நம்ம மக்களுக்கு, கமல்ஹாசனைத் தெரியுது, டாக்டர் விஜய் ஐத் தெரியுது ஏன் வாட்டாள் நாகராஜைக்கூடத் தெரியுது - ஆனா பொது ஜனத்தைத் தெரியலைங்க! என்னாதான் மாசத்துக்கு லட்சத்துக்கு நூறு இருநூறு கம்மியா வாங்கற பொட்டி தட்டற தொழில்லே இருந்தாலும் இப்படியா? மறுகாலனீய ஏகாதிபத்திய சிந்தனாமுறையின் இருத்தலியல் சாராக் கற்பனாவாதம் முத்திப்போச்சு போல!
சரி சரி எங்கேயும் போயிடாதீங்க.. மேட்டருக்கு வந்துடறேன்!
குவிஸ் வைச்சா ரெஸ்பான்ஸ் நல்லா இருக்கும்னு தெரிஞ்சதுதான்னாலும், இவ்வளவு சூப்பர் ரெஸ்பான்ஸை நானே எதிர்பார்க்கலை - அதுவும் அடல்ட்ஸ் ஒன்லி கதைகள் எல்லாப்பக்கமும் இருந்து கொட்டிக்கிட்டிருக்கும் வேளையில!
4000 ஹிட்டுக்களை விடுங்க! 130 பின்னூட்டங்களை விடுங்க! 118 முழுசா முடிச்சு அனுப்பிய விடைகளையும் விடுங்க! எனக்கு நிஜமான ஆச்சரியம் இத்தனை பேரும் இந்தப்போட்டிக்காக செலவழிச்சிருக்க நேரம்! 500லிருந்து 1000 நொடி!
கோட்னு ஒண்ணு கொடுத்ததால, சுலபமா காபி பேஸ்ட் பண்ணிட்டாங்கன்னாலும், யாருமே ரிப்பீட்டேய் போடலைன்றது ஒரு சந்தோஷம்தான்! உடனே கண்டுபிடிச்சுருவேனே :-)
இன்னொரு ஓ போடவேண்டிய சமாச்சாரம்! விடை அனுப்பியவங்களுக்கு சராசரியாக 72 சதவீதம் மதிப்பெண் கிடைச்சிருக்கு!
சரி..விடைகளைச் சொல்ல வேண்டிய நேரம்! பாஸ்டன் பாலா கேட்ட புள்ளிவிவரங்களுடன்!
வெற்றி பெற்றவர்களைப் பற்றிய அறிவிப்புலதான் ரொம்பவே குழம்பிட்டேன். நேரம் மற்றும் குறிப்புகளை வைத்து வரிசைப்படுத்தலாம் னு நெனச்சேன். ஆனால், அது நியாயமானதா இருக்காது - சிலர் திறந்துட்டு வேற ஜன்னலைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கலாம். சிலர் இரண்டாவது மூன்றாவது முறையாக முயற்சித்ததில் குறைந்த நேரத்தில் குறைந்த குறிப்புகளுடன் முடித்திருக்கலாம் - என்பதால் அப்படி வரிசைப்படுத்தாமல், எனக்கு பின்னூட்டம் / மின்னஞ்சல் வந்த நேரப்படி வரிசைப்படுத்தி இருக்கிறேன். இவர்கள் அனைவருக்கும் ஒரு ஓ!
ஆனா மக்களே! கும்மிக்கும் மொக்கைக்கும் நடுவுல அப்பப்ப இந்த மாதிரி எதாவது செஞ்சே தீரணும்னு எனக்கு இன்ஸ்பிரேஷன் கொடுத்துட்டீங்களே! எப்பல்லாம் முடியுதோ அப்பல்லாம் இப்படி ஒரு இம்சையைக் கொடுத்தே தீருவேனே! பாவம் நீங்க!
Jun 30, 2008
பொதுஜனத்தை மறந்த பொதுஜனம்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 18 பின்னூட்டங்கள்
வகை அனுபவம், பதிவர், புதிர், போட்டி, விளையாட்டு
Jun 24, 2008
கமலின் தசாவதாரம் - தொடருது பினாத்தலின் Quiz அவதாரம்!
அப்பப்போ ஒரு மெகா ப்ராஜக்ட் எடுத்துக்கிட்டு மண்டைய உடைச்சுக்காட்டி பொழுது போகாது எனக்கு. கனவிலும் வரக்கூடாத தமிழ்மணத்துக்கு அப்புறம் வேற எதுவும் பெரிசா தோணலையேன்னு கவலையோட உக்காந்துக்கிட்டிருந்தப்ப மின்னல் மாதிரி அடிச்சுது ஒரு யோசனை.
உடனே நண்பர்கள் கிட்டே சாட்டி, அதை மெருகேத்தி, ப்ளாஷ் ஆக்கி உங்க முன்னாலே வச்சிருக்கேன்.
கான்சப்ட் என்னன்னா (இந்தக் கான்சப்ட்ன்ற வார்த்தையையே டிவிக்காரங்க நாறடிச்சு வச்சிருக்காங்க!) .. சரி விடுங்க.. இந்த விளையாட்டோட ஆரம்பம், குமுதத்துல வர பயோடேட்டா மாதிரிதான். ஒரு நபரைப் பத்தி 4 குறிப்பு சொல்லியிருக்கேன்.. சமீபத்திய மகிழ்ச்சி, சமீபத்திய சோகம், வாழ்நாள் சாதனை, நீண்டநாள் கடுப்பு - ஆனா குறிப்பா சொல்லாம, படமா சொல்லி இருக்கேன். அந்தப் படத்தை வச்சு,படம் என்ன சொல்லவருதுன்னு புரிஞ்சுகிட்டு, அவை எந்தப் பிரபலத்தைக் குறிக்குதுன்னு தெரிஞ்சவுடனே அந்த போட்டோவைக் கிளிக் செய்யணும், அப்புறம் உறுதிப்படுத்தணும் அஷ்டே.
