Apr 21, 2006

பினாத்தல் கவலை - காரணம் நீங்கள்! (28 Apr 06)

தோழர்களே..

கொள்கை ட்ரேக்கர் மென்பொருள் தோல்வியா அடைந்துவிட்டது?

எனக்குப் புரியவில்லை. இது மிகவும் நன்றாக வந்துள்ளது என்றுதான் நான் நினைத்தேன், நினைக்கிறேன்.

அதிகமான பார்வையாளர்களைப்பெற்ற போதும், நட்சத்திரக்குத்தும் இல்லை, பின்னூட்டங்களும் இல்லை.

உடனே பின்னூட்டத்துக்கு அலைகிறான் பினாத்தல் என்று நினைக்காதீர்கள் - எனக்கு விமர்சனம், Feedback தேவை - நல்லதாகவோ, கெட்டதாகவோ.

நல்லதோ, கெட்டதோ, வலைப்பதிவுக்காக மட்டுமே ஏறத்தாழ 10 மணிநேரங்கள் செலவு செய்து தயாரித்த பதிவு, ஏன் அங்கீகாரம் பெறவில்லை என்று தெரியாமல் கூட போவது மிகவும் மனதுக்குக் கஷ்டமாக இருப்பதை உணர்வீர்கள் என நினைக்கிறேன்.

இது வெர்ஷன்1:




இது வெர்ஷன்2:




உடனடியாக பதில் போடவும்! பினாத்தல் நிச்சயமாகக் கவலையில் இருக்கிறான்.

15 பின்னூட்டங்கள்:

நன்மனம் said...

+ good work.

sridhar

இலவசக்கொத்தனார் said...

சொல்லறது எல்லாம் பலிக்குது. அதனால ஒரு பணிக்கருக்கு குடுக்க வேண்டய மரியாதையை கொடுத்து ஒதுங்கிப் போறாங்களோ என்னவோ.

எதுக்கும் உங்களுக்கு எல்லாம் நல்லாசிதான்னு வேணா சொல்லிப்பாருங்களேன்.

அப்படியும் இல்லைன்னா சொல்லுங்க. கட்சி பலத்தை காட்டறோம்.

மாயவரத்தான் said...

அப்பாடா... இப்ப தான் நிம்மதியா இருக்கு!

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம், கட்சி பலம் எல்லாம் காட்ட வேணாம்.

படிக்கறவங்க எல்லாரும் ஒரு கருத்தை சொல்லிட்டுப்போனாலே போதும்! கட்சி பலம்னா வேற கட்சி ஆளுங்க உள்ளே கூட வரமாட்டாங்களே:-(

மாயவரத்தான் - என்ன நிம்மதி அது? இப்படியா மத்தவங்க கஷ்டத்துலே குளிர் காயறது?

Muthu said...

:-))

Sivabalan said...

Sir,
I cannot able to read the font.

Can you help me!!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி முத்து.

சிவபாலன், இங்கே சென்று இந்தத் தமிழ் எழுத்துரு (டி எஸ் சி யு பரனார்)வைத் தரவிறக்கி, உங்கள் கணினியில் அமைத்துக்கொண்டால் இதைப் படிக்கவும் பார்க்கவும் முடியும்.

Sivabalan said...

Sir,

Really a good work!! (That too Amidst of busy work)

Interesting!!

I like Free Rice & Colour TV - work .

Prabu Raja said...

I done installing the Paranar font in my WinXP. but still i am not able to read the dropdown menu.

I think that sould be the reason for Mr.Penathal's penaathals about this blog.

தருமி said...

முதல்தடவை வந்தப்போ பின்னூட்டம் இடவோ, + குத்தவோ முடியாது போயிற்று. இப்போ இரண்டும் முடிச்சாச்சு.

நல்ல தொழில் திறமை + நகையுணர்வு.

ilavanji said...

சுரேஷ்,

ஒரு நகைச்சுவைப்பதிவாக எழுத்தில் வந்திருக்க வேண்டிய ஒன்றுக்கு நீங்கள் மிகவும் மெனக்கெட்டிருப்பதாகத்தான் எனக்கு தோன்றியது!

உண்மையில் இது ஒரு நல்ல நகைச்சுவை பதிவு! அங்க இங்க க்ளிக்கி மெனுவை மாத்தின்னு கொஞ்சம் பேஜாரானதுல கருத்து காணாம போயிருச்சு!

கருத்து கேட்டதால சொன்னேன்! கோச்சுக்காதீக!! :)

முத்துகுமரன் said...

+:-)))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சிவபாலன், பிரபு ராஜா, தருமி, முத்துக்குமரன்.

இளவஞ்சி, நீங்கள் சொல்றது உண்மையா இருக்கலாம். ஆனால், இந்த கான்செப்டுக்கு இந்த presentation தான் சரியா வரும்னு நெனைக்கிறேன்.

கோபமா? இப்பத்தான் கோபம் வருது! அப்படியா வளந்துருக்கோம் நாம?

Machi said...

மக்கள் நல மேம்பாடு அருமை. :-))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி குறும்பன்!

 

blogger templates | Make Money Online