அவன் விகடன் வேண்டும் எனக்கேட்டிருக்கிறார் ராமச்சந்திரன் உஷா.
மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதையே லட்சியமாகக் கொண்ட பெனாத்தலார் அதற்கான ஆயத்தங்களில் உடனடியாக ஈடுபட்டுவிட்டார்.
இதில் எதுபோன்ற கட்டுரைகளும் தொடர்களும் ரெகுலர் துணுக்குகளும் வரவேண்டும் என்பதற்கு மகளிர் பத்திரிக்கைகளையே ஆதாரமாக எடுத்துக்கொண்டு தொழிலைத்தொடங்கிவிட்டார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
என் டைரி
என் பெயர் (வேண்டாமே) (Jean-Claude Van Damme இல்லை!), வயது 35. எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன.
திருமணமான புதிதில் வாழ்க்கை நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால் யார் கண்பட்டதோ, திடீரென்று என் வாழ்வில் புயல் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
ஆம் - என் மனைவி குறட்டை விடத் தொடங்கிவிட்டாள்!
DTS எஃபெக்ட்டில் தினமும் ராத்திரி 10 மணிக்கு மேல் அருகில் உள்ளவர் குறட்டை விடும்போது தூங்க முயற்சி செய்திருக்கிறீகளா? செய்து பாருங்கள்.. இதனால் என் தூக்கம் தினமும் கெட்டுப்போய் அலுவலகத்திலும் தூங்கி வழிந்ததால் வேலை போய்விட்டது.
இப்போது என் மனைவி ஏறத்தாழ 80 டெஸிபெல்லுக்கு மேல் குறட்டை விடுகிறாள். பகல் முழுவதும் அரட்டை, இரவு முழுவதும் குறட்டை என்று என் வாழ்க்கை சீரழிந்துவிட்டது.
நேயர்கள் என் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல முடியுமா?
வாசகர்கள் பதில்
நெல்லையிலிருந்து பரசுராமன் எழுதுகிறார்: என் தோழா, உனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எண்ணிப்பார்க்கும்போது என் கண்கள் கலங்குகின்றன. கொடுமைக்கார மனைவியரிடம் மாட்டி சீரழிந்து போய் இருக்கும் லட்சக்கணக்கான உன் போன்ற ஆடவர்கள் அந்தச் சிறையை விட்டு வெளியே வர வேண்டும். உடனடியாக விவாகரத்துக்கு எழுது. நாங்கள் இருக்கிறோம்.. தைரியமாக இரு. (இவர் முழு முகவரி எழுதவில்லை என்பது குறிப்பிடத்தகாதது)
ஆம்பூரிலிருந்து அன்பழகன் எழுதுகிறார்: என் கண்மணி, உன்னைப்போல் நானும் மனைவியின் குறட்டையால் அவதிப்படுபவன் தான். என்ன செய்வது! பகலின் அரட்டையையாவது தவிர்க்கலாம், இரவில் நாம் எங்கே போவது? ஏழைகளுக்கு இதிலிருந்து என்ன விடிவு? என்று நம் காதுகளுக்கு சுதந்திரம் கிடைக்கிறதோ அன்றுதான் முழுமையான விடுதலை நாடாகத் திகழ முடியும்.
