Oct 21, 2007

கனவிலும் வரக்கூடாத தமிழ்மணம் (22 Oct 07)

மைலாப்பூர் எம் எல் ஏ என்று ஒரு வலைப்பதிவு வந்திருக்கிறதாம் - இட்லிவடை பதிவில் பார்த்தேன்! தெலுங்குப்படம் இல்லையாம் - நெஜமாவே மைலாப்பூர் தொகுதி எம் எல் ஏ எஸ் வி சேகர்தான் நடத்தறாராம்.

யோசிச்சுப்பார்த்தா மனசுக்குள்ளே கலவரம். இப்படியே ஒவ்வொருத்தரா ஆரம்பிச்சா, வலைப்பதிவை மட்டுமே நம்பிப் பொழைப்பு நடத்தற நம்மையெல்லாம் வெளியே தள்ளிட்டு இந்த அரசியல்வாதிகள், சினிமாக்காரங்க எல்லாம் ஜகஜ்ஜோதியா விளையாட ஆரம்பிச்சிடுவாங்களே! (ஆமாம், ஒரு டவுட்டு - எஸ் வி சேகர் சினிமாக்காரரா? அரசியல்வாதியா?)

இப்படி ஒரு காலம் வரக்கூடாதுன்னு நீங்க நம்பற ஆண்டவனையோ இயற்கையையோ வேண்டிகிட்டு, நெருப்புன்னா வாய் வெந்துடாதுன்றதால கீழே இருக்க கற்பனையைப்பாருங்க! Shift+ click பண்ணீங்கன்னா தனியா பெரிசா தெரியும்.


அதையும் மீறி படிக்க முடியலைன்னா எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்க, வெள்ளெழுத்து ஸ்பெஷல் அனுப்பறேன் :-)

PDF கோப்பாக இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். அல்லது, படத்தின் மேல் ரைட் க்ளிக்கி, உங்கள் கணினியில் சேமித்து வைத்துக்கொண்டால், பிக்சர் எடிட்டர் மூலம் பெரியதாக்கி பார்த்துக்கொள்ளலாம்.

86 பின்னூட்டங்கள்:

மாயா said...

Super

-/பெயரிலி. said...

;-)

Anonymous said...

SuperB !!

Anandha Loganathan said...

உஙகள் கற்பனை Super.

பார்க்க மிக நன்றாக இருக்கின்றது !! :)

ramachandranusha(உஷா) said...

யப்பா! தெய்வமே :-))))))))))))

ஆனா, பக்கம் முழுவதும் தெரியலையே?

Mathi said...

super.. LOL..

கோவி.கண்ணன் said...

பினாத்தலாரே,

கைகொடுங்க ! அசத்தல் !

எல்லாமும் சிறப்பாக இருக்கிறது..
சோ -வுக்கு போட்டிருக்கும் இடுகை குறிப்பு அட்டகாசம்.
:)

கோவி.கண்ணன் said...

ஸ்டார் பதிவர் கலைஞரா ?
ம் அவர் ஆட்சியில் இருப்பதால் நட்சத்திரம் சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் !

கதிர் said...

இத்தனை லோகோ, விஷயங்கள ஒரே படத்துக்குள்ள கொண்டுவரணும்னா அபார உழைப்பு இதுக்கு பின்னாடி இருக்குன்னு உணரமுடியுது.

எல்லாரையும் பார்க்க வைக்கணும்ன்ற இந்த உழைப்புதான் வலைப்பதிவுல இன்னும் இருக்கிங்க.

ஆமா ஆபிஸ்ல வேலை இல்லையா?

சும்மா தமாசுக்கு. :)

Radha Sriram said...

சுரேஷ் ஒண்ணுமே படிக்க முடியலயே,
srirradha@gmail.com க்கு ஒரு ப்ரதி அனுப்பவும்.....

thanks
Radha

ஜெகதீசன் said...

:)

ramachandranusha(உஷா) said...

பினாத்தலாரே, இப்ப அளவு சிரியதாகி, ஓரே அலம்பலாய் தெரியுது. பெரியதாக்கவும் முடியவில்லை.

கோவியாரே, நல்லா பார்த்து சொல்லுங்க, அம்மா ஆட்சி மாதிரி இருக்கு :-)

குசும்பன் said...

எல்லாமே அருமை அதிலும் குறிப்பாக பரண் அருமை.

Anonymous said...

தெய்வமே .. நீங்க எங்கேயோ போய்ட்டீங்க :)

அருண்மொழி said...

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Unknown said...

