Nov 11, 2007

எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதைப்பண்ண முடியாதா? (11 Nov 07)

பாஸ்டன் பாலாவுடன் சேட்டிக்கொண்டிருந்தபோது நான் எழுதும் திரை விமர்சனங்களைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் ஒரு சவால் விட்டார். அந்தச் சவாலை ஏற்றபோது எனக்கு வந்த எண்ணம் - "எவ்வளவோ பண்ணிட்டோம், இதைப்பண்ண முடியாதா?" என்றுதான்.
 
சவால் இதுதான்: ஒரு திரைப்படத்துக்காவது, நான் பாஸிடிவாக விமர்சனம் எழுத வேண்டும்.
 
"வேல்" திரைப்படத்துக்குப் போவதாக முடிவு செய்திருந்த வேளையில், இந்தச் சவால் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. நல்ல நடிகராக வளர்ந்துகொண்டிருக்கும் சூர்யா; சாமி, தாமிரபரணி போன்ற சுவாரஸ்யமான மசாலாக்களைக் கொடுத்த ஹரி; நெஞ்சில் ஒட்டிக்கொண்டிருக்கும் பிசின் அசின்; நகைச்சுவைக்கு வடிவேலு; ஹிட்டாகத் தள்ளிக்கொண்டிருக்கும் யுவன்;-- கூட்டணி, ஒரு சுவாரஸ்யமான படத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்புகளைக் கிளறிவிட்டது. கவனிக்கவும் - நான் தமிழ் சினிமாவைப் புரட்டிப்போடும் ஒரு நெம்புகோல் படத்தை எதிர்பார்க்கவில்லை - 3 மணிநேர பொழுதுபோக்கை மட்டுமே எதிர்பார்த்துப் போனேன்.
 
ஆனால், சவாலில் தோல்வி அடைந்துவிட்டதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
 
ரயிலில் பிரியும் இரட்டைக் குழந்தைகள், அரிவாள் ஒரு சூர்யாவுக்கு, அறிவால் ஒரு சூர்யாவுக்கு, பேமிலி செண்டிமெண்ட் என்று கதையின் முடிச்சு வகுக்கப்பட்ட விதிகள் மாறாமல்!
 
ஒரு சூர்யா  ஒரு பிரம்மாண்டமான குடும்பத்தில் (ஹரியின் வழக்கமான - யார் என்ன எங்கே எப்படி உறவு என்று தெரியாமல் எல்லா நேரமும் ப்ரேமில் 20 - 25 உறவினர்கள் உள்ள குடும்பம்! பாதி பேர் செட் ப்ராப்பர்டி போலத்தான் வருகிறார்கள்- மூணுபேருக்கு மட்டும் மொத்தம் அரைப்பக்கத்துக்கு வசனம்!) வளர, இன்னொரு சூர்யா சிந்திய கண்ணும் அழுத மூக்குமாய் காணாமல் போன மகனைப்பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் சரண்யாவிடம் வளர்கிறார். (நிச்சயமாக சம்பளத்தைவிட கிளிசரின் செலவு அதிகமாயிருக்கும்). பின்னர் ஒருவரையொருவர் தெரிந்துகொண்டு ஒரு சுருக்கமான ஆள்மாறாட்டம் செய்து, வில்லனைப் பந்தாடி இணைகிறார்கள்.
 
கதையில் எனக்குப் பெரிய வருத்தம் ஏதும் இல்லை. இதைவிட கதையம்சம் குறைவாக இருந்த படங்களையும் திரைக்கதையால் தேற்றி, கொட்டாவி விடாமல் 3 மணிநேரத்தை நகர்த்திய ஹரிக்கு இப்போ என்ன ஆச்சு? எதிர்பார்க்க முடியாமல் ஒரே ஒரு காட்சி, ஒரே ஒரு வசனம் கூட இல்லாமல் நகர்த்த வேண்டிய கட்டாயம் என்ன? ஆள்மாறாட்டத்தில் கூட ஒரு சஸ்பென்ஸ் கிடையாது, சம்மந்தப்பட்ட எல்லாருக்கும் இப்போது இங்கே இருப்பது யார் என்று தெளிவாகத் தெரிகிறது!
 
சூர்யா பஞ்ச் டயலாக் பேசும்போது அவராலேயே சிரிப்பை அடக்கமுடியவில்லை. ஓப்பனிங்கில் பறந்துகொண்டே எதையாவது கொளுத்திக் கொண்டு எண்ட்ரி, பெண்கள் எப்படி உடையணியவேண்டும் என்ற லெக்சர், அரிவாளள எப்படிப் பிடிக்கவேண்டும்,  சட்டைமடிப்பு கலையாமல் 500 பேரைப் பந்தாடுவது --இதையெல்லாம் மற்றவர்களுக்கு விட்டுத் தந்துவிட்டு வித்தியாசமான பாத்திரங்களில் நடிப்பதையே தொடரலாம் அவர்.
 
