Apr 18, 2006

கஜினி - தோல்வி அடைந்தது ஏன்?

சொதப்பல் - சொதப்பல் எல்லாம் சொதப்பல்.
 
ஒரு வசனத்துக்கான ஐடியா கிடைத்ததும் தயாரிப்பு வேலைகளில் இறங்கினால் இப்படித்தான் ஆகும்! பொறுமையோடு, முழு திரக்கதையுடன் பணியில் இறங்கினால் வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு. இத்தனைக்கும், கஜினி (என் கஜினி) யின் வசனங்களும் கஜினியின் உடம்பில் குத்திய பச்சைகளும் எனக்கே மிகவும் பிடித்திருந்த நகைச்சுவை.
 
கஜினியின் தீம் இசையை பின்னணியாகச் சேர்க்கலாம் என்று நினைத்து கூகிளில் தேடினால் கிடைத்தது எல்லாம் சரியில்லை. ரியல் பிளேயர் கேக்குது, 2 மணிநேரம் ஆகும் ஆகும் என்கிறது, கூல்கூஸ் தளம் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று ஆயிரம் பிரச்சினை.
 
ஒரு தலையை செப்பனிட்டு எரேஸ் செய்வதற்குக்கூட 25 நிமிடம் ஆனது -- கணினி அடிக்கடி ஹேங் ஆவதால்!
 
எல்லாவற்றையும் விடப் பெரிய பிரச்சினை - உள்ளே இட்ட பிறகும் என் டயல்-அப்பில் இரண்டாவது காட்சி வராமல் போக, என்ன பிரச்சினையோ என்று செய்த திருத்தங்களில் Frame Rate குறைவாக இருந்துவிட,  காட்சிக்கும் நான் நினைத்த வசனங்களுக்கும் சம்மந்தம் இல்லாமல் போய்விட்டது.
 
இருப்பதில் கொஞ்சம் பார்க்கும்படியாக இருந்தது முதல் வெர்ஷன்தான்.
 
எனவே இதையே பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
இரண்டுக்கும் கருத்து கூறிய அனானிமஸ், குமரேசன், இன்னும் பதிப்பிக்கப்படாத கருத்துகளைக் கூறிய எஸ் கே, துளசி அக்காவுக்கும் நன்றி.
 
ரிப்பேர் செய்ய நேரமும் பொறுமையும் இல்லை. மன்னிக்கவும்.


0 பின்னூட்டங்கள்:

 

blogger templates | Make Money Online