Apr 4, 2006

ஒண்ணரைப்பக்க துக்ளக் - 3

முந்தைய பாகங்களைப்படிக்க இங்கே சொடுக்குங்கள்:
 
முதல் பாகம் - தி மு க ஆட்சி
 
இரண்டாம் பாகம் - அ தி மு க ஆட்சி

எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், துக்ளக்கின் பக்கங்கள் எப்படிக் காட்சிஅளிக்கும்? ஒரு வேளை தேர்தல் முடிவுகள் கீழ்க்கண்டவாறு அமைந்தால் (ஒரு கணக்குத்தான் - கணிப்பெல்லாம் கிடையாது)

அ தி மு க - 86
தி மு க  -  85
பா ம க - 15
காங்கிரஸ் - 8
கம்யூனிஸ்ட் கட்சிகள் - 4
ம தி மு க -14
விடுதலைச் சிறுத்தைகள் - 6
தே தி மு க - 10
இதர கட்சிகள், சுயேச்சைகள் - 6

 

அட்டைப்படம்:

கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கிறது:
ஸ்டாலின் 18
அழகிரி 10
தயாநிதி 10
பாமக 20
காங்கிரஸ் 20
தி மு க பிரபலங்கள்  10
மொத்தம் 88

அன்பழகன் கலைஞரைப்பார்த்துக் கேட்கிறார் -

இது என்ன கணக்கு தலைவரே, நாம ஜெயிச்ச தொகுதிகளா?

சரியாப்போச்சு போங்க, இதெல்லாம் இவங்க கேட்கிற அமைச்சர் பதவி எண்ணிக்கை. எப்படி இது ஜெயிச்சவங்க எண்ணிக்கைய விட அதிகமா இருக்குன்னு நானே குழப்பமா இருக்கேன்.

எச்சரிக்கை 1

திருமாவளவன் நடித்துள்ள அன்புச்சகோதரி படம் தொடர்பாக அவர் பா ம க நிறுவனர் ராமதாஸிடம் பேசியதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அவர் எந்த அன்புச்சகோதரியைப்பற்றிப் பேசினாரோ.. அவருக்கே வெளிச்சம்.

எச்சரிக்கை 2

எம் மாரப்பன், இடையன்சாத்து

கே: விஜயகாந்தின் ஆதரவு பெற்றவர்தான் முதல்வராக முடியும் என்ற நிலை நிலவுகிறதே, இது குறித்து?

ப: விஜயகாந்த் என்ன முடிவெடுப்பார் என்பது நமக்குத் தெரியாது. அவருடைய நிலையில் ஒரு சாதாரண வாக்காளன் இருந்தால் என்ன சிந்திப்பான்? ஒரு குடும்ப ஆட்சிக்காக தான் ஆதரவு அளிக்க முடியுமா, கஷ்டப்பட்டுக் கட்டிய கல்யாண மண்டபத்தை இடித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தவர்களுக்கா தன் ஆதரவு என்று சிந்தித்தால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?

மற்ற கேள்வி பதில்கள் பக்கம் 4-ல்


தலையங்கம்
 
ஆளுநர் என்ன செய்ய வேண்டும்?

தேர்தல் முடிவின்படி, எந்தக்கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை.

எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதது மட்டுமின்றி, எந்தக்கூட்டணிக்கும் கூட ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் அள்ளிக்கொடுத்துவிடவில்லை.

குழப்பமான தேர்தல் முடிவுகளை அடுத்து, ஆளுநர் அதிகாரத்தின் மீது அனைவரின் கவனமும் திரும்பி இருக்கிறது. அரசியல் சட்டப்படி அவர் முதலில் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஜெயலலிதாவைத்தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.

இப்படித்தான் செய்ய வேண்டும் என அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால், ஆளுநர் அப்படியா முடிவெடுப்பார்? அவருடைய பதவிக்காலம் மத்திய அரசின் கையில். மத்திய அரசோ, சோனியா கையில்.

