2012 புத்தாண்டை என் பாணியில் வரவேற்கிறேன்.
Dec 26, 2011
Mar 23, 2011
எங்கே தேடுவேன்.. தலைவனை எங்கே தேடுவேன்.. (Flash - தேர்தல் ஸ்பெஷல்)
பினாத்தல்கள் வழங்கும் மற்றுமொரு ஃப்ளாஷ் குவிஸ்.
தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று புரட்சித்தலைவர் பாடிவிட்டுப்போய்விட்டார். ஆனால் அந்தத் தலைவன் / தலைவி எங்கே இருக்கிறார்?
இந்த ஃப்ளாஷில் ஒருவேளை இருக்கலாம் :-)
விளையாட்டு ரொம்ப சிம்பிள். பதினாறு அரசியல்வாதிகள் போட்டோக்கள் ஃப்ளாஷின் வலதுபக்கத்தில் இருக்கும். பத்து கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமான அரசியல்வாதியை க்ளிக் செய்து உறுதி செய்து அடுத்த கேள்விக்குச் செல்லவேண்டியதுதான்.
வெயிட்.. வாட் இஸ் திஸ் பொருத்தமான?
அதற்குத்தான், க்ளூ தர ஃப்ளாஷின் இடதுபக்கத்தில் ஒரு சிறு அனிமேஷன் க்ளிப்; அந்த அசைபடத்தில் வரும் விஷயங்கள் எந்த அரசியல்வாதிக்குப் பொருத்தம் என்பதைத் தேர்ந்தெடுத்து, க்ளிக்க வேண்டும்.
கடைசியில் வரும் கோடை எனக்கு அனுப்பினால், அதை நான் இங்கே அப்டேட் செய்துவிடுவேன்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 67 பின்னூட்டங்கள்
வகை அரசியல், நையாண்டி, போட்டி, ப்ளாஷ், விளையாட்டு
Aug 26, 2010
எந்திரன் - விமர்சனம் ஃபார் டம்மீஸ் (ஃப்ளாஷ்)
எந்திரன் படம் வரப்போகிறதாமே.. முன்கூட்டியே டிக்கட் பதிவு செய்பவர்கள் மட்டுமின்றி முன்கூட்டியே புறக்கணிப்பு செய்பவர்கள் அதிகமாகி இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. முன்கூட்டியேதான் நாம் எதையுமே செய்வோம். படம் வருவதற்கு முன்கூட்டியே இப்போதே சில விமர்சனங்கள் வந்துவிட்டன. ஆனால் யாரும் செய்யாததைச் செய்வதுதானே பினாத்தலுக்கு அழகு. படம் வருவதற்கு முன்பாக ஒரு விமர்சனம் வரும் ரெண்டு விமர்சனம் வரும் - 18225 விமர்சனம்?
ஏற்கனவே சிவாஜிக்கு 1024 விமர்சனம் போட்டிருந்தேன். (அதை இன்னும் ஞாபகம் வைத்திருப்பவர்களை பசித்த பாவனா தின்னட்டும்.) ஃப்ளாஷுக்கு உரித்தான இண்டராக்ஷனுடன், விமர்சனம் எழுத படம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற கிண்டல்.
ஆனால் இந்த முறை இன்னும் அதிகத் தெரிவுகளுடன், இன்னும் கஷ்டமான அல்காரிதம்களுடன் வந்திருக்கிறேன். கதையில் இருந்தே தேர்வு செய்யலாம். எங்கிருந்து உருவி இருப்பார்கள் என்று ஆரம்பித்து இசை சண்டை காமெடி - ஒரு ஏரியாவை விட்டுவைக்காத முழுமையான விமர்சனம், நம் வழக்கமான விமர்சகர்கள் ஸ்டைலில் பஞ்ச் லைனுடன் - ஆறு க்ளிக்குகளில் நீங்கள் காபி செய்ய வசதியாக!
ஃப்ளாஷின் முடிவில் வரும் கோட் ஐ பின்னூட்டமாகப் போடவேண்டியது மட்டும்தான் உங்கள் வேலை! அதற்காக வெறும் கோட் ஐ மட்டும் போடவேண்டும் என்ற அவசியம் இல்லை, மேலான, சைடான கருத்துகளையும் தாராளமாகத் தூவலாம். (இந்த மாதிரி கோட் எப்ப வச்சாலும் பின்னூட்டப்பொட்டி ஃபுல்லா ஒரே கோட்தான் இருக்குது!)
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஃப்ளாஷில் மூன்று நாட்கள். இந்தச் சுகத்தை எவ்வளவு மிஸ் செய்திருக்கிறேன்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 69 பின்னூட்டங்கள்
வகை சினிமா, திரைப்படம், நக்கல், ப்ளாஷ், மொக்கை, விமர்சனம், விளையாட்டு
May 21, 2009
பேருந்துகளுக்கு கலர் அடிக்கலாம் வாங்க! (Flash)
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ப்ளாஷுடன் வந்திருக்கிறேன்.