முதலில் தம்பியின் பின்னூட்டத்தை வழிமொழிந்து உங்கள் உழைப்புக்கு ஒரு சபாஷ் சொல்லிக்குறேன்...

இந்த கனவில் எதிர்கால தமிழகச் சிற்பிகள் டாக்டர் இளையதளபதி, சின்ன உலக நாயகன் அலட்டிமேட் ஸ்டார் அசீத், புதிய புட்சி தளபதி விசால், அண்ணன் தனுஸ், ஆகிய அரசியல் மேதைகளை சுத்தமாய் ஓரம் கட்டி பினாத்தியிருக்கும் உங்கள் பினாத்தலைக் கன்னாபின்னாவென கண்டிக்காவிட்டாலும்...

இந்தியாவின் சார்ஜ் புஸ் அண்ணண் சு.சாமி.... அவர்களை இருட்டடிப்பு செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம்...உங்க மேல அலாஸ்கா கோர்ட்டில் கேஸ் கொடுக்குமாறு அண்ணன் கொத்ஸைக் கேட்டுக் கொள்கிறேன்.

காண்டீபன் said...

ஒரு படம், அதில் 100 குறும்(குறும்பு) செய்தி

உஙகள் கற்பனை பிரமாதம் :))

SurveySan said...

Nicely done ;)

மதுமிதா said...

ப‌ட‌ம் தெரியுது
கான்செப்ட் புரிஞ்ச‌து
அச‌த்திட்டீங்க‌

த‌னிம‌ட‌லில் அனுப்புங்க‌ (முழு வாச‌க‌மும் வாசிக்க‌ணும். இங்கே வாசிக்க‌ முடிய‌ல‌)

என்ன கொடுமையிது பெனாத்தலாரே:-)
எதுனா சொல்றதுக்கு வார்த்தையே வரலைங்க‌. நாமெல்லாம் கடையை மூடிட்டுப் போயிடவேண்டியதுதானா:-)

பதிவுலக பிதாமகராயிட்டீங்க‌ போலிருக்கே. வளமான கற்பனைக்கு வாழ்த்துகள்.

வடுவூர் குமார் said...

அப்பாடியோவ்!!!
பிரமாதமான உழைப்பு.
பல பிடித்திருந்தாலும்.. உச்சநீதிமன்றம் தான் சூப்பர்.

ramachandranusha(உஷா) said...

இப்ப பெரியதாக்க முடிகிறது. கோவி சார், கலைஞர் ஆட்சிதான் நடக்கிறது என்பது தெளிவாய் தெரிகிறது. சுரேஷ், "அன்னை சோனியா விரும்பினால் வலைபதிவோம் அ, ஆ" சூப்பர். ஒன்னொன்றாய் படித்து சிரித்துக் கொண்டு இருக்கிறேன்.

லொடுக்கு said...

தல,,, சூப்பரோ சூப்பர்.

SurveySan said...

அடடா ஒரு பெரும் பிழை நடந்து விட்டதே..

யாராச்சும் கண்டு பிடிக்கராங்களான்னு பாக்கலாம் :)

SurveySan said...

சும்மா டகால்ஜி விட்டேன். அப்பதான் எல்லாரும் முழுசா படிப்பாங்க ;)

நாகை சிவா said...

:)))))

சு.சாமி விடுபட்டதை நானும் கண்மூடித்தனமாக கண்டிக்குறேன்.

காங் - அ & ஆ - அல்டிமேட்

சாகும் வரை எதிர்ப்போம், 5 ஆண்டுகள் ஆதரவு தருவோம் - சூப்பர்....

ஜெகதீசன் said...

//
அடடா ஒரு பெரும் பிழை நடந்து விட்டதே..

யாராச்சும் கண்டு பிடிக்கராங்களான்னு பாக்கலாம்
//
"பா.ஜ.க தீண்டத்தகாத கட்சி இல்லை"...
கலைஞர் இதை 2005 ல் சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை...
இது தான் அந்தப் பிழையா சர்வேசன்?

முரளிகண்ணன் said...

கலக்கீட்டிங்க பினாத்தல் இல்லை பிரமாதப்படுத்தல்

Ayyanar Viswanath said...

அடங்கமாட்டிங்களா நீங்க :)

Anonymous said...

Great Mr.suresh!!!"// இப்படி ஒரு காலம் வரக்கூடாதுன்னு நீங்க நம்பற ஆண்டவனையோ இயற்கையையோ வேண்டிகிட்டு // நிச்சயமாக இது கனவிலும் வரவேண்டாம்னு எல்லோரும் வேண்டிக்கோங்கப்பா!!!

gulf-tamilan said...

super !!!

