Dec 3, 2007

6. How to say NO! (Wifeology)

இன்னிக்கு நாம பாக்கப்போறது, மனைவி கேக்கறதை மறுக்கறது எப்படின்றது..
இல்லைன்னு சொல்றது சுலபமான வேலைன்னு சிலரும் முடியவே முடியாத மேட்டர்னு சிலரும் நினைச்சிருப்பாங்க.. அவங்கவங்க அனுபவம் அப்படி. விஞ்ஞானத்தை உபயோகப்படுத்தாம அஞ்ஞானமா அலையறவங்க மறுத்தா மரண அடிதான்.
தங்கமணிங்களை இன்னொசெண்ட்னு மட்டும் நினைச்சுறாதீங்க.. உங்க ஆபீஸ்லே எப்ப போனஸ், எப்ப எதிர்பாராத (அதாவது நீங்க எதிர்பாராதம் அவங்க எதிர்பார்க்கிற) பணம் எல்லாம் வரும்னு கரெக்டா தெரிஞ்சு வச்சுகிட்டு அதுக்கும் ஒரு பட்ஜெட் போட்டு வைக்கறதுல கில்லாடிங்க. என்ன, அந்த பட்ஜெட் எல்லாம் அவங்களோட புடைவை நகைன்னு அப்போர்ஷன் ஆகும்.. நம்ம அல்ப ஆசைகளுக்கு சங்கூதிட்டு அவங்க தன்னுதை நடத்திக்கற ஸ்டைலே தனி..
இப்ப நாம பாக்கப்போற உதாரணத்துல, தலைவருக்கு எதிர்பாராத பணம் வருது, அதிலே தங்கமணி நகை கேக்கறாங்க.
சூழல் 1 : இதுவா வெற்றி?
"என்னங்க அந்தப் பணத்தை என்ன பண்ணப்போறீங்க?"
"கிரிக்கெட் 20-20 சீரிஸ் வருதே, அதை பெரிய ஸ்கிரீன் LCD TV லே பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை, அதான் வாங்கப்போறேன்"
"பிரின்ஸுக்கு போகலாம்னு பாத்தேன்"
"ஆமா, அங்கதான் போகணும்.. எதிர்த்தாப்பலதான் வஸந்த & கோ?"
முறைப்பையும் மீறி வாங்கியே விட்டான் LCD..
சில நாட்களுக்குப் பிறகு..
"யெப்பா இன்னிக்கு கிரிக்கெட் மேட்ச்! எங்கேயும் போகப் போறதில்லை! அய்யா ஹவுஸ் அரெஸ்ட்"
"தாராளமா பாருங்களேன். குழந்தைக்கு சாதம் ஊட்டிட்டு அப்புறமா!"
"சரி ஹாலுக்கு போயிடறோம்"
"அய்யோ.. அவன் ஹாலெல்லாம் இரைப்பான். அப்புறம் யாரு க்ளீன் பண்றது? இங்கேயே.. என்ன ஒரு பத்து நிமிஷம்"
முதல் பத்து ஓவர் காலி.
"ஒரு நிமிஷம்.. துவரம்பருப்பு சுத்தமா தீந்து போச்சு.. கடைக்கு போயிட்டு வந்துடறீங்களா?"
"மேட்ச் போகுதே!"
"ஆமாம்.. பொல்லாத மேட்சு.. நீங்க பிடிவாதம் பிடிச்சு வாங்கினீங்களே அப்ப நான் எதாச்சும் சொன்னேனா? ஒரு நிமிஷம் கடைக்குப் போக
இவ்ளோ யோசிக்கிறீங்களே!"
அடுத்த 10 ஓவர் காலி.. முதல் இன்னிங்ஸ் முடிஞ்சுது.
திரும்பி வந்து அமர்ந்தால் டிவியில் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.
"அய்யோ அத மாத்தாதீங்க.. கல்பனாவும் அவ புருஷனும் பேசறதை நாத்தனார் ஒட்டுக்கேட்டுட்டா கடன்காரி.. மாமியார்கிட்ட போயி வத்தி வைக்கப்போறா.. முக்கியமான சீன். இது முடிஞ்சதும் நியூஸ்தானே அப்ப மாத்திக்கங்க"
அண்ணன் ப்ரெசண்டேஷன் செரிமனி மட்டும்தான் பார்த்தார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
***************
சூழல் 2 - விளைவுகள் அறிந்தவன்!
"என்னங்க அந்தப் பணத்தை என்ன பண்ணப்போறீங்க?"
"கிரிக்கெட் 20-20 சீரிஸ் வருதே, அதை பெரிய ஸ்கிரீன் LCD TV லே பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை, அதான் வாங்கப்போறேன்"
"பிரின்ஸுக்கு போகலாம்னு பாத்தேன்"
"சரி டிவி அடுத்த போனஸ்லே வாங்கிக்கலாம்.நீ கேட்டா நியாயம் இருக்கும்! "
நகைதான் வாங்கினாங்க.
சில நாட்களுக்குப் பிறகு..
"கிரிக்கெட் 20-20 சீரிஸ் வந்திருக்கு. இந்த டொக்கு டிவியிலே பாக்கணும்னு நெனச்சாலே எரியுது"
"வாங்கிக்க வேண்டியதுதானே.. நானா வேண்டாம்னு சொன்னேன்?"
பதில் பேசுவதாவது.. நம்மாளுதான் அறிவாளியாச்சே..
******************
சூழல் 3: இவன்தாண்டா பிஎச்டி!