பேருந்துகளுக்கு கலர் அடிக்க வேண்டும். இதான் விளையாட்டு. 7 பேருந்து, 7 கலர் காம்பினேஷன் கீழே கொடுத்திருக்கிறேன். எந்தப் பேருந்துக்கு என்ன வண்ணம் அடிக்கலாம்? அதான் கன்ப்யூஷன்.
எந்தக் கலர் எந்த வண்டிக்கு சூட் ஆகும்? வண்டியோட ஓட்டுநர் என்ன நினைக்கிறார், நடத்துநர் என்ன நினைக்கிறார்? வண்டியில என்ன சினிமா ஓடுது, அந்த வண்டியில ஏறிட்ட பயணிங்க என்ன நினைக்கிறாங்க - இதையெல்லாம் ஒட்டுக்கேட்டு, தனித்தனியா கொடுத்திருக்கேன். அதை மறைக்க ஒரு பட்டை - ஒரு க்ளிக் பண்ணா எழுத்து தெரியும். இந்த க்ளூவெல்லாம் வச்சு, கீழே இருக்க ஏழு கலர் காம்பினேஷன்லே இருந்து இந்தப்பேருந்துக்கு கரெக்டா கலர் அடிக்கணும். அவ்வளவுதான் கேம்.
கலர் கரெக்டுதான்னு உறுதிப்படுத்திட்டீங்கன்னா, அடுத்த பேருந்து ரெடியா நிக்கும். அதுக்கும் க்ளூவைப்பாத்து கரெக்டா கலர் அடிங்க. எல்லா பஸ்ஸும் முடிச்சிட்டீங்கன்னா எத்தனைக்கு கரெக்டா கலர் அடிச்சீங்கன்னு மார்க்கும், எவ்வளவு க்ளூ உபயோகப்படுத்தினீங்களோ அதுக்கு ஏத்த மாதிரி போனஸ் கூட கிடைக்கும் - அதாவது இருக்கற 4 க்ளூவில் 2லேயே கண்டுபிடிச்சிட்டா அதிக போனஸ்!
அங்க இருக்கிற கோட் - ஐ பின்னூட்டமா போட்டீங்கன்னா நீங்க எவ்வளவு வாங்கினீங்கன்னு நானும் தெரிஞ்சுக்குவேன்.
யார்யார் சரியான விடை சொல்லி இருக்காங்கன்னு இங்கே உடனுக்குடனே பதிவாயிடும்.
இது சங்கமம் போட்டிக்காக உருவாக்கப்பட்ட ப்ளாஷ். நேரம் வரும்போது அங்கேயும் வந்து ஓட்டுப் போட்டுடுங்க!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 67 பின்னூட்டங்கள்
Jun 24, 2008
கமலின் தசாவதாரம் - தொடருது பினாத்தலின் Quiz அவதாரம்!
அப்பப்போ ஒரு மெகா ப்ராஜக்ட் எடுத்துக்கிட்டு மண்டைய உடைச்சுக்காட்டி பொழுது போகாது எனக்கு. கனவிலும் வரக்கூடாத தமிழ்மணத்துக்கு அப்புறம் வேற எதுவும் பெரிசா தோணலையேன்னு கவலையோட உக்காந்துக்கிட்டிருந்தப்ப மின்னல் மாதிரி அடிச்சுது ஒரு யோசனை.
உடனே நண்பர்கள் கிட்டே சாட்டி, அதை மெருகேத்தி, ப்ளாஷ் ஆக்கி உங்க முன்னாலே வச்சிருக்கேன்.
கான்சப்ட் என்னன்னா (இந்தக் கான்சப்ட்ன்ற வார்த்தையையே டிவிக்காரங்க நாறடிச்சு வச்சிருக்காங்க!) .. சரி விடுங்க.. இந்த விளையாட்டோட ஆரம்பம், குமுதத்துல வர பயோடேட்டா மாதிரிதான். ஒரு நபரைப் பத்தி 4 குறிப்பு சொல்லியிருக்கேன்.. சமீபத்திய மகிழ்ச்சி, சமீபத்திய சோகம், வாழ்நாள் சாதனை, நீண்டநாள் கடுப்பு - ஆனா குறிப்பா சொல்லாம, படமா சொல்லி இருக்கேன். அந்தப் படத்தை வச்சு,படம் என்ன சொல்லவருதுன்னு புரிஞ்சுகிட்டு, அவை எந்தப் பிரபலத்தைக் குறிக்குதுன்னு தெரிஞ்சவுடனே அந்த போட்டோவைக் கிளிக் செய்யணும், அப்புறம் உறுதிப்படுத்தணும் அஷ்டே.