ஆதம்பாக்கத்திலிருந்து கணபதி சுப்ரமணியம் (வயது 72) எழுதுகிறார். அந்தக்காலத்தில் எல்லாம், மனைவிகள் குறட்டை விடும்போது நாங்கள் காதில் துணியை அடைத்துக்கொள்வோம். சமீபத்தில் இல்லினாய்ஸில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேலை பார்க்கும் என் பேரன் இதற்கென்றே அழகாக வடிவமைக்கப்பட்ட ப்ளாஸ்டிக் காது அடைப்பானைக் கொண்டு வந்திருந்தான். அதற்குப் பிறகு கேர்ஃப்ரீயாக வாழ்கிறேன்,
மொத்த வாசகர்களின் தீர்வு விவரம் --
கஷ்டப்பட்டு சகித்துக்கொள் - 3%
விவாகரத்து செய் - 78%
காதில் பஞ்சு அடைத்துக்கொள் - 19%
குறட்டையைப்பற்றி டாக்டர் பத்ரனிடம் ஆலோசித்தபோது அவர் கூறியது:
குறட்டை என்பது தூக்கத்தில் மட்டுமே வரக்கூடிய ஒரு சத்தம். இப்படிப்பட்ட நோயாளிகள் விழித்துக்கொண்டிருக்கும் போது நல்ல நலத்துடனே தெரிவார்கள். அவர்களை சுலபமாக பிரித்துப்பார்க்க முடியாது. இந்த நேயர் குறிப்பிடும் வியாதி மிகவும் முற்றிப்போன நிலையில் இருந்தாலும், என் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால், இவர் மனைவிக்கு சிடி ஸ்கான், ரத்தப் பரிசோதனை, மரபணுப்பரிசோதனை அனைத்தும் நடத்தியபின், அவர்களிடம் பணம் மிச்சம் இருந்தால் இந்த வியாதியை குணப்படுத்திவிட முடியும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேபிள் கலாட்டா
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எஃப் டிவியின் பல நிகழ்ச்சிகளைப்பற்றிய கேள்விகளை அள்ளித்தெளித்திருந்ததால், நம் நீலகண்ட மாமா கைனெட்டிக் ஹோன்டாவை விரட்டி, மிலனில் இருக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜானைச் சந்தித்தார்.
"என்ன மாமா, ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணோம்" உற்சாகமாக வரவேற்றார் ஜான்.
"என்ன இப்பெல்லாம் உங்களை எஃப் டிவியிலே பாக்கவே முடியறதில்லே? என்று போட்டு வாங்கினார் மாமா.
"என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க? பாரீஸிலே ஃபேஷன் வீக், லாஸ் ஏஞல்ஸிலே ஃபெஷன் வீக் ரொம்ப பிஸியாயிட்டேனா - அதனாலேதான் உங்களைப் பார்க்க முடியலே" என்று சுகமாக அலுத்துக்கொண்டார்.
"இப்பெல்லாம் ஃபேஷன் டிசைனிங்க் ரொம்ப சுலபமாயிடிச்சு.. எல்லாரும் ஒரு கத்திரிக்கோலோட கிளம்பிட்டாங்க.. இருந்தாலும், எனக்கு பொறாமை எல்லாம் கிடையாது. நாகரீகத்தாய்க்கு செய்யற சேவையாவே இந்தத் தொழிலைக் கருதறேன்"னாரு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு.
வாசகர் கடிதம்
"மூன்டிவி"யிலே ராத்திரி 12 மணிக்கு வர மசாலா மிக்ஸ் லே வர பாட்டுக்களெல்லாம் சுத்த சைவமா மாறி விட்டன. ஏமாற்றமா இருந்தாலும், இளைய தலைமுறைக்கு நல்ல பாடல்களைக் காட்டற இவங்க சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்" என்று புகழாரம் சூட்டுகிறார், அம்பத்தூரிலிருந்து அறிவுடை நம்பி.
கயா டிவியில் கடந்த 15ஆம் தேதி செய்தி வாசித்த சொக்கலிங்கம் தன் மூக்குக் கண்ணாடியை புதிய ஃப்ரேமில் மாற்றிவிட்டார், புதுக்கண்ணாடி அவர் முகத்துக்கு மேலும் மெருகு சேர்க்கிறது" உணர்ச்சிவசப்படுகிறார், கடலூரிலிருந்து கலியபெருமாள்.