அதுலயும், அந்தக்குறிப்புள்ள படங்கள் எல்லாம் உடனே தெரியாது. அதை ஒரு சின்ன வெள்ளை சதுரம் வச்சு மறைச்சிருக்கேன். அந்த வெள்ளை சதுரத்தைக் கிளிக் பண்ணீங்கன்னா, படம் தெரியும். குறைந்த குறிப்புகள்லேயே கண்டுபிடிச்சீங்கன்னா, அதுக்கு போனஸ் உண்டு. சீக்கிரம் முடிச்சீங்கன்னா அதுக்கும் டைம் போனஸ் உண்டு.
படம் சரியாத் தெரியாட்டி, எந்த இடம் பெரிசாத் தெரியணுமோ அந்த இடத்துல வலது-கிளிக்கி, zoom செய்துகொள்ளலாம். பார்த்தவுடனேயே மறுபடி வலது-க்ளிக்கி, show all எனத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
முதல் பக்கத்துல இருக்கிற உதவியைக் கிளிக்கினா உதாரணமும் எப்படி விளையாடணும்ன்ற விதிமுறைகளும் இருக்கு.
ஒரு முறை உறுதிப்படுத்திட்டீங்கன்னா அடுத்த கேள்விக்குப் போயிடும். அதே கேள்விக்குத் திரும்பி வரமுடியாது. கவனமா உறுதிப்படுத்துங்க..
மொத்தம் 10 கேள்விகள். 10 கேள்விக்கு, 16 பிரபலங்களோட படம்.. எனவே, எலிமினேஷன் பண்ணி எல்லாம் ஆன்சர் சொல்ல முடியாது :-) 10 கேள்வியும் முடிஞ்சவுடனே உங்க மார்க்கும், ஒரு கோட் -உம் வரும். அந்தக் கோடை மட்டுமே பின்னூட்டமா போட்டீங்கன்னா கூட போதும், அதை டீ கோட் பண்ணி எவ்வளவு மார்க்குன்னு நானும் தெரிஞ்சுக்குவேன், மத்தவங்களுக்கும் சொல்லிடுவேன் :-)
கோடை மட்டும் பின்னூட்டமா போட்டா போதும்னு ஒரு பேச்சுக்குதான் சொல்றேன், எப்படி இருந்தது, என்ன மாதிரி மேம்பாடு செய்யலாம்னு ஆலோசனையும் சொல்லலாம்..
இது தயாராகி 10 நாளுக்கு மேலே ஆகுது.. தசாவதாரம் சுனாமிலே மாட்டிக்கக்கூடாதுன்னு டிலே பண்ணினா நாட்டிலே ஆயிரம் மாற்றங்கள்.. படத்தையெல்லாம் அடிச்சு அடிச்சு திருத்தவேண்டியதாப் போச்சு. தயாரிப்பில் உறுதுணையாகவும், மேம்பாடுகளும் சொல்லி இருந்த மின்னரட்டை நண்பர்கள் - இலவசக்கொத்தனார், ஸ்ரீதர் வெங்கட், பாஸ்டன் பாலா, வெட்டிப்பயல், கண்ணபிரான் ரவிசங்கர், சிறில் அலெக்ஸ், இட்லிவடை ஆகியோருக்கு இதயங்கனிந்த நன்றி.
தற்போதைய விடை நிலவரம் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.
Oct 2, 2006
ஐ க்யூ தேர்வு
இணையம் முழுக்க ஐ க்யூ தேர்வுகள் கொட்டிக் கிடக்கின்றன. எல்லாக்கேள்விகளும் ஆங்கிலத்தில், ஆங்கில அறிவையும், கணித அறிவையும் உலக அறிவையும் சோதித்து இந்தா பிடி என்று மார்க்கை அள்ளித் தெளிக்கின்றன.
எந்தத் தேர்வாவது, நமக்கு மட்டுமே தெரிந்த கேள்விகளைக் கேட்கின்றனவா? ரஜினிகாந்தின் 100 ஆவது படம் எது? ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகமான படம் எது? வைகோ 1996 தேர்தலில் எந்தக்கட்சியில் இருந்தார்? அழகி என்ற சொல்லுக்கு விகடனில் என்ன அர்த்தம், தினத்தந்தியில் என்ன அர்த்தம்?.. தமிழுக்கே தமிழகத்துக்கே உரிய எத்தனை கேள்விகள் இருக்கின்றன? யாராவது இதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறார்களா?
எனவே, சோதனை முயற்சியாக, நான் ஒரு தேர்வைத் தயாரித்திருக்கிறேன். 30 கேள்விகள், 6 பிரிவுகளாக. இப்போதைக்கு எல்லாக்கேள்விகளும் பொருத்துக வகை மட்டுமே.