அதுலயும், அந்தக்குறிப்புள்ள படங்கள் எல்லாம் உடனே தெரியாது. அதை ஒரு சின்ன வெள்ளை சதுரம் வச்சு மறைச்சிருக்கேன். அந்த வெள்ளை சதுரத்தைக் கிளிக் பண்ணீங்கன்னா, படம் தெரியும். குறைந்த குறிப்புகள்லேயே கண்டுபிடிச்சீங்கன்னா, அதுக்கு போனஸ் உண்டு. சீக்கிரம் முடிச்சீங்கன்னா அதுக்கும் டைம் போனஸ் உண்டு.
படம் சரியாத் தெரியாட்டி, எந்த இடம் பெரிசாத் தெரியணுமோ அந்த இடத்துல வலது-கிளிக்கி, zoom செய்துகொள்ளலாம். பார்த்தவுடனேயே மறுபடி வலது-க்ளிக்கி, show all எனத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
முதல் பக்கத்துல இருக்கிற உதவியைக் கிளிக்கினா உதாரணமும் எப்படி விளையாடணும்ன்ற விதிமுறைகளும் இருக்கு.
ஒரு முறை உறுதிப்படுத்திட்டீங்கன்னா அடுத்த கேள்விக்குப் போயிடும். அதே கேள்விக்குத் திரும்பி வரமுடியாது. கவனமா உறுதிப்படுத்துங்க..
மொத்தம் 10 கேள்விகள். 10 கேள்விக்கு, 16 பிரபலங்களோட படம்.. எனவே, எலிமினேஷன் பண்ணி எல்லாம் ஆன்சர் சொல்ல முடியாது :-) 10 கேள்வியும் முடிஞ்சவுடனே உங்க மார்க்கும், ஒரு கோட் -உம் வரும். அந்தக் கோடை மட்டுமே பின்னூட்டமா போட்டீங்கன்னா கூட போதும், அதை டீ கோட் பண்ணி எவ்வளவு மார்க்குன்னு நானும் தெரிஞ்சுக்குவேன், மத்தவங்களுக்கும் சொல்லிடுவேன் :-)
கோடை மட்டும் பின்னூட்டமா போட்டா போதும்னு ஒரு பேச்சுக்குதான் சொல்றேன், எப்படி இருந்தது, என்ன மாதிரி மேம்பாடு செய்யலாம்னு ஆலோசனையும் சொல்லலாம்..
இது தயாராகி 10 நாளுக்கு மேலே ஆகுது.. தசாவதாரம் சுனாமிலே மாட்டிக்கக்கூடாதுன்னு டிலே பண்ணினா நாட்டிலே ஆயிரம் மாற்றங்கள்.. படத்தையெல்லாம் அடிச்சு அடிச்சு திருத்தவேண்டியதாப் போச்சு. தயாரிப்பில் உறுதுணையாகவும், மேம்பாடுகளும் சொல்லி இருந்த மின்னரட்டை நண்பர்கள் - இலவசக்கொத்தனார், ஸ்ரீதர் வெங்கட், பாஸ்டன் பாலா, வெட்டிப்பயல், கண்ணபிரான் ரவிசங்கர், சிறில் அலெக்ஸ், இட்லிவடை ஆகியோருக்கு இதயங்கனிந்த நன்றி.
தற்போதைய விடை நிலவரம் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.
Nov 25, 2007
5. விளையாட்டுப் பாடம் - சைட் அடிப்பது எப்படி? Wifeology Exclusive Flash
விளையாட்டா பாடம் கத்துக்கறது எப்பவுமே சுலபம்ன்றதால இந்தப் பாடத்துக்காகவே ஒரு ப்ளாஷ் கேம் தயாரிச்சிருக்கேன். Practice makes perfect னு சொல்வாங்க இல்லையா, அதனால ஒரு முறை தோத்தாலும் பலமுறை முயற்சித்தால் வெற்றி நிச்சயம்!
சைட் அடிக்கறது சரியா தப்பான்ற விவாதத்துக்குள்ள நான் போக விரும்பலை. நான் தப்புன்னு சொன்னா நிறுத்திரப்போறீங்களா என்ன? இது ஒரு தவிர்க்க முடியாத விஷயம் அப்படின்றத யாரும் மறுக்க மாட்டீங்க! டாக்டர்கள் என்ன சொல்றாங்கன்றத இங்க போய் பாத்துக்கங்க! தங்கமணிங்க ஒத்துக்கவா போறாங்க? ஹூம்!
சரி தங்கமணியோட வெளிய போறீங்க, சைட் அடிச்சு மாட்டிக்கறீங்க. இந்த சிச்சுவேஷன்லே இருந்து வெற்றிகரமாக (அடிவாங்காம -ன்றதத்தான் அப்படிச் சொல்றேன்) வெளியே வருவது எப்படின்றதத் தான் இந்த பாடத்துல பாக்கப் போறோம்.
வழக்கமான டிஸ்கி: இது சிலருக்கு வொர்க் அவுட் ஆவலாம், ஆகாமலும் போகலாம், அவரவருக்கு வாய்த்தது அவரவருக்கு!