"8 ஆம் தேதி நடந்த ஃபுட் பால் மேட்ச்சின் இடைவேளையில் காண்பித்த காக்காய்கள் இரண்டும் மிக அருமை. ஒளிப்பதிவாளருக்கு திருஷ்டி சுத்திப் போடவேண்டும்" நெகிழ்கிறார் தேனியிலிருந்து குணசேகரன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாசகர் கோட்டா - அனுபவங்கள் பேசுகின்றன
காசியில் விஸ்வனாதர் ஆலயத்துக்கு சென்றிருந்தேன். அங்கே கோயில் வாசலில் செருப்பு விட்டுக் கொள்ளலாம் என்று சொல்லும் போது இடை மறித்த எங்கள் ஹோட்டல் மானேஜர், அங்கே அதிக செல்வாகும், 2 கிலோ மீட்டர் தூரம்தானே, இங்கேயே விட்டுச்செல்லுங்கள் என்று கூறினார்.
செருப்பில்லாமல் நடந்தது கஷ்டமாக இருந்தாலும், 25 பைசா சேமித்துவிட்டோம் என்ற திருப்தியில் வலி பறந்தே போய்விட்டது.
நம் ஊரில் உள்ள ஹோட்டல் மானேஜர்கள் இப்படி நடந்து கொள்வார்களா? சந்தேகம்தான்.
கிருஷ்ணன், கீழ்பாக்கம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாசகர் கோட்டா - வாண்டு லூட்டி
விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த என் பேரன் துஷ்யந்த் (வயது 4, UKG படிக்கிறான்), ட்வின்க்கிள் ட்வின்க்கிள் லிட்டில் ஸ்டார் ரைம் பாடச்சொன்னால், முதல் வரியைப் பாடிவிட்டு, இரண்டாவது வரியாக "ரஜினிதான் எப்பவும் சூப்பர் ஸ்டார்" என்று பாடுகிறான்.. இந்தக்கால பிள்ளைகளின் அறிவையும், விஷய ஞானத்தையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
தம்பித்துரை, தாம்பரம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுயமாய் தொழில் செய்வது எப்படி? (தொடர்)
இந்த வாரம் சுய தொழில் பகுதிக்க்காக, காலேஜ் வாசலில் டீக்கடை வைத்திருக்கும் மாதவன் நாயரைச் சந்தித்து பேட்டி கண்டோம்.
"முதலில் டீ மட்டும்தான் போட்டுக்கிட்டிருந்தேன். அப்புறம் முறுக்கு, புளி சாதம்னு பிசினெஸ் டெவெலப் ஆச்சு.
காலேஜ் பசங்க எல்லாம் டீ ஷர்ட் போடறாங்களேன்னு யோசிச்சு, நமிதா, அசின் படம் எல்லாம் பிரிண்ட் பண்ண பனியன்களையும் விற்க ஆரம்பிச்சேன்.
இப்போ நான் என்ன எல்லாம் பண்ணறேன்னு எனக்கே தெரியாது.
என்னை நம்பி இங்கே ஒரு குடும்பமும், கேரளாவிலே ஒரு குடும்பமும் பசியாற சாப்பிட முடியுது.
அதையும் தவிர, பசியோட வர தெரு நாய்ங்களுக்கு, பழைய பொறையை எல்லாம் போட்டு பசியாத்தறதுலே ஒரு ஆத்ம திருப்தியும் கிடைக்குது என்றார் நாயர்.
டீ செய்வது எப்படி?
- சுடுதண்ணீரை வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்
- டீ-பைகள் (மளிகைச் சாமான் கடைகளில் கிடைக்கும்) பக்கத்தில் வைத்து விடுங்கள்
- சர்க்கரை ஒரு கிண்ணத்திலும், பால் ஒரு பாத்திரத்திலும் அருகே வைத்து விடுங்கள்
- யாருக்கு எவ்வளவு வேண்டுமோ அதை அவர்கள் போட்டு சாப்பிடுவார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
(கோலங்கள் தொடரில் நடிக்கும் வில்லன் ஆதி, நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்)
கே: என் மேலதிகாரிக்கு என்னைக்கண்டாலே ஆவதில்லை. எதற்கெடுத்தாலும் சிடுசிடுத்து விழுகிறார். வேலையையே விட்டு விடலாம் போல இருக்கிறது. என்ன செய்வது ஆதி?