இடப்புறம் உள்ள கேள்விக்கு வலப்புறம் உள்ள தெரிவை பொருத்துங்கள். அந்த நேரத்தில் மறைக்கப்படாமல் தெரியும் தெரிவுக்கு மட்டுமே விடையளிக்க முடியும். சொடுக்கியவுடன் அடுத்த இடப்புறத் தெரிவுக்குப் போய்விடும். தவறெனில் முந்தைய கேள்வியை அழுத்தி சரி செய்யலாம்.
ஆறு பிரிவிற்கும் விடைஅளித்தபிறகு உங்கள் மதிப்பெண்ணுக்குத் தகுந்தமாதிரி பட்டம் வழங்கப்படும். (அந்தப்பட்டத்தை மட்டும் பின்னூட்டமாக எழுதிவிடுங்கள்.)
கருத்துக்களை தயங்காமல் கூறுங்கள்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 59 பின்னூட்டங்கள்
Sep 5, 2006
லிப்ட் புதிர், சில குறிப்புகளோடு (05 Sep 06)
இந்தப்புதிருக்கு இதுவரை 14 பதில்கள் மட்டுமே வந்திருக்கின்றன. மிகக்குறைவு என்று நான் கருதுவதால் இந்த மீள்பதிவு, விடையைக் கண்டுபிடிக்க சில குறிப்புகளுடன்.
1. அழகுக்கு அவள் சுரங்கம்
பேயும் அவளிடம் இறங்கும்.
பதினெட்டு வயது பியூட்டி
ஓட்டி வந்தாள் ஸ்கூட்டி
இதயம் ஆனது தெஃப்ட்
கொஞ்சம் கிடைக்குமோ லிஃப்ட்?
குறிப்பு: ஆங்கிலம் தமிழ் ரைமிங், அதிலே இவரோ பெரும் கிங்!
2. பைக் ஆண். அதன் ஹாண்டில்பார் பெண். சகலருக்கும் இது புரிவதில்லை. புரிந்தவர்கள் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள், புரியாதவர்கள் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.
பைக்கும் ஹாண்டில்பாரும் போல ஆண் துணை பெண்ணுக்கும், பென் துணை ஆணுக்கும் இங்கே கல்பகோடி ஆண்டுகளாக ஜனித்துவந்திருக்கும் சாஸ்வதமான உண்மை. தியானத்துக்கு குரு தேவை. மோகத்துக்குத் தேவையில்லை.
மோகனும் அதை மறுக்கும் மனநிலையில் இல்லை. மன்மதன் அம்புகள் விட்டான், மோகனுக்குள் மாற்றம் நிகழ்ந்தது. அவள் காதோரம் குசுகுசுப்பாய் நேற்றுப்பாடிய பாடல் நினைவாடியது..
"ஓடும் தண்ணியிலே பாசியில்லையே..
உணர்ச்சி கொட்டிபுட்டா நோயுமில்லையே.."
ப்ரியா எதிரே வண்டியில் வந்தாள். நிறுத்தினான். அவள் புருவம் உயர்த்தி "என்ன" என்பதாய்க்கேட்டாள்.
"கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?"குறிப்பு: தடித்த எழுத்துகள், தியானம், மோகம், பாடல்!
3. "நிறுத்து"
"ஏன்"
"போகணும்"
"எங்கே"
"நீ போற இடத்துக்குத் தான்"
"என்னை ஏன்"
"நீ அழகா இல்ல! படிக்கல! உன்னை எனக்குப் புடிக்கல.. உன்னை லவ் பண்ணிடுவேன்னோன்னு நினைக்கல..ஆனா, நான் போற இடத்துக்கு நீதான போறே.."குறிப்பு: தேவையில்லை
4. "மச்சி அவ வர்றாடா.. இன்னிக்காவது உன் மனசுலே இருக்கறத அவகிட்டே மறைக்காம சொல்லிடு"
"அவ கிட்டே கேக்கறதுக்கு எனக்கு தயக்கமில்லைடா.. ஆனா, நான் கேட்டு அவ மறுக்க வேண்டிய நிலைமை இருந்தா அவ மனசு வேதனைப்படுமே.. அவ வேதனையத் தாங்கற சக்தி எனக்கு இல்லைடா"
"மச்சி லிப்டுங்கறது பீச்சுல போடற மிளகா பஜ்ஜி மாதிரிடா.. சூடா இருக்கும்போது சாப்டா மட்டும்தாண்டா டேஸ்ட்டு..லேட்டு பண்ணே, வேற எவனாவது கொத்திகிட்டு போயிடுவான்.. இன்னிக்கும் எப்படியும் அவகிட்டே கேட்டுடுடா"குறிப்பு: மச்சி!, லிப்டுங்கறது..
5. வாகனம்..
சக்கரத்தைக் கண்டுபிடித்தவனே
நித்தியம் கொண்டாடும் அதிசயம்..
அதன் பாகம் மறைத்திருக்கும் ரகசியம்.
காலதேவனின் காலில்விழாமல் நேரம் சேமிக்க அவசியம்.
புதன் கிரகம் ஆக்ஸிஜன் இல்லாதது..
புதுவண்டியும் எரிபொருள் இன்றிச் செல்லாதது.
தாவணி சேலையை உறுவும்.
இருந்தாலும்,
லிஃப்டில் கணியும் உறவும்.
குறிப்பு: சாதா சந்தப்பாடலினூடே அறிவியல்!
6. "நீங்கதானே மிஸ்டர் வாதூலன்?"
வாதூலன் வியர்த்தார். கையினின்றும் குளிர்கண்ணாடியை முகத்துக்கு அனுப்பினார்.
