விளையாட்டா பாடம் கத்துக்கறது எப்பவுமே சுலபம்ன்றதால இந்தப் பாடத்துக்காகவே ஒரு ப்ளாஷ் கேம் தயாரிச்சிருக்கேன். Practice makes perfect னு சொல்வாங்க இல்லையா, அதனால ஒரு முறை தோத்தாலும் பலமுறை முயற்சித்தால் வெற்றி நிச்சயம்!
சைட் அடிக்கறது சரியா தப்பான்ற விவாதத்துக்குள்ள நான் போக விரும்பலை. நான் தப்புன்னு சொன்னா நிறுத்திரப்போறீங்களா என்ன? இது ஒரு தவிர்க்க முடியாத விஷயம் அப்படின்றத யாரும் மறுக்க மாட்டீங்க! டாக்டர்கள் என்ன சொல்றாங்கன்றத இங்க போய் பாத்துக்கங்க! தங்கமணிங்க ஒத்துக்கவா போறாங்க? ஹூம்!
சரி தங்கமணியோட வெளிய போறீங்க, சைட் அடிச்சு மாட்டிக்கறீங்க. இந்த சிச்சுவேஷன்லே இருந்து வெற்றிகரமாக (அடிவாங்காம -ன்றதத்தான் அப்படிச் சொல்றேன்) வெளியே வருவது எப்படின்றதத் தான் இந்த பாடத்துல பாக்கப் போறோம்.
வழக்கமான டிஸ்கி: இது சிலருக்கு வொர்க் அவுட் ஆவலாம், ஆகாமலும் போகலாம், அவரவருக்கு வாய்த்தது அவரவருக்கு!
இந்த சிச்சுவேஷனையும் மூணு விதமா டீல் பண்ணலாம்.
1. "என்ன லுக்கு?"
"என்ன, அதெல்லாம் ஒண்ணும் இல்லையே"
இத்தோடு மேட்டர் முடிந்துவிட்டது போலத் தோன்றும்.. ஆனால் டேக் இட் ஈஸி பாலிஸி தங்கமணிகளுக்குத் தெரியாத பாலிஸி. அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாலிஸி கிவ் அண்ட் டேக் பாலிஸி (போட்டு வாங்கறதுதான்)
எதிர்பாராத நேரத்தில் உங்களை இப்படி ஒரு கேள்வி தாக்கும் -
"அந்தப் பொண்ணு போட்டிருந்த மாதிரி ஒரு யெல்லோ ட்ரெஸ் எனக்கு வாங்கித் தரீங்களா?"
எதோ ஞாபகத்தில் "உங்கிட்டதான் அதே ட்ரெஸ் ஏற்கனவே இருக்கே" என்றோ, "அவ போட்டிருந்தது யெல்லோ இல்லையே ப்ளூ வாச்சே" என்று சொல்லியும் விடுவீர்கள்! பொய் சொல்வதற்கு நிறைய ஞாபகசக்தி வேண்டும். இல்லையென்றால் மாட்டுவது நிச்சயம். . அடி வாங்குவது சர்வ நிச்சயம்..
2. "என்ன லுக்கு?"
"ஆமா! லுக்குதான் விட்டேன்.. என்னான்ற இப்ப? நான் எதையெல்லாம் மிஸ் பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சுக்க ஒரு லுக்கு விடக்கூட சுதந்திரம் கிடையாதா?"
இப்படிச் சொல்லும் ஆளின் கதி என்ன என்பதை அருகாமையில் உள்ள மருத்துவமனையின் ட்யூட்டி டாக்டரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். "ICU லே சேத்தாங்களே அந்த ஆளு" என்று சொன்னால் ரிசப்ஷனில் வழி காட்டுவார்கள்.
3. இவர்தான் நம்ம ஆளு. வைபாலஜியில டாக்டரேட் வாங்கினவரு.
"என்ன லுக்கு?"
"என்ன?"
"வச்ச கண் வாங்காம சைட் அடிச்சுகிட்டிருக்கீங்களே.. "
"சைட்டா? பாத்தேன் உண்மைதான்.. எதுக்காகப் பாத்தேன்ன்னு தெரியாம பேசாதே"
"எதுக்கு?"
1. "அவ போட்டிருந்தாளே ஒரு பின்க் ட்ரெஸ்.. அந்த அட்டு பிகருக்கே அது அவ்ளோ நல்லா இருக்கே, உனக்குப் போட்டா எப்படி இருக்கும்னு யோசிச்சேன்.. நய்ஹாலே கிடைக்கும் இல்ல? உடனே போய் வாங்கிகிட்டு வந்திடலாமா?"