ஆதி பதில் : ஒரு குட்டிக்கதை கேள்விப்பட்டிருப்பீர்கள் - ஒரு ஊர்லே ஒரு காக்கா இருந்துதாம், அப்புறம் அது பறந்து போயிடுச்சாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? மாறுதல் மட்டும்தான் மாறாதது. இன்னிக்கு உங்கள் மேலதிகாரி உங்களைத் திட்டலாம். நாளைக்கு நீங்க மேலதிகாரி ஆயிட்டீங்கன்னா, எப்படித் திட்டறதுன்றதுக்கு ஒரு பயிற்சியா இதை எடுத்துக்குங்க. ஒண்ணு மட்டும் புரிஞ்சிக்கங்க - விழுந்தவனுக்கு கால்கள் எல்லாம் பூட்டு, எழுந்தவனுக்கு விரல்கள் எல்லாம் சாவி.
கே: என் மாமனார் என்னை மதிக்க மாட்டேன் என்கிறார்.. என்ன செய்வது?
ஆதி பதில் : பிட்டு போட்டாதான் எக்ஸாம்லே பாஸ் பண்ண முடியும், விட்டுக் கொடுத்தால்தான் வாழ்க்கையிலே பாஸ் பண்ண முடியும். அவர் உங்களை மதிக்காவிட்டால்தான் என்ன, "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"னு கண்ணதாசன் சொன்னா மாதிரி நீங்க வாழ்ந்து காட்டுங்க, அவர் உங்களை மதிக்க ஆரம்பிப்பார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்னும் கொஞ்சம் ஃபேஷன் பக்கங்கள், டாக்டர் பதில்கள், வாசகர் அனுபவங்கள் எல்லாம் சேர்த்தால், சூடான, சுவையான, நச்சென்ற அவன் விகடன் தயார்.
வினியோகஸ்தர்களே, உங்கள் பகுதிக்கு உரிமம் எடுக்க முந்துங்கள்.
வாசகர்களே! இன்னும் சில நாட்களில் உங்கள் கையில் தவழும் "அவன் விகடன்" - உங்கள் பேராதரவை எதிர்பார்க்கும்
ஆசிரியர் குழு.
67 பின்னூட்டங்கள்:
கலக்கிட்டீங்க... சான்ஸே இல்லை.
இருந்தாலும் உலகஞானம் உங்களுக்கு ரொம்ப ஓவர்:))))))
பி.கு:
தயவுசெயது இந்தப்பின்னூட்டத்தை வாசகர்கடிதப்-பகுதியில் பிரசுரித்து வீட்டில் மாட்டிவிட்டுவிட்டாதீகள்!
கலக்கிட்டீங்க... போங்க சுரேஷ்.
Excellent Suresh. Really enjoy reading it esp விழுந்தவனுக்கு கால்கள் எல்லாம் பூட்டு, எழுந்தவனுக்கு விரல்கள் எல்லாம் சாவி.
பிட்டு போட்டாதான் எக்ஸாம்லே பாஸ் பண்ண முடியும், விட்டுக் கொடுத்தால்தான் வாழ்க்கையிலே பாஸ் பண்ண முடியும்.
keep it up
-- Vignesh
எப்டீங்க இப்டியெல்லாம்??....எங்கயோ போய்ட்டீங்க !!! :-))
brillaint stuff. வாழ்த்துகள்.
enjoyed reading it.