"என்னங்க அந்தப் பணத்தை என்ன பண்ணப்போறீங்க?"

"என்ன பண்ணலாம் நீயே சொல்லு!"

"பிரின்ஸுக்கு போகலாம்னு பாத்தேன்"

"நகையா, வாங்கிட்டா போச்சு.. நான்கூட சொல்லணும்னு இருந்தேன். அன்னிக்கு ஜுவல்லரி ஷோகேஸ்லே பாத்து நல்லா இருக்குன்னு சொன்னியே, அந்த பேட்டர்ன்லேயே வாங்கிடலாமா?."

நகைக்கடையில்..

"ஆமாங்க.. அப்படி ஒரு பேட்டர்ன் தான் வேணும்.. மேலே மயில் மாதிரி டிஸைன், கீழே ஒரு கல்லு - சிகப்புமில்லாம, மஞ்சளும் இல்லாத ஒரு
கலர்"

"கிடைக்கறதை வாங்கிக்கலாமேங்க"

"நீ சும்மா இரு. அந்தக் கல்லு கலர்தான் என் கண்ணுமுன்னாலேயே நிக்குது. உனக்கு என்ன கல்லு ராசின்னும் பாத்துட்டேன், அதுல
காம்ப்ரமைஸே கிடையாது!"

"அப்ப்டி ஒரு கல்லு இங்கே இல்லைங்க"

"ஆர்டர் கொடுத்தா கிடைக்குமா?"

"கிடைக்கிறது கஷ்டம்ங்க"

"எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை! அந்தக் கல்லு கிடைச்ச உடனே இந்த நம்பருக்கு காண்டாக்ட் பண்ணுங்க!"

"ரெண்டு மாசமாவது ஆகும்"

"அதனால என்ன? இவ்ளோ நாள் பொறுத்தாச்சு.. இன்னும் ஒரு ரெண்டு மாசம் பொறுக்க முடியாதா? ராசி மேட்டர்! கண்ட கல்லைப்போட்டா ரிஸ்கு? கல்லு விஷயத்துல நோ காம்ப்ரமைஸ்!"

"சரி நீ ஆசைப்பட்ட நகைதான் இல்லைன்னு ஆகிப் போச்சு. வேற என்ன செய்யலாம்? எதுத்தாப்புலதானே வசந்த அண்ட் கோ இருக்கு
ஒரு நுழை நுழைஞ்சு பார்ப்போம் அங்க உனக்கு எதாவது பிடிச்சு இருக்கான்னு பாரேன்"

நேராக டீவி செக்ஷன் போய்விடக்கூடாது.., தங்கமணிக்கு இண்டரெஸ்ட் இல்லாத பொருட்கள் இருக்குமிடயாய் நடந்து சென்று கொஞ்சம் கேப் விட்டு டிவி ஏரியாவுக்குள் நுழைய வேண்டும்.

"யேய், இங்க பாரேன், இந்த டீவி சேல் போட்டு இருக்கான்.என் கஸின் அருண் வீட்டில் வாங்கி இருக்கிறதாச் சொன்னேனே. உன் தங்கை லதா கூட சூப்பரா இருக்கிறதா சொன்னாளே! அருண் கூட சொல்லிக்கிட்டு இருந்தான், அவன் வீட்டுக்கு நம்மளை கூப்பிடச் சொல்லி அவன் மனைவி சொல்லிக்கிட்டு இருந்தாளாம்.. வேறெதுக்கு.. எல்லாம் இந்த டீவி பெருமை அடிச்சுக்கத்தான்"

"அவங்க நம்மளைக் கேட்கறதுக்கு முன்னாடி நாமளும் ஒண்ணு வாங்க வேண்டியதுதான்"

"ஆமாம்.. அவங்ககிட்ட 42" தான் இருக்கு.. நாம 50" ஆ வாங்கிடுவோம்.. அடுத்தவாரம் 20-20 சீரிஸ் இருக்கு.. அன்னிக்கு அவனை பேமிலியோட கூப்பிட்டாதான் எனக்கு ஆறும்!"

பத்து நாளைக்கொருமுறை ஜுவல்லரிக்கு (தங்கமணி பாக்கும்போது மட்டும்) போன் செய்து "என்னாய்யா இன்னுமா வரலை அந்த டிஸைன்" என்று கேட்டவண்ணம் டிவி பார்த்துகிட்டு எஞ்சமாய் பண்ணிகிட்டு இருக்காரு தலைவர்!