துளசி கோபால் said...

உக்காந்து யோசிக்கற ஆளுகிட்டே என்னான்னு சொல்றது?

யப்பா....:-))))))))

சிரிச்சு சிரிச்சு.....வந்தா

முரளிகண்ணன் said...

pathivar sandhippu patri ethum kuduthirukkalaam.

ACE !! said...

கலக்கல் கற்பனை.. வாழ்த்துக்கள்..

முத்துகுமரன் said...

சற்றுமுன் செய்தி:-)

தமிழக அமைச்சரவை மாற்றம்.

பினாத்தலார் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். கூடுதலாக பத்திர பதிவு இலகாவையும் கவனிப்பார் என்று தமிழக அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Great said...

யப்பா......யப்பா............. ஒண்ணும் சொல்றதுக்கில்ல!!!!!!!!!!
முடியல!!!!!!!!!!

rv said...

பெனாத்தலார்,
ஒத்தவரியில இப்படிப்பட்ட சரித்திர பதிவுக்கு பின்னூட்டம் போட்டா அது புண்ணுட்டம்..

அதுனால நமக்கு நாமே உடனே செயல்படுத்தப்படுகிறது.

கோபிநாத் said...

நல்லா யோசிச்சிருக்கிங்க...:))

நாகை சிவா said...

எங்க விஜய ராஜேந்தருக்கும் ஒரு இடம் ஒதுக்கனும் என மாயவரத்து மாபியா கேட்குறாங்க...

இது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் போடும் பின்னூட்டம்

RATHNESH said...

தனிமனித உழைப்பில் இவ்வளவு தூரம் சிந்தித்து . . . அட அட அட . . . என்ன சொல்வதென்றே தெரியாத மிக மிகச் சிறந்த பதிவு.

சிந்தித்த தலைக்கு கிரீடம் சூட்டலாம், டைப் அடித்த விரல்களுக்கு மோதிரம் அணிவிக்கலாம். சொல்லிக் கொண்டே போகலாம். கை கொடுங்கள், குலுக்க அல்ல தொட்டுக் கும்பிட.

(கருணாநிதியின் நட்சத்திர வாரத்தில் ஜெ பதிவு இடுவாரா? வைகோவுக்கும் தான் தைரியம் வருமா?)

RATHNESH

Boston Bala said...

professionally executed! kalakkal!!

யோசிப்பவர் said...

செமையாக வேலை செய்திருக்கிறீர்கள். ஆனாலும் இப்போதைய, தமிழ்மண முகப்பு பக்கத்திற்கும், தங்களது கற்பனைக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை - பெயர்களையும், படங்களையும் தவிர!!!;-)))

தறுதலை said...

ஏன் ஏன் இந்த கொலை வெறி உங்களுக்கு?

உங்க கனவுல சினேகா, நமீதா இவங்கெல்லாம் வலைப்பூ வைக்கமாட்டாங்கள?

-----------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

இலவசக்கொத்தனார் said...

அப்போ நம்ம ஆளுங்க பதிவே போட முடியாதா? கலைஞர் வாரத்தில் லக்கி லுக் கூடவா பதிவு போட முடியாது? :))

சூப்பர் தல. சைஸ்தான் ரொம்பச் சின்னதாப் போச்சு!! கொஞ்சம் கஷ்டப்பட்டு படிச்சுட்டு வரேன்.

ரவி said...

பரவால்ல...நேயர் விருப்பத்தை அட்டகாசமா நிறைவேத்திட்டீங்க...பட் நூத்துக்கணக்கானவங்க படிச்ச பிறகு தான் நான் நெட் ஓப்பன் பண்ணனுமா ?

முதல் பின்னூட்டம் இல்ல போட்டிருக்கனும் ?

சூப்பர்...

அப்படியே பழைசை ஒரு மீள் பதிவுன்னு உடுறது ?

Anonymous said...

ultimate definion for 'oxymoron'

penathalarukku 'oh'

அலறாதீங்க!!!!!!!

Anonymous said...

கடசில பார்த்தேன் பெனாத்தலாரே.

கலாம்...'கனவு(மட்டும்)காணுங்கள்....


suuuuuuuuuper

பினாத்தல் சுரேஷ் said...