அசினுக்கு வேலை ரெண்டு டூயட் தான்.  ஹரி வேகமான இயக்குநர்தான், ஆனால் அசினுக்கு மேக்கப் போட இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கலாம் - கட்சி மாற வைத்துவிடுவார் போல!
 
வடிவேலு காமடியில் டீக்கடையில் அரை நிமிடத்தில் கலவரம் ஏற்படுத்தும் ஒரு காட்சி மட்டும் தேறுகிறது. மற்றபடி ஒண்ணும் பெரிசா இல்லை.
 
வில்லனாக கலாபவன் மணி - வில்லனா, காமடியனா என்றே புரியாமல் பாதிப்படம் நகர்கிறது. வழக்கம்போல முட்டாள் வில்லன், பனைமரத்தை எரிப்பது, பழைய சேலையை பிடுங்குவது என்ற ரேஞ்சுக்கு சாத்வீகமான வில்லன்!
 
யுவனுக்கு என்ன ஆச்சு? "கனாக்காணும் காலங்கள்", "முன்பனியா முதல் மழையா" ரேஞ்சுக்கு பாடல் வேண்டாம் - ஒரு "கருப்பான கையால என்னைப் புடிச்சான்" "சரோஜா சாமான் நிக்காலோ" ரேஞ்சுக்குக் கூட பாடல் போடவில்லை! பின்னணி இசையைப் பற்றி பேசாமலே இருந்துவிடலாம். காது இன்னும் வலிக்கிறது!
 
தலைப்பைப் பார்த்து இது அழகிய தமிழ்மகன் விமர்சனம் என்று நினைத்து வந்தவர்களுக்கு மட்டும் : இன்னும் அந்த விபத்து நடக்கவில்லை - காலத்தின் சூழ்நிலைக்கைதியாக இருக்கும் பினாத்தலாருக்கு நிச்சயம் நடக்கக்கூடிய விபத்துதான் - தள்ளிப்போடப்பட்டிருக்கிறது அவ்வளவே!
 

25 பின்னூட்டங்கள்:

Unknown said...

//ஆனால், சவாலில் தோல்வி அடைந்துவிட்டதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.//

ஜெயிக்க வுட்ருவாய்ங்களா அவிங்க?

முரளிகண்ணன் said...

ATM also boring

Anonymous said...

என்ன கொடும சரவணண் ? 'சாமி' படம் எப்படியோ செட்டாகி ஓடியதுக்கு 'சாமி' க்கு தான் நன்றி சொல்லனும் போலிருக்கு....அதுக்கு பிறகு ஹரி எடுத்த எல்லாம் சொறி(sorry)..சரியில்லை...

முகமூடி said...

அசினுக்கு ரெண்டே ரெண்டு பாடலா? இந்த படத்தை இனமான தன்மான வெகுமான பகுமான கணிசமான உணர்வுள்ள உலக தமிழர்கள் மொத்தமாக புறக்கணித்து கஞ்ச இயக்குனர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள்...

*

// அசினுக்கு மேக்கப் போட இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கலாம் - கட்சி மாற வைத்துவிடுவார் போல //

திருவிழா கூட்டத்தில் கலர் காகிதம் சுற்றப்பட்ட ட்யூப்லைட் தருவதுதான் வெளிச்சம்தான் என்ற நம்பிக்கையில் வாழ்பவர்களுக்கு சந்திர ஒளி டல்லாகத்தான் தெரியும்.

நீர் என்ன கட்சி மாறுவது.. மேற்கண்ட வாக்கியத்துக்கு பகிரங்க மன்னிப்பு கடுதாசி தரும் வரை உம்மை பமக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நான் (பொதுக்குழு + செயற்குழு) ஒதுக்கி வைக்கிறேன்...

Anonymous said...

இது அல்லவா "வெற்றிகரமான தோல்வி" :-)

Anonymous said...

எங்கள் பின்னூட்டங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப் படாமல் இருந்து வந்தால் உங்கள் வலைப்பூ முகவரி
தமிழ்ஹப்லாக் என்னும் அரிய இனையதல நிர்வாகிகளுக்கு அளிக்கப் படும் என்பதைத் தெரிவித்துக் கொல்கிறோம்!

Anonymous said...

இது எச்சரிக்கையா? வேண்டிகோளா?

Anonymous said...

இது எச்சரிக்கை அல்ல!

கட்டளை!
கட்டளை!
கட்டளை!