"நீங்க...... யாரு...... உங்களுக்கு........... என்ன............வேணும்?"
"அதைப்பத்தி அப்புறம் சொல்றேன். நீங்க வெச்சிருக்க காரு ஜெர்மன் மேக்தானே?"
"ஆமா.. BMW.. 150 குதிரைச் சக்தி.... புரியும்படியா சொல்லணுமுன்னா ஒரு 50 யானைய இழுத்துகிட்டுப் போற சக்தி இதுக்கு இருக்கு"
"இதுக்கு எண்ட்ரி டாக்ஸ், ரோட் டாக்ஸ் எல்லாம் கட்டிட்டீங்களா?"
"போன வாரம்தான்.... ரெஜிஸ்டர் பண்ணேன்... ஆமா.. நீங்க யாரு?"
இறுக்கமான முகத்தைச் சற்றுத் தளர்த்தினான். சிரித்தவாறே கேட்டான்.
"என் பேரு ரகோத்தமன்... W & W கம்பெனியிலே செல்லிங் எக்ஸிகியூட்டிவா இருக்கேன்.. கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?"
குறிப்பு: புள்ளிகள், தடித்த எழுத்துகள்
7. ஆறுமுகக்கோனாரை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
ஏனென்றால் ஆறுமுகக்கோனார் ஒரு சாதாரண மனிதன். வேகமும் புழுதியும் அடிக்கின்ற இந்தப் பட்டணத்திலே ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் ஒரு அன்றாடங்காய்ச்சி.
அவனை எனக்கு ஆறு மாதங்களாகத் தெரியும். பஞ்சாய் நரைத்த முடி, குழி விழுந்த கன்னங்கள், நொண்டி நொண்டி நடப்பான். வாழ்வின் சுமை அவனை வளைத்துப்போட்டு விட்டது.
அவனை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. அவன் போக விருப்பப்படும் இடத்துக்கு மட்டுமேதான் போவான். இயந்திர உலகத்தில் இப்படியும் ஒரு பழையகாலத்து ஆளா என்று வியக்காதீர்கள்.
காலையில் எழுந்து வேலை தொடங்கினால் ஐஸ்ஹவுஸ், அங்கிருந்து பிராட்வே உணவுக்கு ராயபுரம் திரும்புவான். இந்த வழியில் செல்லும் சவாரிகளை மட்டுமே ஏற்றுவான்.
அதுசரி.. அவன் வாழ்க்கை அவனுடையது. அவனை யார் தன் வழிக்குத் திருப்ப முடியும்?
யார்தான் யாரைத்தான் தன்வழிக்குத் திருப்ப முடியும்?
அன்று ஒரு அதிசயம். நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டம்போட்ட லுங்கிக்காரன் வந்து "தேனாம்பேட்ட வர்றியா" என்றான்.
மறுத்துவிடுவான் என்றே நினைத்துக்கொண்டு பார்த்தேன்.
"சரி ஏறு" என்றானே பார்க்கலாம்.
இந்த மாற்றத்துக்கு எனக்குக் காரணம் புரியவில்லை.
வண்டி திரும்பியதும்தான் கவனித்தேன். லுங்கிக்காரன் ரஜினி பனியன் போட்டிருந்தான்.குறிப்பு: ஆட்டோ உழைப்பாளி, பனியன் மீது படத்தால் மனமாற்றம்
8. "நாட்டாமை வந்துட்டாரு.. நாட்டாமை வந்துட்டாரு"
ஒ..ஹோ.ஒ..ஹோ..ஹோ..ஓ..ஹோ.. (BGM)
"என்றா பஞ்சாயத்து?"
"படிக்கப் போன குப்புசாமி மவள இதோ இந்தா நிக்காரே வெள்ளைத்துரை.. அவரு வம்பிழுத்தாராம்"
"தோ பார்றா.. நெல்லு போட்டா நெல்லு முளைக்கும்.. சொல்லுப் போட்டா சொல்லுதான் மொளைச்சுப்புடும் கேட்டுக்க"
"என்றா கேட்டானாம்?"
"ஒன்ற சைக்கிள்ள என்ன டவுன்ல கொண்டு விட்டுப்போடறயான்னு கேட்டானுங்களாம் அய்யா"
"இவன் கேட்டதுக்கு யாரும் சாட்சி இருக்குதாய்யா?"
"நான் இருக்கேனுங்க"
"நீ சைக்கிள் வெச்சுருக்கியா?"
"வெச்சுருக்கேனுங்கய்யா"
"அப்போ நீ ஏன் அவன டவுனுக்கு கூட்டிப்போவல? இந்தச் சாட்சி செல்லாது செல்லாது.."
"நான் பாத்தேனுய்யா"
"என்றா கண்ணு பாத்த?"
"இந்த அண்ணா, அந்த அக்காகிட்ட கொஞ்சம் லிப்டு கிடைக்குமான்னு கேட்டாருய்யா"
"பரதேசி.. பத்து நிமிஷத்துக்கு ஒரு பஸ்ஸு ஊர்ரு தேடி வருது.. இதிலே பச்சைப்பொண்ணைப்பாத்து லிப்டு கேட்டிருக்கியே..
இவனுக்கு இந்த ஊர்லே யாரும் லிப்டு தரக்கூடாது.. மீறி யாரும் தந்தா அவகளுக்கும் இதே தண்டன தான்.. இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு.."