இதை செலவுன்னு நினைக்காதீங்க.. அடிவாங்காம இருக்கறதுக்குக் கொடுக்கற Protection Money!
2. "இந்த மாதிரி ரெண்டு பேரைப் பாத்தாதானே நான் எவ்வளவு பாக்கியசாலின்னு எனக்கே தெரியுது. .இதையெல்லாம் தடுக்காதே!"
3. "அவளைப் பாத்தா உன்னோட கஸின் மீனா மாதிரியே இல்லை?கல்யாணத்துல இண்ட்ரொட்யூஸ் செஞ்சியே? Remarkable Resemblance! உனக்கு அப்படி தோணலே?"
நேரடியாக இல்லைன்னு சொல்றதைவிட, ஆமாம்னு அடிவாங்கறதைவிட, இந்த மாதிரி சமாளிபிகேஷன் வொர்க் அவுட் ஆக வாய்ப்பு அதிகம்.
சரி.. கீழே இருக்கற கேமை விளையாடிப் பாருங்க! தங்கமணி பாக்காத நேரத்துல ரங்கமணி மேலே க்ளிக்கி சைட் அடிக்க வைங்க! பத்து பாயிண்ட் எடுத்தா வர ஸ்க்ரீனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனக்கு மெயில் அனுப்புங்க, ஒத்துக்கறேன் நீங்க வீரர்னு!
Nov 25, 2007
5. விளையாட்டுப் பாடம் - சைட் அடிப்பது எப்படி? Wifeology Exclusive Flash
இப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்
வகை அனுபவம், இல்லறத்தியல், நக்கல், ப்ளாஷ்
Subscribe to:
Post Comments (Atom)
39 பின்னூட்டங்கள்:
பென்னாத்தலாரே,நாங்கஎன்ன அவ்ளோ முட்டாளா?தங்கமணியைக்கல்யாணம் பண்ணிகொண்ட முட்டாள் செயலக்கப்புறம் முழிச்சுக்கிறோம் இல்ல..அப்பவாவது....
அதனாதான் நான் கூப்பிட்டே சொல்லிடுவேன்..ஏய்ய் அதோபாரு அழகான பொண்ணு ன்னுட்டு..ஜொள்ளாக்ஸ்...பார்கிரதுனா பார்க்கட்டுமே!!!!ஆனா அவுரு உடனே 'உனக்கு வக்ரபுத்தி ' அப்ப்பீடின்னு வழக்கமாக எல்லாத்திலயௌம் உங்க இனம் சொல்ற பொய்ய வுடுவாரு.
அய்யோ அது ரங்கமணிகளின்னு இருக்கணும்...தங்கமணிகளைக் கல்யாணம்னு எழுதிட்டேன். போச்சு.. வெறும் வாய்க்கு அவல் தான்.
அட போப்பா ஸ்கோர் 2க்கு மேல தாண்ட மாட்டிக்குது!!
அப்புறம் அந்த கூகுள் பேஜ் லிங்க் ஜூப்பர்.
thaangalai........
-5
innum kalyanam aagala...
he he
-3
i played. easily got 10. I think it is very much easier and predictable. the lady turn her head in the same manner.
ரைட் நோட் பண்ணியாச்சு...
இது தங்கமணி கூட இருந்தா மட்டும் இல்லை. இப்போவே தேவைப்படுது..
\\ விளையாட்டுப் பாடம் - சைட் அடிப்பது எப்படி? Wifeology Exclusive Flash"\\
இப்ப தான் கிளாசே ஜோதி மயமாக இருக்கு...;))
ஆனா ஸ்கோர் 3 தான்..;(
பெனாத்தலாரே ப்ளாஷை மாத்து....
(என்னய்யா எம்புட்டு க்ளிக் பண்ணினாலும் பாயிண்டே வர மாட்டேங்குது. ஒரு வேளை அதான் பாயிண்டா?)
சீதா,
பெண்ணுரிமைன்றதை ஆண்கள் கொடுக்கணுமா? பெண்களா எடுத்துக்கணுமா?
அதே மாதிரி ஜொள்ளுரிமை நாங்களா எடுத்துக்க வேண்டியது. நீங்க என்ன அவர் யாரைப்பாக்கணும்னு அடக்குமுறை காட்டறது?
தவறிச் சொன்னாலும் (தங்க-ரங்க கன்பூசன்!) தப்பாச் சொல்லலைங்கறதால மன்னிச்சுடறேன் :-)
வாங்க மங்களூர் சிவா.. கொஞ்சம் பொறுமையா இருந்தா கிரீடம் வாங்கலாம். லின்க் சூப்பரா? இருக்காதா பின்னே?