இந்த சிச்சுவேஷனையும் மூணு விதமா டீல் பண்ணலாம்.
1. "என்ன லுக்கு?"
"என்ன, அதெல்லாம் ஒண்ணும் இல்லையே"
இத்தோடு மேட்டர் முடிந்துவிட்டது போலத் தோன்றும்.. ஆனால் டேக் இட் ஈஸி பாலிஸி தங்கமணிகளுக்குத் தெரியாத பாலிஸி. அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாலிஸி கிவ் அண்ட் டேக் பாலிஸி (போட்டு வாங்கறதுதான்)
எதிர்பாராத நேரத்தில் உங்களை இப்படி ஒரு கேள்வி தாக்கும் -
"அந்தப் பொண்ணு போட்டிருந்த மாதிரி ஒரு யெல்லோ ட்ரெஸ் எனக்கு வாங்கித் தரீங்களா?"
எதோ ஞாபகத்தில் "உங்கிட்டதான் அதே ட்ரெஸ் ஏற்கனவே இருக்கே" என்றோ, "அவ போட்டிருந்தது யெல்லோ இல்லையே ப்ளூ வாச்சே" என்று சொல்லியும் விடுவீர்கள்! பொய் சொல்வதற்கு நிறைய ஞாபகசக்தி வேண்டும். இல்லையென்றால் மாட்டுவது நிச்சயம். . அடி வாங்குவது சர்வ நிச்சயம்..
2. "என்ன லுக்கு?"
"ஆமா! லுக்குதான் விட்டேன்.. என்னான்ற இப்ப? நான் எதையெல்லாம் மிஸ் பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சுக்க ஒரு லுக்கு விடக்கூட சுதந்திரம் கிடையாதா?"
இப்படிச் சொல்லும் ஆளின் கதி என்ன என்பதை அருகாமையில் உள்ள மருத்துவமனையின் ட்யூட்டி டாக்டரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். "ICU லே சேத்தாங்களே அந்த ஆளு" என்று சொன்னால் ரிசப்ஷனில் வழி காட்டுவார்கள்.
3. இவர்தான் நம்ம ஆளு. வைபாலஜியில டாக்டரேட் வாங்கினவரு.
"என்ன லுக்கு?"
"என்ன?"
"வச்ச கண் வாங்காம சைட் அடிச்சுகிட்டிருக்கீங்களே.. "
"சைட்டா? பாத்தேன் உண்மைதான்.. எதுக்காகப் பாத்தேன்ன்னு தெரியாம பேசாதே"
"எதுக்கு?"
1. "அவ போட்டிருந்தாளே ஒரு பின்க் ட்ரெஸ்.. அந்த அட்டு பிகருக்கே அது அவ்ளோ நல்லா இருக்கே, உனக்குப் போட்டா எப்படி இருக்கும்னு யோசிச்சேன்.. நய்ஹாலே கிடைக்கும் இல்ல? உடனே போய் வாங்கிகிட்டு வந்திடலாமா?"
இதை செலவுன்னு நினைக்காதீங்க.. அடிவாங்காம இருக்கறதுக்குக் கொடுக்கற Protection Money!
2. "இந்த மாதிரி ரெண்டு பேரைப் பாத்தாதானே நான் எவ்வளவு பாக்கியசாலின்னு எனக்கே தெரியுது. .இதையெல்லாம் தடுக்காதே!"
3. "அவளைப் பாத்தா உன்னோட கஸின் மீனா மாதிரியே இல்லை?கல்யாணத்துல இண்ட்ரொட்யூஸ் செஞ்சியே? Remarkable Resemblance! உனக்கு அப்படி தோணலே?"
நேரடியாக இல்லைன்னு சொல்றதைவிட, ஆமாம்னு அடிவாங்கறதைவிட, இந்த மாதிரி சமாளிபிகேஷன் வொர்க் அவுட் ஆக வாய்ப்பு அதிகம்.
சரி.. கீழே இருக்கற கேமை விளையாடிப் பாருங்க! தங்கமணி பாக்காத நேரத்துல ரங்கமணி மேலே க்ளிக்கி சைட் அடிக்க வைங்க! பத்து பாயிண்ட் எடுத்தா வர ஸ்க்ரீனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனக்கு மெயில் அனுப்புங்க, ஒத்துக்கறேன் நீங்க வீரர்னு!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 39 பின்னூட்டங்கள்
வகை அனுபவம், இல்லறத்தியல், நக்கல், ப்ளாஷ்
Sep 10, 2007
பட்டறையும் பினாத்தலாரும்
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 27 பின்னூட்டங்கள்
Jul 17, 2007
சோதனைப் பதிவு
உங்கள் உடல் நிறை அளவை இங்கே பரிசோதித்துக்கொள்ளலாம்
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 8 பின்னூட்டங்கள்
வகை ப்ளாஷ்
May 21, 2007
சிவாஜி - ஒரு படம் - 1024 விமர்சனங்கள்!!!!! (21 May 2007)
1024 என்றால் என்ன என்று கேட்டிருந்தேனே, இதோ அதற்கு விளக்கம்.
