Apr 19, 2006

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராமநாதா?

கலங்கிவிட்டார் கைப்புள்ள.
 
கச்சேரி மூலமே   அது தெரிய வந்தாலும், கச்சேரி ஊடக வன்முறைக்குப் பெயர் போனது என்றாலும்,  சொல்லப்பட்டிருக்கும் விஷயம் நம்பத் தகுந்ததாகத்தான் இருக்கிறது.
 
இருந்தாலும், என் உடன்பிறப்பே, கொள்ளையில் பங்கு கேட்காமல் கொள்கையில் பங்கு கேட்கும் கோமானே,
 
உன் அலுவலகத்தில் சில கடிதங்கள் என்னைக் குத்திக் கிழித்துப்போட்டன என்றால் அது மிகை ஆகாது.
 
பொன்ஸ் என்னும் சிறுமி, ப ம க என்ன வ வா சவைவிடப்பெரியதா என்று கேட்டிருக்கிறார் ஒரு கேள்வி.
 
இமயமலை ஸ்பீட் பிரேக்கரைவிடப்பெரியதா?
 
வாளி தண்ணீர் அதிகமா, கடல் தண்ணீர் அதிகமா?
 
ஒத்தை வெடி பெரியதா, வாணவேடிக்கை பெரியதா?
 
குறட்டைச் சத்தம் பெரியதா, அணுகுண்டுச் சத்தம் பெரியதா?
 
என்றெல்லாம் கேட்டிருக்கலாம். 
 
இதற்கு இன்னும் நீ தக்க பதில் தரவில்லையே என் கண்மணியே!
 
இன்னும் பலர் இதுதான் நேரம் என்று நம் கட்சியைத் துண்டாட வலைவிரித்திருக்கிறார்கள்.. எந்தக்கட்சியை? அண்ணல் ஆபிரஹாம் லிங்கனும், ஹோசிமின்னும், கரிபால்டியும், ஜிக்மே சிங்யே வாங் சுக்கும் கட்டிக்காத்த நம் உயிரான கட்சியை..
 
இவர்களுக்கும் இன்னும் நீ தக்க பதில் தரவில்லை.
 
ஜொள்ளுப்பாண்டி என்னும் எதிர்க்கட்சி ஒலிபெருக்கி நம் வரலாற்றைத் திரிக்கும் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை நீ அறியாயோ?
 
புறப்படு தோழா, நம் குதிரைக்குளம்பொலி கேட்டு, எதிரிகள் சூரியனைக்கண்ட பனி போல் விலகட்டும்.
 
நம் சாதனைகளை நாட்டுக்கு எடுத்துக்கூறு!
 
பத்துகிலோ இலவசம், கலர்டிவி இலவசம் என்றெல்லாம் மற்ற கட்சிகள் இலவசத்தை தேர்தல் நேரத்தில் மட்டுமே யோசிக்க, நாம் மட்டும்தான் இலவசத்தை கட்சியின் முழுநேரப்பணிகளில் ஈடுபடுத்தும் ஒரே கட்சி என்றி முரசெடுத்து ஒலி!
 
ஆரம்பித்த வாக்கியத்தை முடிக்காமலே மூணுபக்கம் சொல்லக்கூடிய நாவன்மை படைத்த ராகவனார் போன்றோர்,
 
"இன்றைக்கு திங்கக்கிழமை" என்று மட்டுமே பதிவிட்டும், நூற்றுக்கு மேல் பின்னூட்டம் பெறும் திறம் கொண்ட இலவசனார்,
 
கட்சிக்காக படம் எடுத்து கையைச் சுட்டுக்கொண்டும் தொடர்ந்து பதிவிடும் வீரப்பினாத்தலார்,
 
நம் கொள்கைக்காக கட்சியைத் துவங்கி பின் மறந்த முகமூடியார்..
 
சமீபத்தில் இந்தியாவில் வாக்குச் சேகரித்துத் திரும்பியிருக்கும் பின்னூட்ட நாயகி,
 
பதிவே மருந்து, மருந்தே பதிவென்று மருத்துவம் பயிலும் நீ!
 
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

26 பின்னூட்டங்கள்:

நன்மனம் said...

