Apr 12, 2006

மீள்பதிவு - Retrieved Flash

பொழுது போகாமல் பழைய பதிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்ததில் பெரிய அதிர்ச்சி!

என்னுடைய ஃப்ளாஷ் பதிவுகள் பல இப்போது வேலை செய்யவில்லை என்பதைக்கண்டு நொந்தேன். காரணம், நான் பயன்படுத்தும் வழங்கிசேவை கொஞ்ச நாள் கழித்து எல்லாவற்றையும் விழுங்கிவிடுவதால் வந்த வினை!

ஃப்ளாஷ் பதிவுகள் என் செல்லக்குழந்தைகள் போல - அவற்றுக்கு நான் செலவழிக்கும் மூளை நேரமும் (இப்படித்தான் பொய் சொல்வேன், கண்டுக்காதீங்க) அதிகம், கணினி நேரமும் அதிகம். அவை இப்படி காணாமல் போவது பெரிய வருத்தத்தை அளித்தது.

எனவே, பழைய பதிவுகளின் மூல SWF கோப்புக்களை தேடிக்கண்டுபிடித்து மீள்பதிகிறேன்.

இது, என் முதல் ஃப்ளாஷ் பதிவு.


பாட்டுப்பாடவா, மெட்டுப்போடவா..

அருமையான பாட்டு.. என் ஐயப்பாட்டை தீர்த்து வைத்து, அற்புதமான கருத்துக்களையும், எழுதிய கவிஞரின் ஆழ்ந்த மொழி அறிவையும் வெளிப்படுத்திய பாடல்.

ஒவ்வொரு வரியிலும் பல அடுக்குகளாக அர்த்தங்கள் விரிந்து கிடக்கிறது.

ரொம்ப வளர்த்துவானேன் - இதுதான் அந்தப் பாடல் -
கண்ணும் கண்ணும் நோக்கியா -
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்புசினோ காப்பியா -
ஸோஃபியா..

கண்ணில் உள்ள அதே தொழில்நுட்பத்தில் தயாரானதுதான் கேமரா மொபைலில் உள்ள கேமரா என்பதிலிருந்து, மாஃபியாவுக்கும் காப்புசினோவுக்கும் உள்ள தொடர்பையும், வித்தியாசங்களையும் பல காலம் படிமக்கவிதை படித்து இருண்மை நீங்கிய வாசகர்களால் மட்டுமே உணர முடியும்!

இந்தப் பாடலில் எனக்கு ஒரே ஒரு குறைதான் - பாடல் அமைந்த மெட்டு.

மன்னரும், ஞானியும், தென்றலும் புயலும் வளர்த்த தமிழ் திரை இசையில் ஒரு பாட்டுக்கு ஒரே மெட்டுத்தானா உண்டு?

புறப்பட்டேன், சந்தித்தேன் அனைத்து இசைஞர்களையும், மெட்டு வாங்கினேன் இந்த காலத்தால் அழியாக் கவிதைக்கு.

கீழே உள்ள ஃபிளாஷில், எந்த இசை அமைப்பாளர் வேன்டுமோ அவர் மேல் எலிக்குட்டியை அழுத்தி (அட - க்ளிக்குப்பா) இசை வெள்ளத்தில் அமிழ்க!

இதிலும் ஒரு சிறு பிரச்சினை - தம்பி பாலு மற்றும் ஹரியும் அவசர காரியமாக வெளி ஊர் சென்றுவிட்டதால், அவர்கள் குருவாகிய நானே பாடிவிட்டேன்!




1 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

?????? test???????

 

blogger templates | Make Money Online