ஒ..ஹோ.ஒ..ஹோ..ஹோ..ஓ..ஹோ.. (BGM)
குறிப்பு: தேவையில்லை
9. பொழுது மலரத் தொடங்கிவிட்டது. ஆதவன் தன் கிரணங்களை அடர்ந்த காட்டுக்கு உள்ளேயும் பாய்ச்சினான்.
இளஞ்செழியன் எழுந்துவிட்டான். பூங்குழலியையும் எழுப்ப யத்தனித்தான்.
"இளவரசி"
"ம்"
கார்மேகமாய் விரிந்திருந்த அவள் கூந்தலினூடே தன் கரங்களை விட்டு மெதுவாகக் கோதினான் இளஞ்செழியன். போர் புரிவதெல்லாம் வீண், இவளோடு இப்படியே காலத்தைக் கழித்துவிட்டால் எவ்வளவு சுகமாய் இருக்கும் என்று எண்ணினான். அதே நேரத்தில் ஒரு போர்வீரன் இவ்விதம் தவறான எண்ணங்களுக்கு ஆட்பட்டு கடமையிலிருந்து வழுவிவிடக்கூடாது என்ற எண்ணத்தால், மீண்டும் எழுப்பினான்.
"இளவரசி"
"ம்"
"எழுந்திருங்கள்.. நம் கோட்டை திறந்துவிட்டிருப்பார்கள். யவனர்கள் சாலைவழி செல்லத் தொடங்கிவிட்டார்கள்"
"தளபதி, உங்களை ஒன்று கேட்டால் தவறாய் எடுத்துக்கொள்ள மாட்டீர்களே?"
"இளவரசி, நீங்கள் என்னிடம் வேண்டுகோள் விடுப்பதா, கட்டளையிடுங்கள்"
"சரியான தூக்கம் இல்லாமல் கால் வலிக்கிறது. என்னை உங்கள் குதிரையிலே வைத்து கோட்டை வரை கொண்டு செல்கிறீர்களா?"குறிப்பு: கைகளால் தலை கோதுவாராம், ஆனால் பேசும்போது மட்டும் இளவரசி, தளபதி என்று Formal ஆக இருப்பார்களாம்!
10. இற்றைத் தினத்தில் காட்டாட்சி முடிந்து நல்லாட்சி தொடங்குகின்ற நாளிலே, இதுவரை சொல்லாத ஒன்றை உன்னுடன் பகிர விழைகிறேன். இதய தெய்வமும், பகுத்தறிவுப் பகலவனும் கட்டிக்காத்த இந்த மாபெரும் இயக்கம் சூதிடமும் சூழ்ச்சியிடமும் பின் தங்கிவிட்ட காரணத்தால் நாட்டில் நடந்துவிட்ட அவலங்களை நீ நன்கறிவாய்! இதயத்துக்குப் பதில் களிமண்ணைக்கொண்ட காவல் உடையில் வந்தென்னை வெஞ்சிறை அனுப்பத் துடித்த அம்மையாரின் கைக்கூலிகள் என்னை உருட்டுக்கட்டையாய்த் தூக்கி காவல் வாகனத்தில் ஏற்றிய கதையையும் நீ மறந்திருக்கமாட்டாய். பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் அம்மையாரை ஏவிஎம் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தபோது நடந்ததன் எதிரொலியே நீ அன்று பார்த்த காட்சி என்றால் உனக்கு வியப்பாய் இருக்கும். அன்று அம்மையார் தன் வாகனம் பழுதடைந்ததால் என்னிடம் லிஃப்ட் கேட்டார். நான் மறுதலித்துவிட்டேன். லிஃப்ட் தர மாட்டேன் என்று கூறவில்லை.. இதயத்தில் அண்ணாவையும், உள்ளத்திலே உன்போன்ற கோடிக்கணக்கான உடன்பிறப்புக்களையும் வைத்திருந்ததால் என் சிறு வாகனம் அம்மையாரைத் தாங்காது என்றுதான் கூறினேன். அம்மையாரை நடக்கவைக்க வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை. நடந்தால் அவர் உடல் மேலும் பொலிவடையும் என்ற நல்லெண்ணத்தில் தான் கூறினேன்.நான் செய்தது தவறா? இதை நினைவில் கொண்டு அம்மையார் எனக்கு பழிக்குப் பழியாய் நீதிமன்றம் வரை தன் கைக்கூலி காவலாளரை வைத்து லிஃப்ட் தரவைத்தாரே - அது முறையா? சிந்தித்துப்பார் உடன்பிறப்பே!
குறிப்பு: தேவையில்லை
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 5 பின்னூட்டங்கள்
Sep 3, 2006
கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? புதிர் (03 Sep 06)
இது போட்டிக்கான படைப்பு மட்டுமல்ல, உங்கள் அறிவை விருத்தி செய்யும் புதிரும் கூட.
"கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா" இந்த கருத்தை பிரபலமான பலரிடம் கூறினேன். அவர்கள் அவர்களுக்கேயுரிய பாணியில் அதை விரித்தார்கள். எந்தப்பாணி யாருடையது என்பதை மட்டும் மறந்துவிட்டேன். அதுதான் புதிர்.
1. அழகுக்கு அவள் சுரங்கம்பேயும் அவளிடம் இறங்கும்.
பதினெட்டு வயது பியூட்டி
ஓட்டி வந்தாள் ஸ்கூட்டி
இதயம் ஆனது தெஃப்ட்
கொஞ்சம் கிடைக்குமோ லிஃப்ட்?