இந்த நுணுக்கத்தை கொஞ்சம் நுணுக்கமாப் பாத்தீங்கன்னா, முதல் ரெண்டு பேரோட ஆசையும் இவர் ஆசையும் ஒண்ணுதான். ஆனா, அதை எப்படி செயல்படுத்தறார் என்பதில்தான் வித்தியாசம் காட்டி ஸ்கோர் பண்றாரு. முதல்ல மறுப்பு சொல்லாம ஆரம்பிச்சு, வாங்கித் தராததுக்கான காரணத்தை நாசூக்கா வேறே ஒருத்தன் மேலே போட்டு (இந்த இடத்துல முக்கியமான மேட்டர் ஸ்பெசிபிகேஷன். இதை வச்சுகிட்டு - 3 டோர், 3 பகுதியிலும் டிப்ராஸ்ட் இருக்கிற ரெப்ரிஜரேட்டர்தான் வேணும்.. ஆட்டோமேட்டிக் அவன் வேண்டாம் ஆனால் ஆட்டோமாட்டிக் க்ரில் மட்டும் வேணும், இப்படி ரெண்டு மூணு மேட்டரைத் தெரிஞ்சிகிட்டு, கிடைக்கறதுக்குக் கஷ்டமான ஸ்பெசிபிகேஷனை வெளிய விடணும்), அப்பால அவங்களுடைய நுண்ணிய உணர்வுகளைத் தூண்டிவிட்டு அப்புறமாத்தான் காரியத்தை சாதிச்சுக்கணும். டிவிதான் வாங்கிட்டமேன்னு சும்மா இருந்தாரா? பாலோ அப் பண்றாராம்.. அதுலதான் இவர் அடிவாங்காம தப்பிக்கறார்.

நானே இந்த நுணுக்கம் இன்னும் கைவராம இருந்தப்ப கைகொடுக்கும் கையா, கை கொடுத்த தெய்வமா வந்தவர் நம்ம கொத்தனார். பின்னிப் பெடலெடுத்துட்டார் இந்த ஐடியாவுல!

இன்றைய வீட்டுப்பாடம்:

ஆத்திச்சூடி தயாரிக்கும் சீஸன் இது. நாம, நம்ம வைபாலஜிக்கு ஒரு ஆத்திச்சூடி தயாரிச்சு பின்னூட்டமா போடுவோமா? சாம்பிள்:

அடங்குவது ஆண்.
ஆணீயம் பேசேல்.
இல்லாளே தெய்வம்
ஈ எம் ஐ உன் கடமை
உண்மை மாதிரி பேசு
ஊர்சுற்றும் உரிமைமற.
எந்நாளும் நீ அடிமை
ஏச்சுக்கு பழகு
ஐயம் வரவிடாதே
ஒப்புக்கு நீ தலைவன்
ஓடாமல் அடிவாங்கு
ஔஷதம் தேடு (அடிவாங்கிய பின்)


51 பின்னூட்டங்கள்:

கருப்பன் (A) Sundar said...

ஏம்பா பினாத்தல் மன்னா, நீங்க எந்த யுகத்துலப்பா இருக்க? இந்தக்காலத்து மனைவிகளை அவ்வளவு சுலபமா கையாள முடியாது... நீங்க சொன்ன அந்த மூண்றாவது கணவனின் கதை உன்மைல இப்படி இருந்திருக்கும்...

கல்லு சரியில்லைனு நகைக்கடைய விட்டு வெளியே வந்த உடனே... மனை: "என்னங்க பக்கத்துல இருக்குற பட்டுப்புடவை கடைய ஒரு பார்வ பாத்துட்டு வரலாங்க"
கண: (வேண்டாம்னு சொன்னால் என்ன ஆகும்னு இந்த புத்திசாலிக்கு தெரியாதா என்ன?) சரி வா பார்க்கலாம் :'-(

(இதுக்கு மேல நான் ஒன்னும் சொல்லத் தேவையில்லை. புடவைக்கடையில நம்மாலு பருப்பு வேகாது)

இலவசக்கொத்தனார் said...

//நானே இந்த நுணுக்கம் இன்னும் கைவராம இருந்தப்ப கைகொடுக்கும் கையா, கை கொடுத்த தெய்வமா வந்தவர் நம்ம கொத்தனார். பின்னிப் பெடலெடுத்துட்டார் இந்த ஐடியாவுல!//

யோவ் போட்டுக்குடுத்துட்டியே. இனிமே தங்கமணி கிட்ட இந்த டெக்னிக் எப்படிய்யா வேலைக்காகும்?

பாச மலர் / Paasa Malar said...

உங்க wifeology இன்னிக்குதான் படிச்சேன்...ஆனாலும் இவ்ள அப்பாவியா சார் நீங்க? மனைவிகளை அவ்வளவு சுலபமா ஏமாத்திற முடியாது..என்னதான் பி.எச்.டி wifeology ல வாங்கிருந்தாலும் ஏமாறுகிற மாதிரி நடிச்சு உண்மையிலேயே பல விஷயங்களில் விட்டுக் குடுக்குறது நாங்கதான்..

என்றாலும் ரசிக்க வைக்கிறது உங்கள் இந்தத் தொடர்.

நாகை சிவா said...

தெய்வமே!

உன்னை வணங்குகிறேன் :)

ஆத்திச்சூடி அசத்தல்

pudugaithendral said...

