பொருத்தமான எண்தான். தந்தித் தொலைதொடர்பில் செய்தி முடிந்ததை (கதை முடிந்ததை) தெரிவிக்க 30 ஐத்தான் உபயோகப்படுத்துகிறார்களாம்.
ஹர்ஷத் எண் என்கிறார்கள் - 30ஐ. ஒரு எண்ணுக்குள் உள்ள எண்களின் கூட்டுத்தொகையால் முழு எண் வகுபட்டால் அதுதான் ஹர்ஷத் எண்ணாம். சரியாக விளக்கவில்லை எனப்பட்டால் சுட்டியை அழுத்தி விளக்கம் பெறலாம்.
30க்குக் குறைவான அத்தனை பகா எண்களின் கூட்டுத்தொகையாவும் இந்த ஏன் அமைந்திருக்கிறது.
துத்தநாகத்தின் அணு எண் 30.
கி மு 45க்கும் கி மு 8க்கும் நடுவில் ஜூலியன் நாட்காட்டியில் லீப் ஆண்டுகளில் பிப்ரவரிக்கு 30 தேதிகள் இருந்தனவாம்.
திருமணம் நடந்த முத்துவிழா 30ஆம் ஆண்டில்தான் கொண்டாடப்படுகிறதாம்.
-----------
இப்படிப்பட்ட பதிவுகளுக்கு உடனடியாக 30 கொடுத்தால்தான் மூடுவிழா நடத்தமுடியுமாம்.
Feb 28, 2007
30?
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 21 பின்னூட்டங்கள்
Feb 23, 2007
நன்றி நன்றி நன்றீ!! (23 Feb 07)
இண்டிபிளாக்கீஸ் தேர்தல் - தமிழ் பிரிவில் பெருவாரியாக வாக்குகள் அளித்து என்னை கௌரவித்த அனைவருக்கும் என் நன்றி.
மீண்டும் ஒருமுறை வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 52 பின்னூட்டங்கள்
Feb 22, 2007
காவிரி, எந்த ஜல்லி தண்ணீர் தரும்? (22 Feb 07)
17 ஆவது நாளாக இன்றும் மறியல் செய்தார்களாம் கர்நாடகாவில். இந்தச் செய்தியையும் தங்கம்-வெள்ளி விலை நிலவரத்துடன் சேர்த்துச் சொல்லும் அளவிற்கு ரெகுலர் ஆகிக்கொண்டிருக்கிறது.
படிக்கும்போது கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தேன். வேலை தேடிய நேரத்தில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தேன். வேலை கிடைத்த பிறகும் அவ்வப்போது டிவியில் பார்த்துக்கொண்டிருந்தேன், இப்போது கிரிக்கின்போவோ, எஸ் எம் எஸ் - ஸோ வெறும் ஸ்கோர் மட்டும்தான் தெரிந்துகொள்ள முடிகிறது. பிட்ச் என்றால் என்ன, எப்படிப்பட்ட பந்துக்கு எப்படி பீல்ட் செட் செய்கிறார்கள், பந்து ஸ்விங் ஆகிறதா ஸ்பின் ஆகிறதா, பேட்ஸ்மேன் அடித்த ஷாட் நல்ல ஷாட்டா, விளிம்பில் பட்ட ஆபத்தா.. எதுவும் தெரியாமல் 37/ 3 - 10 ஓவரில் என்பது நம் டீமுக்கு நல்லதா கெட்டதா என்று மட்டுமே யோசிக்கிறேன்.
அதற்கும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளை ஒட்டி நடக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டுக்கு 419, கர்நாடகத்துக்கு 270 என்று எண்கள் மட்டுமே முதலில் உணர்ச்சியைத் தூண்டியிருக்கிறது. இந்த உணர்ச்சித் தூண்டுதலை தத்தம் அரசியல் வாழ்விற்கு எந்த விதமாக சாதகமாக்கிக்கொள்ளலாம் என்றே சம்மந்தப்பட்ட அனைவரும் பாடுபடுவது வெட்கக்கேட்டின் உச்சம்.