Hi be careful,vikatan group may smuggle you and start avan vikan
with you as editor :))))))
சுரேஷ், இந்தப் பெண்கள் இதழ்களையெல்லாம் கன்னாபின்னான்னு தோய்ச்சுத் தொங்கவிடணும்னு என் நெடுநாளைய **ஆத்திரம்**, இன்னிக்கி தீர்ந்திடுத்து. சும்மா பின்னிப் பெடலெடுத்திருக்கீங்க!. :P
சுரேஷ்,
ஒரே கலக்கல்.
கொன்னுட்டீங்க.
நல்லா இருங்க.
எப்படியப்பா இப்படியெல்லாம் தோணுது?:-))))
நல்ல கலக்கலான அவன் விகடன்.
ஆனாலும் ப்ரூப் ரீடருக்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாம் ;-(
இப்படிக்கு,
அந்நியன்(னி) உஷா
ஏகப்பட்ட அவள் விகடன் வாசிப்பு போலிருக்கு...
// நம் ஊரில் உள்ள ஹோட்டல் மானேஜர்கள் இப்படி நடந்து கொள்வார்களா? சந்தேகம்தான். //
// இந்தக்கால பிள்ளைகளின் அறிவையும், விஷய ஞானத்தையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை //
// என்னை நம்பி இங்கே ஒரு குடும்பமும், கேரளாவிலே ஒரு குடும்பமும் பசியாற சாப்பிட முடியுது. //
டாப் ;-))))))
உண்மையிலேயே "சூப்பர், தல சூப்பர்!!!"
சும்மா நச்சுன்னு இருக்கு அவன் விகடன். பிரமாதம் போங்க. ஒரு பாசிடிவ் ஓட்டு போட்டாச்சு.
~
அனுப்புனர்: ஞானபீடம்
Dear Mr.பெனாத்தல்,
இந்த 'அவன் விகடன்' படித்தேன்; மிகவும் அருமை!
உம்ம கிரியேட்டிவிட்டியே அலாதி!
இதை 'அனுபவச் சிதறல்' அப்டீன்னு சொல்றது ரொம்பச் சரி! ;-)
சுரேஷ்
ரசித்து படித்தேன். ஆனாலும் உடைந்துபோன ட்ரில், ஸ்கூரு டிரைவர் மற்றும் சுத்தியலில் பயனுள்ளபொருட்களை செய்வதை பற்றி கேட்டு போட்டிருந்தால் என் போன்ற வாசகர்களுக்கு பயனுள்ளவையாக இருந்திருக்கும். அதேபோல கார் டயரில் பஞ்சர் ஒட்டு வது பற்றி ஒரு கேளுங்கள் பகுதியும் ஆரம்பித்துவிடுங்கள்.
அடி தூள்... ஏக்ளாஸ்... இந்த வலைப்பதிவுக்குப் போய் பெனாத்தல்னு பேர் வெச்சிருக்கீங்களே... உங்களை என்னன்னு சொல்றது...?
/அதற்குப் பிறகு கேர்ஃப்ரீயாக வாழ்கிறேன்/
haa haa haa
ஒண்ணு தெரியுது சுரேஷ்,
'அவள்' விகடன் உங்க வீட்டுக்கார அம்மா படிக்கிறாங்களோ இல்லியோ, நீங்க thorough-ஆ படிச்சிடுவீங்க போலும்.
//விழுந்தவனுக்கு கால்கள் எல்லாம் பூட்டு, எழுந்தவனுக்கு விரல்கள் எல்லாம் சாவி//
இது ஒன்னு போதுங்க! படிச்சிட்டு பீரிட்டுக்கிளம்பும் என் உற்சாகத்தை 'பீரி'ட்டுத்தான் அடக்கனும் போல!
கூடவே ஆண்களுக்கான வாழ்க்கைகுறிப்புகள் சிலதும் எதிர்பார்க்கிறோம்...