2. பைக் ஆண். அதன் ஹாண்டில்பார் பெண். சகலருக்கும் இது புரிவதில்லை. புரிந்தவர்கள் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள், புரியாதவர்கள் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.
பைக்கும் ஹாண்டில்பாரும் போல ஆண் துணை பெண்ணுக்கும், பென் துணை ஆணுக்கும் இங்கே கல்பகோடி ஆண்டுகளாக ஜனித்துவந்திருக்கும் சாஸ்வதமான உண்மை. தியானத்துக்கு குரு தேவை. மோகத்துக்குத் தேவையில்லை.
மோகனும் அதை மறுக்கும் மனநிலையில் இல்லை. மன்மதன் அம்புகள் விட்டான், மோகனுக்குள் மாற்றம் நிகழ்ந்தது. அவள் காதோரம் குசுகுசுப்பாய் நேற்றுப்பாடிய பாடல் நினைவாடியது..
"ஓடும் தண்ணியிலே பாசியில்லையே..
உணர்ச்சி கொட்டிபுட்டா நோயுமில்லையே.."
ப்ரியா எதிரே வண்டியில் வந்தாள். நிறுத்தினான். அவள் புருவம் உயர்த்தி "என்ன" என்பதாய்க்கேட்டாள்.
"கொஞ்சம் கிடைக்குமா லிப்ட்?"3. "நிறுத்து"
"ஏன்"
"போகணும்"
"எங்கே"
"நீ போற இடத்துக்குத் தான்"
"என்னை ஏன்"
"நீ அழகா இல்ல! படிக்கல! உன்னை எனக்குப் புடிக்கல.. உன்னை லவ் பண்ணிடுவேன்னோன்னு நினைக்கல..ஆனா, நான் போற இடத்துக்கு நீதான போறே.."
4. "மச்சி அவ வர்றாடா.. இன்னிக்காவது உன் மனசுலே இருக்கறத அவகிட்டே மறைக்காம சொல்லிடு"
"அவ கிட்டே கேக்கறதுக்கு எனக்கு தயக்கமில்லைடா.. ஆனா, நான் கேட்டு அவ மறுக்க வேண்டிய நிலைமை இருந்தா அவ மனசு வேதனைப்படுமே.. அவ வேதனையத் தாங்கற சக்தி எனக்கு இல்லைடா"
"மச்சி லிப்டுங்கறது பீச்சுல போடற மிளகா பஜ்ஜி மாதிரிடா.. சூடா இருக்கும்போது சாப்டா மட்டும்தாண்டா டேஸ்ட்டு..லேட்டு பண்ணே, வேற எவனாவது கொத்திகிட்டு போயிடுவான்.. இன்னிக்கும் எப்படியும் அவகிட்டே கேட்டுடுடா"
5. வாகனம்..
சக்கரத்தைக் கண்டுபிடித்தவனே
நித்தியம் கொண்டாடும் அதிசயம்..
அதன் பாகம் மறைத்திருக்கும் ரகசியம்.
காலதேவனின் காலில்விழாமல் நேரம் சேமிக்க அவசியம்.
புதன் கிரகம் ஆக்ஸிஜன் இல்லாதது..
புதுவண்டியும் எரிபொருள் இன்றிச் செல்லாதது.
தாவணி சேலையை உறுவும்.
இருந்தாலும்,
லிஃப்டில் கணியும் உறவும்.
6. "நீங்கதானே மிஸ்டர் வாதூலன்?"
வாதூலன் வியர்த்தார். கையினின்றும் குளிர்கண்ணாடியை முகத்துக்கு அனுப்பினார்.
"நீங்க...... யாரு...... உங்களுக்கு........... என்ன............வேணும்?"
"அதைப்பத்தி அப்புறம் சொல்றேன். நீங்க வெச்சிருக்க காரு ஜெர்மன் மேக்தானே?"
"ஆமா.. BMW.. 150 குதிரைச் சக்தி.... புரியும்படியா சொல்லணுமுன்னா ஒரு 50 யானைய இழுத்துகிட்டுப் போற சக்தி இதுக்கு இருக்கு"
"இதுக்கு எண்ட்ரி டாக்ஸ், ரோட் டாக்ஸ் எல்லாம் கட்டிட்டீங்களா?"
"போன வாரம்தான்.... ரெஜிஸ்டர் பண்ணேன்... ஆமா.. நீங்க யாரு?"
இறுக்கமான முகத்தைச் சற்றுத் தளர்த்தினான். சிரித்தவாறே கேட்டான்.
"என் பேரு ரகோத்தமன்... W & W கம்பெனியிலே செல்லிங் எக்ஸிகியூட்டிவா இருக்கேன்.. கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா?"
7. ஆறுமுகக்கோனாரை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
ஏனென்றால் ஆறுமுகக்கோனார் ஒரு சாதாரண மனிதன். வேகமும் புழுதியும் அடிக்கின்ற இந்தப் பட்டணத்திலே ஆட்டோ ஓட்டிப் பிழைக்கும் ஒரு அன்றாடங்காய்ச்சி.
அவனை எனக்கு ஆறு மாதங்களாகத் தெரியும். பஞ்சாய் நரைத்த முடி, குழி விழுந்த கன்னங்கள், நொண்டி நொண்டி நடப்பான். வாழ்வின் சுமை அவனை வளைத்துப்போட்டு விட்டது.