ஜடாயு பதிவில் "என் வீட்டிலே ரெண்டு நாள் தண்ணி வரலை, இதுலே தமிழ்நாட்டுக்கு வேற தரணுமாக்கும்" என்று நொடித்துக்கொள்ளும் கர்நாடக
அம்மணிகள், துரியோதனனைப் பேரடி செய்து "ஒருசொட்டு நீர் கூட தமிழ்நாட்டுக்குப் போகக்கூடாது" என்று வெற்றுச்சவடால் விட்டு பிரச்சனையை
ஊதிப் பெரிதாக்கும் சலுவாலியாக்கள், நம் பலத்தைக் காட்டினால்தான் தண்ணீர் வெளியூர் போவதிலிருந்து நிறுத்த முடியும் என்று புரிந்துவைத்திருக்கும் விவசாயி சங்கங்கள், ஊருக்கொரு பேச்சு பேசும் ஸ்பெஷல் மனசாட்சிகளை வைத்திருக்கும் தேசியக்கட்சிகள் -- யாராவது
பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஆசையாவது படுகிறார்களா? ம்ஹூம்.
தேசியக்கட்சிகள் என்று சொல்லப்படுபவையின் நாற்றம்தான் இதில் உச்சம். சுற்றி நிற்கும் நாலு பேர், தனக்கு ஓட்டுப்போடக்கூடிய வங்கிக்கு
நல்லதாய்த் தோற்றமளிக்கும் வார்த்தைகளை - வெறும் வார்த்தைகளை - ஊருக்கு ஒன்றாகச் சொல்லித் திரியும் இவர்களுக்கும் தேசியத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும். இவர்கள் அனைவருக்கும் ஒரு தேசியக்கொள்கையை கட்டாயப்படுத்தி வாங்க பொதுநலவழக்கு போன்ற ஏதேனும் வழிவகை இருக்கிறதா? அவர்களுக்கு தமிழ்நாட்டு ஓட்டுகள் என்றும் எட்டாக்கனி என்பதால் கர்நாடகத்தில் மட்டும்தான் அவர்கள் குரல் உரத்து ஒலிக்கிறது.
எந்த ராஜா எந்தப்பட்டணம் போனாலும் தமிழ்நாட்டு அரசியல் கருணாநிதி-ஜெயலலிதாவை விட்டு விலகுவதில்லை. நடுவர் மன்றத்தை யார் அமைத்தது, உன் ஆட்சியில் நீ என்ன கிழித்தாய், இப்போது கொடுக்கப்பட்ட அளவு ஒரு ஏமாற்று, நீ தமிழ் மக்களைக் கொள்ளையடித்தாய், 71ல் என்ன செய்தாய், 91ல் என்ன செய்தாய்.. என்று தற்காலத்துக்கு வராமல் அடம்பிடிக்கும் சண்டைகள் - இதை ஒரு தூண்டுகோளாய் வைத்து பிரிவினைவாதத்துக்கு ஆள்சேர்க்கும் கும்பல்கள்!
91ல் நடத்திக்காட்டிய வன்முறையால் தன்னம்பிக்கை அதிகரித்து நிற்கும் வாட்டாள் நாகராஜ் போன்ற கும்பல்கள் கேட்பாரில்லாமல் அலைகிறது. இப்போது ஒரு பெரிய பிரச்சினையும் இல்லையாம் - கேபிள் டிவி கட்டானது தவிர - அதற்கு இவர்களுக்கு நன்றி சொல்வது ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் இல்லாமல் வேறென்ன? சொந்த ஊரைவிட்டு வெளியே வந்துவிட்ட ஒரே காரணத்துக்காக பயந்தே வாழ்ந்துகொண்டிருக்கவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கும் இந்த மாதிரி ஆட்கள் எந்த மாதிரி தண்டனைக்கும் உகந்தவர்கள்.
ஆக, எல்லாரும் ஜல்லிதான் அடிக்கிறார்கள் - என்ன, இது ரொம்ப அபாயகரமான ஜல்லி. கர்நாடகத்தில் வாழும் தமிழனுக்கு உடனடி அபாயம், இந்திய தேசியத்துக்கு குறுகிய கால அபாயம், தமிழ்நாட்டின் EX-நெற்களஞ்சியத்துக்கு ஆயுட்கால அபாயம்!
தமிழகத்தைப் பொறுத்தவரை, திராவிட ஜல்லி, தேசிய ஜல்லி எதுவுமே பயன் தரவில்லை என்பதே உண்மை. தொண்டர்கள் மாறினார்களோ என்னமோ, தமிழ்நாட்டுத் தலைவர்கள் திராவிடத்திலிருந்து தேசியத்துக்கு மாறி தேவையான அளவு - தேவையான துறைகளில் மந்திரிகளை வைத்துக்கொள்ள ஆரம்பித்து 10 வருடங்களுக்கு மேலாகியும் காவிரிக்கு ஒரு முடிவு காண முடியாதது, தேசிய நீரோட்டத்தின் குற்றமா, திராவிடக் கட்சிகளின் குற்றமா?
நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் எல்லாம் வெறும் காகிதங்களைத் தான் தர முடியும். தண்ணீர் வர எந்த தமிழ் தேசியம், இந்திய தேசியம், திராவிட தேசியம் எந்த ஈயம் பித்தளையும் உதவ முடியாது - அதற்கு முதல் படி மக்கள் உணர்ச்சிகளை விட்டு அறிவுபூர்வமாக இந்தப்பிரச்சினையை அணுகுவதாகவே இருக்க முடியும். அதற்கு எந்த இயக்கமும் உதவப்போவதாக கண்ணுக்கெட்டும் தூரம் வரை தெரியவில்லை!
நடுவர் மன்றத் தீர்ப்பு என்பது அறிவார்ந்த சிந்தனைகளால்தான் வந்திருக்கும் - என நான் நம்புகிறேன், அதை ஏற்பதே / ஏற்கவைப்பதே சரியான தீர்வாக இருக்க முடியும். இத்தீர்ப்பிலும் குறைகள் இருக்கலாம், அவற்றையும் அறிவுபூர்வமாகச் சிந்தித்தே களைய வேண்டும் - வேறெந்த வழியும் இல்லை.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 27 பின்னூட்டங்கள்
Feb 20, 2007
ஒரு அவசர ரீமேக் படம் (20 Feb 07)
வலைப்பூ ரீமேக் கிரியேஷன்ஸாரின்
பாட்சா
பாடல்:
நான் பினாத்தல்காரன் பினாத்தல்காரன்
நாலும் தெரிஞ்ச பிஸிக்காரன்
தமிழ்மணத்துக் கூட்டுக்காரன்
Flash காட்டும் மூளைக்காரன்
கட் & பேஸ்ட் வேலைக்காரன்
சீனு காட்டும் சிரிப்புக்காரன்
உப்புமா போடும் உறவுக்காரன்
காமடிக்குச் சொந்தக்காரண்டா
நான் எப்பவுமே காமெடிக்குச் சொந்தக்காரண்டா..
நான் எப்பவுமே காமெடிக்குச் சொந்தக்காரண்டா..
ஆ ஹிட் என்னா ஹிட்டுதான்
திட்டு என்னா திட்டுதான்
ஆ ஹிட் என்னா ஹிட்டுதான்
திட்டு என்னா திட்டுதான்
அய்யா பிளாக்காரே.. ஜாலியா விடமாட்டேன்
கும்தலக்கடி கும்கா ஏ கும்தலக்கடி கும்கா
அய்யா பிளாக்காரே.. ஜாலியா விடமாட்டேன்
வேலையோ வெட்டிநிலையோ - பதிவு
போடாம விடமாட்டேன்..
மேட்டர் இல்லையின்னா உப்புமா
அதுவும் இல்லையின்னா மீள்பதிவு
நான் பீட்டாவுக்கு மாறிபுட்டேன் பாருங்க
என் போஸ்ட்டையெல்லாம் வகைபிரிச்சேன் பாருங்க!
இண்டிபிளாக்கீஸ் தேர்தல்
அட என்னைய நம்பி வருதாம்
நம்பி வந்து குத்து..
நல்ல போஸ்ட்டும் வரலாம்..
காமடிக்குச் சொந்தக்காரண்டா
நான் எப்பவுமே காமெடிக்குச் சொந்தக்காரண்டா..
ஊரு பெரிசாச்சு - பதிவரும் பெருத்தாச்சு
கும்தலக்கடி கும்கா ஏ கும்தலக்கடி கும்கா
ஊரு பெரிசாச்சு - பதிவரும் பெருத்தாச்சு
பின்னூட்டம் எதிர்பார்த்து பாதி வயசாச்சு..
மக்கள் பார்க்கவரும் வேளையிலே,
இருப்பேன் தமிழ்மணத்தின் மூலையிலே!
நான் ரீமேக்கெல்லாம் பண்ணியுனக்குத் தாரேம்பா
எனக்கு ஓட்டு ரெண்டு போட்டு நீயும் வாயேம்பா!