Radha Sriram said...

//சூர்யா பஞ்ச் டயலாக் பேசும்போது அவராலேயே சிரிப்பை அடக்கமுடியவில்லை"//


:):)!!

பினாத்தல் சுரேஷ் said...

ஆமாம் தஞ்சாவூரான்! இந்த மாதிரி சவால்லே ஜெயிக்க விடறதில்லைன்னு பிடிவாதமாத்தான் இருக்காங்க!

முரளி கண்ணன், அது நல்லா இருக்காதுன்றது தெரிஞ்சதுதான். இது மேலே கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது!

அப்படிச் சொல்ல முடியாது செந்தழல் ரவி, தாமிரபரணி சுவாரஸ்யமாத்தான் இருந்தது. பெரும்பாலும் சொறின்னு வேணா வச்சுக்கலாம் :-)

வாங்க தலை, ரெண்டு இல்லை, மூணு. போராட்டத்தை வாபஸ் வாங்கிக்கங்க!

அசின் கிட்டே இருந்து கட்சி மாறவச்சுருவான்னு டைரக்டரைத் திட்டியது குற்றம்னா, கனத்த இதயத்தோடு உங்க முடிவை ஏற்கிறது தவிர வேற வழியில்லை சொல்லிக்கிற அதே நேரத்துல, என் பின்னால உள்ள கோடிக்கணக்கான தொண்டர்களையும் நினைச்சுப் பாத்து ஒரு நல்ல முடிவு எடுப்பீங்கன்னு நம்பறேன்.

அனானி, தோற்றது வருத்தம்தான். அதுல எங்க வந்தது வெற்றிகரம்?

பினாத்தல் சுரேஷ் said...

பழமொழிக்காரர்களே, புரிஞ்சுக்கங்க.. 10 பின்னூட்டம் தொடர்ந்தாப்போல பதிவுக்குத் தொடர்பில்லாம வந்தா வாசிக்கறதுக்கு வசதிப்படாது. அப்படி ஒரு பதிவு வந்தா நான் படிக்கமாட்டேன் :-)

ஹாப்லாக் காரங்களுக்கு என் பதிவு தெரியாதுன்னு உங்களுக்கு யாரு சொன்னது? நானும் அவங்களுக்கு நெடுநாள் ரெகுலர் கஸ்டமர்தான் :-))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி நாகை சிவா.

ராதா ஸ்ரீராம் - ஆமாம், கவனிச்சுப்பாருங்க.. நம்மளைப்போயி இதையெல்லாம் செய்யச்சொல்லி படுத்தறான் பாரு இந்த டரக்டர்ன்ற எண்ணமே தெரியும் :-)

இலவசக்கொத்தனார் said...

ஆஹா! பார்க்க வேண்டாத படங்கள் லிஸ்டில் இன்னும் ஒண்ணு.

அந்த வடிவேலு சீனை அப்புறமா சன் ரீவியில் பார்த்துக்கறேன்.

தல, இந்தாளு போக்கே சரி இல்ல தல. இவரே இவரு பெயரை சுருக்கி பெனாத்தலாருன்னு வெச்சுக்கிட்டாரு. அப்பவே எனக்கு சந்தேகம் தல. ஏற்கனவே ஒரு முறை பொது மன்னாப்பு கேட்டாரு. அப்ப இருந்தே ஆள் கொஞ்சம் சரி இல்லை. நீங்களா எடுத்த முடிவு சரிதான் தல. இவரு சொல்லும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பிடிச்சுத் தர காண்ட்ராக்டே நம்ம கையில்தான் இருக்கு தல, அதனால ரொம்ப கவலைப் படாதீங்க.

அப்படியே நமக்குப் பிரமோஷன் தந்து ரொம்ப நாள் ஆச்சு தல. கொஞ்சம் பார்த்து செய்யுங்க தல.

குமரன் (Kumaran) said...

//சூர்யா பஞ்ச் டயலாக் பேசும்போது அவராலேயே சிரிப்பை அடக்கமுடியவில்லை"//


உண்மை. எனக்கும் அப்படி தான் தோணிச்சு. :-)

Boston Bala said...

---யுவனுக்கு என்ன ஆச்சு?---

அதானே...

---வேல்" திரைப்படத்துக்குப் போவதாக முடிவு செய்திருந்த வேளையில்---

தைரியம் ரொம்ப ஜாஸ்திதான். 'மச்சகாரன்' தான் தேரும் போல!

பினாத்தல் சுரேஷ் said...

கொத்துஸ்,

//அந்த வடிவேலு சீனை அப்புறமா சன் ரீவியில் பார்த்துக்கறேன். // சரியான முடிவு.. ஆனா என் செலவுல நீங்க சிக்கனமா இருக்கீங்களே.. ஒரு பர்சண்ட் வெட்டவேணாம்?

