Dec 12, 2007

பாடம் 7: மனைவியின் எதிரில் போன் பேசுவது எப்படி? Wifeology

"ஹலோ! ராக்கி பேசறேன்"

"சொல்லுடா நான் தான் விக்கி. மிஸ்டு கால் கொடுத்திருந்தியே?"

"அப்புறம் என்னடா திடீர்னு போன் எல்லாம்? பண்ணவே மாட்டியே?"

"நீதானடா மிஸ்டு கால் கொடுத்து என்னைப் பேச வச்சே?"

"என்னவோ போப்பா, பெரிய மனுசன் ஆயிட்டாலும் ஞாபகம் வச்சுருந்தா சரி"

"என்னடா பேசறே? நேத்துதானே பேசினோம்? குழப்பறயே"

"அவளா, நல்லா இருக்கா. இங்கதான் இருக்கா.. பேசறியா?"

"ஓ.. தங்கமணி பக்கத்துல இருக்காங்களா, அதான் பம்முறியோ?"

"அப்புறம் பேசறியா.. சரி என்ன மேட்டர்?"

"ஆனாலும் ரொம்பத்தாண்டா பயப்படறே"

"வீட்டுக்கு வீடு வாசப்படி! இங்கேயும் அப்படியேதான் ஓடுது."

"சரி. என்ன மேட்டர் சொல்லு?"

"போன வாரம் போன் பண்ணேனே எடுக்கவே இல்ல?"

"எங்க எடுக்கறது? சத்தம் கூட கேக்காம எல்லாரும் மேட்ச் பாத்துகிட்டு இருந்தோம்"

"என்ன ஆச்சு?"

"காலைல மூணு மணிவரைக்கும் ஓடிச்சு! கடைசிலே பனாதைப் பசங்க 10 ரன்லே விட்டானுங்க!"

"இந்த மேட்ச் எல்லாம் பாக்கறதே வேஸ்ட்டு! என்னை மாதிரி நிறுத்தித் தொலைங்கடா!"

"சரி அண்ணே உங்க அட்வைஸுக்கு ரொம்ப தாங்க்ஸ்"

"அடுத்த சனிக்கிழமையா? நான் வரமாட்டேன்பா"

"யாரு? எங்க கூப்பிட்டாங்க?"

"நீ என்னதான் சொன்னாலும், சனிக்கிழமை என்னால வரமுடியாது"

"எங்கடா?"

"கோபியப் பாரு! திருந்திட்டான். அவனாட்டம் ஆவணும்னு எனக்கு ஆசை இருக்காதா?"

"கோபியும்தானட அன்னிக்கு மேட்ச் பாத்து கூத்தடிச்சுகிட்டிருந்தான்?"

"அதைத்தாண்டா நானும் சொல்றேன். சனிக்கிழமை என்னால வரமுடியாது!"

"ஓஹோ அப்படிப்போவுதா மேட்டரு.. ஆனா சனிக்கிழமை மேட்சே கிடையாதேடா! திங்கள், புதன், வெள்ளிதான் 3 ஒன் டே ..என்னிக்கு வரே?"

"என்ன லோகுவுக்கா?"

"லோகுவுக்கு என்ன?"

"என்ன ஆச்சாம்?"

"என்ன என்ன ஆச்சாம்?"

"எந்த ஹாஸ்பிடல்?"

"ஹாஸ்பிடல் வரைக்குமே போயிட்டயா?"

"ஆமாம். நாம போயி பாத்துட்டுதான் வரணும்"

"எங்க?"

"சனிக்கிழமை வேணாம். என் வைஃப்பை கூட்டிகிட்டு ஷாப்பிங் போறதா ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்"

"மறுபடி வந்தாண்டா சனிக்கிழமைக்கு"

"வீக் டேஸ்லே போயிட்டு வந்துடலாம்"

"வீக் டேஸ்லேயேவா? சொல்லு.. திங்களா, புதனா வெள்ளியா? எதுவாயிருந்தாலும் ஓக்கே.. தங்கமணி வர இன்னும் ரெண்டு வாரம் இருக்கு"

"நீ சொல்றதும் சரிதான். அவ்வளவு தூரம் நைட்லே பைக் ஓட்ட முடியாது"

"ஓ, சரி அப்ப என் வீட்டிலேயே தூங்கிடு"

"அப்ப நாளைக்கு கடைக்குப்போயி தேவையானது எல்லாம் வாங்கிடறயா?"