பொழைப்பில்லாத ஆளும் அட
பினாத்தல நம்பி வருவான்
ஒழுங்கான ஆளும்
உருப்படாம போவான்
காமடிக்குச் சொந்தக்காரண்டா
நான் எப்பவுமே காமெடிக்குச் சொந்தக்காரண்டா..
வசனம்:
டேய் டேய் டேய்... ஆண்டவன் கெட்டவங்களுக்கு பின்னூட்டமா அள்ளித் தருவான்.. ஆனா அத்தனையும் அனானியாவும் மொக்கையாவும் போவுண்டா
நல்லவங்களுக்கு.. ஆபீஸ்லே பிளாக்கரை பிளாக் பண்ணுவான்.. ஆனா பின்னூட்டமா கொட்டுண்டா!
ஐடியாவுக்கு நன்றி: சென்னைக்கச்சேரி தேவ்!
----
இண்டிப்ளாக்கீஸில் எனக்கு வோட்டளித்துவிட்டீர்களா?
பதில் தெரியாத கேள்விகளுக்கு no answer என்று தெரிவு செய்யலாம். நன்றி
Please Click on the Link below to start the voting process.
http://poll.indibloggies.org/index.php?sid=1
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 37 பின்னூட்டங்கள்
Feb 18, 2007
பினாத்தல் ரீமேக் திரைப்படங்கள் (2) - திருவிளையாடல் (20 Feb 07)
வலைப்பூ ரீமேக் கிரியேஷன்ஸாரின்
திருவிளையாடல்
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி, நல்ல வலைப்பூ எழுதுவோர்க்கு நல்ல
வாய்ப்பு. தமிழ் வலைப்பூக்களில் உப்புமா பதிவு எழுதி, மக்களின்
சந்தேகத்தைத் தீர்க்கும் பிளாக்கருக்கு ஆயிரம் ஹிட் பரிசு.
புதுப்பதிவர் - தண்டோரா, பரிசுத்தொகை எவ்வளவு?
தண்டோரா - ஆயிரம் ஹிட்
புது: ஐயோ ஐயோ, ஒண்ணா ரெண்டா, ஆயிரம் ஹிட்டாச்சே! மூணுநாளாச்சு பதிவு போட்டு இன்னும் 30 பேர் கூட பாக்கலியே.. ஆயிரம் ஹிட்டாச்சே!
விக்கிப்பசங்க: பதிவரே
புது: யாரு
வி: அழைத்தது நான் தான்.
பு: யாருங்க நீங்க, ஏன் அழைச்சீங்க?
வி: அறிவியல், உப்புமா அனைத்தும் கூட்டி, சுந்தரத் தமிழிலே பதிவெழுதி,
விக்கிப்பசங்களில் கூட்டாளியான பதிவர் நான்.
பு: அய்யோ தண்டோரா போட்டதை நீங்களும் கேட்டாச்சா? என் வயத்துலே
அடிக்கறதுக்குன்னே வந்திருக்கீங்க அப்போ!
வி: மக்களின் சந்தேகத்தைத் தீர்க்கும் பதிவுனக்கு கிடைத்துவிட்டால்,
ஆயிரம் ஹிட் உனக்குதானே!
பு: ஆமா, ஆயிரம் ஹிட்டாச்சே.. முதல்லே என் பிரண்டுங்களை பாக்கவைக்கணூம்.
வி: கவலைப்படாதே, அந்தப்பதிவை நானுனக்குத் தருகிறேன்.
பு: என்னது? நான் பாக்கறதுக்குக் கொஞ்சம் சுமாரா எழுதறவன் மாதிரிதான்
இருப்பேன், என் திறமையப்பத்தி உனக்கு தெரியாது.
வி: என் திறமை மேல் உனக்குச் சந்தேகம் இருந்தால், என்னைப் பரீட்சித்துப்
பாரேன் - உனக்குத் திறமை இருந்தால்?
பு: என்னது, என்கிட்டே என்கிட்டேயே மோதப்பாக்கறியா? நான் எழுதவந்ததுதான் புதுசு. ஆனா ரொம்பநாளா படிச்சுகிட்டிருக்கேன்..
வி: கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?
பு: நானே கேட்கிறேன், எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும்.
பு: பிரிக்க முடியாதது என்னவோ?
வி: வலைப்பூவும் அரசியலும்
பு: பிரியக்கூடாதது?
வி: வலைப்பூவும் பொழுதுபோக்கும்
பு: சேர்ந்தே இருப்பது?
வி:கொத்தனாரும் பின்னூட்டமும்
பு: சேராதிருப்பது?
