Apr 5, 2006

அவசரச் செய்தி

நேற்று மதியம் தொடங்கியது இந்தப்பிரச்சினை.
 
நேற்று இரவில் சற்றுச் சரியாகிவிட்டது போலத் தெரிந்தாலும், முழுதும் குணமாகவில்லை என்றே தோன்றியது.
 
இரவிலும் சற்றுக்கலக்கம் இருந்துகொண்டே இருந்தது.
 
காலையில் எழுந்தால் நிச்சயமாகப் பூரண குணம் அடையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
 
என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களா?
 
அதை எப்படி என் வாயால் சொல்வேன்?
 
அதனால்தான் கலப்பையால் அடிக்கிறேன்.
 
ஒண்ணரைப்பக்க துக்ளக்கை பலர் படித்தாலும், பின்னூட்டம் குறைவாகவே இருக்கும்போதே தமிழ்மணத்தில் சுரங்கத்தின் அடியில் போய்விட்டதே என்ற வழக்கமான பிரச்சினைதான்.
 
 
 
 
தவறாமல் ஒரு வார்த்தை பின்னூட்டியும் விடுங்கள். அதுதானே சீக்ரெட் ஆஃப் மை (அவர்) எனர்ஜி?
 

18 பின்னூட்டங்கள்:

Muthu said...

:-))

துளசி கோபால் said...

என்னவோ ஏதோன்னு அலறி அடிச்சுக்கிட்டு வந்தேன்.

கீதா சாம்பசிவம் said...

இன்னும் ஒரு மறுமொழி கூட வரவில்லையா? சரி, கவலைப்படாதீர்கள்.என்ன எழுதினாலும் மறுமொழிகிறேன். மீண்டும் எழுதுங்கள். சரியாகி விடும்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி முத்து, துளசி அக்கா, கீதா சாம்பசிவம்.

மன்னிச்சுக்கோங்க அக்கா. சும்மா ஒரு தமாஷ்தானே.

என்னதான் இருந்தாலும் ஏற்கனவே பதில் போட்டவங்கதான் மறுபடியும் வந்திருக்கீங்க. புது ஆளுங்க? ம்ஹூம்!

Radha Sriram said...

enna suresh..eppadi ellam manam thalaralaama?? cheer up??.....eppaye poren onnarai pakka post kku....

Radha

குமரன் (Kumaran) said...

அக்கம் பக்கம் பார்த்து பேசுங்க சார். ஏற்கனவே வெறும் வாயை மெல்லுறவங்க இப்ப நீங்க பின்னூட்டம் வேண்டி கொட்டம் அடிக்கிறதா எல்லா இடத்துலயும் போயி திட்டப் போறாங்க. :-)

இலவசக்கொத்தனார் said...

ஆமாங்க அடி பட்டவர் சொல்லறாரு. ஆனா நீங்க அதுக்கெல்லாம் கவலைப்படாம ஆடுங்க. நாங்க இருக்கோமில்ல பாத்துக்கறோம்.

பொன்ஸ்~~Poorna said...

சுரேஷ், உங்க ஒண்ணரை பக்க துக்ளக் படித்தேன். எனக்கென்னவோ அவன் விகடன் மாதிரி வரவில்லை என்று தோன்றுகிறது.. எல்லாம் ஒரிஜினல் துக்ளக்கில் வருவது போலவே உள்ளது.. துக்ளக்கை எல்லாம் கிண்டல் பண்ண முடியுமாங்க? நாளைக்கு இதையே அவங்க ஒண்ணரை பக்கத்துல போட்டலும் போட்ருவாங்க...

வெங்காயம் said...

பின்னூட்டப் பைத்தியம் என்று நான் முன்னர் சொன்னபோது எங்கே சொன்னேன்? எப்போது சொன்னேன் என்று கோவணத்தை வரிந்து கட்டி ஓடி வந்தீர்களே? இப்போதாவது தெரிகிறதா? புரிகிறதா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு? நன்றாக எழுதினால் கண்டிப்பாக நிறைய பின்னூட்டம் வரும். நீங்களே ராதா என்றும் கீதா என்றும் உங்களுக்கு நீங்களே பின்னூட்டிக்கொள்ள தேவையும் இருக்காது!

யாழ்ப்பாணம் said...

