Technology has developed soooooooo much - இருந்தாலும், தொழில் நுட்பம் சில இருண்ட பக்கங்களை இன்னும் எட்டிப்பார்க்காமலே இருக்கிறது.
அரசியல் அப்படிப்பட்ட பாவப்பட்ட துறைகளில் ஒன்றாக இருப்பது பினாத்தலாரின் நீண்ட நாள் குறை.
குட்டிக்கதைகளுக்கான தகவல் சுரங்கம் உருவாக்கிக் கொடுத்தார், ஆனாலும் அவர் மனம் முழு நிறைவை அடையவில்லை.
தேர்தல் விரல் விட்டு எண்ணக்கூடிய நாட்களுக்குள் வருகிறது. அரசியல் காட்சி மாற்றங்கள் அவசர அவசரமாக அரங்கேறுகின்றன.
இரண்டு ரூபாய் அரிசி சாத்தியமில்லை என்று சொன்ன அதே மேடையில் 10 கிலோ இலவசம் சாத்தியம் என்று சொல்லவேண்டிய அளவுக்கு கொள்கை மாற்றங்கள் துரிதம் அடைந்துகொண்டிருக்கின்றன.
எல்லாருக்கும் கலர் டிவியா, இல்லாதவர்க்கு மட்டுமா, கேபிள் இலவசமா என்றெல்லாம் நொடிக்கு நொடி மாறும் கொள்கைகளை அறிய ஒரு சாதாரணப்பேச்சாளன் மறுநாள் வரும் செய்தித்தாளை மட்டுமே நம்பி உள்ள அவலம் கண்கூடு.
இதற்கு ஒரு நிரந்தரத்தீர்வு காணும் தொலைநோக்குடன் பினாத்தலார் ஒரு மென்பொருளை வடிவமைத்து வருகிறார். பிரச்சினையைத் தேர்ந்தெடுத்தால், கழகத்தின் கொள்கையும், பேச வேண்டிய விதத்தையும் மென்பொருள் கூறிவிடும், ஆன்லைனில், கொள்கை முழக்கத்தை டவுன்லோடு செய்து, மக்களின் மனத்தில் கழகத்தின் பார்வையை அப்லோடும் செய்ய ஒரு அரிய மென்பொருள்.
இன்று இரவோ, நாளை காலையோ இதன் பீட்டா வெர்ஷன் வெளியாகும் என்று பினாத்தலார் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
4 பின்னூட்டங்கள்:
தலீவா, இந்த வார விகடன்ல வந்துச்சே வைகோ வித்த ஒரு மைக்கு , அது மாதிரியா?? இல்ல அதே தானா?
மரியாதைக்குரிய பினாத்தலாரே... இந்த சாப்ட்வேர் ப.ம.க மட்டும் பயன்படுத்துமா? இல்லை மாற்று கட்சிகளுக்கும் கொடுக்கும் எண்ணம் உண்டா?
ரஷ்யா வாழ்கிறது... மத்திய கிழக்கு தேய்கிறது.. பின்னூட்டங்களைச் சொன்னேன்...
ஆப்பு புதிய வடிவத்தில் வெளியாகிறது. விரைவில் எதிர்பாருங்கள்.
நன்றி பொன்ஸ், இது அதையும் தாண்டிப் புனிதமானது. கொஞ்சம் பக் வருது, நாளைக்கு நிச்சயம் வெளியிட்டுவிடுவேன்.
தேவ், இது ப ம க வ வா ச பிரச்சினை கிடையாது.தேசியப்பிரச்சினை!
வாங்க ஆப்பு, இது விமர்சனமா, விளம்பரமா?
Post a Comment