Apr 14, 2006

பினாத்தல் வழங்கும் திரைப்படங்கள் (14 apr 06)

புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்.

தேர்தல் வந்ததால் யாருக்கு பயனோ யாருக்கு நஷ்டமோ தெரியவில்லை, பினாத்தலின் பாடு யோகமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

நமது தலைவர்களின் பேச்சுக்களும் அறிக்கைகளும் "மாத்த வேணாம், அப்படியே சிரிச்சுக்கலாம்" வகை நகைச்சுவைதான் என்றாலும், நக்கல் நையாண்டிக்கு தேர்தல்காலக் காட்சிகள் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து, தூக்கத்தைத் துரத்துகின்றன.

அடுத்த கட்டமாக, பினாத்தலார் முழுநீளத் திரைப்படங்கள் தயாரிப்பதில் இறங்கப்போகிறார்! முதல் கட்டமாக, கதையின் ஒன் லைன் (அப்படின்னா என்னாங்கோ?), சில வசனங்கள், முக்கியமாக, முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப்போகும் மூத்த தலைவர்களையும் தேர்ந்தெடுத்து விட்டார்.

தயாரிப்பாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் - வெற்றிக்கு நானும், என் சக வலைப்பதிவாளர்களும் உத்திரவாதம். (தோழர்களே, உங்களை நம்பிக் கொடுத்த வாக்கு - தவற விட்டுவிடாதீர்கள்)

நான்கைந்து படங்களுக்கான யோசனை தயாராக இருந்தாலும், கோப்பின் அளவு அதிகமாகப் போவதால், ஒவ்வோர் படமும் ஒவ்வோர் பதிவாக இடப்போகிறேன். இன்று:

DPA Talkies பெருமையுடன் வழங்கும் ஆய்த எழுத்து..

பார்த்து ரசியுங்கள்.


4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

cant see any ... thErthal vaakkurithi pOla ithuvum buswanamaa ??

Anonymous said...

paththuttEn paaththuttEn
athenna iraamanadimaiya vida karunaik kizanggu... ooops karunaa nidhi ilaimaiya irukkaaru ?

பினாத்தல் சுரேஷ் said...

பாக்காத அனானிமஸ்ஸுக்கும் பாத்துட்ட அனானிமஸ்ஸுக்கும் நன்றி. (ரெண்டும் ஒண்ணேதானா?) பாத்த அனானிமஸ் ரொம்ப கஷ்டப்ப்ட்டு வியூ சோர்ஸ் பாத்துதான் போயிருக்கணும். அவ்வளோ கஷ்டப்பட்டீங்களே, நல்லா இருந்துது, கேவலமா இருந்துதுன்னு ஒரு வார்த்தை?

Anonymous said...

ஆமா.. ரெண்டு அனானியும் ஒரே அனானி தான் ஆனா வேற வேற.. ( பின்ன அன்னியன் ப்டம் எடுக்க போரிங்கோ கொஞ்சம் அந்த எப்க்டு வரத்தாவல ?? )


பருவாயில்ல.. நல்லா தான் பண்றீங்கோ.. பொயச்சீப்பிங்கோ.. அட்து அம்மாவா ?

 

blogger templates | Make Money Online