இருந்தாலும், காங்கிரஸ் மேலிடச் சொல்படி முடிவெடுத்த முன்னாள் பீஹார்
ஆளுநர் பூட்டாசிங்கின் கதியை அவர் நினைத்துப்பார்க்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனங்களை அவர் எதிர்கொண்ட போது, காங்கிரஸ் தலைமையா அவருக்கு உதவியாக இருந்தது? அவரைச் சிக்கலில் மாட்டிவிட்டு தன் தலை பிழைத்தால் போதும் என்று அல்லவா ஓடியது?

இதையும் யோசித்துப் பார்த்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.

பத்திரிக்கைகளையும் தொலைக்காட்சிகளையும் பார்த்து ஆளுநர் ஒரு முடிவுக்கு வரக்கூடாது. தி மு க சார்பான தொலைக்காட்சிகள், அ தி மு கவுக்கு எதிரான நிலை எடுத்தால்தான் "ஊழல்வாதம்" என்ற தீட்டை ஒழிக்க முடியும் என்று கருதும் "கட்சிச் சார்பற்ற" பத்திரிக்கைகள் ஆகியவை கொடுக்கும் ஏகோபித்த தீர்ப்பு - தி மு க ஆட்சி மலர வேண்டும் என்பதே!

மக்களின் முடிவை எப்படியெல்லாம் திரிக்கலாம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். அ தி மு க ஆட்சி போக வேண்டும் என்று உறுதியான கருத்துச் சொன்ன மக்கள், தி மு க ஆட்சி வரவேண்டும் என்பதில் உறுதியாக இல்லையே? அப்படி இருந்திருந்தால், தி மு க கூட்டணிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைத்திருக்க வேண்டுமே?

கட்சி சார்பாகப் பெறப்படும் கையெழுத்துக்கள், எம் எல் ஏக்களின் அணிவகுப்புகள் எல்லாம் சட்டசபையின் நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதை அடுத்தே செல்லுபடியாகும் என்பதால், கொஞ்சம் கால அவகாசம் கொடுத்துப் பார்க்க வேண்டும். சுயேச்சைகள், விஜயகாந்த் கட்சி ஆகியோருக்கு ஒரு தெளிவான முடிவெடுக்க கால அவகாசம் தேவை. ஏன் பாமக போன்ற கட்சிகள் கூட அணி மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவே?

ஆளுநர் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது.

கேள்வி பதில்

எம் சுப்பாராவ், வேட்டை நாயக்கன் புதூர்

கே: தி மு க கூட்டணிக்கு அதிக வாக்கு சதவீதம் இருந்தும் பெரும்பான்மை பெற முடியவில்லையே?

ப: "முதலில் வந்த குதிரைதான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்" என்ற வெஸ்ட்மின்ஸ்டர் மாடலில் அமைந்தது நமது ஜனநாயகம். அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டு, பிறகு புள்ளிவிவரங்களைக் காட்டிப் புலம்புவதால் எந்தப்பயனும் இல்லை.  கலைஞர் எப்போதுமே "வென்றால் சீட்டுக்கணக்கு, தோற்றால் புள்ளிவிவரம்" என்றுதானே செயல்பட்டு வந்திருக்கிறார்.

வி முருகன், வள்ளிப்புத்தூர்

கே: துக்ளக் கருத்துக்கணிப்பு உள்பட எல்லாக்கருத்துக் கணிப்புகளும் பொய்த்துவிட்டனவே?

ப: இதில் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏற்கனவே, ஏப்ரல் 31ஆம் தேதியிட்ட துக்ளக்கில் "நினைத்தேன் எழுதுகிறேன்" பகுதியில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்:

"லட்சக்கணக்கான வாக்காளர்கள் இருக்கும் ஒரு தொகுதியில், சில நூறு வாக்காளர்களை மட்டுமே பேட்டி கண்டு அவர்களுடைய அப்போதைய மன்நிலையை மட்டுமே எடுக்கும் கருத்துக்கணிப்புகளில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. இருந்தாலும், துக்ளக்கில் வரும் கணிப்புகள் பெரிதும் உண்மையாகவே இருந்து வருகிறது, இந்த முறை எப்படியோ, பார்ப்போம்"

எனக்கு இந்த சந்தேகம் எப்போதுமே இருந்திருக்கிறது.