//"இன்றைக்கு திங்கக்கிழமை" என்று மட்டுமே பதிவிட்டும், நூற்றுக்கு மேல் பின்னூட்டம் பெறும் திறம் கொண்ட இலவசனார்//

வஞ்ஜப் புகழ்ச்சியில் பேரு பெற்ற பினாத்தலாரே, உமது அறி(ரி)க்கை எதிரியின் அறிக்கையை போல் உள்ளது, உங்கள் அணியில் இருப்பவரை மட்டுமாவது தக்க வைத்துக் கொல்(ள்)ல பாருங்கள். வ.வா.ச உடன் மோதி கைப்புவின் இடத்தை (உதை வாங்கி என்ற இடத்தை) பிடிக்க முயற்சிக்காதீர்.

ஸ்ரீதர்

பொன்ஸ்~~Poorna said...

கடைசியா என்ன தான் சொல்ல வர்றீங்க?? ப. ம. கன்னா என்னான்னு உங்க முகமூடியாருக்காவது தெரியுமா? இல்ல அவரும் இப்படித் தான் அறிக்கை விடுவாரா?

இதுக்கு எங்க வ.வா. சவே எவ்வளவோ பரவாயில்லைய்யா.. அட்லீஸ்ட், முழுசா கட்சி பேராவது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு...

rv said...

பெனாத்தலாரே,
இதற்கும் ஆசைப்பட்டேன். ஆனால் இதோடு நம் பின்வாங்கினால், அதையும் நம் பலவீனம் என்று சில அட்வைசர்கள் கருதக்கூடும். ஆகவே, பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை இது தொடரும்!

சத்தியசோதனையில் தங்களை அப்பழுக்கற்ற நிரபராதி என்று சந்தேகத்துக்கிடமில்லாமல் நிருபித்துவிட்டீர். அதற்கு வாழ்த்தி மீண்டும் வருக, களப்பணியில் எழுக என்று சொல்லிக்கொள்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

நன்மணம் ஸ்ரீதர் அவர்களே, மீண்டும் எங்கள் கட்சியில் குழப்பம் விளைவிக்கத் திட்டமா? நடக்காது!

பொன்ஸ் - கட்சி பெயர் தெரிவதுதான் பிரபலத்துக்கு அடையாளமா? அப்படியென்றால் எத்தனையோ லெட்டர் பேடுகட்சிகள் ஆட்சிக்கு வந்திருக்குமே! கட்சியின் பெயரிலேயே ஆயிரம் அர்த்தத்தை புகுத்தி வைத்திருக்கிறோம்.. ஏதோ ஒரு சினிமாவிலிருந்து சுடப்பட்ட பெயர் அல்ல எங்கள் கட்சியுடையது!

இரேசு,

அட்வைசர் சொன்னால் அப்படியே செய்யலாம்!

இலவசக்கொத்தனார் said...

'ஈன்ற பொழுதும் பெரிதுவக்கும்...,' என்றெல்லாம் பண்டைத் தமிழ் காலத்திலே சொன்னதை அறியாத சிறு பிள்ளையாம் ஸ்ரீதருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கொ.ப.செ. அவர்கள் அப்படி சொன்னது தன் தனையனின் திறமை பற்றிய பெருமையே தவிர வேறொன்றும் இல்லை. இதை நன்றாக தெரிந்த எங்களுள் உங்கள் பிரிவினைவாதம் எடுபடாது. வாழ்க கட்சி. வளர்க தலைவர்.

துளசி கோபால் said...

இந்தியாவில் சேகரித்த வாக்குகள் எல்லாம் ஸீ(சீ)மெயிலில் வந்துகொண்டிருக்கின்றன என்பதைப்
பணிவோடு இங்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
வாழ்க ப.ம.க.

ஆமாம் இதிலுள்ள 'ப'வுக்கும் நம்ம 'Chameleon - பச்சோந்தி பதிவு'வுக்கும் சம்பந்தம் எதாவது இருக்கிறதா
என்று மக்கள்(!) அறிய ஆசைப்படுகிறார்கள்.

விளக்கம் வேண்டுகிறோம்.

ஜொள்ளுப்பாண்டி said...

வணக்கத்துக்குரிய அருமை அண்ணன் வஞ்சப்புகழ்ச்சியில் மன்னன் ப.ம.க. என்றாலே என்னவென்றே அறியாமல் பச்சைத்த்ண்ணீரை கடைந்து வெண்ணெய் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பினத்தலார் அவர்களே

//இமயமலை ஸ்பீட் பிரேக்கரைவிடப்பெரியதா?