பாசமலர் said,
//ஆனாலும் இவ்ள அப்பாவியா சார் நீங்க? மனைவிகளை அவ்வளவு சுலபமா ஏமாத்திற முடியாது..என்னதான் பி.எச்.டி wifeology ல வாங்கிருந்தாலும் ஏமாறுகிற மாதிரி நடிச்சு உண்மையிலேயே பல விஷயங்களில் விட்டுக் குடுக்குறது நாங்கதான்..//

டபுள் ரிப்ப்பீட்டேய்ய்ய்ய்ய்!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

கலக்குறீங்க.
<==
நானே இந்த நுணுக்கம் இன்னும் கைவராம இருந்தப்ப கைகொடுக்கும் கையா, கை கொடுத்த தெய்வமா வந்தவர் நம்ம கொத்தனார். பின்னிப் பெடலெடுத்துட்டார் இந்த ஐடியாவுல
==>
எல்லாம் ஒரு குரூப்பாதான் இருக்கீங்க.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ஜூ.விகடன்ல் படிச்ச டயலாக்:
(ஒரு ஓட்டலின் வாசலில் ஒரு தம்பதி)
த.மணி : ஓட்டல்ல சாப்பிட வேண்டாங்க.வீட்டைலேயே சாப்பிட்டுக்கலாம்.
ர.மணி : ஐ.உன் ஐடியா எனக்கு தெரியாது நினைக்கிறயா? வீட்டுக்குப் போனதும் அசதியாய் இருக்குன்னு படுத்திடுவே.அப்புறம் நான்ல சமைக்கனும்.8 வருடம் ஒன்கூட குடும்பம் நடத்தியிருக்கேன். எனக்கு இதுகூட தெரியாதா?

rv said...

:))))))))

ஐடியானு ஒத்த வரில சொன்னப்போ குழப்பமா இருந்துச்சு.

ஆனா பதிவா பாத்தப்புறம் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...

rv said...

அப்புறம் சமீபத்துல ட்ரை செய்யப்பட்டு ஏகோபித்த சக்ஸனான டெக்னிக் போல இது..

கொத்ஸு?

rv said...

அப்புறம் சமீபத்துல ட்ரை செய்யப்பட்டு ஏகோபித்த சக்ஸனான டெக்னிக் போல இது..

கொத்ஸு?

seethag said...

பின்-புதிய ஆத்திச்சூடி:பின் நவீனத்துவம் மாதிரி...
-------------------------------
ஆண்களைப்பற்றிய ஆத்திச்சூடி:
----------------------------
------------------------------
அம்மா இந்த அண்டப்புளுகர்களை என்ன செய்றது?
ஆதாயம் இல்லாமல் உதவி செய்யும் ஆண் பிறக்கவேண்டும்.

இலவசக்கொத்தனாரின்
நு(பெ)ண்ணரசியல் அனியாயம்.

ஈவது என்றால் என்ன வென்றே தெரியாமல் இருப்பது xy chromosome.

உப்பும்மாசெய்யவும் லாயக்கு இல்லாதவர்கள்..
ஊர் சுற்றுவது ஆண்களின் கால் மட்டுமல்ல ..கண்கூட.

எல்லாமே தான் என்னும் ப்ரமையில் சுழலும் அதிபுத்தி(இல்லாத)சாலிகள்.

ஏமாற்றும் ரங்கமணிகளென்பது தகுதி

ஐன்து ரூபாய்க்கு அம்பது தடவை கணக்கு கேட்க்கும் கருமிகள்.

ஒப்புக்கு சப்பை ஆசாமிகள்.

ஓயாமல் புலம்பும் வர்க்கம்.

ஓளஷடம் நிதம் தேவை..இவர்களுடன் குடும்பம் நடத்தினால்..

வடுவூர் குமார் said...

ஹூம்!! உங்க கைங்கர்யம் முடிந்ததா?
எவ்வளவு வீட்டில் வெடி வெடிக்கப்போவுதோ!!
ஏதோ நல்லா இருங்க.:-))

இவன்....இளையவன் said...

தலைவா நீங்க எங்கயோ....................... போய்ட்டிங்க.
(இங்க தான் இருக்கேன்னு பதில் பின்னுட்டம் போடாதீங்க, நான் உன்மையா தான் சொல்றேன்

பினாத்தல் சுரேஷ் said...

சுந்தர்..

புடவைக்கடையில நம்ம பப்பு வேகாதுதான்.. ஆனா முயற்சிக்கறதுல தப்பு இல்லையே.. மெஜந்தா கலர் பாடி, பர்பிள் பல்லு, ராமர் கதை எம்ப்ராய்டரி பண்ண பட்டுப்புடவைதான் வேணும்.. ஐ வில் நாட் காம்ப்ரமைஸ்!! இப்படி ஒரு பிட்டு ட்ரை பண்ணி பாக்கலாமே!

கொத்தனார், போட்டுக்கொடுத்தது மட்டுமில்லை.. நான் சைக்கிள் கேப்புல தப்பிச்சேன் பாத்தீங்களா?

பாசமலர், நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி. மனைவிகளை ஏமாத்துறது சுலபமா இருந்தா எதுக்கு கோர்ஸ்?