_____________________________________________________________________

ஐடியாவுக்கு நன்றி : தருமி

26 பின்னூட்டங்கள்:

IdlyVadai said...

நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்

இப்னு ஹம்துன் said...

இப்பதிவை படிப்பவர்களும் 'சோ' வின் துக்ளக்கை படிப்பவர்களும் எதில் வேறுபடுகிறார்கள் என்றால் மனநிலையில் தான்.

இதைப்படிப்பவர்கள் 'நகைச்சுவை/நையாண்டி' என்று நினைத்துப் படிக்க 'சோ'வைப்படிப்பவர்கள் 'என்னே அபார புத்திசாலித்தனம்' என்று நினைத்துப்படிக்கிறார்கள். அவ்வளவே.

துளசி கோபால் said...

'விஜயகாந்த் முதல்வர்' எங்கே காணொம்?(-:

Anonymous said...

kalakkal

Anonymous said...

அடடே..நம்ம ஐடியாவுக்கு வந்த வாழ்வு பாருங்களேன்.
நன்றி சுரேஷ்..

தகடூர் கோபி(Gopi) said...

:-)))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி இட்லிவடை

நன்றி இப்னு ஹம்துன் - சுரேஷைப் படிப்பவர்கள் "என்னே அபார புத்திசாலித்தனம்"னு நினைக்க மாட்டாங்கன்றீங்க? :-((

நன்றி துளசி அக்கா - விஜயகாந்துக்கு மேட்டரே சிக்க மாட்டேங்குது.. அனௌன்ஸ் பண்ணிட்டேனே ஒழிய, இன்னும் யோசிச்சிகிட்டே இருக்கேன்.

நன்றி அனானி

நன்றி தருமி.
நன்றி கோபி - உங்க போஸ்ட்டு பிரமாதம் - அங்கேதான் சொல்ல முடியாதபடி பண்ணிட்டீங்க. தனி மடல் போட்டாலும், நாலு பேர் பாக்கற இடத்திலே சொல்லணும்னு ஆசைப்பட்டேன். இப்போது மிகவும் தேவையான கருத்துக்கள்.

VSK said...

தவறு திரு. ஹம்துன் அவர்களே,
இதைப் படிப்பவர்கள் "என்னே 'சுரேஷ்'இன் அபார புத்திசாலித்தனம்" என்று நினைத்துப் படிக்கிறார்கள்.

அதைப் படிப்பவர்களும் அப்படியே ['சோ'வை நினைத்து]!

ஆகவே, ஒரு வித்தியாசமும் இல்லை!

ஒத்துக்கொள்ள மனம் இல்லையென்றால், சிரித்து விட்டுப் போங்கள்!

இப்னு ஹம்துன் said...

//நன்றி இப்னு ஹம்துன் - சுரேஷைப் படிப்பவர்கள் "என்னே அபார புத்திசாலித்தனம்"னு நினைக்க மாட்டாங்கன்றீங்க? :-(( //

அப்படிச் சொல்வேனா?
நீங்க 'திருநெல்வேலிக்கே அல்வா' மாதிரி 'சோ'வுக்கே கிண்டல் கிண்டுறீங்களே...!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி எஸ் கே.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி இப்னு ஹம்துன் (மீண்டும்)

இப்னு ஹம்துன் said...

'சோ'வுடையது புத்திசாலித்தனம் போல தெரிகிற நையாண்டி.

உங்களுடையதோ 'நையாண்டி' போல தெரிகிற புத்திசாலித்தனம்!! (அத த் தாங்க அப்படிச் சொன்னேன்)

தகடூர் கோபி(Gopi) said...

