளனர். அதனால் தேன்கூடு என் பெயரை எழுதியதில் எந்த பாதகமும் இல்லை. ஆனால் முனைந்தால் தெரியக் கூடியது வேறு, அதை ஒரு தகவலாய் தேன் கூடு சொல்வது வேறு என்ற அடிப்படையில், என் பெயரை வெளியிட்டது எனக்கு ஒப்புதல் இல்லை. (இது குறித்தும் என்னை கேட்கவில்லை.)

அந்த பத்தியையும் உங்கள் பதிவினை பார்த்த பிறகே படிக்க நேர்ந்தது.

உங்கள் பதிவிற்கும் தேன்கூட்டின் பத்திக்கும் மிகவும் நன்றி.

ரோஸாவசந்த்

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Anybody can teach me how post / write my comments in Tamil

பினாத்தல் சுரேஷ் said...

அருண், உங்க மின்னஞ்சலை ஒரு பின்னூட்டமா போடுங்க, க்ளாஸ் எடுத்துட்டா போச்சு, அதானே தொழில்!

 

blogger templates | Make Money Online