வி: கருப்பும் சிகப்பும்
பு: சொல்லக்கூடாதது?
வி: எத்தனை பெயரில் எழுதுகிறோம் என்று
பு: சொல்லக்கூடியது
வி: எதிராளி ஐ பி
பு: பார்க்கக் கூடாதது?
வி: சாகரன் மாதிரி இழப்புகள்
பு: பார்க்கக்கூடியது?
வி: படம் காட்டும் பதிவுகள்
பு: பதிவில் சிறந்தது?
வி: நகைச்சுவைப் பதிவுகள்
பு: நகைச்சுவை என்பது?
வி: தனிநபர் தாக்குதல் இல்லாதது
பு: தாக்குதல் என்பது?
வி: போலி செய்வது.
பு:போலிக்கு?
வி:டோண்டு
பு:வேலைக்கு
வி:ரவி
பு: காமெடிக்கு?
வி: வ வா ச
பு: கலாய்க்க?
வி: நாமக்கல்
பு: கலாய்க்கப்பட?
வி: பாலபாரதி
பு; உப்புமாவுக்கு?
வி: பினாத்தல்
பு: ஆனைக்கு?
வி: பொன்ஸ்
பு: பூனைக்கு?
வி: துளசி அக்கா
பு: அய்யா.. ஆளை விடு.. நீர் பதிவர்!
ஆதரவு தொடர்ந்தால் இன்னும் ரெண்டு ஐடியா இருக்கு.. தயாரிப்பாளர்களே வாருங்கள், ஆதரவை அள்ளித் தாருங்கள்!
இண்டிப்ளாக்கீஸில் எனக்கு வோட்டளித்துவிட்டீர்களா?
பதில் தெரியாத கேள்விகளுக்கு no answer என்று தெரிவு செய்யலாம். நன்றி
Please Click on the Link below to start the voting process.
http://poll.indibloggies.org/index.php?sid=1
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 52 பின்னூட்டங்கள்
பினாத்தல் ரீமேக் திரைப்படங்கள் (1) - பராசக்தி (19 Feb 07)
நீதிபதி: உன்மேல் சாற்றப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நீ என்ன பதில் சொல்ல விரும்புகிறாய்?
குற்றம் சாட்டப்பட்டவர்:
நீதிமன்றம் பல விசித்திரம் நிறைந்த வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. பல புதுமையான மனிதர்களைச் சந்தித்திருக்கிறது, ஆனால் இவ்வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல, குற்றம் சாட்டப்பட்ட நானும் ஒன்றும் புதுமையானவனல்ல.
போலிப்பெயரில் பின்னூட்டம் போட்டேன், அதர் ஆப்ஷனை எதிர்த்தேன், செய்யத் தெரியாமல் கயமை செய்தேன் - குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன்
இப்படியெல்லாம்.
நீங்கள் நினைப்பீர்கள், இதையெல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை - நிச்சயமாக இல்லை.
கேளுங்கள் என் பழங்கதையை. வலைப்பூ பாதையிலே சர்வ சாதாரணமாக இருக்கும் ஏராளமான பதிவர்களில் ஒருவன் தான் நானும்.
பிழைக்க ஒரு தொழில், பொழுதுபோக்க ஒரு தொழில் - வலைப்பதிவர்
பெரும்பான்மைக்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா? மொழிபெயர்த்துக் கொண்டிருந்த நான், பூஜ்யவெளியிருக்கும் பிளாக்குக்கு ஓடோடி வந்தேன். பிளாக், என்னை தாத்தா என்றது. என் அனுபவத்தை தா, தா
என்று கேட்பதாக எண்ணி நானும் அள்ளி வழங்கினேன்.
ஆனால் வலைப்பூ மக்கள் என்னை எள்ளி நகையாடினர். என் வெளிப்படைப்பேச்சுக்களை வெளிப்படையாகக் கிண்டல் செய்தனர். எனக்கிருந்த ஓரிரு ஆதரவாளர்களையும் கொடுமைப்படுத்தியது.
போலிக்கள் என்னை ஆபாசம் செய்து துரத்தினார்கள் - ஓடினேன்.
மாற்றுக்கருத்தாளர்கள் என்னை தூஷணம் செய்தார்கள் - ஓடினேன்.
நடுநிலைவாதிகள் என்னைக் கிண்டல் செய்தே தீர்த்தார்கள் - ஓடினேன் ஓடினேன் - ஸைபர்வெளியின் எல்லைக்கே ஓடினேன். மூச்சு வாங்கியதால் திரும்ப வந்துவிட்டேன்.