விமர்சனம் எழுதுவதற்கு படம் வெளியாகியிருக்கத் தேவையில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. நம்முடைய முந்தைய முடிவுகளும், விருப்பு வெறுப்புகளும்தான் விமர்சனமாக வெளிவருகிறது எனும்போது,
அப்படி ஒரு விமர்சனம் எழுத ஒரு பில்டர் (Builder)செய்யத்துணிந்தேன்.
இந்த ப்ளாஷை 5 நாள் முன்பே தயாரித்துவிட்டிருந்தாலும், படம் வெளிவரை வெறும் டீஸர் மட்டும் கொடுக்கலாம் என்றே ரிஸர்வில் வைத்திருந்தேன். ஆனால், படம் வெளிவருவதில் அரசியல் உள்பட பல சிக்கல்கள் - அவர்களுக்கு முன்னோடியாக, முன்னுதாரணமாக நான் ரிலீஸ் செய்துவிடுகிறேன் :-)
உங்கள் முன்கருத்துக்களைத் தெரிவு செய்தால், உங்கள் விருப்புக்கேற்ற சிவாஜி விமர்சனம் திரையில் வரும், அதை காபி பேஸ்ட் செய்துகொள்ளவேண்டியதுதான்.
விமர்சனம் மட்டுமல்ல, மதிப்பெண் போட்டு, விமர்சன பஞ்ச் லைனும் கொடுக்கும் என் சாப்ட்வேர்.
பாருங்க, பாருங்க பாத்துகிட்டே இருங்க. உங்களுக்கு கிடைத்த முடிவையும் மதிப்பெண்ணையும் பின்னூட்டமாகப் போட்டுவிடுங்கள்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 59 பின்னூட்டங்கள்
May 11, 2007
சற்று பின் செய்திகள் flash on flash news (11 May 2007)
இப்போது எம்பெட் செய்தாகிவிட்டது. பார்த்து கருத்து சொல்லுங்கள்.
கொஞ்சம் ஊகப்பிசாசுக்கு வேலைகொடுத்து ஊடகங்கள் என்ன செய்யும் என்று
நினைத்து செய்த ப்ளாஷ்:
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 11 பின்னூட்டங்கள்
Dec 16, 2006
சனிக்கிழமை - Promise fulfilled;-)
குறும்புன்னு ஒரு பிளாஷ் தயார் பண்ணா, பிளாக்கரும், பிளாஷும் போட்டோபக்கெட்டும் சேர்ந்து என்கிட்டே அடிச்ச குறும்பு தாங்க முடியல!
பட்டன் வொர்க் ஆகாததையே குறும்புன்னு நெனச்சு சிரிச்ச ஆவிங்க,
வேலைக்கு ஆவலை, சனிக்கிழமை கச்சேரி வச்சுப்போம்னு சொன்ன லக்கிலுக்,
போன் பண்ண ரெடியா இருந்த முத்துகுமரன்
இடைக்கால நிவாரணம் கொடுத்த கோபி, கஷ்டப்பட்டு பார்த்து பாராட்டிய சிறில், பொன்ஸ், நாமக்கல் சிபி,I H மற்றும் பலர்,
வெள்ளெழுத்து வந்துடிச்சான்னு அக்கறைப்பட்ட இ கொ,
எறும்பு ஊருது, ஒண்ணும் தெரியலேன்னு கஷ்டப்பட்ட உஷா,
மார்க்கை சுழிச்சுறவான்னு பயமுறுத்தின தருமி..
எல்லாரும் இப்ப பாருங்க!
முக்கியமான பிரச்சினை என்னன்னா, பிளாஷிலே கறுப்பு பின்புலம் கொடுத்துட்டு, பிளாக்கர்லே ஆரஞ்சு பின்புலம்னு தப்பா கொடுத்துட்டேன். அதனால, ஆரஞ்சு மேலே வெள்ளை என் உள்ளத்தைக் காட்டினாலும், உள்ளதைக்காட்டவில்லை;-))
மின்னஞ்சல் வேணும்னா கேளுங்க!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 35 பின்னூட்டங்கள்
Dec 14, 2006
ஆக வேண்டுமா வலைப்பதிவர் 2006? (குறும்பு - தேன்கூடு)(Repair version 2:-))
வலைப்பதிவர் ஆவதற்கு பெரிய கணினி அறிவு தேவையில்லை என்பதற்கு என் போன்றவர்களே உதாரணம். வலைப்பதிவை நடத்தவும் பெரிய விஷயஞானமோ ஆழ்ந்த சிந்தனையோ தேவையில்லை என்பதும் நான் அடிக்கடி நிரூபித்து வந்திருக்கும் விஷயமே.