"நிறைய நாள் மாற்றாமல் போடும் காலுறையின் நாற்றத்தை தடுக்க இரண்டு பூண்டு வெங்காயத்தை தட்டி நசுக்கி ஷூவினுல் போட்டுவைக்கலாம்! நாற்றம் புதுவிதமாக இருப்பதுடன் வீட்டிலுல்ல மற்ற அனைவரும் அதே காலுறையை விரும்பிப்போடுவார்கள்.." என்பது போல..
really a very nice one...keep it up
கூட ஒரு மருத்துவர் கேள்வி பதில் பக்கம் ஆரம்பிச்சி ஆண் உபாதைகள் பத்தி போட சொல்லுங்க -:)
பெனாத்தலாரே,
நல்ல பதிவு...
//சிடி ஸ்கான், ரத்தப் பரிசோதனை, மரபணுப்பரிசோதனை அனைத்தும் நடத்தியபின், அவர்களிடம் பணம் மிச்சம் இருந்தால் இந்த வியாதியை குணப்படுத்திவிட முடியும்//
//புதுக்கண்ணாடி அவர் முகத்துக்கு மேலும் மெருகு சேர்க்கிறது" உணர்ச்சிவசப்படுகிறார், //
// அறிவையும், விஷய ஞானத்தையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
//
ரொம்ப புடிச்சுது.. :)))
முதலில் இந்தப் பதிவை சூப்பர் ஹிட் ஆக்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
உஷாவிற்கு ஸ்பெஷல் நன்றி. Concept நிலையிலேயே இந்தப்பதிவுக்கு ஊக்கம் அளித்து, சிறந்த சில மேம்படுத்தல்களையும் சொன்னமைக்காக. உதவி ஆசிரியர் நீங்க! ப்ரூப் ரீடர் இன்னும் பெரிய போஸ்ட் தெரியுமா? (ஆ.வி குழும பத்திரிக்கைகளில் முதன்மை பிழை திருத்துவோராக பா சீனிவாசன் பெயர் இருந்தது நினைவு இருக்கிறதா?
அன்பு - வாசகர் கடிதம் பகுதியிலே முதல் கடிதம் இப்படி இருக்கிறது எவ்வளவு செண்டிமென்டல் தெரியுமா? வீட்லேயிருந்து பர்மிஷன் வாங்கிடுங்க, போட்டுடலாம்.
நன்றி மோகன் தாஸ், விக்னேஷ், சுரேஷ் பாபு, மீனாக்ஸ்.
நன்றி ரவி சிறீநிவாஸ், அவங்களோட எடிட்டர் டெம்ப்ளேட்-ஐ காபி அடிக்கத்தான் முடியும்! ரெகுலர்-ஆ செய்தால் பைத்தியம் பிடித்துவிடும்.
ஜெயச்ரீ, எனக்கும் ரொம்ப நாள் ஆத்திரம் தான்!
நன்றி துளசி, கலை, முகமூடி, ரம்யா, *ராகவன்*, ஞானபீடம்.
தேன் துளி, நல்ல ஆலோசனை:-) அவசியம் சேர்த்துக்கொள்கிறேன்.
நன்றி ஐகாரஸ் பிரகாஷ், பெனாத்துறதாலேதான் இப்படியெல்லாம் சிந்திக்க முடியுது.
நன்றி மனிதன், தருமி. தருமி, தரோவா படிக்கறதுக்கு அது என்ன திருக்குறளா?
இளவஞ்சி, பயமா இருக்கு, நீங்க "சினேகிதன்"ன்னு போட்டிப் பத்திரிக்கை ஆரம்பிச்சிடுவீங்களோன்னு!
நன்றி மோகன், ராமநாதர். வெளிகண்டநாதர் - ஆரம்பிச்சிட்ட போச்சு. உங்களுக்கு என்ன உபாதை?;-)
பின்னிட்டீங்க!! ஆசிரியர் தலையங்கத்தையும் சேர்த்துக்குங்க. ;-)
சுரேஷ் பாராட்டுகள், அருமையாக சொல்லியிருக்கிங்க, நல்ல நகைச்சுவையாளராக இருக்கீங்க, உங்க நண்பர்கள் கொடுத்து வைத்தவங்க.