என்ன தாங்கலை ஜெசிலா?
இனியவன், (எனியவனோ?) பாத்தீங்களா, கொஞ்சம் முயற்சியிலேயே -5 இலிருந்து -3க்கு வந்துடுச்சு.. முயற்சி திருவினை ஆக்கும்.
முரளி கண்ணன், நெறைய எக்ஸ்பீரியன்ஸ் போலிருக்கு ;)
நாகை சிவா, நோட் பண்ணது ஏன்னு நாங்க நோட் பண்ணிகிட்டோமில்ல ;)
கோபிநாத், களை கட்டினா போதுமா? அப்பப்ப வந்து பின்னூட்ட உரம் போட வேணாமா?
மெயில் மூலம் ஸ்கிரீன்ஷாட்டை மட்டும் அனுப்பிய கானல்மனிதனுக்கும் நன்றி.
கொத்தனார், நிறைய பேரு முடிச்சிருக்காங்க பாருங்க.. முயற்சி பண்ணுங்க.. லாப்டாப்பை தங்கமணி பாக்காத இடமா தூக்கிட்டுப் போயி ட்ரை பண்ணுங்க, வெற்றி நிச்சயம்.
சிரிப்பை நிறுத்த முடியலை.
எனக்கு சீரோ க்கு மேலே போகலை.
வாங்க வடுவூர் குமார்..
பொறுமையா முயற்சி பண்ணுங்க, வெற்றி நிச்சயம் :-)
கிரீடம் வாங்கியாச்சு. ஆனாலும் மனசுக்குள்ள ஒரு பயம் இருக்கத்தான் செய்யுது..
பெனாத்தலு, என்னய்யா, நான் க்ளிக் பண்ணினா மட்டும் ஒத்துக்க மாட்டேங்குது உம்ம ப்ளாஷு.... ஆனாலும் விடக்கொண்டனா க்ளிக்கி கிரீடத்தை வாங்கிட்டோமில்ல!!!
//இதை செலவுன்னு நினைக்காதீங்க.. அடிவாங்காம இருக்கறதுக்குக் கொடுக்கற Protection Money!//
ஸோ போன பதிவுகள்ல பதுக்கிருந்த மிச்ச சம்பளமும் இதுல காலியா... ஹூம்
//கல்யாணத்துல இண்ட்ரொட்யூஸ் செஞ்சியே? //
அதுல எப்படி கஸின் மீனா மட்டும் இப்படி இண்டெலிபிளா உங்க மெமரில பிக்ஸ் ஆகியிருக்கானு கேள்வி வராதா?
க்ரீடமெல்லாம் ரொம்ப ஈஸியா கிடைக்குது. difficulty அதிகப்படுத்துங்க.
நிஜலைப்ல இவ்ளோ ஈஸியா இருந்துச்சுன்னா, அந்த டைம்ல வந்து மீண்டும் பின்னூட்டம் போடறேன். :))
எண்ணி 12 க்ளிக்ல க்ரீடம் வாங்கிட்டேன்! விளையாட்டு நல்லாத்தான் இருக்கு, ஆனா அப்பிடி ரிஸ்க்கான ஒரு விளையாட்டு தேவைதானா? கல்யாணம் பண்ணிப்பானேன், பேப்பர் ஒட்டை வழியா சைட் அடிப்பானேன்! ஏற்கனவே வீட்ல செம ப்ரஷர் (சென்டியா போன்ல ஒரே கம்பல்ஷன்), நீங்க வேற! அதுக்கு எதாவது ப்ரைமர் இருந்தா எழுதுங்களேன்.
வாங்க இளா, பயமற்று வாழ வாழ்த்துக்கள் :-)
கொத்ஸு.. ஆக உம்மையும் எக்ஸ்பர்ட் ஆக்கியே தீத்துட்டோமில்ல!
ராம்ஸ், மிச்ச சம்பளம் காலியாகாம இருக்கணும்னா மாட்டிக்காம சைட் அடிக்கணும்.
//கஸின் மீனா மட்டும் இப்படி இண்டெலிபிளா// எல்லா டைமும் ஒருத்தி பேரே சொல்லக்கூடாது.. மாத்தி மாத்தி சொல்லணும்.
டிபிகல்டிதானே, அதிகப்படுத்திட்டா போச்சு.
கோவைப்பழம்,
முள்ளு இருக்குதேன்னு பலாப்பழத்தை ஒதுக்கலாமா? கல்யாணம் பண்ணிக்குங்க! (நா ம எ மு?)