ஆனால், எந்தத் துறைக்குச் சென்றாலும் அந்தத் துறை சார்ந்த அறிவு, அத்துறைக்கே உரித்தான கலைச்சொற்கள் (Jargon) தெரியாமல் ரொம்ப நாள் குப்பை கொட்ட முடியாது. தமிழ் வலைப்பதிவர் சூழலில் பிரசித்தமான சில வார்த்தைகளை பொதுவில் பேசினால் நம் மனநலன் கேள்விக்குள்ளாவது திண்ணம்!
இதற்குத்தான் கௌன் பனேகா கரோர்பதி ஸ்டைலில் ஒரு பிளாஷ் வடிவமைத்திருக்கிறேன். தமிழ் வலைப்பதிவராக உள்ளவரும், படிப்பவரும் மட்டுமே விடையளிக்கக்கூடிய 15 கேள்விகள்..இக்கேள்விகளுக்கு விடையளிக்க முடிந்தவர்தான் வலைப்பதிவர் 2006!
விளையாடுங்கள்.
பி கு 1: சில பதிவர் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறேன் - தவறான உள்நோக்கத்தோடோ அவதூறு நோக்கத்தோடோ இல்லை என்பது சொல்லாமலே தெரியும். இருந்தாலும் யார் மனமாவது புண்பட்டால், பெயர்களை மாற்றிவிடத் தயாராக இருக்கிறேன் - எனக்கு ஒரு பின்னூட்டம் மட்டும் போடுங்கள்.
பி கு 2: KBC இன் பார்மட்டை முழுதுமாகக் கொள்ளவில்லை - எனவே காபிரைட் பிரச்சினை வரக்கூடாது.
பி கு 3: தேன்கூடு போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை கதை கட்டுரை தவிர்த்த வேறு வடிவமும் கொடுக்கலாம் என்றே சொல்லிவந்திருக்கிறார்கள் - இதுவரை யாரும் (நானும்) வேறு வடிவங்களில் பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை என்பது உறுத்தவே இதைத் தயாரித்தேன். இதை வெற்றிப்பெறச்செய்வது வேறு வடிவங்களிலும் முயற்சி செய்வதை ஊக்குவிக்கும்:-))
பி கு 4: கிடைத்த பரிசை பின்னூட்டமாகப் போட்டுச்செல்லுங்கள், ஆவன செய்வோம்.
பி கு 5: உபயோகப்படுத்தியுள்ள எழுத்துருக்கள்: TSCu_paranar, TSCVerdana.
பி கு 6: பிளாஷ் பிரச்சினைக்கு ஒரு இடைக்கால நிவாரணம்:
கோபிக்கு நன்றி நன்றி நன்றியுடன்..
மக்களே.. இப்போதும், நீங்கள் கோபி சொன்னது போல பார்க்க முடியும். எப்படீன்னா..பிளாஷ் வந்து "தொடர இங்கே அழுத்தவும்" வந்து நிக்கும்போது ரைட் கிளிக் செய்து ப்ளே எனத் தெரிவு செய்தால் கேள்விகளுக்குள் போய்விடலாம். அதற்குப்பிறகு பிரச்சினை இல்லை.பாத்துட்டு சொல்லுங்க, சனிக்கிழமை க்ளீனாச் சரி செஞ்சுடறேன். அவ்வளோதான்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 55 பின்னூட்டங்கள்
Oct 2, 2006
ஐ க்யூ தேர்வு
இணையம் முழுக்க ஐ க்யூ தேர்வுகள் கொட்டிக் கிடக்கின்றன. எல்லாக்கேள்விகளும் ஆங்கிலத்தில், ஆங்கில அறிவையும், கணித அறிவையும் உலக அறிவையும் சோதித்து இந்தா பிடி என்று மார்க்கை அள்ளித் தெளிக்கின்றன.
எந்தத் தேர்வாவது, நமக்கு மட்டுமே தெரிந்த கேள்விகளைக் கேட்கின்றனவா? ரஜினிகாந்தின் 100 ஆவது படம் எது? ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகமான படம் எது? வைகோ 1996 தேர்தலில் எந்தக்கட்சியில் இருந்தார்? அழகி என்ற சொல்லுக்கு விகடனில் என்ன அர்த்தம், தினத்தந்தியில் என்ன அர்த்தம்?.. தமிழுக்கே தமிழகத்துக்கே உரிய எத்தனை கேள்விகள் இருக்கின்றன? யாராவது இதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறார்களா?
எனவே, சோதனை முயற்சியாக, நான் ஒரு தேர்வைத் தயாரித்திருக்கிறேன். 30 கேள்விகள், 6 பிரிவுகளாக. இப்போதைக்கு எல்லாக்கேள்விகளும் பொருத்துக வகை மட்டுமே.