பினாத்தல் சுரேஷ் said...

நாகை சிவா.. நன்றி.. எங்க வீட்டுப்பாடம்??

புதுகைத் தென்றல், வருகைக்கு மட்டும் நன்றி, ரிப்பீட்டுக்கு அல்ல.

நன்றி சாமான்யன் சிவா..

நன்ரி ராமநாதன். கொத்ஸ் வீட்டுல ஏதாச்சும் மாற்றம் ஏற்பட்டிருக்கா என்ன?

பினாத்தல் சுரேஷ் said...

சீதா, பின்னூட்டமாக ஆத்திச்சூடி எழுதியதற்கு நன்றி. ஆனால் பிழை இருக்கிறதே.. சொல்லில் பிழை இருந்தால் மன்னிக்கப்படலாம். பொருளில்தான் பிழை இருக்கிறது! அதிகமில்லை, நீங்க எழுதினதில ஒரு 12 ஏ வரிலேதான் பொருட்பிழை இருக்கு!

வடுவூர் குமார்.. வெடிக்கவா இவ்வளவு கஷ்டப்படணும்.. பேசாம சூழல் அ படி செஞ்சு அடிவாங்கிகிட்டு அமுங்கிடலாமே..

கணேஷ் பாபு, நன்றி.

மங்களூர் சிவா said...

அண்ணே கொஞ்சம் லேட்டாயிருச்சு!!

மங்களூர் சிவா said...

//
Seetha said...
blah blah blah blah blah blahblah blah blahblah blah blah
//
வந்துட்டாங்கய்யா.... வந்துட்டாங்க!!!

முத்துகுமரன் said...

பிரின்ஸ் இல்லைனா என்னா?

சரவணா செல்வரத்னம் இருக்குதுல!

எடுத்துக்கோ! எடுத்துக்கோ! அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோனு ஆப்படிக்க முயற்சித்தால் தப்பிப்பது எப்படி???

5கிளாஸ் கட் அடிச்சிட்டு நேரா 6ம் வகுப்புக்கு வந்திருக்கும் மாணவன்

குசும்பன் said...

போனஸா அப்படின்னா அதெல்லாம் கிடையாதாம் அப்படின்னு சொல்லிட்டா என்னா ஆகும்?

குசும்பன் said...

///5கிளாஸ் கட் அடிச்சிட்டு நேரா 6ம் வகுப்புக்கு வந்திருக்கும் மாணவன்///

5 கிளாஸ் கட்டிங் அடிச்சிட்டு நேரா கிளாசுக்கு வந்தால்தான் தவறு, இது தவறு இல்லை:)) என்ன சார் நான் சொல்வது சரியா?

குசும்பன் said...

//நானே இந்த நுணுக்கம் இன்னும் கைவராம இருந்தப்ப கைகொடுக்கும் கையா, கை கொடுத்த தெய்வமா வந்தவர் நம்ம கொத்தனார். பின்னிப் பெடலெடுத்துட்டார் இந்த ஐடியாவுல!//

சைட் டிராக்கிலும் ஒழுங்கா வண்டி ஓட்டுவது எப்படின்னு கொத்தனார் ஏதோ சொல்லி கொடுத்தார் என்று போனில் சொன்னீங்களே அதுவும் பாடத்தில் வருமா?:)))

அம்புட்டு திறமையானவர் என்று வேற சொன்னீங்க இன்னும் அவர் அருமை பெருமை எல்லாம் எடுத்துவுடுங்க:))

பினாத்தல் சுரேஷ் said...

மங்களூர் சிவா.. லேட்டாவாச்சும் ரெகுலரா வர ஒரே ஸ்டூடெண்ட் நீதானேப்பா.. உன்னை கோவிச்சுப்பேனா?

// வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க// ஒரு மாறுதலுக்கு நான் சொல்றேன் ரிப்பீட்டேய்!

முத்துக்குமரன்,

6வது வகுப்புக்கு நேரடியாக வருவது ஒண்ணும் தப்பில்லை, மிச்சம் 5ம் அரியர்ஸா இருக்கும், க்ளியர் பண்ணிட்டா போச்சு.

குசும்பன் அன்புத்தம்பி,

போனஸா அது என்னன்னு கேட்டா டிவிக்கு என்ன வழி?

5 Glass கட்டிங் அடிச்சுட்டு வரதா? வகுப்புக்குன்னு ஒரு மரியாதை இல்லை?

கொத்தனார் பத்தி நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன். குடும்பத்துல குண்டு வைக்கறதையே முழுநேர வேலையா வச்சிருக்கியே.. டூ பேட்!

சுரேகா.. said...

ஐய்யய்யோ...இதைப்போய் தங்கமணியோட ஒக்காந்து படிச்சுத்தொலஞ்சுட்டேனே...

ஏன்னா..

கிட்டத்தட்ட இதே ஐடியாலதான் ஒரு சோனி டிவிடி ஹோம்தியேட்டர் வீட்டுக்குள்ள நொழஞ்சிருக்கு ராசா...

நாளைக்கு எந்த நகைக்கடைக்காரனுக்கு யோகம்னே தெரியலயே..