இதுவும் ஒரு விளையாட்டா. ராமரின் நேர் வாரிசான (ஏகபத்தினி விரதன்) நான் இந்த விளையாட்டை விளையாடுவதா.
:)))
கலிகாலம் நடக்குது. "எனக்கு ஹிருத்திக் ரோஷன் பிடிக்கும். என்ன ஒரு ஆர்ம்ஸ்." "அந்த பையன் சரியான க்யூட் இல்லை."
"ஹி ஈஸ் சோ சார்மி்ங்" எல்லாம் கேட்டுக்க வேண்டியிருக்கு.
இதெல்லாம் நீயெல்லாம் ஒரு அழகா. போயும் போயும் உன்னைக் கட்டிக்கிட்டனேன்னு சொல்லாம சொல்லுற வழி. நம்ம ஆளும் நிசந்தானோ. நாம அழகு இல்லியோன்ற தாழ்வு மனப்பான்மையோட காலமெல்லாம் அடிமையா இருப்பான்.
ஒரு கல்யாணமான ஆண் இந்த மாதிரி "ஷீ ஈஸ் க்யூட்" சொல்ல முடியுமா.
நம்ம ஆண் இனத்தோட சுதந்திரம் அவ்வளவு இலட்சணத்துல இருக்கு :)))
சுரேஷ் கலக்கிடிங்க, அதுவும் அந்த google pages லிங்க் சூப்பர். ஆனா அதை ஒரு ஆர்வ கோலார்ல என் girl friend தங்கமணிக்கு forward பண்ணிட்டேன். வந்த reply la லேப்டாப் சிகப்பு color ku மாறிடிச்சு. என்ன மாதிரி ஆ . கோ boy friend ரங்கமணிக்கு ஒரு பதிவு போடவும்.
அந்த விளையாட்டு சூப்பர், கிரீடம் வாங்கியாச்சு ஆனா practical a அத implement பண்ணும் போது பயமா இருக்கு.
பெனாத்தலாரே நானும் முயற்ச்சி பண்ணிப்பார்த்துட்டேன்.இதுவரிக்கும் அந்த அம்மா அடிக்கிற மாதிரிதான் வருது..ஒரு பத்து அடியாவது வாங்கி இருப்பார் மனுஷன்
தான் கெட்டதும் இல்லாம அறியா பிள்ளைகளையும் கெடுக்கிறாரே, இந்தாளு. ஹனிமூனுக்கு போய் இந்த சைட்டு பாடம் நினைவுக்கு
வந்து, விழுப்புண் வாங்க போகுதுங்க. நெனச்சாலே பாவமா இருக்கு,
சீதா! எங்கணுக்கும் அப்படிதான் தெரியுது :-)
usha
அரை பிளேடு,
//ஒரு கல்யாணமான ஆண் இந்த மாதிரி "ஷீ ஈஸ் க்யூட்" சொல்ல முடியுமா.
நம்ம ஆண் இனத்தோட சுதந்திரம் அவ்வளவு இலட்சணத்துல இருக்கு //
ஆமாம்.. ஆனா ஸ்மைலிய மாத்திப் போட்டுட்டீங்க :((((((((( இப்படியில்ல இருக்கணும்..
//ராமரின் நேர் வாரிசான (ஏகபத்தினி விரதன்)// நல்லவேளை ப்ராக்கெட்லே போட்டுட்டீங்க :) இல்லாட்டி குடிகாரனோன்னு நெனச்சிருப்போம் :)
நன்றி அருண். ஆர்வக்கோளாறுன்றது எல்லா நிலைகளிலும் தவிர்க்கப் படவேண்டிய ஒன்று. அதுவும் கணவனான பிறகு கூடவே கூடாது!
சீதா,
நீங்க முயற்சி பண்றதே அதுக்குத்தான்னு எங்களுக்குத் தெரியாதா?
உஷா,
நல்லாப் படிங்க.. அடிவாங்கக்கூடாதுன்னுதான் இந்தப்பாடங்களே.. எங்க கூட்டத்தைக் கலைக்க முயற்சி பண்றீங்களா? இது தானாச் சேந்த கூட்டமில்ல.. தங்கமணிங்களால வீணாச்சேந்த கூட்டம்!!
பொண்டாட்டி பார்க்கதபோது ஜொள்ளூ விடறது எப்படின்னு பிராக்டிகலா வேற காட்டணுமா? ஜொள்ளு மன்னர்களுக்கே அதைப்பத்தி பாடமா? அதத்தான் பிரஃபஷனலா செஞ்சுகிட்டு இருக்காங்களே?