ஆமாம் குமரன்..

பாபா! மச்சக்காரனா? இனிமே தெரிஞ்ச, அறிஞ்சவங்க நல்ல விமர்சனம் கொடுக்கற வரைக்கும் எந்தப்படமுமே பாக்கறதில்லைன்னு முடிவு பண்ணி இருக்கேன் (ஓம் ஷாந்தி ஓம் விதிவிலக்கு :-))

பினாத்தல் சுரேஷ் said...

அப்பால கொத்துஸ், எப்ப இருந்து இந்த putting & giving Services ஆரம்பிச்சீங்க?

//இவரே இவரு பெயரை சுருக்கி பெனாத்தலாருன்னு வெச்சுக்கிட்டாரு.// சுரேஷ்னு நீளமா இருந்த பேரை பெனாத்தலார்னு சுருக்கமா வச்சுகிட்டேனா? மக்கள் அன்பா அளிச்ச அடைமொழிய்யா அது!

//இவரு சொல்லும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பிடிச்சுத் தர காண்ட்ராக்டே நம்ம கையில்தான் இருக்கு தல, அதனால ரொம்ப கவலைப் படாதீங்க. //

இதுக்கு நான் பதில் சொல்ல விரும்பலை!

Anonymous said...

//பழமொழிக்காரர்களே, புரிஞ்சுக்கங்க.. 10 பின்னூட்டம் தொடர்ந்தாப்போல பதிவுக்குத் தொடர்பில்லாம வந்தா வாசிக்கறதுக்கு வசதிப்படாது. அப்படி ஒரு பதிவு வந்தா நான் படிக்கமாட்டேன் //

அர்ஜுனனுக்கு ஒரு வில்லு!
பழமொழிக்காரனுக்கு ஒரு சொல்லு!

ஆனாலும் குறையாது லொள்ளு!
வாங்கிக்கய்யா என்னோட பில்லு!

வேல் திரைப்படம் நல்லாத்தானே இருக்கு! அதிலென்ன குறைச்சல்!

பினாத்தல் சுரேஷ் said...

புரிஞ்சிகிட்டதுக்கு நன்றி பழமொழிக்காரரே!

வேல் படம் நல்லாதான் இருந்ததா? சரி :-)

மங்களூர் சிவா said...

இதுவும் தேறாதா??

//
தலைப்பைப் பார்த்து இது அழகிய தமிழ்மகன் விமர்சனம் என்று நினைத்து வந்தவர்களுக்கு மட்டும் : இன்னும் அந்த விபத்து நடக்கவில்லை - காலத்தின் சூழ்நிலைக்கைதியாக இருக்கும் பினாத்தலாருக்கு நிச்சயம் நடக்கக்கூடிய விபத்துதான் - தள்ளிப்போடப்பட்டிருக்கிறது அவ்வளவே!
//
சரி சரி சீக்கிரம் அந்த விபத்து நடந்து ஒரு விமர்சனம் போடும் நான் செகண்ட் ஒப்பீனியன்காகதான் இங்க வந்தேன்.

பினாத்தல் சுரேஷ் said...

ஆமாம் மங்களூர் சிவா.. தேறாது :-(

அழகிய தமிழ்மகனுக்கு காலவரையறையற்ற வாய்தா கேட்டிருக்கிறேன், என்ன ஆகுது பாப்போம் :-)

Anandha Loganathan said...

என்னாது இதுவும் "அழுகிய" தமிழ்மகன் போல டபுள் ஆக்டா ?

"எவ்வ்ளவோ படம் ஓடுது, இந்த படம் ஓடாதா?" அப்படின்னு தான் நினைப்பு.

பினாத்தல் சுரேஷ் said...

ஆனந்த லோகநாதன்,

//எவ்வ்ளவோ படம் ஓடுது, இந்த படம் ஓடாதா?//

அதேதான்!!

தமிழ்பித்தன் said...

எங்கள் பின்னூட்டங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப் படாமல் இருந்து வந்தால் உங்கள் வலைப்பூ முகவரி
தமிழ்ஹப்லாக் என்னும் அரிய இனையதல நிர்வாகிகளுக்கு அளிக்கப் படும் என்பதைத் தெரிவித்துக் கொல்கிறோம்!/////

ஆகா இது வலைப்பூவை எமனிடம் காட்டிக்குடுக்கிற வேலையாச்சே!

Unknown said...

ஆகா மறுபடியும் பமக கோஷமா???

வேல் கொடுத்த எபெக்ட்டா??? ஹரி வாழ்க

 

blogger templates | Make Money Online