"என்ன தேவையானது?"

"என்ன முட்டாள்தனமா கேக்கற.. நாம போற இடத்துக்கு என்ன தேவை? இப்ப ஹாஸ்பிடல் போறதுன்னா ரெண்டு பழம், ஜூஸ் வாங்கமாட்டியா?"

"சரக்கைச் சொல்றியா?"

"அப்பாடா புரிஞ்சிகிட்டயே"

"எனக்காடா மவனே அல்வா கொடுக்கற?"

"சரி அப்ப புதன்கிழமை போயிட்டு வந்துடலாமா?"

"புதன்கிழமையா? ஓக்கே"

"அப்பதான் வியாழக்கிழமை சாயங்காலம் என் வைப்பை ராகவேந்திரர் கோயிலுக்குக் கூட்டிப்போக முடியும்"

"ஜித்தன் டா நீ! இதுல ஆன்மீகம் வேறயா?"

"சரிடா. ரொம்ப நேரம் போன்ல பேசினா என் வைஃப்புக்கு பிடிக்காது. வச்சுடட்டுமா?"

******

சிவப்பு கருப்பின் தாத்பர்யத்தையெல்லாம் உணர்த்த வேண்டிய அளவுக்கு வாசகர்களைக் குறைவாக மதிப்பிட மாட்டேன்.

இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, நாம் என்ன பேசறோம்ன்றது நமக்குத் தெளிவாத் தெரியணும். கோட்டை விட்டுடக்கூடாது.

வீட்டுப்பாடம்:

ஒருவேளை மனைவியும் வலைப்பதிவுகள் படிப்பவர்களாக இருந்துவிட்டால், எப்படிப்பதிவு எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம் இந்தப்பதிவு. அனுபவிங்க, ரொம்ப ஆராயாதீங்க!

47 பின்னூட்டங்கள்:

Kasi Arumugam said...

தங்கமணிக்கு இதெல்லாம் தெரியுமா? பாத்து! பிறகு 'கம்ப்யூட்டர்மேல் காபி கொட்டிட'ப்போகுது!

மெளலி (மதுரையம்பதி) said...

சூப்பர். எப்படிய்யா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.....

//இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, நாம் என்ன பேசறோம்ன்றது நமக்குத் தெளிவாத் தெரியணும். கோட்டை விட்டுடக்கூடாது.//

ரொம்பச் சரி....

நாகை சிவா said...

ஹிஹி...

அனுபவிச்சு எழுதி இருக்கீங்க.. சீ.. அனுபவத்தை எழுதி இருக்கீங்க :)

Anonymous said...

எத்தனை செலவானாலும் பரவாயில்லை. அமீரகத்துக்கு இன்று தொலைப்பேசியே ஆக வேண்டும். ஏதுமறியாத ஒரு அப்பாவி
பெண்ணின் வாழ்க்கையுடன் விளையாடும் ஒரு கயவனின் மூகமூடியை கிழித்தே ஆக வேண்டும்.

seethag said...

ஸங்கேத மொழிவேறயா பெனாத்தலஸ்?
உங்கள் எண்ணம் நிறைவேறியது..ஏன்னா.. frustration கிளப்பிய பதிவு.......

ரங்கமணி ஊரிலிருந்து ரிடர்ன்..மனுஷன் வழக்கமான புளுகுகளை விட்டுகிட்டு இருக்கிறார்...

துளசி கோபால் said...

இதுக்குத்தான் ஸ்பீக்கர் ஃபோன் வச்சுருக்கேன்:-))))

pudugaithendral said...

என்ன பொய் சொல்வாங்க, எப்படி எப்படி எல்லாம் பேசுவாங்க இதெல்லாம் தெரியாதா?

நளாயினி said...