சுரேஸ்,
வேலைப்பளு, நேரம் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் தங்களின் ஒர் பதிவைக் கூட இது வரை படிக்க முடியவில்லை. மனம் சலிக்காதீர்கள். தொடர்ந்தும் எழுதுங்கள்.
பின்னோட்டம் எல்லாம் தானாக வரும்.
உங்கள் போன்றவர்களுக்காகத் தான் அன்பர் இலவசக்கொத்தனார், "அதிக பின்னூட்டம் பெறுவது எப்படி" எனும்
பதிவை பல வாரங்களுக்கு முன்னர் பதித்திருந்தார். நண்பர் குமரன் கூட அப் பதிவை தனது Blog ல் மீள்பதிவு செய்து பல பின்னூட்டங்களைப் பெற்றிருந்தார். எனவே நீங்கள் இ.கொ.வின் பதிவைப் படித்து பல பின்னோட்டங்களை பெற முயற்சியுங்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ராதா ஸ்ரீராம்.

நன்றி குமரன் - தீர்க்கதரிசி சார் நீங்க!

நன்றி இலவசம்.

நன்றி பொன்ஸ், உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனத்துக்கு.

நன்றி வெங்காயம். நீங்கள் எனக்கு இட்ட அடுத்த பதிவின் பின்னூட்டத்தையும் இங்கேயே போட்டு, அந்தப் பதிவை தூக்கிவிடுகிறேன் - அந்தப்பதிவு ஒரு உணர்ச்சி வேகத்தில் போட்டது என்பதால்.

//சரி சரி கவலைப்படாதீங்க. இன்னும் அதையே நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி?

பாலசந்தர் கணேசன் அவர்களின் பதிவில் நான் உங்களுக்கு அப்போது பதில் சொன்னேன் என்பதனை மறந்து விட்டீர்கள். அங்கு உங்களை மட்டுமே நான் குறை சொல்லவில்லை. குமரன், ராமநாதன் போன்றவர்களையும் சேர்த்துதான் என்பதனை மறந்து விட்டீர்கள்.

அதிக பின்னூட்டங்களால் மட்டுமே ஒருவர் பெரியவர் ஆகிவிடமுடியாது! நன்றாக எழுதுங்கள். நிச்சயம் பின்னூட்டம் நிறைய வரும். வாழ்த்துக்களுடன்

உங்கள் வெங்காயம்//

இதற்கும் நன்றி. உடனடியாக குழப்பத்தை தீர்த்ததற்கும், தீர்க்கவைத்ததற்கும்.

பொன்ஸ், உங்கள் பின்னூட்டத்துக்கு (ஒழிக்கப்பட்ட பதிவு) நன்றி.

கீதா சாம்பசிவம் said...

வெங்காயம் சொல்வது எல்லாமே நம் கண்ணில் தண்ணீர் வரவேண்டும் என்று தான். நீங்கள் அவர் கூறுவது எல்லாமே தமாஷ் என்று எடுத்துக்கொண்டு விட்டால் பிரச்னை எதுவும் இல்லை.வேண்டுமானால் அவர் எல்லாருடைய வலைப்பதிவிற்கும் சென்று பார்த்துக் கொள்ளவும்.

முத்து(தமிழினி) said...

யோவ் பினாத்தல் ,

என்ன நடக்குது இங்கே.....

ஏய்..யாரங்கே...போ..போ..ஒடு....

உங்களையும் பதிவு போட்டு தூக்க வைச்சிட்டாங்களா? :))))))

பினாத்தல் சுரேஷ் said...

யாழ்ப்பாணம், முன்பு தவறிவிட்டது. உங்கள் கருத்துக்கு நன்றி.அதிக பின்னூட்டம் என் நோக்கம் இல்லையே..

நன்றி கீதா.

நன்றி முத்து.. பொதுவாழ்க்கைன்னு வந்திட்டா இதெல்லாம் சாதரணமப்பா!

லக்கிலுக் said...

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் நானும் என் பின்னூட்டத்தை இங்கே பதிவு செய்து வைத்து விடுகிறேன்....

பினாத்தல் சுரேஷ் said...

//முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் நானும் என் பின்னூட்டத்தை இங்கே பதிவு செய்து வைத்து விடுகிறேன்.... // என்ன மேட்டர் லக்கிலுக்? ஒண்ணியும் பிரியலியே!

லக்கிலுக் said...

//தவறாமல் ஒரு வார்த்தை பின்னூட்டியும் விடுங்கள். அதுதானே சீக்ரெட் ஆஃப் மை (அவர்) எனர்ஜி?//

இதுக்கு தான் சுரேஷ்.... :-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி லக்கிலுக்!

 

blogger templates | Make Money Online