Apr 15, 2006

பொட்டி வரவில்லை (15 Apr06)

என் இனிய வாசகப்பெருமக்களே,
 
பினாத்தல் தயாரித்த முழு நீளப்படங்கள் சேவை வழங்கும் இயந்திரத்தால் தடை செய்யப்பட்டிருப்பது ஏகாதிபத்தியவாதிகளின் சதி.
 
கலையைத் தடுப்பதன் மூலம் உணர்வைத் தடுத்துவிடமுடியுமா?
 
விட்டில் பூச்சிகள் விளக்கைக்கொல்ல முடியுமா? அல்லது நண்டுதான் நாடாள இயலுமா?
 
சும்மா பில்ட் அப்பு! என்னவோ தப்பான இடத்துலே அப்லோட் பண்ணித் தொலைச்சிட்டேன், இப்போது சரி செய்ய இயலாது,இன்று இரவு எப்படியும் இதை வலைஏற்றிவிடுவேன். தாமதத்துக்கும், ஏமாற்றத்துக்கும் மன்னியுங்கள்.
 
ஆனால் நிச்ச்யம் ஒன்று மட்டும் சொல்வேன், நன்றாகவே வந்திருக்கிறது திரைப்படம்!
 
அதுவரை, எனக்கு இன்று வந்த சிதம்பர ரகசியம் தொடர்பான "மாயா"வின் பின்னூட்டம்:
 
எனக்கும் சிதம்பர ரகசியம் தொடரின் தற்போதைய இழுவை அளவுக்கு மீறி இருப்பதால் வெறுப்பேறுவது உண்மை, மாயா மிக அழகாக அதை கிண்டல் அடித்திருக்கிறார். அது ஒரு பின்னூட்டமாக இருப்பதைவிட பதிவாக இருந்தால் அதிகக் கவனம் பெறும் என்பதால் இங்கெ இடுகிறேன், அவருக்கு ஆட்சேபம் இருந்தால் தூக்கிவிடுகிறேன். 

சுரேஷ்,
நானும் சிதம்பர ரகசியத்தின் ரசிகன் தான்.அதைப் பற்றி ஒரு பின்னுட்டமும் இட்டிருக்கிறேன்.ஆனால் கடந்த மாதமாக அரைத்த மாவையே அரைக்கிறார்கள்.இந்த சீரியலைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு Forum வந்து கொண்டிருக்கிறது.அதற்காக நான் எழுதியதை நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இனி..

அடுத்த வாரம் வரவிருக்கும்(எப்போதும்) 'சிதம்பர ரகசியத்தின்' உரையாடல்கள்.(காட்சி அமைப்புகள் கூட).

ஆகாஷ் பாட்டி:வாடாப்பா..சித்த இரு..நான் போய் காப்பி எடுதுண்ட்டு வரேன்..நீ எத்தனை தடவை கேட்டாலும் நான் 'அதை'ப் பற்றி சொல்ல மாட்டேன்..(ஏன்னா என்க்கே 'அது' தெரியாது)..

பிச்சைக்காரன் 1: கிரீம் பிஸ்கட்டில் கிரீம் இருக்கும்.நாய் பிஸ்கட்டில் நாய் இருக்காது! யோசி..பிரிட்ஜில லைட் எரியுதுன்னு அங்கே போய் இருந்து படிக்க முடியுமா? யோசி.

குடோனில்(அதாவது போலீஸ் ஸடேசன்).ஒரு 40 வாட்ஸ் பல்பு கீழ்..எடிட்டர் உட்கார்ந்திருக்கிறார்.

ஆரியபாதம்:சொல்லுங்க குமரகுரு ஏன் இப்படி பண்ணீங்க??

இந்த கேள்வியைக் கேட்ட உடன் ஒரு 'அஜீரண' எபக்ட்டில் ,முடி எல்லாம் சிலிர்த்து ஒரு லுக் விடுகிறார் எடிட்டர்.

குமரகுரு: நான் ஏன் அப்படி பண்ணணும் ??

ஆரியபாதம்: So .நீங்க இதை பண்ணலை...

(இந்த நேரத்தில் நம்ம ரேகன் ஒரு 'சங்கு' எபக்ட்டில் ஒரு சவுண்டு விடறார்..அதே நேரத்தில் நம்ம கேமரா ஒரு 360+180+360 ஆங்கிளில் திரும்பி ஒரு வாட்டர் பாட்டில் பக்கம் வந்து நிற்கும்).

அபிராமி(கதாநாயகி!!):ஏன்னா..(ஆகாஷைப் பார்த்து) உங்களுக்கு தோஷம் இருகுன்னு என்னோட தோப்பனாருடைய குருவோட கொள்ளுத்தாவோட சின்ன மாமனார் அடிக்கடி சொல்லுவார்..அது இப்போ உண்மையாடுத்துதே..இருங்கோ போய் விக்ஸ் எடுத்துண்டு வரேன்...(ஜல தோஷத்திற்கு)..

ஆகாஷ்(மனதிற்குள் சந்திரமுகி பிரபு ஸ்டைலில்):என்ன கொடுமையா இது..எங்கயாவது ஒரு America ரிடனுக்கு இப்படி ஒரு ஜோடியா??

