Oct 25, 2017

தங்கமணி மகள்

5 - 6 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியது. எங்கேயும் போட வசதிப்படவில்லை. 

தேவர் மகனைச் சமீபத்தில் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. கொஞ்சம் பட்டி பார்த்து.. தேவர் மகன் வெளிவந்த 25 ஆம் ஆண்டென்பதால் இங்கேயே போட்டுவிட உத்தேசித்துவிட்டேன். 

தங்கமணி மகள்

வடிவுக்கரசி : ஏய்!! சத்தி....நாந்தேன்...(கையை அசைத்து அழைக்கிறார்)

நயனதாரா வடிவுக்கரசியை நோக்கி செல்கிறார்..அவர் பின்னால் நின்று கொள்கிறார்.

வடிவுக்கரசி:இங்கிட்டு வா..
நயனதாரா வடிவுக்கரசியின் முன் சென்று நிற்கிறார்.

வடிவுக்கரசி: ஆஸ்பத்திரிக்கு போனீகளா??

நயனதாரா: ஆமா அம்மா..

வடிவுக்கரசி: புருசன்னா தெய்வம்னு பம்மாத்து பண்ணீகளே?இப்போ உங்க அப்பனோட நெலமை புரிஞ்சுதா??

நயனதாரா: நல்லாவே புரியுது.நான் செஞ்ச தப்பும் புரியுது..அதுக்கு தண்டனையா டைவர்ஸ் வாங்கிட்டுப் போயிரலாம்னு இருக்கேன்

வடிவுக்கரசி துனுக்குற்று எழுகிறார்
வடிவுக்கரசி:உறவ.. உறவ விட்டு போறீகளா??..ஹ..செஞ்ச தப்புக்குப் பரிகாரம் தேடாம..டைவர்ஸ் வாங்கறேன்னு சொல்லுறது கோழைத்தனம் இல்லை??

நயனதாரா(உடனே):அதுக்காக....

வடிவுக்கரசி:அதுக்காக???

நயனதாரா: அதுக்காக ..அடிக்கிறதுதான் வீரம்னு தங்கமணித்தனமா நினைக்கறது ஏமாத்திக்கறது இல்லையா?

வடிவுக்கரசி: இந்த தங்கமணிங்க கூட்டத்துல உங்க ஆத்தாவும் ஒருத்திதாங்குறத மறந்துறாத..

நயனதாரா: அப்படி பாத்தா நானும்தான்மா ஒருத்தி.ஆனா அதை நெனச்சு பெருமைப்பட முடியல.எந்நேரமும் புருஷனைக் கொடுமைப்படுத்தி என் டைமை வீணாக்க விரும்பலம்மா..

வடிவுக்கரசி: எந்நேரமும் கொடுமைப்படுத்திக் கிட்டுதான் இருக்கோம், ஒத்துக்கறேன். ரெண்டாயிரம் வருஷமா அவங்க கூப்டப்ப எல்லாம் ஓடிப்போய் காபி போட்டுகிட்டு இருந்த பொண்ணுவ. குழாயடியில கெட்ட வார்த்தை சண்டைக்கு ஆள் வேணும்னு கேட்டப்ப முத ஆளா நின்னவக முக்காவாசி நம்ம பொண்ணுகதான். திடீர்னு புருஷன்கிட்ட சமாதானமாப்போன்னா அவ எப்படிப்போவா? நீதான் டைவர்ஸ் லாயராச்சே.. கூட்டிகிட்டு வா, சமாதானம் பேசக் கூட்டிகிட்டு வா.. ஆனா அவ மெதுவாத்தேன் வருவாம்மா.. மெதுவாத்தேன் வருவா.

நயனதாரா:மெதுவான்னா எம்புட்டு மெதுவாம்மா??அதுக்குள்ள நான் செத்துருவேன் போல இருக்கே!!

வடிவுக்கரசி:போ...செத்துப்போ..நான் தடுக்க முடியுமா??...எல்லா பொண்டுபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியதுதான். வாழறது முக்கியம் தான் ..இல்லைன்னு சொல்லல.ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போனா அந்த சாவுக்கே பெருமை. வெத வெதைச்ச வுடனே பழம் சாப்பிடனும்னு நெனைக்க முடியுமோ...இன்னைக்கு எங்கம்மா எங்கப்பாவை உதச்சா.. நாளைக்கு நீ உதைப்பே..அப்புறம் உன் பொண்ணு உதைப்பா..அதுக்கப்புறம் அவ பொண்ணு உதப்பா...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்.ஆனா உதை..நான் போட்டது.இதெல்லாம் என்ன பெருமையா??? கடமை ஒவ்வொரு பொண்ணோட கடமை!!!.