ஓகோ கதை இப்பிடிப்போகுதோ. அது தானே பாத்தன். என்ரை விட்டுக்காரர் ஏனடா எனது friends ஓட தொலைபேசி கதைக்கேக்கை மைக்கை ஓன் பண்ணிறவர் என இப்ப புரியுது. அடப்பாவி மவனே. வைக்கிறன்டி வேட்டு. ( எனது கணவர் கதைக்கும் போது எனக்கெல்லாம் மைக் போடுற பழக்கமில்லை. )

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு நம் திறமைக்கு ஒரு பெரிய சவால்தான் Necessity is the mother of invention.

இது போல பல பல யுக்திகளை கையாண்டு திறமையாக வாழவேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது.

All points noted and started the decoded conversation practice.

ஒரு அப்பாவி
ஃப்யூச்சர் ரங்கமணி

மங்களூர் சிவா said...

//
Seetha said...

ரங்கமணி ஊரிலிருந்து ரிடர்ன்..மனுஷன் வழக்கமான புளுகுகளை விட்டுகிட்டு இருக்கிறார்...
//
எது பேசினாலும் புளுகுன்னு ஒரு முடிவோட கேட்டா அப்பிடித்தான் தெரியும் உங்களுக்கு கவுன்சிலிங் பன்னனும் போல இருக்கே!!!!!!!

:))))))))))))

குறிப்பு : ஸ்மைலி போட்டிருக்கேன் பார்க்கவும்

CVR said...

LOL!!!
துளசி டீச்சரின் மறுமொழி
LOLOL!!! :-)))))

வடுவூர் குமார் said...

இது இன்னொரு துருப்புச்சீட்டு.

இலவசக்கொத்தனார் said...

எல்லாம் சரிதான்.

//"சரிடா. ரொம்ப நேரம் போன்ல பேசினா என் வைஃப்புக்கு பிடிக்காது. வச்சுடட்டுமா?"//

ஆனா இந்த மாதிரி எல்லாம் முடிச்சா அவங்களுக்கு நாமளே போட்டுக்குடுக்கற மாதிரி. இது இன்னும் கொஞ்சம் நேச்சுரலா இருக்கணும்.

"ஆமாண்டா, இப்பவும் முன்ன மாதிரி இருக்க முடியுமா? அவங்களும் எவ்வளவோ பண்ணறாங்க. நாம இதெல்லாமாவது செய்ய வேண்டாமா?"

இப்படி முடிச்சா நண்பனுக்கும் நாம சொல்லறது புரியும். அந்தப் பக்க பேச்சு கேட்காத தங்கமணிக்கும் ரொம்ப சந்தேகம் இல்லாம இருக்கும்.

பாச மலர் / Paasa Malar said...

உண்மைய ஒழுங்காச் சொன்னா தங்கமணி ஒ.கே சொல்லிடுவா..இப்டி விளையாண்டா..அப்றம் 144 தான்..சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம்

//இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, நாம் என்ன பேசறோம்ன்றது நமக்குத் தெளிவாத் தெரியணும். கோட்டை விட்டுடக்கூடாது.//

இங்கதான் சொத்ப்பிருவாங்களே....ஹையா..

மங்களூர் சிவா said...

//
பாச மலர் said...
உண்மைய ஒழுங்காச் சொன்னா தங்கமணி ஒ.கே சொல்லிடுவா..இப்டி விளையாண்டா..அப்றம் 144 தான்..சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம்

//
இந்த போலீஸ் ஸ்டேசன்ல சொல்லுவாங்க நீயே ஒத்துகிட்டா ரெண்டு மாசம்தான் இல்லை மவனே ஆயுசுக்கும் இங்கதான்கிற மாதிரில்ல இருக்கு.

சரி அப்பிடியே ஒத்துகிட்டா மட்டும் விட்டுருவானுகளா எப்பிடியும் களி தான்.

பாசமலர் உங்க 'பாச்சா' பலிக்காது!!!!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<== "சரக்கைச் சொல்றியா?" ==>
ஹா ஹா ஹா விழுந்து விழுந்து சிரித்தேன்.

நக்கீரன் said...

ரெண்டு நாள் கழிச்சு வந்தாக்கூட என் வீட்ல கண்டுபுடிச்சர்றாங்க சார்.("ஹாஸ்பிட்டல் போனேன்னு சொன்னீங்க சர்ட்ல பினாயில் வாசனை வரலையே? வேர வாசனைல வருது".)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க காசி..