//அங்கேதான் சொல்ல முடியாதபடி பண்ணிட்டீங்க. தனி மடல் போட்டாலும், நாலு பேர் பாக்கற இடத்திலே சொல்லணும்னு ஆசைப்பட்டேன். இப்போது மிகவும் தேவையான கருத்துக்கள்.//

யாரும் கருத்து சொல்லக் கூடாதுன்ற அடக்குமுறை எண்ணமெல்லாம் இல்லீங்க. எல்லாரும் அவங்களுக்குள்ள யோசிக்க வழி கொடுக்கலாம்னுதான் தமிழ் வலைப்பூக்களின் பரிணாமத்துக்கு பின்னூட்டப் பெட்டி வைக்கலை

Geetha Sambasivam said...

இரண்டு நாளாக உங்கள் பிளாகைப்பார்க்க முடியவில்லை.புதிதாகத் தமிழ் எழுதுவதால் தான். இது கூட ஒட்டித் தான் வெட்டுகிறேன். இனிமேல் தேறி விடுவேன். உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். யாருமே படிக்க வில்லை என மனம் தளர வேண்டாம். நான் முதலில் படிப்பது உங்கள் மற்றும் சிபி அவர்கள் எழுதுவதும் தான்.அதற்குப்பின்னால் தான் தமிழ் மணம் திறப்பேன்

மணியன் said...

நன்றாக இருந்தது. மலரின் மணத்தைப் புகழவும் வேண்டுமா என இருந்தேன். 'மேலே' வரவேண்டுமென்றால் அதுவும் தேவை என உணர்ந்தேன்.வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி இப்னு ஹம்துன், கோபி,கீதா சாம்பசிவம், மணியன்.

கோபி, நீங்க செஞ்சதும் சரிதான்.

கீதா, ரொம்ப நன்றிங்க உங்க தொடர்ந்த ஆதரவுக்கு.

மணியன், நீங்க ரசிச்சது எனக்கும் தெரியணுமில்ல? feedback தெரியாம எப்படி improve பண்ண முடியும்?

தகடூர் கோபி(Gopi) said...

//இப்ப துபாயில் கூட வேலை பார்க்கிறாராம்.. //

துபாய்ன்னா? துபாயில எங்க?

நம்பர் 6, விவேகானந்தர் குறுக்குத் தெரு, துபாய் ரோடு, துபாயிலயா ?

:-P

Unknown said...

Thiklakkodu Pottiyaa!!!kalakkitteenga!

பினாத்தல் சுரேஷ் said...

ஷாஜி,

வேலூர்காரர், துபாயில் உள்ளவரா? உங்களுக்குத் தெரிந்தவரா? அறிமுகப்படுத்த முடியுமா?

கோபி,

அந்த துபாய் மெயின் ரோடு, துபாய் பஸ் ஸ்டேண்டு அருகில் வுட்டுட்டீங்களே?

நன்றி சுல்தான்.

Anonymous said...

Thuklak is a Crap magazine....

Your Duplicate thuklaks really showed their real face....

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி லக்கிலுக். (நீங்கள் கருத்து.காமில் உதயசூரியன் லோகோவோடு வரும் லக்கிலுக்கா?)

Anonymous said...

அதே தான் தலைவா....

கருத்தில் நீங்களும் பங்கு பெறுவதுண்டா?

பினாத்தல் சுரேஷ் said...

பங்கு பெறுவதில்லை, அவ்வப்போது படிப்பதுண்டு.

லக்கிலுக் said...

I am also going to launch a blog... If I need any help, will you help me?

Iyappan Krishnan said...

தூள் தலைவா...அடுத்த முதல்வரா ஆக ரெடியா இருந்தா எங்க ஓட்டெல்லாம் உங்களுக்கு தான்

அன்புடன்
ஜீவா

பினாத்தல் சுரேஷ் said...

லக்கிலுக், உங்களுக்கு இல்லாமயா? என்னாலே முடிஞ்சத செய்யறேன்.

நன்றி ஜீவ்ஸ், கொஞ்சம் பிஸின்றதால வெண்பா விளையாட்டுல கலந்துக்க முடியலே, இதுலே மெயில்லே கமெண்டு போடறது இன்னொரு கஷ்டம்.

நாளைக்கு ஒரு நாலஞ்சு ஈற்றடி தயார் பண்ணிப்போடறேன்.

 

blogger templates | Make Money Online