அதர் ஆப்ஷன் வேண்டாமென்றேன் - ஏன் போலிகளே கூடாதென்றா? ஆபாசமாக எழுதி என்னை ஆதரித்த சிலரையும் ஓட ஓட விரட்டும் அசிங்கப்போலிகள் கூடாதென்றுதான் கூறினேன்.
வேறுபெயரில் பின்னூட்டமிட்டேன் - ஏன் எனக்குப் பெயர் இல்லாததாலா? என் பெயர் தெரிந்தால் ஏற்கனவே எனக்கு விழும் திட்டு இன்னும்
அதிகமாகிவிடுமே என்பதற்காக!
பின்னூட்டக்கயமை செய்தேன் - ஏன் 100 200 என்று சாதனை செய்வதற்காகவா? போலியின் பயமுறுத்தலால் பாதி, என் பதிவைப்பார்த்து ஓடியதால் பாதி எனக் காற்று வாங்கி என் பதிவுகள் காணாமல் போய்விடுவதைத் தவிர்ப்பதற்காக!
என் யுத்தத்தில் பங்கேற்றிருக்கவேண்டும், போலியைத் துரத்தியிருக்கவேண்டும், யோம் கிப்பூரின் போது கூட இருந்திருக்கவேண்டும், பின்னூட்டங்களாய்க்கொட்டி எனக்கு ஆதரவளித்திருக்கவேண்டும் - இன்று என்முன் சட்டத்தை நீட்டுவோர்.
செய்தார்களா? வாழ விட்டார்களா இந்தத் தாத்தாவை.. இதற்கொரு முடிவு கட்டவே நான் பல அவதாரம் எடுத்தேன்! தவறா? கூறுங்கள் நீதிமான்களே!
நாளை ரிலீஸ், அடுத்த ரீமேக்: திருவிளையாடல்!
பதில் தெரியாத கேள்விகளுக்கு no answer என்று தெரிவு செய்யலாம். நன்றி
Please Click on the Link below to start the voting process.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 52 பின்னூட்டங்கள்
Feb 7, 2007
பீட்டாவுக்கு ஜே!
பெரிய வேலைதான்.
பீட்டாவின் முக்கியமான மேம்படுத்தல் என்பதால் முதுகைச் சுட்டெரிக்கும் பார்வையையும் பொருட்படுத்தாம பொறுமையா 212 பதிவுக்கும் லேபிள் கட்டிட்டேன்.
படிக்கறவங்களுக்கும் சௌகர்யம், இனி எழுதறதுக்கும் சௌகர்யம். சுட்டிக்காட்டிய கோவி கண்ணனுக்கு ஒரு பெரிய நன்றி.
எனக்கே ஆச்சரியமா இருக்கு, இத்தனை வகையிலேயா எழுதியிருக்கேன்னு, உப்புமா இவ்ளோ கம்மியாவும், ப்ளாஷ் இவ்ளோ அதிகமாவும் இருக்கும்னு நெனைக்கல :-) நக்கல் எதிர்பார்த்ததுதான்.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 11 பின்னூட்டங்கள்
Feb 6, 2007
டோண்டுவுக்கு சில அறிவுரைகள் (06 Feb 2007)
வயது குறைவாயிற்றே என்று கொஞ்ச நேரம் யோசித்தேன். ஆனால், கால் நூற்றாண்டுக்கு முன்பே பிறந்த நான், சமீபத்தில் பிறந்த டோண்டுவுக்கு அறிவுரை சொல்வது தவறல்ல என்ற முடிவுக்கு வந்தேன்.
இன்னும் சொல்லப்போனால், இது டோண்டுவுக்கான அறிவுரை மட்டுமல்ல, பிரச்சினையில் சம்மந்தப்பட்ட, படாத அனைவருக்குமான திறந்த அறிவுரைகள். இந்த அறிவுரைகளைச் சொல்வதும் நானல்ல, நம் பாட்டி:-)
1.அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.
ஊருக்குச் சென்றிருந்ததால் ஒரு சிறு இடைவெளி விழுந்துவிட்டு, மேட்டர் இல்லாமல் தலையைச் சொறிந்துகொண்டிருந்த நேரத்தில் இந்த உப்புமாவுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 29 பின்னூட்டங்கள்
வகை ஆத்திச்சூடி, உப்புமா, டோண்டு