கம்ப்யூட்டர்மேல மட்டுமில்ல, கம்ப்யூட்டருக்கு அக்கம் பக்கத்துல கூட சூடான காபி கொட்ட்டிடும் :-))

வாங்க மதுரையம்பதி.. பிரச்னை வந்தா யோசனையும் கூடவே வருது!

நாகை சிவா,

அனுபவிச்சும் எழுதலை, அனுபவத்தையும் எழுதலை - நீங்க எல்லாம் அனுபவிச்சுடக்கூடாதுன்னுதான் எழுதறேன்!

பினாத்தல் சுரேஷ் said...

பெண்ணிய வாதி.. எங்களுக்கும் சொல்லுங்க, எனக்கு லோக்கல் கால்தான்.. யாரந்த அமீரகக் கயவன்? நிச்சயமா எதாச்சும் அப்பாவிப் பொண்ணு(?!) இருந்தா காப்பாத்திடுவோம்..


சீதா, //மனுஷன் வழக்கமான புளுகுகளை விட்டுகிட்டு இருக்கிறார்...// அவர் என்ன சொன்னாலும் பொய்தான்னு முன்முடிவோட அணுகினீங்கன்னா எப்படி?

துளசி அக்கா,

எல்லா ஸ்பீக்கர் போனுக்கும் ஒரு ம்யூட் பட்டன் உண்டு.. சில ஸ்பீக்கர்கள் தவிர :-)

பினாத்தல் சுரேஷ் said...

புதுகைத் தென்றல், எல்லாம் தெரிந்துவிட்டால், எழுதும் பதிவிலே பிழையிருக்காது என்ற அர்த்தமா, அது பற்றி யாம் குற்றம் கூறக்கூடாதா?

நளாயினி, உங்க கணவரை தயவுசெய்து எனக்கு மெயில் போடச் சொல்லவும். கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது!

பினாத்தல் சுரேஷ் said...

மங்களூர் சிவா,

//All points noted and started the decoded conversation practice.//

அது நல்ல மாணவனுக்கு அழகு!!

//எது பேசினாலும் புளுகுன்னு ஒரு முடிவோட கேட்டா அப்பிடித்தான் தெரியும் //

அட.. இதேதான் நானும் சொன்னேன், நினைச்சேன் :-)))))))) (இங்கும் ஸ்மைலி :-)

பினாத்தல் சுரேஷ் said...

CVR , வாங்க. LOLக்கு நன்றி.

வடுவூர் குமார், சேத்துக்கிட்டே போறீங்க போலிருக்கு துருப்புச் சீட்டுகளை :-)

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தனார்,

//"ஆமாண்டா, இப்பவும் முன்ன மாதிரி இருக்க முடியுமா? அவங்களும் எவ்வளவோ பண்ணறாங்க. நாம இதெல்லாமாவது செய்ய வேண்டாமா?"
//

அய்யா.. எங்க உங்க காலு! நானும் யோசிச்சேன், எப்படி இந்த டயலாகை மேம்படுத்தறதுன்னு.. இது கலக்கல்.

பாசமலர்,

மங்களூர் சிவாவின் பதிலைப் பாருங்க :-)

மங்களூர் சிவா,

அட்டகாசமான பதில். என்ன கலக்கலா கம்பேர் பண்றாங்கப்பா..

பினாத்தல் சுரேஷ் said...

சாமான்யன் சிவா, நன்றி..

நக்கீரன், கிரிக்கெட் மேட்ச் பார்த்தா ஏன் வாசனையெல்லாம் வரப்போவுது :-)

இம்சை அரசி said...

ரொம்ப உபயோகமான பதிவுகள்... நாங்க எல்லாம் உஷாரா இருந்துப்போம் இல்ல ;)))

rv said...

இந்த மாதிரி என்க்ரிப்டிங் டெக்னாலஜிலாம் வேற கத்துக்கணுமா? ஹூம்...

64, 128 மாதிரி நீர் இங்க 1000 பிட் போடுறீரே.. கலாக்கும்...

பாச மலர் / Paasa Malar said...