வாளி தண்ணீர் அதிகமா, கடல் தண்ணீர் அதிகமா?//

என்று வினவியிருக்கிறீர்கள் !
உங்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

"கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது " அதைப்போல நாங்கள் சிறியவர்களானாலும் களமென்று வந்து விட்டால் புறமுதுகிட்டு ஓடிட மாட்டோம்.

நீங்கள் யானையாக இருக்கலாம் ! நாங்கள் யானை காதில் புகுந்த எறும்பு !

இவைகளிலேயே எங்கள் பலம் என்னவென்று உணர்ந்திருப்பீர்கள்.

தேவைஇல்லாமல் சிங்கத்தை உரசிப்பார்க்கும் வேலையை விட்டு விட்டு சத்தம் போடாமல் வ.வா.ச வுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளவது உமக்கும் நல்லது எமக்கும் நல்லது.

ப.ம.க செல்வங்களே உங்கள் முதுகினை தடவிப்பாருங்கள். எத்தனை உள்குத்துக்கள்! இன்னும் என்ன தயக்கம். உங்களுக்காக எங்கள் சங்கக் கதவுகளையே பெயர்தெடுத்து வைத்துவிட்டு காத்திருக்கிறோம்.

பினாத்தல் சுரேஷ் said...

கொ ப செ அம்மா அவர்களுக்கு பணிவன்புடன் பினாத்தலின் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்! உங்கள் மெயில் செய்தி என் காதில் குயிலோசை போல் ஒலிக்கிறது!

இலவசனார்.. தனயன் என்றெல்லாம் சொல்லி உணர்ச்சிவசப்படவைத்துவிட்டீர்கள்! இதுதான் நமது கழகத்தின் குடும்பப்பாசம்!

ஜொள்ளுப்பாண்டிக்கு பதில் சொல்லும் அவல நிலை எனக்கு வேண்டுமா?
நான் தலைவர்களிடம் மட்டுமே பேசிப் பழக்கப்பட்டவன்!

பொன்ஸ்~~Poorna said...

உங்க தலைவர்கிட்ட பேசியே ரொம்ப நாளாச்சாம்.. இவரு தலகிட்ட மட்டும் தான் பேசுவாராம்.. எங்க தலயும் வால்கள் கிட்ட பேசாது... ஆமாம்.. சொல்லிட்டேன்

எனக்கு ஒரு சந்தேகம்.. இதே மேட்டர் தானே உங்க மருத்துவரும் எழுதறாரு, அவருக்கு மட்டும் எப்படி 70 பின்னூட்டம் வந்துடுச்சு.. அதுக்கு அப்புறம் போட்ட புதுப்பதிவான இத ஏன் உங்க சங்க மக்கள் ரொம்ப கண்டுக்க மாட்டேங்கறாங்க?? ஏதாச்சும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்???

Anonymous said...

வ.வா.ச appadinna enna?

- Ramesh

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸ்.. இப்படியும் ஒரு சிண்டு முடியும் முயற்சியா? நீங்கள் படும் பாட்டைக்கண்டு எனக்கு சிரிப்புதான் வருகிறது!

பின்னூட்டங்களுக்கென நாங்கள் ரஷ்யாவிலும் நியூ ஜெர்சியிலும் சிறப்புக்கிளைகள் திறந்துள்ளோம். இங்கே வந்தாலும் தலைமையகத்துக்கு மாற்றிவிடுவோம். இதுதான் மேட்டரு, சும்மா காத்தில கத்தி வீசாதீங்க (பதம் நன்றி - தமிழினி முத்து)

இலவசக்கொத்தனார் said...

//வ.வா.ச appadinna enna?//

அதெல்லாம் எதுக்கு ரமேஷ். பேசாமா நீங்களும் எங்க ப.ம.க.வில் சேருங்க.

rv said...

பொன்ஸு அவர்களே,
நீங்கள் இயங்கும் நிலையைக் கண்டு பரிதாபகரமாக இருக்கிறது. எங்கள் கட்சியின் முக்கிய கொள்கையான 'நமக்கு நாமே' பற்றி உங்களுக்குத் தெரியாதது ஆச்சரியமே.