நயனதாரா: ஆனா இந்த மண்ணுல வாய்ச்சண்டைக்குப் பதிலா நான்ஸ்டிக் கரண்டியும் பூரிக்குழவியும் வச்சு அடிக்கறவரைக்கும் என்ன சொன்னாலும் வெளங்காதம்மா..என்ன விட்டுருங்கம்மா நான் போறேன்.

வடிவுக்கரசி ஆவேசமாகி அசினின் சட்டையை பிடிக்கிறார்.
பின்பு விடுகிறார்.

வடிவுக்கரசி: ஜீன்ஸும் டாப்ஸும் போட்டுகிட்டு,நெஞ்சு நிமிர்ந்து அம்மாவை பேசற வயசுல்ல..

நயனதாரா..இல்ல...அப்படி இல்லைம்மா...

வடிவுக்கரசி: வேற எப்படி?? வேற எப்படின்னு கேக்கறேன்.அப்பன் சரியில்லாத பொண்ணாச்சேன்னு ஊட்டி ஊட்டி வளத்தேன்ல.இது வரைக்கும் ஒரு வார்த்தை பேசியிருபேனா உன் கிட்ட ....ஒரு வார்த்தை...என்ன?...நான் என் கடமைய செஞ்சுப்புட்டேன்,நீ உன் கடமைய செஞ்சியா??நீ டைவார்ஸ் வாங்கறதுக்காக அந்தப்புருஷன்கிட்ட காசைக்கறந்து கறந்து அனுப்பினேனே..அந்த தங்கமணிக்கு என்ன பண்ண நீயி!!?? ஏதாவது பண்ணு..அதுக்கப்புறம் வீட்டை விட்டு போ..டைவர்ஸ் பண்ணு.. சமாதானம் பேசு.. அந்த வக்கீலைக் கல்யாணம் பண்ணிக்க..அவனையும் உதை..என்ன இப்போ...போயேன்...

நயனதாரா:உதையக் கல்யாணம் பண்ணிகிட்டுதான் கொடுக்கணும்னு இல்லைம்மா..வெளியிருந்தும் செய்யலாம்...நான் டைவர்ஸ் பண்றேன்மா..

வடிவுக்கரசி:இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லுங்களேன்.அந்த நம்பிக்கைதான் வீட்டுல உள்ளவங்களுக்கு முக்கியம்...த!! எங்கேய்யா கணக்குபுள்ள?? எலே யார்ரா அவன்..எங்கே கணக்குப்புள்ள??(கணக்குப்பிள்ளையை கூப்பிடுகிறார்..)

கணக்குப்பிள்ளை ஓடி வந்து பணிவாக : ஐயா..

வடிவுக்கரசி: இங்கே தான் இருக்கியா..அம்மா டைவார்ஸ் பண்றாங்களாம்..ரொம்பல்லாம் உதைக்க மாட்டாங்களாம்.. வக்கீலுக்கு ஃபோன் போடு

கணக்குப்பிள்ளை: ஒரு பத்துநாள் கழிச்சு வக்கீல வரச்சொல்லட்டுங்களா?

வடிவுக்கரசி:ஏம்மா ஒரு பத்து நாள் அவனைவச்சு உதைக்க மாட்டீங்களா?
...
கணக்குப்பிள்ளையை அனுப்பி விட்டு நயனதாராவைக் கிட்டே அழைக்கிறார்.

வடிவுக்கரசி: பத்து நாள் உதைக்க மாட்டீகளா??என் பொண்ணை அடிக்க வைச்சுப் பாக்கனும்ங்கற ஆசை எனக்கு இருக்காதா??நீங்க டைவர்ஸெல்லாம் வாங்கிட்டு வரும்போது அம்மா திருந்திட்டேன்னா என்ன பண்ணுவீங்க??

நயனதாரா:அம்மா நீங்க திருந்தவெல்லாம் மாட்டீங்கம்மா...கோர்ட்டுக்குப் போய் டைவர்ஸெல்லாம் ஓக்கேன்னதும் உங்களுக்கும் அப்பாகிட்ட இருந்து விடுதலை வாங்கித் தருவேன்மா..

வடிவுக்கரசி:நானா??..(தலையை ஆட்டுகிறார்) இந்தக்கட்டை இங்கேயே வச்சு உங்க அப்பனை அடிச்சு அடிச்சு உடைஞ்சு சுள்ளியாகி வெந்நீர் போடுமே தவிர அடிக்கறதை நிறுத்தாது.. இந்தக் கட்டையை உடைச்சிராதீங்க அம்மணி..அம்புட்டுதான் சொல்லுவேன்.புரியுதா??..

நயனதாரா: அம்மா நான் உங்களுக்கு நல்ல பூரிக்கட்டை வாங்கித் தருவேன்மா..என்ன நம்புங்க..