தற்கால ரங்கமணிகளை விட future ரங்கமணி ரொம்ப உஷாராத் தாயாராகிட்டு வர்றார்...

பினாத்தல் சுரேஷ் said...

இம்சை அரசி, வாங்க.. நீங்க உஷாரா ஆனா, நாங்க அதுக்கும் மருந்து கண்டுபிடிப்போமில்ல!

ராம்நாதா, டெக்னாலஜி அது இதுன்னு பயப்படறதைவிட, சுலபமா பாடம்னு நெனச்சுப் படிக்கலாமே!

ஆமாம் பாசமலர்.. உஜாரா இருக்காங்க பசங்க.. தயாராயிட்டாங்க :-)

இலவசக்கொத்தனார் said...

//ரெண்டு நாள் கழிச்சு வந்தாக்கூட என் வீட்ல கண்டுபுடிச்சர்றாங்க சார்.("ஹாஸ்பிட்டல் போனேன்னு சொன்னீங்க சர்ட்ல பினாயில் வாசனை வரலையே? வேர வாசனைல வருது".)//

நக்கீரன், இதுக்கு ஒரு கதை சொல்ல வேண்டியத்தான்.

ஒரு ரங்கமணி ஆபீஸில் லேட்டா வேலை செய்துட்டு வீட்டுக்குத் திரும்ப ரெடி ஆனான். அவன் கூட வேலை பார்க்கும் பொண்ணு தன்னை டிராப் பண்ணிட்டு போக சொல்லிச்சு. அங்க போயி கொஞ்சம் உள்ள வாங்களேன், எதாவது சாப்பிடுங்களேன், அது இதுன்னு கொஞ்சம் கசமுசவாயிடுச்சு. ரெண்டு பேருக்குமே ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ஒரு கண் இருந்திருக்கும் போல. எல்லாம் முடிஞ்சு பார்த்தா மணி பத்து ஆயிடுச்சு. தங்கமணி பத்து மணி ஆனா பத்ரகாளி ஆவாளே என்ன செய்யன்னு யோசிச்சான். அந்தப் பொண்ணும் குளிச்சுட்டு போங்க ப்ரெஷ்ஷா இருக்கும் எனச் சொன்னாள். இவன் அதெல்லாம் வேண்டாமுன்னுட்டு கீழ போயி கொஞ்சம் மண்ணை எடுத்து பேண்டில் எல்லாம் தேச்சுக்கிட்டான். ஷூவை அழுக்காக்கிக்கிட்டான். ஏற்கனவே கலைந்திருந்த முடியை நல்லா கலைச்சுக்கிட்டான். அப்புறமா வீட்டுக்குப் போனான்.

அங்க வழக்கம் போல பத்ரகாளி ரெடியா இன்னிக்கு என்ன கதை அப்படின்னு உறுமினாங்க. இவனும் ஆபீஸில் ஆரம்பிச்சு நடந்தது எல்லாம் ஒண்ணு விடாம உண்மையைச் சொன்னான்.

இவனோட தலையையும் உடையையும் ஒரு பார்வை பார்த்திட்டு, வழக்கம் போல உங்க உதவாக்கரை நண்பர்களோட ராத்திரி லைட் போட்டு டென்னிஸ் பால் கிரிக்கெட் ஆடிக்கிட்டு வந்திருக்கீங்க சின்ன பசங்க மாதிரி. இதுல உங்களுக்கு இன்னொரு பொண்ணு கேட்குதோ. என்னிக்குத்தான் உண்மையைச் சொல்லப் போறீங்களோ. சொல்லறதை கொஞ்சம் நம்புறா மாதிரி சொல்லவாவது பழகிக்குங்க. போயி குளிச்சுட்டு வாங்க அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.

இவனும் இனிமே அடிக்கடி கிரிக்கெட் விளையாட வேண்டியதுதான்னு நினைச்சுக்கிட்டே குளிக்கப் போயிட்டான்.

ஆக, சில சமயம் உண்மையையும் பேசணும். ஆனா எப்படி பேசணும் என்பதை நல்லா தெரிஞ்சுக்கணும். புரியுதா?