'இவன் தான் விகடன்' என்று சொல்லத் தோன்றுகிறது.
அசத்தல் சுரேஷ்
இதுக்கு மேல என்ன சொல்லன்னு தெரியல.
ஸ்ரீமதி போஸ்ட் இருக்கும் தானே
Suresh,
Excellent !!!
You are not பினாத்தல் சுரேஷ்,
You are அசத்தல் சுரேஷ் !!!
suresh,
"hilarious"!!!!! nalla sirikka vachiteenga...good job!!!
radha
உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி இராதாகிருஷ்ணன், பரஞ்சோதி, இப்னு ஹம்துன், மதுமிதா, பாலா மற்றும் ராதா ஸ்ரீராம்.
இராதாகிருஷ்ணன், மதுமிதா - தலையங்கம்தானே, கல்லூரி வாசலில் பெண்கள் அட்டகாசம் பற்றிப் போட்டா போச்சு:-)
பாலா - ரொம்ப நீண்ட இடைவேளைக்குப் பிறகு இங்கே வந்திருக்கீங்க! அலுவல் காரணமா? உடல்நிலை காரணமாக இருக்காது என்று நம்புகிறேன்.
Suresh,
//பாலா - ரொம்ப நீண்ட இடைவேளைக்குப் பிறகு இங்கே வந்திருக்கீங்க! அலுவல் காரணமா? //
CORRECT! Pressure followed by more pressure at work :-(
//உடல்நிலை காரணமாக இருக்காது என்று நம்புகிறேன்.
//
WRONG ! prophetic, indeed!But, thanks for your wishes. Pl. give your email ID to write to you.
--- E.A.BALA
சுரேஷ், படித்தேன். சிரித்தேன். தொடர்ந்து இது போல எழுதுங்கள்.
அன்புடன்,
தேசிகன்
http://www.desikan.com/blogcms/
பி.(ரமாதம்) சுரேஷ், இன்னுமொரு கலக்கல் சமாசாரம். நல்ல கற்பனை, நகைச்சுவை உணர்வு. அலுவலகத்தில் எல்லாரும் என்னையே பார்க்கிறார்கள். அங்கே என்னடான்னா கவுண்டமணி, பார்த்திபன்னு ஜோசப் சார் கலக்குறார். இதென்ன நகைச்சுவை வாரமா?
One of THE Best humor article, I read over any of the TamilBlogs till this time. Enjoyed a lot.
Vasikar Nagarajan
கலக்கோ, கலக்கல். மிகவும் ரசித்தேன். நன்றி. :-) :-)
நன்றி தேசிகன், காசி, வாசிகர் மற்றும் நற்கீரன்.
மெயில் போட்டுவிட்டேன் பாலா.
LOL :-)
நல்லா இருக்குங்க அவன் விகடன்.. கலக்கல்தான் போங்க...
பெஸ்ட் ஆப் லக் சுரேஷ். ப்ளீஸ் கீப் இட்.
மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் என்றுதான் சொல்வேன் நான். குஸ்புவுக்கு ஆதரவாகவும் கலாசார குண்டாந்தடிகளுக்கு எதிராகவும் முடிவுகள் எடுத்து எங்கள் ப்ராமன சார்பாகப் பேசியதற்கு மிக்க நன்றி.
உஷா,
உங்க பதிவு எத்தனை பேரை சிந்திக்க வைத்ததோ தெரியவில்லை. பெனாத்தலாரை வித்தியாசமா சிந்திக்க வைத்து ஒரு நல்ல நகைச்சுவைப் பதிவை போட வைத்தது.
very nice
அன்புடன்...ச.சங்கர்
sooper post..kalakitinga
Hillarious..LOL at my office..during lunch time..no Tamil collegues near by to share..congradulation on your imagination and writing skills..keep it up...write more.