இடப்புறம் உள்ள கேள்விக்கு வலப்புறம் உள்ள தெரிவை பொருத்துங்கள். அந்த நேரத்தில் மறைக்கப்படாமல் தெரியும் தெரிவுக்கு மட்டுமே விடையளிக்க முடியும். சொடுக்கியவுடன் அடுத்த இடப்புறத் தெரிவுக்குப் போய்விடும். தவறெனில் முந்தைய கேள்வியை அழுத்தி சரி செய்யலாம்.
ஆறு பிரிவிற்கும் விடைஅளித்தபிறகு உங்கள் மதிப்பெண்ணுக்குத் தகுந்தமாதிரி பட்டம் வழங்கப்படும். (அந்தப்பட்டத்தை மட்டும் பின்னூட்டமாக எழுதிவிடுங்கள்.)
கருத்துக்களை தயங்காமல் கூறுங்கள்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 59 பின்னூட்டங்கள்
Apr 27, 2006
கொள்கை Tracker 2.0 - Updated Options
இந்த நிரலின் முக்கியமான அம்சமே உடனுக்குடன் மாற்றக்கூடிய தன்மை என்பதை நிரூபிப்பதற்காக:
நேற்றிலிருந்து பெரிய முக்கியத்துவம் பெற்றுவரும் இரு விஷய்ங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது.
1. "மிருக ஜாதிக்குள் கலவரம் வந்தால் நான் என்ன செய்வது" என்ற கலைஞர் கருத்து(?) தொடர்பான கொள்கை முழக்கங்கள்.
2. "டாடாவை மிரட்டிய தயாநிதி" தொடர்பான கொள்கை முழக்கங்கள்.
கோபி அவர்கள் இட்டிருந்த பின்னூட்டத்த்தில் மிகச்சரியாக நிரலில் உள்ள பிழையைச் சுட்டிக்காட்டி உள்ளார், அந்தப்பிழையும் நிவர்த்திக்கப்பட்டுவிட்டது.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 4 பின்னூட்டங்கள்
Apr 26, 2006
கொள்கை tracker 1.0
வேகமாக ஆட்சிகளும், காட்சிகளும் மாறும் காலம் இது.
கொள்கை விளக்கங்கள் கடைமட்டத் தொண்டன் வரை விரைவாகப் போய்ச் செர வேண்டிய கட்டாயத்தில் தலைமை இருக்கிறது. ஏற்கனவே தகவல் பரிமாற்றம் சரியாக இல்லாததால், வைகோ தன் பேச்சின் நடுவில் துண்டுச்சீட்டைப் பார்த்து நிலைப்பாட்டை மாற்றுகிறார், டிவி வரிப்பணத்திலா இல்லையா என்று கம்யூனிஸ்ட்டுகளும் திமுகவினரும் குழம்பி இருக்கிறார்கள் (பின் வேறெங்கிருந்து வரும் என்று கூடவா தோழர்களுக்குத் தெரியவில்லை?), மத்திய அரசின் பலத்தை சோனியா சொன்ன பிறகு காங்கிரஸார் உணர்ந்து கொள்கின்றனர், தெருவின் நடுவில் ஜெயலலிதாவின் தாயுள்ளம் விழித்துக் கொள்கிறது.. இப்படிப்பட்ட திடீர் மாற்றங்கள் கடைமட்டத் தொண்டன் வரை போய்ச் செர வேண்டாமா?
கிரிக்கெட் ஸ்கோர் கூட உடனடியாகத் தெரிந்துகொள்ள xml, rss feed போன்ற பல தொழில்நுட்ப உதவிகள் இருக்கும்போது, அரசியல் மட்டும் என்ன பாவம் செய்தது?
எனவே, பினாத்தலார் இந்த சீரிய முயற்சியில் இறங்கினார்.
கொள்கை tracker1.0 வின் தன்மைகள்:
இந்த மென்பொருள் வலையில் உள்ளதால் ஆன்லைனில் கட்சியினர் அனைவரும் தொடர்புகொள்ள முடியும்.
கட்சி உறுப்பினர் தகுதிக்குத் தகுந்தவாறு, பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்யமுடியும் (இந்த பீடா வெர்ஷனில் செயல்படுத்தப்படவில்லை.
தலைமையகம், தொடர்ச்சியாக புதுப்புதுக் கொள்கைகளை சுலபமாக வலையேற்றுவதன் மூலம், கடைநிலைத்தொண்டனுக்கும் உடனடியாக அறிவிக்க முடியும்.