அவனை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. அவன் போக விருப்பப்படும் இடத்துக்கு மட்டுமேதான் போவான். இயந்திர உலகத்தில் இப்படியும் ஒரு பழையகாலத்து ஆளா என்று வியக்காதீர்கள்.
காலையில் எழுந்து வேலை தொடங்கினால் ஐஸ்ஹவுஸ், அங்கிருந்து பிராட்வே உணவுக்கு ராயபுரம் திரும்புவான். இந்த வழியில் செல்லும் சவாரிகளை மட்டுமே ஏற்றுவான்.
அதுசரி.. அவன் வாழ்க்கை அவனுடையது. அவனை யார் தன் வழிக்குத் திருப்ப முடியும்?
யார்தான் யாரைத்தான் தன்வழிக்குத் திருப்ப முடியும்?
அன்று ஒரு அதிசயம். நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டம்போட்ட லுங்கிக்காரன் வந்து "தேனாம்பேட்ட வர்றியா" என்றான்.
மறுத்துவிடுவான் என்றே நினைத்துக்கொண்டு பார்த்தேன்.
"சரி ஏறு" என்றானே பார்க்கலாம்.
இந்த மாற்றத்துக்கு எனக்குக் காரணம் புரியவில்லை.
வண்டி திரும்பியதும்தான் கவனித்தேன். லுங்கிக்காரன் ரஜினி பனியன் போட்டிருந்தான்.8. "நாட்டாமை வந்துட்டாரு.. நாட்டாமை வந்துட்டாரு"
ஒ..ஹோ.ஒ..ஹோ..ஹோ..ஓ..ஹோ.. (BGM)
"என்றா பஞ்சாயத்து?"
"படிக்கப் போன குப்புசாமி மவள இதோ இந்தா நிக்காரே வெள்ளைத்துரை.. அவரு வம்பிழுத்தாராம்"
"தோ பார்றா.. நெல்லு போட்டா நெல்லு முளைக்கும்.. சொல்லுப் போட்டா சொல்லுதான் மொளைச்சுப்புடும் கேட்டுக்க"
"என்றா கேட்டானாம்?"
"ஒன்ற சைக்கிள்ள என்ன டவுன்ல கொண்டு விட்டுப்போடறயான்னு கேட்டானுங்களாம் அய்யா"
"இவன் கேட்டதுக்கு யாரும் சாட்சி இருக்குதாய்யா?"
"நான் இருக்கேனுங்க"
"நீ சைக்கிள் வெச்சுருக்கியா?"
"வெச்சுருக்கேனுங்கய்யா"
"அப்போ நீ ஏன் அவன டவுனுக்கு கூட்டிப்போவல? இந்தச் சாட்சி செல்லாது செல்லாது.."
"நான் பாத்தேனுய்யா"
"என்றா கண்ணு பாத்த?"
"இந்த அண்ணா, அந்த அக்காகிட்ட கொஞ்சம் லிப்டு கிடைக்குமான்னு கேட்டாருய்யா"
"பரதேசி.. பத்து நிமிஷத்துக்கு ஒரு பஸ்ஸு ஊர்ரு தேடி வருது.. இதிலே பச்சைப்பொண்ணைப்பாத்து லிப்டு கேட்டிருக்கியே..
இவனுக்கு இந்த ஊர்லே யாரும் லிப்டு தரக்கூடாது.. மீறி யாரும் தந்தா அவகளுக்கும் இதே தண்டன தான்.. இது இந்த நாட்டாமையோட தீர்ப்பு.."
ஒ..ஹோ.ஒ..ஹோ..ஹோ..ஓ..ஹோ.. (BGM)
9. பொழுது மலரத் தொடங்கிவிட்டது. ஆதவன் தன் கிரணங்களை அடர்ந்த காட்டுக்கு உள்ளேயும் பாய்ச்சினான்.
இளஞ்செழியன் எழுந்துவிட்டான். பூங்குழலியையும் எழுப்ப யத்தனித்தான்.
"இளவரசி"
"ம்"
கார்மேகமாய் விரிந்திருந்த அவள் கூந்தலினூடே தன் கரங்களை விட்டு மெதுவாகக் கோதினான் இளஞ்செழியன். போர் புரிவதெல்லாம் வீண், இவளோடு இப்படியே காலத்தைக் கழித்துவிட்டால் எவ்வளவு சுகமாய் இருக்கும் என்று எண்ணினான். அதே நேரத்தில் ஒரு போர்வீரன் இவ்விதம் தவறான எண்ணங்களுக்கு ஆட்பட்டு கடமையிலிருந்து வழுவிவிடக்கூடாது என்ற எண்ணத்தால், மீண்டும் எழுப்பினான்.
"இளவரசி"
"ம்"
"எழுந்திருங்கள்.. நம் கோட்டை திறந்துவிட்டிருப்பார்கள். யவனர்கள் சாலைவழி செல்லத் தொடங்கிவிட்டார்கள்"
"தளபதி, உங்களை ஒன்று கேட்டால் தவறாய் எடுத்துக்கொள்ள மாட்டீர்களே?"