இப்படி பொலம்ப விட்டுட்டீங்களே சாமீ..!

பினாத்தல் சுரேஷ் said...

அடடா சுரேகா!!

சரி! கேம்லே தோத்துட்டா வைக்கவேண்டிய கப்பத்தை வச்சுத்தானே ஆகணும்..

ஆழ்ந்த அனுதாபங்கள் :-(

ILA (a) இளா said...

கொத்ஸ் அதான் மேட்டரா? இருக்கட்டும் மனசுல வெச்சிகிறேன்.

கோவைப்பழம் said...

பேசாம 'இந்த தரம் போனஸ்ஆ வசந்த் & கோ-ல டிவி கிப்ட் வவுச்சர்' ன்னு நாமளே பிட்டு போட்டுட்டா? (முன்நேர்ப்பாடா கிப்ட் வவுச்சர் வாங்கியே வெச்சுருக்கணும், காச கண்ணுலயே காட்டக்கூடாது). ரிஸ்க் மிட்டிகேஷன் பண்ணறதுக்கு பதிலா ரிஸ்க் அவாய்டு பண்ணலாமே! (வரும்-முன் காப்போம்)
அப்படியே தங்கம் வாங்க வேண்டி வந்தாலும், நகையா வாங்காம காயின் / பார் -ஆ வாங்கணும் ('ஏற்கனவே நிறைய்யா இருக்கே, தங்க காசு வெச்சு பூஜை பண்ணினா _______' (சென்டியா எதாவது பில் அப் பண்ணிடுங்க) ). அட்லீஸ்ட் செய்கூலி சேதாரமாவது மிச்சமாகும்! இன்வெஸ்ட்மெண்டா இருக்கும்.

கோவைப்பழம் said...

பேசாம 'இந்த தரம் போனஸ்ஆ வசந்த் & கோ-ல டிவி கிப்ட் வவுச்சர்' ன்னு நாமளே பிட்டு போட்டுட்டா? (முன்நேர்ப்பாடா கிப்ட் வவுச்சர் வாங்கியே வெச்சுருக்கணும், காச கண்ணுலயே காட்டக்கூடாது). ரிஸ்க் மிட்டிகேஷன் பண்ணறதுக்கு பதிலா ரிஸ்க் அவாய்டு பண்ணலாமே! (வரும்-முன் காப்போம்)
அப்படியே தங்கம் வாங்க வேண்டி வந்தாலும், நகையா வாங்காம காயின் / பார் -ஆ வாங்கணும் ('ஏற்கனவே நிறைய்யா இருக்கே, தங்க காசு வெச்சு பூஜை பண்ணினா _______' (சென்டியா எதாவது பில் அப் பண்ணிடுங்க) ). அட்லீஸ்ட் செய்கூலி சேதாரமாவது மிச்சமாகும்! இன்வெஸ்ட்மெண்டா இருக்கும்.

Nakkiran said...

//பாசமலர் said,
ஆனாலும் இவ்ள அப்பாவியா சார் நீங்க? மனைவிகளை அவ்வளவு சுலபமா ஏமாத்திற முடியாது..என்னதான் பி.எச்.டி wifeology ல வாங்கிருந்தாலும் ஏமாறுகிற மாதிரி நடிச்சு உண்மையிலேயே பல விஷயங்களில் விட்டுக் குடுக்குறது நாங்கதான்..//


Repeat......

IT is not only "Not easy" but almost impossible to cheat...

From
Nakkiran - 5 yrs hands on Experience as Husband

கோபிநாத் said...

ஒரு கல்லை வச்சி ஒரு கோட்டையையே இடித்து தரைமட்டமாக்கிட்டிங்க ..குருவே வாழ்க ;)

ஆத்திச்சூடி சூப்பர் ;))

pudugaithendral said...

//புதுகைத் தென்றல், வருகைக்கு மட்டும் நன்றி, ரிப்பீட்டுக்கு அல்ல.//
why? why? why?

பினாத்தல் சுரேஷ் said...

இளா,

அமோகமா மனசுக்குள்ளே (மட்டும்) வச்சுக்கங்க! குண்டு போடுற கூட்டத்தைச் சேர்ந்தவர் இல்லை நீங்கன்னு தெரியும்.. இருந்தாலும் சேப்டிக்கு...

கோவைப்பழம்,

கிப்ட் சர்டிபிகேட், நல்ல ஐடியாதான்.. ஆனா அதையும் ஒழுங்கா கையாளாம விட்டா அவங்களுக்குத் தேவையான சாமானா முடியறதுக்கு வாய்ப்பு அதிகம். வழக்கம்போல நம்ம டிஸ்கி - பாத்து நடந்துக்கங்க - இதுக்கும் அப்ளை ஆகத்தான் செய்யும்..

அப்புறம் இந்த தங்கக்காசு போட்டு பூஜை பண்ணினா ஐஸ்வர்யம் கொட்டும், மங்களம் உண்டாகும்.. எல்லாம் இப்ப வொர்க் அவுட் ஆவறதில்ல சாமி.. செண்டின்றதே இல்லாம இருக்காங்க இந்தக் காலத்துல.. செய்கூலியே இல்லாம சேதாரம் (நம்மளை) பண்ணிட்டு போயிடறாங்க..