கட்சித்தொண்டர்களுக்கு உதவி தேவையென்றால் படையெனத் திரண்டு வரும் கூட்டம் எங்கள் கூட்டம். இப்போது யுத்தகளம் என் பதிவு. இது reinforcement பதிவு. தேவைப்பட்டால், இங்கேயும் படையைத் திரட்டிக் காட்டுவோம். சவால் விட்டுப் பார்க்கிறீர்களா?

இலவசக்கொத்தனார் said...

//பின்னூட்டங்களுக்கென நாங்கள் ரஷ்யாவிலும் நியூ ஜெர்சியிலும் சிறப்புக்கிளைகள் திறந்துள்ளோம்.//

விஷயம் தெரியாம இருக்கீங்களே பூன்ஸ். எங்க கட்சியிலே எல்லாருக்கும் குறிப்பிட்ட பணிகள் இருக்கு. இந்த மாதிரி பின்னூட்டம் மூலமா கட்சியை வளர்க்கறது மருந்தும், நானும். பெனாத்தலார் பிலிம் காட்டுவாரு, நாளேடு போடுவாரு.

பேசாம நீங்களும் இங்க வாங்க. உங்களை ஆசிரியப்பா டிபார்ட்மெண்ட் இன் சார்ஜா போடறோம். என்ன?

rv said...

ஜொள்ளுப்பாண்டி,
காரமான கடுகாகவே இருங்கள். கடுகாய் இருந்து எள்ளுடன் மோதுங்கள். எரிமலையுடன் மோதப் பார்க்காதீர்கள். அவ்வளவுதான் சொல்லமுடியும்.

பினாத்தல் சுரேஷ் said...

ராமநாதன், கிடக்கிறார்கள் விடுங்கள்! யார் பதிவென்று பார்த்தா இலவசனார் பதில் கூறுகிறார்? யார் பதிவென்று பார்த்தா ராமநாதன் படைதிரட்டுகிறார்?

நம் குடும்ப உணர்வை அவர்களால் புரிந்துகொள்ளக்கூட முடியாது!

பொன்ஸ்~~Poorna said...

அப்போ இதுவும் ஒரு குடும்பக் கட்சியா? குடும்ப அரசியலா??

கொத்ஸ், ஆசிரியப்பா டிபார்ட்மென்ட் இன்சார்ஜா?? ஆசையக் கெளப்புறீரேப்பா!!!

என்பா உன்பா எல்லாம் வேண்டாம்..
அன்பாய் ஆசிரி யப்பா தந்தால்
வேண்டாம் என்றே விளம்புவார் உண்டோ..
ஈண்டுஎம் தலையிடம் இயம்பி வருவோம்
வரு.வா சங்க வீட்டிலும் உண்டு
அருமை யான அகவற் பாட்டு...

இலவசக்கொத்தனார் said...

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு

எனது லேட்டெஸ்ட் பதிவான ஜீவா 100 பின்னூட்டங்கள் வந்துவிட்டன.

இப்பதிவில் திங்கக்கிழமை என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்படவில்லை. ஆகையால் சங்கச் சிறுநரிகள் இனிமேலும் ஊளையிடாமல் இருப்பார்களாக.

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ், ஆசிரியப்பா டிபார்ட்மென்ட் இன்சார்ஜா?? ஆசையக் கெளப்புறீரேப்பா!!!//

இருப்பது ஒர் உயிர். வாழ்வது ஒரு முறை. எல்லா ஆசையையும் நிறைவேத்திக்குங்க. வாங்க இந்தப் பக்கம்.

பெருசு said...

பெனாத்தலாரே

உமது உருமல் கண்டு எமது தினவெடுத்த தோள்கள்
போர் போர் என முரசு கொட்டினாலும் ,அரசு கட்டிலில்
ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் அடலேறுவின்,
பென்சிலால் வரைந்த மீசை ஜொள்ளால் கரைந்தாலும் ,

இருங்க இம்சை அரசன் 23 க் காக நான் எழுதிக் கொண்டிருக்கும் பதிவின்
முன்னூட்டத்தை இங்கே பின்னூட்டமாக

(அது எப்படிங்க ஒரே வசனத்த பொன்ஸ் பதிவிலயும் போட்டு
இங்கயும் போட்டு )

பெருசு , எது எப்படியொ , காலியா இருக்கிற தென் அமெரிக்காவின்
கிளைத் தலைவர் , கொ.ப.செ , எந்த பதவி கெடச்சாலும் சரி
அப்படியெ அமுக்கிரலாம்லெ.