(இப்படி ஒரு உப்புமாவை பின்னூட்டமா போட்ட எனக்கு உப்புமா வெறியா பின்னூட்ட வெறியான்னு பட்டிமன்றம் நடத்தறாங்கப்பா. ரெண்டு கண்ணில் எந்தக் கண்ணு நல்ல கண்ணுன்னு பேசறாங்கப்பா!)

பினாத்தல் சுரேஷ் said...

ஆஹா கொத்தனாரே..

அருமையான உதாரணக்கதையைச் சொல்லி எம் ஐயப்பாட்டை நீக்கிய உமக்கே ஆயிரம் பின்னூட்டங்கள்!

துளசி கோபால் said...

//இப்படி ஒரு உப்புமாவை பின்னூட்டமா போட்ட எனக்கு...//

//அருமையான உதாரணக்கதையைச் சொல்லி எம் ஐயப்பாட்டை நீக்கிய உமக்கே ஆயிரம் பின்னூட்டங்கள்!//

கொத்ஸ்,

நன்றி.


பினாத்தலாரே,

ஆகக்கூடி நம்ம கட்சிக்குத் தாவியதுக்கு உங்களுக்கும் நன்றி.

ஒரு உப்புமாவுக்கு 1000 பின்னூட்டம்:-))))))

இது வெறியேதான். வேறொன்றுமில்லை:-)))))))

Anonymous said...

Superb.
I read second time red fonts only. Because those are the statements wife is going to hear. It makes sense.
Nice. Keep posting.

கோபிநாத் said...

உண்மையான வாத்தியாருன்னு நிருப்பிச்சிட்டிங்க :)

சுரேகா.. said...

அய்யா...! தெய்வமே..
இதே மாதிரி அடிக்கடி

அய்டியா போடுங்க சாமீ..!

பினாத்தல் சுரேஷ் said...

துளசி அக்கா,

//இது வெறியேதான். வேறொன்றுமில்லை:-)))))))//

இப்பத்தான் ஓட்டெடுப்பு எல்லாம் முடிஞ்சு ரிசல்டும் சொல்லியாச்சில்ல, இனிமே தைரியமா சொல்லலாம் - நான் உப்புமாக்கு வாதாடினேனே ஒழிய உள்ளூற பின்னூட்டக்கட்சியேதான் :-)

Sabes, நன்றி.கொத்ஸோட கடைசி வரி கரெக்ஷனையும் பின்னூட்டத்துல பாத்துக்கங்க :-)

கோபிநாத், அப்ப இவ்ளோ நாள்?

சுரேகா, போட்டுட்டா போச்சு ;-)

Sridhar Narayanan said...

I remember a scene in the movie Panchatantram.

http://www.youtube.com/watch?v=HnDw3Jd0yN0

Sorry - Teluguthaan kidaichathu.

ramachandranusha(உஷா) said...

கதை என்று புருடா விட்ட இலவசத்துக்கு இந்த பழமொழியை அர்ப்பணிக்கிறேன்
:நுணலும் தன் வாயால் கெடும்

ramachandranusha(உஷா) said...

கதை என்று புருடா விட்ட இலவசத்துக்கு இந்த பழமொழியை அர்ப்பணிக்கிறேன்
:நுணலும் தன் வாயால் கெடும்

Anonymous said...

Hi pinathal unga padhivugal supera irukku.. idhu pona course 6 ku potta padhivu anga padhivagalanu inga pottuttan, naan blog-ku pudhusu mathapadi manaivi torture-kulaam naama romba palazudhanunga

ella course-um padichanenunga pinnoottam ida member aga venedumame ..annonya poda viruppam illai adhanala podavillanga.. ana inga oru pinnoottam parthanenunga ..adukkum mela adakka mudiyalanga .. azhugayadhanyaa...