பினாத்தல் சுரேஷ் said...

//உண்மையிலேயே பல விஷயங்களில் விட்டுக் குடுக்குறது நாங்கதான்//

இதுக்கா ரிப்பீட் போடறீங்க நக்கீரன்? 5 வருஷ அனுபவம் போதலையே!!

நீங்க சொல்றது வாஸ்தவம்தான்.. ஆனா அந்த வர்க்கத்தோட ஒத்துப்போயிடக்கூடாது..

வாங்க கோபிநாத்.. நன்றி.

புதுகைத் தென்றல்,

நம்ம ப்ளாக்குல, அதுவும் வைபாலஜி பதிவுல ரெண்டு எதிர்கட்சிக்காரங்க ரிப்பீட் போட்டு விளையாடுவாங்க, அதுக்கு நன்றி வேற சொல்லுவோமா?

pudugaithendral said...

//நம்ம ப்ளாக்குல, அதுவும் வைபாலஜி பதிவுல ரெண்டு எதிர்கட்சிக்காரங்க ரிப்பீட் போட்டு விளையாடுவாங்க, அதுக்கு நன்றி வேற சொல்லுவோமா?//

எதிர்கட்சிகாரங்களா இருந்தாலும் என்ன பினாத்த மன்னிக்கவும் சொல்றீங்கன்னு பாத்து ரீப்ப்ட்டுன்ன்னாவது பின்னூட்டம் போடறோமே.

நீங்க எட்டி பார்க்கறது இல்லையே?!!

ramachandranusha(உஷா) said...

பினாத்தலார் MCP,
உம்முடைய காழ்ப்புணர்வு நன்கு விளங்குகிறது. என் உ.பி. ச க்களான பாசமலர், புதுகை தென்றல், சீதா இவர்களை வாழ்த்தி நேற்று நான் போட்ட பின்னுட்டம் எங்கே எங்கே எங்கே????

மங்களூர் சிவா said...

//
ramachandranusha(உஷா) said...
பினாத்தலார் MCP,
//
அக்கா அதுக்காக நீங்க MCP னு சொல்லறது உங்க தரத்துக்கு அழகா இல்லை.

உங்க எழுத்துக்கள் மேல நாங்கல்லாம் அவ்வளவு மரியாதை வெச்சிருக்கோம்.

குசும்பன் said...

///கொத்தனார் பத்தி நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன். குடும்பத்துல குண்டு வைக்கறதையே முழுநேர வேலையா வச்சிருக்கியே.. டூ பேட்!///

நல்லா சூப்பராக நான் சொல்ல வந்த கருத்தை அப்படியே ஹாஜாக் செய்றீங்க பினாத்தலார், உங்களுக்காக நீங்க அவரிடம் கேட்ட ஆலோசனை பற்றிதானே கேட்டேன்.

/////நானே இந்த நுணுக்கம் இன்னும் கைவராம இருந்தப்ப கைகொடுக்கும் கையா, கை கொடுத்த தெய்வமா வந்தவர் நம்ம கொத்தனார். பின்னிப் பெடலெடுத்துட்டார் இந்த ஐடியாவுல!///

திரும்ப இதுபோல் ஒரு முறை சொல்லுவீங்க என்று ஒரு நல்லெண்ணத்தில் கேட்டால் என்னை போய்.. ச்சே:((((((

ramachandranusha(உஷா) said...

ம.சிவா,
இலவத்தின் பதிவை படிச்சிட்டு இங்கிட்டு வந்தனா அதனால கன்ப்யூஸ் ஆய் போச்சு. அப்ப அந்த பட்டம் இவரூ வாங்கலையா?
பினாத்தலாரே, தவறாய் கொடுக்கப்பட்ட பட்டத்தை உரியவரிடம் திருப்பி தந்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

pudugaithendral said...

என் கேள்விக்கு என்ன பதில்?

மெளலி (மதுரையம்பதி) said...

ஏதாவது புச்சா சொல்லிக் கொடுங்க சார்.

முரளிகண்ணன் said...

வாவ் கலக்கல்

Unknown said...

ஆகா பட்டிமன்றத்துல்ல பேசக் கூப்பிட்டு உங்களைத் தலைவர் கொத்துப் பரோட்டா போட்டதுக்கு இங்கே பொதுவுல்ல அவரை இழுத்து விட்டு தலைவர் வீட்டுல்ல கும்மாங்குத்து வாங்க வச்சுட்டீங்க...

Unknown said...

ரமுக ஆரம்பிக்க வேண்டிய காலம் நெருங்கிடுச்சுய்யா....:-))

seethag said...

உஷஆ இப்படி ஏமாந்துட்டீங்களே..மங்களூர் சிவாவின்புகழுரையில் ......

தங்கமணிகளின் வாழ்வுரிமை மீட்டல் செய்யவேண்டும்...

பினாத்தல் சுரேஷ் said...