//தான் கெட்டதும் இல்லாம அறியா பிள்ளைகளையும் கெடுக்கிறாரே, இந்தாளு.//
ஆஹா!! கெட்டது யார்? தான் பெற்ற துன்பம் இவ்வையகம் பெறாதிருக்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பாடம் எடுக்கும் பினாத்தலாரா கெட்டவர்? தனக்கு மற்றவர் கற்றுக் கொடுக்கத் துணியாமல் தான் கற்றுக் கொண்ட அனுபவப் பாடத்தை அடுத்தவருக்கு சிறிதும் தயங்காமல் கற்றுத் தரத்துணிந்த அவரா கெட்டவர்? இப்படி அபாண்டமா குற்றம் சுமத்த முனையும் பொழுதே ஆஹா நம்ம பருப்பு இனியும் வேகாது போல இருக்கே. அதுக்கு வழி செய்யும் இந்த ஆளை சும்மா விடக் கூடாதே என்ற பயம்தான் தெரிகிறது.
//ஹனிமூனுக்கு போய் இந்த சைட்டு பாடம் நினைவுக்கு
வந்து, விழுப்புண் வாங்க போகுதுங்க. நெனச்சாலே பாவமா இருக்கு,//
ஒரு பக்கம் இவங்க ஆளுங்க சொல்லறாங்க அவங்களே கூப்பிட்டு காமிப்பாங்களாம். அடுத்து இவங்க வந்து சொல்லறாங்க பார்த்தா விழுப்புண் வருமாம். எங்கயாவது கன்ஸிஸ்டன்ஸி இருக்கா? அதாவது நாமா பார்த்தாலும் தப்பு, இவங்களா காமிச்சாலும் தப்பு. ஆனா எதிர்பார்ப்பு என்ன? இவங்க காமிச்சாலும் நாம பார்க்காம உனக்கு வக்கிர புத்தின்னு வசனம் பேசணுமாம். என்னா ஆசைடா இவங்களுக்கு.
எல்லாம் மனசுல இருக்கிறதுதானே வெளிய வருது. //தங்கமணியைக்கல்யாணம் பண்ணிகொண்ட முட்டாள் செயலக்கப்புறம்// - இதையும் சேர்த்து...
ஃப்ளாஷ்ல கூட தங்கமணி பாக்காத போது சைட் அடிக்க முடியலை...முட்டி மோதிப் பாத்ததுல நம்ம ஸ்கோர் -1.
-1ன்னா - ஒரு புத்தூர் கட்டு உறுதிங்களா?
:)
ஹிஹிஹி, 3 வரை வந்தேன், அப்புறம் மாட்டி விட்டுட்டீங்களே? மைனஸில் போக ஆரம்பிச்சுடுச்சு, இது என்ன சதிவேலைனு கேக்கறேன்? உங்க தங்கமணிக்கு ஒரு மெயில் இதோ தட்டறேன்!!!!! :)))))))
முடியலங்க.. 1 பாயிண்ட் தான் முடியுது..
புதுகைத் தென்றல், இருக்கற மன்னர்கள் போதுமா, எல்லாரும் இந்நாட்டு மன்னர் இல்லையா?
கொத்தனார்.. புல்லரிக்குதய்யா உம்ம கடமை உணர்வைப்பார்த்து.. அருமையான பதில். எதிர்க்கட்சிய ஆப் பண்ணிட்டீங்களே..
கைப்புள்ள, -1 புத்தூர் கட்டு, -2 ஐசியூ அனுமதி, -3 உறவினருக்கு தந்தின்னு பலன்கள் எழுதாம விட்டுட்டேன்.. மன்னிக்கவும்.
கீதா, மெயில் ஒண்ணும்வரலியாம்.. சொல்லச் சொன்னாங்க :-)
வாங்க ரூபஸ்.. கொஞ்சம் டைம் விட்டு, மூவ்மெண்டை பாத்து அடிச்சா முடியும் :-)
ஃப்ளாஷ் ரொம்ப ஈஸியா இருக்கு :))
எதிர்பாரா திருப்பம் தரவும்
pinnitoam la 10 score eduthu . life la oru prakasham theriyuthu nammalala mudiyum nu
2 நிமிஷம் 17 க்ளிக்ல 10 பாய்ண்ட் எடுத்தோம்ல... ஹா ஹா எங்களுக்கெல்லாம் உசுருக்கு ஒரு ஆபத்துன கடல் மேலயே ஓடுவோம் நாங்க... யாருகிட்ட... நல்ல வக்கிறாய்ங்கய்யா டெஸ்டு....
Post a Comment