தமிழ் பேப்பரில் ஒரு தொடர்கதை எழுதி வருகிறேன். திரில்லர் என்பது மட்டும்தான் ஆரம்பிக்கும்போது போட்டுக்கொண்ட விதிமுறை. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக கேன்வாஸை விரிவுபடுத்தி ஃப்யூயல் செல் ஆராய்ச்சி, தொழில் ஒற்றறிதல் (industrial espionage-ங்க :-)) என்று எகிறி, இந்தியா, மத்தியகிழக்கு, கோஸ்டா டி ஸொல், பென்சில்வேனியா, நடுக்கடலில் ஆயில்ரிக் என்று எல்லா இடங்களுக்கும் பறக்கிறது கதை.
ஓரளவுக்கு கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தியவுடன் போஸ்டர் ஒட்டலாம் என்று காத்திருந்தேன். இப்போது கதை கியர் ஷிஃப்ட் ஆகிவிட்டது, ரன்னிங்கில் ஏறுகிறவர்கள் வசதிக்காக:
1
2
3
4
கருத்துகளைச் சொன்னால் தன்யனாவேன்.
Oct 25, 2010
அல்வா!
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 9 பின்னூட்டங்கள்
வகை சுயதம்பட்டம், நாவல், புனைவு, விளம்பரம்
Oct 2, 2010
எந்திரன் - DOT!
எந்திரன் படத்தை பாலாபிஷேகம் செய்யும் சுபயோக வேளையான ரிலீஸ் நாளின் காலை ஏழரை மணிக்கு பார்க்க நேர்ந்தது, டெக்னிகலி முதல் நாள் இல்லை. சன் பிக்சர்ஸின் வெறுப்பேற்றும் மார்க்கெட்டிங், ஒரே கதையை இந்தியன் முதல்வன் அந்நியன் என்று நடிகர்களை மட்டும் மாற்றி மாற்றி எடுத்த ஷங்கர், பில்டப்பில் கவிழ்ந்து நான் பார்க்குமுன்னே பயந்து ஓடிவிட்ட குசேலன் புகழ் ரஜினி, உலக அழகிக்கு பக்கத்தில் கேள்விக்குறி போடவைத்த ராவணன் ஐஸ்வர்யா - எதுவுமே சகுனமாக இல்லை - இருந்தாலும் எப்பவுமே பாஸிடிவை விட நெகடிவ் விமர்சனங்கள்தானே ஹிட் ஆகும், இதில் விடுவதை அதில் பிடித்துவிடலாம் என்றுதான் போனேன்.
எந்த பில்ட் அப்பும் இல்லாமல் நேரடியாக ரஜினியைக் காட்டியது, ஒரு விஷயமாகக் கூட வேறு எந்த ஊர் ரசிகனுக்கும் படாதுதான், ஆனால் தமிழ் சூழலில் பெரிய ஆச்சரியம்தான்.
வசனம் என்று சுஜாதா-ஷங்கர்-கார்க்கி பெயர்கள் போடப்பட்டாலும், சுஜாதா ரசிகனுக்கு எல்லா ரசிக்கவைக்கும் வசனங்களுமே சுஜாதாவாகத்தான் காட்சியளித்தன. முதல் பாதியின் காமெடி கலாட்டாவில் காட்சியும் வசனமும் போட்டி.
"உள்ளே உயிரோடதான் இருக்காரா?" "இல்லை Wire ஓட இருக்கார்"
வழுக்கைத்தலையனிடம் முடிவெட்டுபவர் "நகம் வெட்டறாப்பல பாத்து வெட்டிடறேன் சார்"
"தலையைத் திருப்பணுமா? கண்ணாடி பாக்கலாமில்ல?" "முன்னாடி சொல்லலாமில்ல?"
"உனக்கு பிடிச்சிருந்தா கன்னத்தில எச்சி பண்ணுவியா?"
"Who is that செல்லாத்தா? 30 DB over allowed Limit!"
கதை விட்டலாச்சார்யா ரேஞ்சுதான் என்றாலும் பேக்கேஜிங் நம்பும் விதமாக இருந்ததில், கழட்டிவைத்த மூளையை மாட்ட அவகாசமே கொடுக்காமல் ஓடியது திரைக்கதை.
கடைசி பத்து-பதினைந்து நிமிஷம் தவிர்த்து பெரும்பாலும் தெளிவாகவே செல்கிறது, பொதுமேடையில் ரோபோ அறிமுகம், AIRD அப்ரூவல், தீவிபத்து, டிவி கவரேஜ், பிரசவம் பார்ப்பது என்று காட்சிகள் கோர்வையாக, வேகமாகப் பறக்கும் முதல்பாதி, இரண்டாம் பாதியில் கொசு சீன் கொஞ்சம் கடி என்றாலும் கொசுவின் பெயருக்காகவே (ரங்குஸ்கி) ரசித்தேன்! ஆனால் அந்த க்ளைமாக்ஸ் நிச்சயம் ஓவர்தான். க்ராபிக்ஸும் கூர்மையாகப் பார்த்தால் குட்டிப்பிசாசு ரேஞ்சுதான்.
விஞ்ஞானி ரஜினியிடம் சொல்லிக்கொள்வது போல ஒன்றும் இல்லை. ஒரு அரிவாளுக்கு பயந்து மூச்சிரைக்க ஓடிவரும் தைரியசாலியாக ரஜினியைக் காட்டுவதும் தமிழ் சூழலுக்கு மட்டும் புதுமை.
ஆனால் சிட்டி! முதல் பாதியின் அப்பாவி நகைச்சுவை, இரண்டாம் பாதியின் வில்லத்தனம் - ரஜினியின் வில்லத்தனத்தை நான் இவ்வளவு ரசிப்பேன் என்று "ரோபோஓஓ" டயலாக்கின்போதுதான் அறிந்துகொண்டேன். "ஏபிநெகடிவ், பெட்ரோலுக்கு பதில் தண்ணீர், கரெண்டு கட்டு, வசீ, எங்கப்பா இருக்கே?" புத்திசாலியான வில்லன் இருக்கும்போது, டேனிடென்சொங்பாவைக் (நன்றாகவே நடித்தாலும்) கழ்ட்டிவிட்டதை நியாயப்படுத்துகிறது. தேவதர்ஷினியிடம் "பையனை ரோபாடிக்ஸ் படிக்க வை, நல்ல ஃப்யூச்சர்" என்று சொல்லிக்கொண்டே தலையைக் கழட்டும் இயல்பான நடிப்பு - இத்தனை வருடங்களுக்குப் பிறகு தேவையில்லை என்றாலும், ரஜினிக்கு ஒரு மைல்கல்தான் :-)
ரசித்தேன் - against all odds.ரசிப்பீர்கள்.
ஒரு ட்விட்டில் பார்த்தேன், @ramkij என்று நினைக்கிறேன் - சிவாஜி ரஜினிக்காக ஷங்கர் எடுத்த படம், எந்திரன் ஷங்கருக்காக ரஜினி நடித்த படம் என்று. உண்மை.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 11 பின்னூட்டங்கள்
Subscribe to:
Posts (Atom)