புதுகைத் தென்றல்,

எனக்கு பின்னூட்டம் போட ஆயிரம் பிரச்சினை :-( அதனாலதான் போடலை.. மத்தபடி படிக்காம விடுவோமா? அதுவும் எதிரிகள் என்ன பேசிக்கறாங்கன்னு கேக்கறது ஒரு சுவாரஸ்யம் இல்லையா?

உஷாக்கா, எதையோ படிச்சு, எங்கேயோ கமெண்டு போட்டுட்டு, ஏண்டா போடலைன்னு கேக்க மட்டும் இங்க கரெக்டா வந்துடுங்க! ட்டூ பேட்!

மங்களூர் சிவா, உன் பாசம் புல்லரிக்க வைக்குதுபா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

மதுரையம்பதி, சட்டியில இருந்தாதான் ஆப்பையில வரும்? வாங்க நீங்களும் காண்ட்ரிப்யூட் பண்ணுங்க!

முரளி கண்ணன், நன்றி..

பினாத்தல் சுரேஷ் said...

தேவ், பட்டிமன்றம் வேற, போட்டுக்கொடுக்கறது வேற! கடமைக்கு நடுவுல பாசத்துக்கு இடம் கொடுக்கவே கூடாதுன்னு வள்ளுவர் சொல்லலே?

ரமுக ஆரம்பிக்கும் நேரம் கனிந்துவிட்டதாகவே நானும் கருதுகிறேன்,

வாங்க சீதா, உங்களுக்கு நாங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லாம,நேரடியா கூட்டணி அமைக்கிறீங்களே இது என்ன நியாயம்? தங்கமணி நியாயமா?

pudugaithendral said...

பினாத்தல் said,

//புதுகைத் தென்றல்,

எனக்கு பின்னூட்டம் போட ஆயிரம் பிரச்சினை :-( அதனாலதான் போடலை.. மத்தபடி படிக்காம விடுவோமா? அதுவும் எதிரிகள் என்ன பேசிக்கறாங்கன்னு கேக்கறது ஒரு சுவாரஸ்யம் இல்லையா?//

சும்மா ரிப்பீட்டுன்னு அடக்கி வாசித்துக் கொண்டிருந்த நான் உங்களுக்கு பின்னூட்டத்தையே என் பிளாக்கில் பதிவாக போட்டுவிட்டேன். படிச்சு பாத்துக்கோங்க.

அரை பிளேடு said...

உங்க மூணாவது டெக்னிக் எல்லாம் ஆண்களை விட அதிகம் யூஸ் பண்றது பெண்கள்தான்.


இப்படிக்கு

தனக்காக செருப்பு வாங்க தம்பதி சமேதராய் கிளம்பி தங்க நகை வாங்கி திரும்பி வந்த அப்பாவி ஒருவன்.

ரசிகன் said...

அவ்வ்வ்வ்...... எல்லாம் கேக்கறதுக்கு நல்லாத்தேன் இருக்கு..
ஆனாக்கா நடக்கற கதையா?..மனைவிகள் ரொம்ப உஷாருங்க்கோன்னு கல்யாணமான பாவப்பட்ட நண்பர்கள் பொலம்பராய்ங்க...வீட்டுக்குள்ள வர்ர ஸ்டெய்ல வச்சே வரலார கண்டுப்புடிச்சிடறாய்ங்கலாமில்ல..
ஒருவேளை உங்களுக்கு தோனுற ஜடியாவையெல்லாம் மத்தவிங்கள வச்சு டெஸ்ட் பண்ணறீரோ?..
ஹிஹி...

Anonymous said...

very good sir the way u thought is unique and really the ART OF SAYING NO is a art it doesn't come for everybody and it should make both the 1st person and also second person happy.keep it up

achi

Anonymous said...

Hi pinathal unga padhivu supera irukku..

ella course-um padichane pinnoottam ida member aga venedumame ..anonya poda viruppam illai adhanala podavilla.. ana inga oru pinnoottam parthane ..adukkum mela adakka mudiyala .. azhugayadhanyaa...

//தனக்காக செருப்பு வாங்க தம்பதி சமேதராய் கிளம்பி தங்க நகை வாங்கி திரும்பி வந்த அப்பாவி ஒருவன்//

idha padichadhum ennoda sambavam ondru ninaivukku vandhadhu, yaruppa adhu seruppu vanga poi thangam vangi vandha mavaraasa .. naamellam ore saadhi .. kalankaadhe avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

inimale memberai ozhunga vaguppil mudhal maanavanaga virumbugirane. Amaam yaaro oru akka ungala mcp appadinu solluche avanga veetu computera poi partha keyboardla M, C, P indha moonu keeyum odanju poyirukkum avvalavu veriya aluthiyiruppanga.. avvalavu kovam kandippa unga mela irukkum

edhirikku evvalavu eriyudho avvalavum unmaidhaane.. neena pinathunga thozhare

koodiy viraivil memberavane so ennayum MCP-nu poduvangaloo avvvvvvvvvvvv idhu afghanistanla anugundu irukunu america adha azhicha kadhaidhaan...

tamilla eppadinga type panradhu yaaravadhu sonnunga..

 

blogger templates | Make Money Online