வடிவுக்கரசி: உங்களத்தானே நம்பனும்!!இந்த வீட்டுல வேற யாரு இருக்கா நான் நம்பறதுக்கு........(அழுகிறார்)...போ...

நயனதாரா:போகட்டுமாம்மா??

வடிவுக்கரசி:போ...

நயனதாரா விலகி செல்கிறார்..போகும்போது மழை தண்ணீர் வழுக்குகிறது.

வடிவுக்கரசி:யப்பா மெல்ல...

நயனதாரா: தண்ணீ...வழுக்....

என சொல்லிவிட்டு செல்கிறார்

நயனதாரா போவதை வடிவுக்கரசி குனிந்து வாஞ்சையோடு பார்க்கிறார்.தூரம் சென்றதும் நயனதாரா வடிவுக்கரசியை மறைந்திருந்து திரும்பி பார்க்கிறார்.வடிவுக்கரசி திரும்பிக்கொள்கிறார்.
__________

Jul 12, 2017

நா முத்துக்குமார்

2013 ல் நாலுவரி நோட்டுக்காக எழுதியது:

படிமங்கள் என்று சொன்னால் பெரிய வார்த்தையாக இருக்கும் (குறைந்தபட்சம் எனக்கு). ஒரு வரியைக் கேட்கும்போது, எழுதியவர் என்ன சொல்ல வந்தாரோ அந்தச் சூழலை படிப்பவரும் உணரவேண்டும். அதற்கு பத்திபத்தியாக விளக்காமல் சிறு எளிய வரிகளில் சொல்லிச் செல்வது சாதாரண விஷயம் இல்லை. தமிழ்த் திரைப்பாடல்களில் தத்துவத்தை அழகாகச் சொன்ன கவிஞர்கள் நிறைய. ஆனால் இந்த விஷயத்தில் என்னுடைய சிற்றறிவுக்கு, நா முத்துக்குமார்தவிர வேறெந்தப்பெயரும் ஞாபகம் வரவில்லை.

எல்லா இசையமைப்பாளர்களிடமும் பாடல் எழுதி இருக்கிறார், நிறைய மீட்டர் வரிகள் உண்டு என்றாலும் திடீரெனப் பளிச்சிடும் சில அபூர்வமான வரிகளே இவருடைய அடையாளமாக இருக்கிறது.

கூவும் செல்ஃபோனின் நச்சரிப்பை அணைத்து, கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பைக் கேட்போம் - எங்கும் சந்தம் பிறழவில்லை, ஆனால் எளிமையாக நேற்றைய வாழ்க்கைக்கும் இன்றைய வாழ்க்கைக்குமான வித்தியாசத்தை உடைத்துப்போட்டு விடுகிறார்.

அவர் மனம் உணர்ந்த விஷயங்களை நமக்குக் கடத்தும் சில என்னைக்கவர்ந்த வரிகளை மட்டும் சுட்டுகிறேன்..

ஒரு வண்ணத்துப்பூச்சி என் வழி தேடி வந்தது, அதன் வண்ணங்கள் மட்டும் என் விரலோடு நின்றது.. பாட்டை கவனித்துக்கேட்டால் என் விரல் நுனியில் வண்ணத்துப்பூச்சியின் பிசுபிசுப்பை உணர்கிறேனே, அதுதான் எழுதியவரின் வெற்றி.


பசி வந்தா குருவி முட்டை; தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை; புழுதி தான் நம்ம சட்டை

என்று வெயிலைப் பொருட்படுத்தாது ஓடும் சிறுவர்களை, எந்தக் காட்சிப்படுத்தலும் தேவைப்படாமலேயே புரிந்துகொள்ள முடிகிறதே, அதுதான் படிமம்.

பறவை பறந்தபிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே - ஆடும் இலை உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை?

தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்குச் சொந்தமில்லை - என்று படிமத்தையும் தத்துவத்தையும் சேர்த்துவைத்தும் ஆட்டம் போடுகிறார்.

இது என்ன காற்றில் இன்று ஈரப்பதம் குறைகிறதே, ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்திவேளை அழைக்கிறதே.. தினமும் பார்க்கும் விஷயம்தான், சாயங்கால வேளை கடல்காற்று.. அங்கே நம்மை அழைத்துப்போக இரண்டே வரிதான் தேவைப்படுகிறது இவருக்கு.

கையை மீறும் ஒரு குடையாய், காற்றோடுதான் நானும் பறந்தேன் - மழைக்காற்று மனசுக்குள் வீச வைக்கிறார்.

சொல்லிக்கொண்டே போகலாம் என்றாலும்

 

blogger templates | Make Money Online