தீட்ச்சதர் (தில்லைராஜனைப் பார்த்து) :அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம்... பால் கொட்டினா வேற பால் வாங்கலாம்.. ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது. டீ கப்ல டீ இருக்கும்.. ஆனா வேர்ல்டு கப்ல வேர்ல்டு இருக்காது. இவ்ளோதான் உலகம்..புரிஞ்சுக்கோங்கோ(என்னா நாகா சார் டயலாக்கை கரெக்டா சொல்லிட்டேனா ? )

அந்த சமயம் தீட்சதரின் சகோதரி...:அண்ணா விஷம் கொடுங்கண்ணா...

தீட்சதர்: இவ பண்ணிண பாயாசம் பத்து நாள் ஆனா பாய்சன் ஆயிடும்... ஆனா பாய்சன் பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆக முடியாது.

இதைக் கேட்டதும் தில்லை ராஜன் ஏதோ புரிந்தது போல விரல்களை வைத்து 'கணக்கு' போடுகிறார்.

தில்லைராஜன்:நீங்க சொல்லறத்து கரெக்ட்டுதான்..அது..வந்து ..இப்போ எஞ்சினியர் காலேஜ்ல படிச்சிட்டு எஞ்சினியர் ஆகலாம். பிரசிடென்சி காலேஜ்ல படிச்சிட்டு பிரசிடெண்ட் ஆகமுடியுமா?

பத்மராஜன்(அழுது கொண்டே): உன்க்கு நான் இருக்கேன்மா..நீ எதுக்கும் கவலைப்படாதே..இந்த அண்ணன் காலம் முழுக்க வச்சு காப்பாத்துவேன்..

நாகா:கட்.. கட்..டேய்..வேற சீரியலில் பேசற டயலாக்கை இங்க பேசாதே..(மனதிற்குள்) இதான்பா பல சீரியல்கள நடிகறவன் போட்டா வர தொல்லை...

Forum Members(After this serial)
Member 1
பாயசம்,பாய்சன்..ஏதோ மேட்டர் இருக்க்கு..நீங்க நல்லா பார்த்தீங்கனா ஒன்னு புரியும்..தில்லை விரல்களை ஆட்டி ஒரு சைகை பண்ணுவார்..அதுல ஒரு க்ளு இருக்கு...

நாகா(வடிவேலு டைலில்):ஆகா..கெளம்பிட்டாங்கய்யா...கெளம்பிட்டாங்கய்யா

Member 2தேள் கொட்டும் அப்படினு தீட்சதர் சொன்னார்..நான் என்ன நினக்கிறேனா..எல்லா கொலையையும் பண்ணினது தேள் தான் அதைத்தான் தீட்சதர் சொல்லாமல் சொல்லறார்.

Member 3கண்டிப்பாக தேள் இருக்க முடியாது ஏன்னா நாயைப் பத்தியும் சொல்லியிருகிறாரே..

நாகா(வடிவேலு ஸ்டைலில்):இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளம் ஆக்கிட்டாங்கய்யா...
 
மீண்டும் சுரேஷ்: எனக்கு மிகவும் பிடித்திருந்த கிண்டல்!
 

7 பின்னூட்டங்கள்:

Muthu said...

பொட்டி வரவில்லை என்ற எங்கள் சோகத்தை பகிர்ந்து கொள்ளும் அதே நேரத்தில் இந்த சிதம்பர ரகசிய காமெடி நன்றாக உள்ளது என்று தெரிவித்துகொள்கிறோம்

Geetha Sambasivam said...

படம் வேறே எடுக்க ஆரம்பிச்சுட்டீங்களா? எலக் ஷன் டைம் இல்லையா? கட்சி கலெக் ஷன் பிச்சுக்குதுனு சொல்லுங்க.(just for kidding)

Geetha Sambasivam said...

ஆனாலும் அந்தச் சிதம்பர ரகசியம் விமரிசனம் போதுங்க.அது எப்படி உங்க சினேகிதங்களும் உங்களைப் போலவே சிந்திக்கறாங்க.

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி (மாயா சார்பாக) முத்து. கலக்கி இருக்கார் மனுஷன்!

கீதா, எலக் ஷன், கலெக்ஷன் னு கலக்கறதப்பாத்தா நம்ம திரைப்படங்களுக்குப் பாடலாசிரியர் தயார் போலத் தெரியுது.. என்ன தமிழ்லே எழுதறீங்க அதுதான் டிஸ் அட்வாண்டேஜ்!

மாயா சார்பாகவும் நன்றி.

Geetha Sambasivam said...

நான் தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சேவை செய்ய வந்து 10 திங்கள் ஆகியும் உங்களுக்குத் தெரியாமல் போனது என் துரதிர்ஷ்டம்தான். அதான் இப்போ எதுகை, மோனையோடு எழுதிக் காட்டினேன். மத்தபடி பாட்டு எல்லாம் நமக்கு வராதுங்க.

Geetha Sambasivam said...

மன்னிக்கவும். 10 தினங்கள் என்பது "ன" விட்டுப் போய்த் திங்கள் என்று வந்து விட்டது. அப்புறம் நம்ம சிங். ஜெயகுமார் கண்ணிலே விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு வருவார். அவர்கிட்ட இருந்து தப்பிக்கணும் இல்ல.

லதா said...

Geetha Sambasivam said
// மன்னிக்கவும். 10 தினங்கள் என்பது "ன" விட்டுப் போய்த் திங்கள் என்று வந்து விட்டது. //
10 திங்கள் என்றால் 10 மாதங்கள் என்று கூட நினைத்துக் கொள்ளலாம்தானே?
:-)))

 

blogger templates | Make Money Online