கவிதை எழுதுவது என் கெட்ட வழக்கங்களில் ஒன்றல்ல. இருந்தாலும், அருண் மற்றும் பாஸிடிவ் ராமாவின் இன்றைய நம்பிக்கைக் கவிதைகளால் உந்தப்பட்டு நானும் புணைந்தேன் ஒரு கவிதை - நாராயணன் வெங்கிட்டுவின் போட்டிக்காக.
நம்பிக்கை
ஒளிரத்தான் செய்கிறது சூரியன் -
ஊழி வந்து பிரட்டிப்போட்ட கடற்கரையிலும்.
பொழியத்தான் செய்கிறது மேகம் -
நடுங்கி அடங்கிய நிலத்தினிலும்.
புணரத்தான் செய்கிறார்கள் பெற்றோர் -
தீ வந்து மகவு தின்ற வீட்டிலும்..
நம்பத்தான் வேண்டும் நாமும் -
நாளையேனும் நற்பொழுதாய் விடியுமென.
Jul 25, 2005
நம்பிக்கை - கவிதை
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 43 பின்னூட்டங்கள்
Jul 23, 2005
சோதனை - FLASH பதிவு
ஹல்வாசிட்டி விஜய்க்கு நன்றியுடன்!
இது என் முதல் ஃப்ளாஷ் பதிவு, எனவே கையில் கிடைத்த பழைய கோப்பை மேலிட்டு உள்ளிட்டு இருக்கிறேன்.
தயவுசெய்து கருத்துக் கூறவும்.
எஞ்சின் பற்றித் தெரிந்து கொண்டால் தப்பு ஒன்றும் இல்லைதானே?
Thanks - Suresh>
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 9 பின்னூட்டங்கள்
Jul 21, 2005
என் முதல் சிறுகதை!
என் கண்ணாலம் நடந்த கதைய கேக்குறீங்களா?
அப்ப நான் வேல வெட்டி இல்லாம இருக்கேன்.. கையிலே காலணா இல்லே
அன்னிக்கு ஒரு நா காத்தாலேர்ந்தே ஒரே பசி. மூணு நாளா சரியான சாப்பாடு கெடயாது.
வயக்கம் போலவே எதிர்த் தெரு மாட்டுக்காரன் கொட்டாய்லே பூந்து கொஞ்சம் பால திருடிக் குடிக்கறத தவிர வேற வழி இல்லை.
ஆனாக்க அதிலேயும் ஒரு சிக்கல்.. அந்த மாட்டுக்காரன் பொண்ணு ஒருக்கா என்னய பாத்துட்டா. இன்னோரு தபா பாத்தா அப்பங்காரன் கிட்டே போட்டுக் கொடுத்துடுவா..
சே.. என்ன பொழப்புடா இது. தரித்தரம் புடிச்ச பொழப்பு.
ஒருக்கா போயிப் பாக்கலாம்.. அவ இல்லேன்னா உள்ள பூந்துக்கலாம்..
வாசல்லியே நின்னிகினு இருந்தா அவ..
"இன்னாய்யா பால் திருடி குடிக்க வந்தியா?"
" இல்லேம்மே! நாலு நாளா பசி! கைலே காலணா இல்லே- அதான்.. உங்க அப்பன் கிட்டே சொல்லிடாதே!"
"இரு நானே பால் கொண்டாறேன்"னு உள்ளாற போயி ஒரு சொம்புலே பால் கொணார்றா.
குடிச்சு முடிச்சுட்டு," இன்னாம்மே, திருடனுக்கே பால் தரியே, உன் அப்பன் ஆத்தாக்கு தெரிஞ்சா இன்னா ஆவும்?"
"தெரிஞ்சா தெரிஞ்சுட்டுப் போவுது.. நீன்னா எனக்கு அவ்வளோ இஸ்டம்"
"புத்தியோடதான் பேஸ்ரியா? நானே ஒரு பஞ்சப் பரதேசி"
"அதெல்லாம் எனக்குத் தெரியாது - உன்னிய ரொம்ப நாளா பாத்துகினு கீறேன் - உன்னியதான் கண்ணாலம் கட்டுவேன்"
திருப்பி பாத்தா அவ அப்பன் கோவமா என்னிய பாத்துகினு நிக்கிறான்..
"டேய் பன்னாட.. என் பொண்ணு மேலேயா கை வக்கிற?"ன்னு அடிக்க வரான்.
கூட்டம் கூடிடிச்சு.