I just created the blog account just to write my comments and congradulate you when read "Avan vikatan".. as you dont allow comments from anonymous..:)
sooper,
"rendu kaaka" matter sooper.
cheers.
thanks for the comments and encouraging words - Bharathi, somperippaiyan, S Sankar, muthukumar puranam, muthu lakshmi & buspass.
thamizhilil sirikara mathiri ezhutharathukku aal kammi thaan...ungala maathiri ezhuthukal parkum pothu romba santhosama irukku..innum pinaatha vaazhthum..
innoru,
pinaathan
thanks vimalan.
ஆஹா சுரேஷ் ..உங்களோட அருமை பெருமை அவள் விகடன் வரை கேட்டிருச்சு போல..உங்க 'அவன் விகடன்' அவள் விகடன்ல(13-01-06 !?!) வந்திருக்கார்.தூள் கிளப்புங்க..
Hi,
Your article on aval Vikatan
was really funny.
cant beleive a guy interested in reading aval vikatan.
regards
Prema
hi suresh,
ungal "avan vikatan"..super.very intresting.diffrent-ta try panni irrukeenga.Good work.Keep it up.
Thanks Ilakkiya - Yours was the first message! Only seeing this I visited avalvikatan!
Thanks Prema.. This is discrimination! Are we not entitled?
Thanks Nithyajawahar.
Superda kanna!!
Nagarajan
eppadinga suresh? We have brain but we are not using. But YOU??????!!!!! Great work(!!)
Hi Nithyajawahar,
its not discrimination rather I was surprised to see that guys interested in reading Aval Vikatan.
entitled !! Oh , its all yours...
regards
Prema
Hi Nithyajawahar,
its not discrimination rather I was surprised seeing guys interested in reading Aval Vikatan.
entitled !! Oh NO! its all yours...
regards
Prema
:-)))
இப்பத்தானுங்க படிச்சேன்.. சூப்பர்!!!
Really very good
Nagarajan, Prema (I think you missed my name - Suresh; nithyajawahar was the previous commenter), Paavai, Gopi and Kaviraj..
nanRi..
nanRi..
nanRi..
nanRi..
nanRi..
பார்த்து சுரேஷ்.... அவள்,அவன்க்கு அடுத்து யாராவது அரவாணி விகடன் கேட்றபோறாங்க.........(ராமச்சந்திரன் உஷாவோட last வலைப்பதிவு வேற பயமுறுத்துது) anyway......நல்லா இருந்தது சுரேஷ்.
indha maadhiri vizhundhu vizhundu sirichae romba naallachunga ...
நன்றி மனசு, பாரதி..
சுரேஷ் ......அவள் விகடனைக் கரைச்சு குடித்திருப்பது தெரிகிறது ....கொஞ்சம் லேட் தான் ஆனாலும் பதில் எழுதாம இருக்க முடியலை சூப்பர்
அருணா
http://naanirakkappokiraen-aruna.blogspot.com/
Excellent great
fabulous...it really shows the effort you have put in reading "Aval vigatan" and mocking at it.
pinni pedaleduthiteenga!!!
உங்க பதிவுகளை இத்தனை வருசமா விட்டுட்டேனேன்னு ரொம்ப வருத்தமா போச்சு!
அவன் விகடனில் அந்த டி போடுற சமாச்சாரம் ஒன்னு போதும்.. கலக்கீட்டீங்க!
பஞ்சு டயலாக்குன்னா... விரல்கள் எல்லாம் சாவிகள்... தான்! காமடியா எழுதி இருந்தாலும், கலக்கலா இருக்கு...
நடத்துங்க... நாங்க இருக்கோம்! (கமெண்ட்டுக்கு மட்டும்!)
Post a Comment