"இளவரசி, நீங்கள் என்னிடம் வேண்டுகோள் விடுப்பதா, கட்டளையிடுங்கள்"
"சரியான தூக்கம் இல்லாமல் கால் வலிக்கிறது. என்னை உங்கள் குதிரையிலே வைத்து கோட்டை வரை கொண்டு செல்கிறீர்களா?"10. இற்றைத் தினத்தில் காட்டாட்சி முடிந்து நல்லாட்சி தொடங்குகின்ற நாளிலே, இதுவரை சொல்லாத ஒன்றை உன்னுடன் பகிர விழைகிறேன். இதய தெய்வமும், பகுத்தறிவுப் பகலவனும் கட்டிக்காத்த இந்த மாபெரும் இயக்கம் சூதிடமும் சூழ்ச்சியிடமும் பின் தங்கிவிட்ட காரணத்தால் நாட்டில் நடந்துவிட்ட அவலங்களை நீ நன்கறிவாய்! இதயத்துக்குப் பதில் களிமண்ணைக்கொண்ட காவல் உடையில் வந்தென்னை வெஞ்சிறை அனுப்பத் துடித்த அம்மையாரின் கைக்கூலிகள் என்னை உருட்டுக்கட்டையாய்த் தூக்கி காவல் வாகனத்தில் ஏற்றிய கதையையும் நீ மறந்திருக்கமாட்டாய். பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் அம்மையாரை ஏவிஎம் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தபோது நடந்ததன் எதிரொலியே நீ அன்று பார்த்த காட்சி என்றால் உனக்கு வியப்பாய் இருக்கும். அன்று அம்மையார் தன் வாகனம் பழுதடைந்ததால் என்னிடம் லிஃப்ட் கேட்டார். நான் மறுதலித்துவிட்டேன். லிஃப்ட் தர மாட்டேன் என்று கூறவில்லை.. இதயத்தில் அண்ணாவையும், உள்ளத்திலே உன்போன்ற கோடிக்கணக்கான உடன்பிறப்புக்களையும் வைத்திருந்ததால் என் சிறு வாகனம் அம்மையாரைத் தாங்காது என்றுதான் கூறினேன். அம்மையாரை நடக்கவைக்க வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை. நடந்தால் அவர் உடல் மேலும் பொலிவடையும் என்ற நல்லெண்ணத்தில் தான் கூறினேன்.நான் செய்தது தவறா? இதை நினைவில் கொண்டு அம்மையார் எனக்கு பழிக்குப் பழியாய் நீதிமன்றம் வரை தன் கைக்கூலி காவலாளரை வைத்து லிஃப்ட் தரவைத்தாரே - அது முறையா? சிந்தித்துப்பார் உடன்பிறப்பே!
போட்டிக்கான பதில்களை பின்னூட்டம் மூலம் மட்டுமே தரவேண்டும். நீதிபதியின் தீர்ப்பே முடிவானது. ஒரு நபர் அதிகபட்சம் ஆயிரம் பின்னூட்டங்கள் மட்டுமே போடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் வந்தால் ... வந்துட்டுப் போகட்டுமே.. நான் என்ன பரிசா தரப்போறேன்!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 37 பின்னூட்டங்கள்
Feb 8, 2005
புதிர் விடைகள்
1. 133 கு அ - குறள் அதிகாரங்கள் - ஜெயஸ்ரீ சரியான விடையளித்தார்.
2. 5 பெ கா - ஐம்பெருங்காப்பியங்கள் -ஜெயஸ்ரீ சரியான விடையளித்தார்.
3. 8300 நா தி தே எ மு - நானா திசை தேச எண்ணாயிரத்து முன்னூற்றுவர் - யாரும் முயற்சிக்கவில்லை
4. 18 கீ க - பதினெண்கீழ்கணக்கு - டோண்டு சரியான விடையளித்தார்.
5. 234 ச அ - சட்டசபை அங்கத்தினர்கள் - டோண்டு சரியான விடையளித்தார்
6. 5 தி வ - திணை வகைகள் - தான்யா சரியான விடையளித்தார்
7. 4 சி ச பா - சிவகாமியின் சபதம் பாகங்கள் - யாரும் முயற்சிக்கவில்லை
8. 217 க ச க வ - கந்த சஷ்டி கவச வரிகள் -தான்யா சரியான விடையளித்தார்
9. 4000 தி பி - திவ்விய பிரபந்தம் - ஜெயஸ்ரீ சரியான விடையளித்தார்.
10. 4 ச கு - சமயக் குரவர் - சனியனின் சரியான பதில் (சந்தானக் குரவர் என்றும் கூறியுள்ளார்)
பதில் அளித்து இந்த முயற்சியை ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 1 பின்னூட்டங்கள்
வகை புதிர்
Feb 6, 2005
இன்னும் ஒரு புதிர்
ஆங்கிலத்தில் இந்த மாதிரி புதிர்கள் பல பார்த்திருக்கிறேன்,
26 L of the A என்ற கேள்விக்கு, 26 Letters of the Alphabet என்று பதில் சொல்ல வேண்டும்.
தமிழில் இது என் முதல் முயற்சி.
உதாரணம் - 247 த எ - விடை: 247 தமிழ் எழுத்துக்கள்
1. 133 கு அ
2. 5 பெ கா
3. 8300 நா தி தே எ மு
4. 18 கீ க
5. 234 ச அ
6. 5 தி வ
7. 4 சி ச பா
8. 217 க ச க வ
9. 4000 தி பி
10. 4 ச கு
கஷ்டமும் சுலபமும் கலந்து கட்டி எழுதி இருக்கேன்.. கலக்குங்க தோழர்களே!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 11 பின்னூட்டங்கள்
வகை புதிர்