மேலத்தெரு பரமு எனக்குக் கட்டம் கட்டிப் பேஸ்றான்
"பால்கார் - நம்ம பாலு பாவம் வாழ்ந்து கெட்ட குடும்பம்- நல்ல பையன் - நீ மட்டும் உன் பொண்ண அவனுக்கு கட்டிக் கொடு- அப்புறம் அவன் பெரிய ஆளாயிடுவான்"
"சரிதான்யா - காலனா கைலே இல்லாத தரித்திரம் புடிச்சவனுக்கு எப்படி பொண்ணைத் தர்றது"
"அவன் கையிலே மட்டும் பணம் இருந்தா"
"தாராளமா என் பொண்ண கட்டித் தர்றேன்"
பரமு என்னைத் தனியா தள்ளிக்கினு போனான் - "சேட்டுகிட்டே நான் வட்டிக்கு பணம் வாங்கித் தர்றென், கன்னாலம் கட்டிக்கோ - அப்பால மிச்சத்த பாத்துக்கலாம்"ன்னான்
பால் திருடப் போனவனுக்கு கண்ணாலமே கட்டி வெச்சுட்டானுங்க!
இப்ப சேட்டு வட்டி கேட்டு நெருக்கறான்..
நீங்க எதாச்சும் உதவி செய்ய முடியுமா?
உங்களால முடிஞ்ச தொகய "Balaji, Tirumalai-Tirupati Dewastanam, Tirupati - AP "ன்ற அட்ர்ஸுக்கு நேராவோ இல்ல போஸ்ட்டுலயோ அனுப்பிடறீங்களா?
நான் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்வேன்..
Comments please!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 8 பின்னூட்டங்கள்
Jul 12, 2005
தமிழ் சினிமா சஸ்பென்ஸ் திரைக்கதைகள் - ஒரு பார்வை:-)
மு கு: இந்தப் பதிவிற்கும், வலைப்பதிவுகளில் இன்று காலையில் இருந்து நடைபெற்றுவரும் பின்னூட்டப் போருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இந்தியன் - படத்தில் தாத்தா கொலை செய்கிறார் என்று பார்வையாளர்களுக்குத் தெரியும் - ஆனால் கதையில் வரும் போலீஸுக்குத் தெரியாது - முதல் பாதியில். பின்னால் போலீஸ் துப்பறிந்த பிறகு, தாத்தா வெளிப்படையாக டிவியில் ஒளியும் ஒலியும் காட்டி எல்லோருக்கும் தன்னை அறிவித்துக் கொள்வார்.
ஆளவந்தான் - படத்தில் நந்து எங்கே இருக்கிறான் என்று விஜய்க்குத் தெரியாது - முதல் பாதியில். பின்னால் விஜய் துப்பறிந்த பிறகு, நந்து வெளிப்படையாக நடு ரோட்டில் வெறி ஆட்டம் போடுவான்.
அந்நியன் - படத்தில், அம்பியும் அந்நியனும் வேறு ஆட்கள் என்பது போல முதல் பாதி காட்சி அமைக்கப்பட்டிருக்கும். பின்னால் இருவரும் ஒருவரே எனத்தெரிந்தவுடன் அடுத்தடுத்த நொடியிலேயே அம்பி அந்நியானக மாறுவான்.
இந்தத் திரைக்கதை அமைப்புகளில் இருந்து என்ன தெரிகிறது?
மக்களுக்குத் தெரியாமல் இருக்கும் வரை இரட்டை வேடம் போடுபவர்கள், தெரிய ஆரம்பித்த பிறகு தங்கள் வெறி ஆட்டத்தை அதிகப்படுத்துகிறார்கள்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 10 பின்னூட்டங்கள்
Jul 5, 2005
முதல் NUMBER 1 - பினாத்தல்கள்தான்!
மாயவரத்தான் நம்பர் 1 ஆவதற்கு முன்னாலேயே..
...
பினாத்தல் சுரேஷ் கைவண்ணத்தில்
...
அற்புதமான 3D படங்கள் காண
...
அவசியம் கிளிக்குங்கள்!
....
இவற்றைக் காண பின்வருவன எதுவுமே தேவை இல்லை!
இவற்றைக் காண பின்வருவன எதுவுமே தேவை இல்லை!
3D கண்ணாடி
லதா எழுத்துரு
தேனீ TC
எழுத்துரு
தமிழ் அறிவு
Now, 3D Pictures:
DDD
DDD
DDD
DDD
DDD
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 7 பின்னூட்டங்கள்
வகை நக்கல்