//தனக்காக செருப்பு வாங்க தம்பதி சமேதராய் கிளம்பி தங்க நகை வாங்கி திரும்பி வந்த அப்பாவி ஒருவன்//

idha padichadhum ennoda sambavam ondru ninaivukku vandhadhu, yaruppa adhu seruppu vanga poi thangam vangi vandha mavaraasa .. naamellam ore saadhi .. kalankaadhe avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

inimale memberagi ozhunga vaguppil mudhal maanavanaga virumbugirane. Amaam yaaro oru akka ungala mcp appadinu solluchungale avanga veetu computera poi partha keyboardla M, C, P indha moonu keeyum odanju poyirukkum avvalavu veriya aluthiyiruppanga.. avvalavu kovam kandippa unga mela irukkum .. paavam avaradhu kanavar

edhirikku evvalavu eriyudho avvalavum unmaidhaanungala enna naan solradhu.. neenga pinathunga thozhare

koodiya viraivil memberayuduvanunga so ennayum MCP-nu poduvangaloo avvvvvvvvvvvv idhu afghanistanla anugundu irukunu america adha azhicha kadhaidhaan...

tamilla eppadinga type panradhu yaaravadhu sollunnga..

பினாத்தல் சுரேஷ் said...

ஸ்ரீதர் வெங்கட்,

தெலுங்கா இருந்தா என்ன.. அங்க க்ராஸ் ஆவறச்சே ரமேஷ் அரவிந்த் பம்முவார் பாருங்க.. சரியான தேர்வு இந்த பாடத்துக்கு ;-)))

உஷாக்கா, ரெண்டு முறை சொன்னா மட்டும் கொத்ஸ் பயந்துருவாரா என்ன?

சரவணன், பின்னூட்டம் போட மெம்பரா ஆகணுமா? இதென்ன கலாட்டா? இந்தப்பதிவுக்கு அனானியாகூட போடலாமே..

சரி இருக்கட்டும்.. நம் குல மேன்மைக்காக வந்த மாணிக்கமே வருக, தங்கள் மேலான கருத்துக்களைத் தருக!

தமிழ்லேடைப் அடிக்கறதுக்கு நிறைய சைட்லே சொல்லித்தராங்க..எனக்கு உடனே நினைவுக்கு வருவது http://gilli.in..அதுல read/write in Tamilனு ஒரு டேப் இருக்கும், அதுல விளக்கமா இருக்கு, இல்லைன்னா எனக்கு மெயில் போடுங்க, விளக்கறேன்.

Anonymous said...

usha akka, the story said by 'ilavasam' is a famous 'sexist' joke-kka(not sexiest). poor ilavasam anna. survival of fitness-la thodai-la killu ellam vaangi irukkaaru.. avarap poi...

an admirer

பாலராஜன்கீதா said...

இடுகைகளைப்படித்தால் எல்லாம் ரங்கமணிக்கு உதவுவதுபோல் இல்லை. தங்கமணிக்கு எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்துவிட்டு சரணாகதி ஆவதுபோலத்தான் இருக்கு. (ஆனால் தங்கமணிக்கு நம்பிக்கை ஏற்படுத்த இவை எல்லாம் சில டெக்னிக்தாம் என்று பினாத்தலார் சொல்லாமல் சொல்கிறார் என்றும் எடுத்துக்கொள்ளலாமா?)
:-)

நக்கீரன் said...

//நக்கீரன், இதுக்கு ஒரு கதை சொல்ல வேண்டியத்தான்\\

இந்த பின்னூட்டத்தை நான் படிச்சிட்டிருந்தபோது பின்னாடி இருந்து என் ஊட்லயும் படிச்சிட்டாங்க.
"யாரிந்த பினாத்தல் இனிமேல் இந்தாளோட பதிவ படிச்சீங்க பிச்சுப்புடுவேன்"னு மிரட்டுராங்க.
இதிலிருந்து தப்பிக்க இன்னோரு பின்னூட்ட கதை போடுங்க.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
"யாரிந்த பினாத்தல் இனிமேல் இந்தாளோட பதிவ படிச்சீங்க பிச்சுப்புடுவேன்"னு மிரட்டுராங்க. ==>
இதெல்லாம் வீட்ல யாரு படிக்கச்சொன்னா?அலுவலக்கத்தில் அப்படி என்ன ப்ளாக் படிக்கக்கூட முடியாதபடி வேலை?

ஹாரி said...

Hilarious!!

angel said...

hahaha very nice

Anonymous said...

வணக்கம்
மணவர்களின் அறிவை விருத்தி செய்யும் பதிவு இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பதிவைப் பார்க்கhttp://blogintamil.blogspot.com/2013/05/blog-post_11.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 

blogger templates | Make Money Online