நடக்கறத பாத்தா சின்னப் பிள்ளத்தனமா இல்ல இருக்கு.

பெருசு

பினாத்தல் சுரேஷ் said...

அகவல் பாட்டு பாடும் மக்களுக்கு அல்வா கொடுங்கள் இலவசம்! திங்கக்கிழமை மட்டுமா.. எல்லாக்கிழமையும் நம் கிழமை. எல்லாப்பதிவும் நூற்றைத்தாண்ட வேண்டும்.. அதுதான் கழகத்தின் குறிக்கோள்.

பெருசு, என்ன தான் சொல்ல வரீங்க! உங்களுக்கு எந்தப்பகுதி கொ ப செ பதவி வேணும்? பொன்ஸக்காவை கழகத்திலே சேர்த்திங்கன்னா உங்க கோரிக்கை பரிசீலிக்கப்படும்.

பொன்ஸ்~~Poorna said...

பெருசு... எங்க தலைவரப் பத்தியே எதிரி முகாம்ல எழுதி பதவி கேக்குறீரே.. உம்ம கட்சியில சேத்தா உருப்பட்டா மாதிரி தான்..
இருந்தாலும், கட்சியில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதிகள் இருப்பதால், தென் அமெரிக்கா என்ன, வட அமெரிக்காவும் சேர்த்து பாத்துக்குங்க.. எங்க கொள்கையையே பரப்புங்க.. ஆமாம், சொல்லிட்டேன்..

ஆமாம் பினாத்தலாரே, உங்களுக்கு ப.ம.கவில் ஏதோ பிரச்சனையாமே? தனி மடல் இட்டு சொல்றீங்களா? மரியாதை தராம விட்டுட்டாங்களா??

பினாத்தல் சுரேஷ் said...

எனக்கு என் கட்சியில் பிரச்சினையா? தனி மடல் வேண்டுமா? யாரைப்பார்த்து இஒந்தக்கெள்வி கேட்கிறீர்கள்>?

திமுகவிலிருந்து அன்பழகன் விலகினாலும்,

தேமுதிகவிலிருந்து பிரேமலதா விலகினாலும்,

காங்கிரஸிலிருந்து ராகுல் காந்தி விலகினாலும் கூட

பமகவில்ருந்து பினாத்தலார் விலக மாட்டார்..

(உங்க மின்னஞ்சல் முகவரியே தராம நூல் விட்டா பாக்கறீங்க?)

பொன்ஸ்~~Poorna said...

அதெல்லாம் குடுத்து அப்புறம் நீங்க ஆட்டோ அனுப்பிட்டீங்கன்னா?? :)

என் சைட் போய் பாருங்க.. ஐடி இருக்கு..

Unknown said...

பினாத்தலாரின் லட்சிய படமான குருத தாயகம் படம் எடுப்பதற்கு நம்மிடம் 40 ரூபாய் கேட்ட விவரம் வெளியிட வேண்டாம் என்று பார்த்தால் ரொம்ப ஒவராகப் பேசுகிறார்...
அவர்களிடம் அதான் ப.ம.கவிடம் 100 ரூபாய் வாங்கி கொண்டு படமெடுக்கும் வேலையை மட்டும் பாரும் பினாத்தாலரே.. அதை விடுத்து வரலாற்று சிறப்பு வாய்ந்த எங்கள் சங்கத்திடம் மோதிப் பார்க்கும் வேலை வேண்டாம்..அப்புறம் கவுண்டர் பாணியில் சொல்லுவது என்றால் ரீல் அந்துப் போகும் சீன் கிழிந்துப் போகும்... சொய்ங் என்ற சவுண்ட் மட்டுமே கேட்கும்....

பினாத்தல் சுரேஷ் said...

பொன்ஸக்கா: ஆட்டோ? எங்கள் தலைவர் ஏன் முகமூடி என்று டெஸ்கிருப்ஷன் பாருங்கள்!

கச்சேரியார்!: குருத தாயகம் முக்கியமா, என் தாயகம் முக்கியமா என்று பார்த்து நான் எடுத்த முடிவைத் தவறு என்று நீங்கள் கூறுவதை என் இளவல் ராமநாதனோ, என் தளபதி இலவசமோ, எங்கள் ராஜகுரு ஜீவாவோ பார்த்திருக்கவேண்டும்!

 

blogger templates | Make Money Online