பீட்டா வெர்ஷன் பயன்படுத்தும் முறை:
படி 1: எந்த விவகாரம் தொடர்பான கொள்கை தேவை என்பதைத் தெரிவு செய்து, செல்-ஐ அழுத்த வேண்டும். தற்போது உள்ள தெரிவுகள்:
1. இலவச அரிசி
2. கலர் டிவி
3. வெள்ள நிவாரணம்
4. மத்திய அமைச்சர்கள் செயல்பாடு
5. மக்கள் நலம் மேம்பாட்டுக்கான திட்டங்கள்
படி 2: எப்படிப்பட்ட பேச்சுவகை வேண்டும் என்பதைத் தெரிவு செய்து, செல்-ஐ அழுத்த வேண்டும் - தற்போது உள்ள தெரிவுகள்:
1. தலைவர்
2. உப தலைவர் - இரண்டாம் கட்டத் தலைவர்கள் அல்லது கூட்டணித்தலைவர்கள்
3. மேடைப்பேச்சாளன் - ஜனரஞ்சகமான பேச்சாளர்கள்
படி 3: கட்சி / அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது உள்ள தெரிவுகள்:
1. தி மு க அணி
2. அ தி மு க அணி
அவ்வளவுதான் - உங்களுக்குத் தேவையான கொள்கை முழக்கம் உங்கள் கணித் திரையில்! 1 - 2 -3 போலச் சுலபமான முறை!
தற்போது உள்ள தெரிவுகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ கூட முடியும்!
பார்த்து, கருத்து சொல்லுங்கள் - வினியோகஸ்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
TSCu Paranar எழுத்துரு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இங்கே தரவிறக்கிக்கொள்ளலாம்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 25 பின்னூட்டங்கள்
Apr 25, 2006
வருகிறது - அரசியலுக்கு ஒரு சிறப்பு மென்பொருள் (25 apr 06)
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 4 பின்னூட்டங்கள்
Apr 21, 2006
பினாத்தல் கவலை - காரணம் நீங்கள்! (28 Apr 06)
தோழர்களே..
கொள்கை ட்ரேக்கர் மென்பொருள் தோல்வியா அடைந்துவிட்டது?
எனக்குப் புரியவில்லை. இது மிகவும் நன்றாக வந்துள்ளது என்றுதான் நான் நினைத்தேன், நினைக்கிறேன்.
அதிகமான பார்வையாளர்களைப்பெற்ற போதும், நட்சத்திரக்குத்தும் இல்லை, பின்னூட்டங்களும் இல்லை.
உடனே பின்னூட்டத்துக்கு அலைகிறான் பினாத்தல் என்று நினைக்காதீர்கள் - எனக்கு விமர்சனம், Feedback தேவை - நல்லதாகவோ, கெட்டதாகவோ.
நல்லதோ, கெட்டதோ, வலைப்பதிவுக்காக மட்டுமே ஏறத்தாழ 10 மணிநேரங்கள் செலவு செய்து தயாரித்த பதிவு, ஏன் அங்கீகாரம் பெறவில்லை என்று தெரியாமல் கூட போவது மிகவும் மனதுக்குக் கஷ்டமாக இருப்பதை உணர்வீர்கள் என நினைக்கிறேன்.
இது வெர்ஷன்1:
இது வெர்ஷன்2:
உடனடியாக பதில் போடவும்! பினாத்தல் நிச்சயமாகக் கவலையில் இருக்கிறான்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 15 பின்னூட்டங்கள்
அலை பாயுதே! (21 Apr06)
இன்றைய திரைப்படம் - அலை பாயுதே
நடிகர்கள் - ஜெயலலிதா, சோ!
அந்நியன் அநியாயத்துக்கு நேரம் எடுக்கிறது - ப்ளாஷ் வேலை அதிகம் என்பதால் அல்ல, அலுவல் அதிகம் என்பதால்.. அடுத்த வாரம் நிச்சயம்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 2 பின்னூட்டங்கள்
Apr 18, 2006
கஜினி - தோல்வி அடைந்தது ஏன்?
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 0 பின்னூட்டங்கள்
Apr 17, 2006
வைகோ கலக்கும் கஜினி! (17 apr 06) - 2
என் அன்பு மக்களே,
காத்திருந்ததற்கு நன்றி.
அன்னியன், பிரமாண்டத் தயாரிப்பு என்பதால் நேரம் எடுக்கிறது (எனக்கும் எப்போவாவது ஆபீஸ் வேலை செய்யலாமுன்னும் மூடு வரும்:-)
எனவே, இன்று பாருங்கள்:
வைகோ கலக்கும் கஜினி!
முன்கூட்டிய மன்னிப்புக்கோரல்:
1.குரல் தெளிவின்மைக்காக - மைக்கில் ஏதோ கோளாறு இருக்கிறது.. சரிசெய்யவேண்டும்..
2. ஹாரிஸ் ஜெயராஜ் பிசியாக இருப்பதால், பின்னணி இசை தர முடியவில்லை. மனசுக்குள்ளேயே போட்டுக்கொள்ளுங்கள்.
பின்கூட்டிய மன்னிப்புக்கோறல்: முன்பு ஒருமுறை தவறாக வலையேற்றிவிட்டேன் போலிருக்கிறது! க கைநாட்டாக இருப்பதால் எவ்வளவுதான் தொந்தரவு?
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 5 பின்னூட்டங்கள்