பெரிய ஏற்பாடுகள் ஏதுமின்றி, சிற்சில செல்பேசி அழைப்புகள் மூலமே ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு சிறு வலைப்பதிவர் சந்திப்பு ஷார்ஜாவில் நேற்று (21 நவம்பர்) அரங்கேறியது.
நாகை சிவா துபாய்க்கு வந்திருப்பதால் அவரைச் சந்திக்க என்று தொடங்கி, கீழ்க்காணும் வலைப்பதிவர்கள் ஒன்று கூடி அரட்டை அடித்தோம்.
1. லியோ சுரேஷ்
2. நண்பன்
3. நாகை சிவா
4. தம்பி
5. முத்துக்குமரன்
6. இசாக்
7.கவிமதி
8.பினாத்தல் சுரேஷ்
பெரிய ஏற்பாடுகள் ஏதும் இல்லாததால், அருகே உள்ள ஒரு ஈரப்புல்தரையிலேயே கூட்டம் துவங்கியது. எட்டே பேர் இருந்தாலும், பலவகையான குழுக்களிலும் அடுக்குகளிலும் இயங்குபவர்கள் என்பதால் முதலில் ஒரு சிறு சுய அறிமுகத்துடன் பேச்சுகளைத் துவங்கினோம். சிறிது நேரத்திலேயே எங்கெங்கோ சென்று, இன்னதுதான் பேசினோம் என்பதைப் பதிவதை இயலாததாக்கி விட்டது. ஒரு சிறு சாம்பிள்:
1. இணையத்தில் ஜாதி, மதவாதம்
2. கருத்துக்களை கருத்துகளால் எதிர்கொள்வது
3. ஓரிரு பதிவுகளை வைத்து ஒரு பதிவருக்கு குத்தப்படும் முத்திரைகள்
4. உன் வழி உனக்கு, என் வழி எனக்கு
5. இளையராஜா - குஷ்பூ சர்ச்சைகளில் காணப்பட்ட ஒற்றுமை வேற்றுமைகள்
6. வல்லவன், தர்மபுரி படம் பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்
7. அடுத்த சந்திப்பின் இடம், பொருள்
7 மணிக்குத் தொடங்கி, 10.30 மணி வரை இன்னதுதான் என்றில்லாமல் கலந்துகட்டிய அரட்டை, மறுநாள் காலை பற்றிய சிந்தனை வந்ததும் வேண்டாவெறுப்பாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இட்லிவடைக்கு கூட்டம் பற்றிய முன்னறிவிப்பு ஏதும் தரப்படாததால் நாங்களே புகைப்படம் எடுக்க வேண்டியதாகிவிட்டது;-) முத்துக்குமரன் / நாகை சிவாவிடம் இருந்து அவற்றைப்பெற்று வலையேற்றுகிறேன்.
ஒரு இனிய மாலைப்பொழுதாக இருந்ததும், புது நண்பர்களைப் பெற்றதும், பழைய நண்பர்களின் சில புதிய பரிமாணங்களை அறிந்ததும் எல்லாருக்கும் ஏற்பட்ட அனுபவமாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.
Nov 25, 2006
ஷார்ஜாவில் வலைப்பதிவர் சந்திப்பு (24 Nov 06)
Subscribe to:
Post Comments (Atom)
9 பின்னூட்டங்கள்:
துபாயில் வலைப்பதிவு மாநாடு அறிவிப்பை பார்த்ததும் அதற்குப் போட்டியாக ஷார்ஜாவில் போட்டி மாநாட்டை ஏற்பாடு செய்த பினாத்தலாரைக் கண்டித்து கண்டன தீர்மானம் துபாய் மாநாட்டில் நிறைவேற்றப்படும் என்பதனை(அப்பாடா!! துபாய் மாநாட்டுக்கு ஒரு அஜெண்டா எல்லோரா எல்லாம் கிடைச்சுடுச்சுப்பா) இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.
சாத்தான்குளத்தான்
வலைப்பதிவர் 'மாநாட்டிற்கு' என் வாழ்த்துகள். ஓ. மாநாடு முடிஞ்சிருச்சா? எதுக்கு வம்புன்னு முடிஞ்ச பின்னாடியும் ஒரு தடவை வாழ்த்துகள் சொல்லிக்கிறேன். :-)
குரு!
வலைப்பதிவின் அடுத்த நகர்வின் அமர்வைப்பற்றி உயர்வாக விவாதித்த கூட்டத்துக்கா கண்டனம்? இக்கண்டனத்துக்கு எதிராக கவிதை எழுதும் போராட்டம் தொடங்கி, காலை முதல் மாலைக்குள் 30000 கவிதைகள் உங்கள் அஞ்சலில் வந்து விழ ஆவன செய்யட்டுமா?
குமரன்,
இன்னொன்று இருக்கிறது.. அது அடுத்த வாரம். அதென்ன "மாநாட்டிற்கு"? மேற்கோளில் எதேனும் உள்குத்து உள்ளதா?
//துபாயில் வலைப்பதிவு மாநாடு அறிவிப்பை பார்த்ததும் அதற்குப் போட்டியாக ஷார்ஜாவில் போட்டி மாநாட்டை//
ஓ ரெண்டும் வேற வேறயா? அதான் யோசிச்சிகிட்டிருந்தேன், எங்கடா அறிவிப்பு வெளியிட்ட ஆசீப் பேரையே சந்திப்புப் பட்டியலில் காணோமேன்னு.. :))
பொன்ஸ்,
எதோ நாகை சிவா வந்தாரு, ஒரு நாலு பேரைக் கூப்பிட்டோம், வந்தாங்க, பேசினோம் - அவ்ளோதான் மேட்டரு.. தலைப்பிலேயே எதோ கோளாறுன்னு நெனைக்கிறேன்.. இந்த மேட்டரைக்கூட பாலிடிக்ஸ் பண்ணக் கிளம்பறாங்களே!(றீங்களே)
// இந்த மேட்டரைக்கூட பாலிடிக்ஸ் பண்ணக் கிளம்பறாங்களே!(றீங்களே)
//
நாங்க ரெடி! நீங்க ரெடியா?
பொன்ஸ் என்ன ஆணாதிக்க சிந்தனைப் பார்த்தீயா? நான் இருப்பதையே கண்டுக்கவில்லை. நான்
எழுதுவது பதிவு என்ற கணக்கிலேயே இவங்க எடுத்துக்கவில்லை. :-(
ஆவி அண்ணாச்சி, உங்க ஊருலேதானே நல்ல நல்ல அரசியல்வாதிங்கள்லாம் இருக்காங்க.. பாத்து நல்ல வழக்கங்களை கத்துக்கங்க.. பாலிடிக்ஸ்ன வுடனே வேகமா மூக்குலே வேர்த்துடுதுப்பா!
உஷா :-))
ஆன் ஆதிக்க சிந்தனையெல்லாம் ஒன்னும் கிடையாதுங்க! வீட்டுக்குள்ளே நுழைன்சவுடனே ஆஃப் ஆயிடற ஆளுங்க நானெல்லாம்:-))
நானும் வரும் வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள ஆசைபடுகிறென். எனக்கு தெரியபடுத்தவும். girimuri@rediffmail.com
- நெல்லை முருகன்.
Post a Comment