என்ன எழுதுறதுன்னு உக்காந்து யோசிப்பீங்களோ!!!!!
ஆனாலும் இது ரொம்ப ஓவரான யோசனைதான்:-)

சரி சுரேஷ் 'மேலும்' பகுதியை க்ளிக் செய்து அவங்க எழுதின முழுபதிவை எப்படி வாசிக்கறது:-)

அதுக்கு ஆப்ஷன் இல்லையா

அன்புடன்
மதுமிதா

பினாத்தல் சுரேஷ் said...

முதற்கண், இந்தப் பதிவை மெகா ஹிட்டாக்கிய அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றி.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்

என்பதால், இப்பதிவுக்கு ஐடியா நிலையில் ஊக்கமும் உந்துதலும் அளித்த இருவருக்கு முதல்நன்றி சொல்லிவிடுகிறேன். - டாக்டர் ராம்ஸ், இட்லிவடை - அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்து மேம்படுத்தல்களும் கூறிய்வர்கள், தயாரிப்பு நிலையில் பார்த்து ஊக்கமளித்த பதிவர்களுக்கும் நன்றி.

பின்னூட்டம் மூலம், மெயில் மூலம் சாட் மூலம் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

Dear Suresh,
I just saw your parody post. I enjoyed every bit of it and it is so creative. You have done what would require a team to think and create. It may not be a bad idea to do it as an annual feature, even a contest on different themes ;-)

Best regards,
M Sundaramoorthy

பினாத்தல் சுரேஷ் said...

50..

இராம்/Raam said...

சுரேஷ்,


அட்டகாசம் கலக்கீட்டிங்க.... கனவில் வந்த தமிழ்மணத்தை விட இது அட்டகாசமான கற்பனை... =D>

ஆனாலும் அடுத்த முதலமைச்சர் அண்ணன் விஜய.டீ.ஆர்'க்கு பெரிய அளவில் இடங்கள் ஒதுக்கிடு செய்யாத போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன்...... ;)

ilavanji said...

பெனாத்ஸ்,

சும்மா 'நச்'சுன்னு இருக்கு!

// professionally executed! // பாபா சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய்! :)

வெட்டிப்பயல் said...

அருமை அருமை...

உங்க உழைப்புக்கு பாராட்டுக்கள். கலக்கிட்டீங்க போங்க...

Unknown said...

சூப்பர் தல, கலக்கிட்டீங்க!! எவ்வளவு நேரமாச்சோ!!?

போன பதிவுல பின்னூட்டங்கள் உங்கள் பழைய தமிழ்மணக் கற்பனையைப் பாராட்டிய போதே எதிர்பார்த்தேன்... அதுக்கும் சூப்பரா செஞ்சுட்டீங்க...

ஏங்க சொ.செ.சூ மாதிரி இருக்கே? அம்மாவுக்குக் குறைந்த பின்னூட்டம், பச்சை கலரில் இல்லை, அம்மாவின் பின்னூட்டங்களின் எண் கூட்டிப் பார்த்தால் 9ல் முடிய வேண்டும், தாரகையான அம்மாவிற்கு கலைஞரை விடப் பொலிவான இடம் வேண்டாமா?

ஏன் கலைஞருக்கு உரல் மஞ்சளில் இல்லை? தளபதி பற்றியும் பார்க்கல... காங்கிரஸ் (ஆ)வை விட (அ) வுக்கு பின்னூட்டம் அதிகம்....

தங்கத்தலைவன் அண்ணன் கமலகாசன் அவர்களின் பதிவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது!!!!

கண்டிக்கிறேன்..:-))))) (ஏதோ, லேட்டா வந்தாலும், லேட்டஸ்டாக கொளுத்திப் போடலாமேன்னு...!)

சேதுக்கரசி said...

பயங்கர உழைப்பாளி நீங்க! முந்தியே இந்த மாதிரி வேற ஒரு கற்பனைத் தமிழ்மணப் பக்கம் உங்க பதிவில் பார்த்த நினைவு... சரியா?

(ஹை... எனக்கு இன்னும் வெள்ளெழுத்து வரலை :) )

சேதுக்கரசி said...

சொல்ல மறந்துட்டேனே... நம்ம இராமநாதன் மடல் பார்த்து தான் இந்தப் பதிவுக்கு வந்தேன். ஆமா நீங்க புதுப் பதிவு போட்டா இராமநாதன் ஏன் தண்டோரா போடறார்னு புரியலியே... :)

அபி அப்பா said...

நான் படிச்சேன்ன்னு சொன்னா எல்லாரும் சிரிப்பபங்க அதனால, பாயிண்ட் பாயிண்ட்டா சொல்லிடறேன்!

1.ராமன் பெருங்குடிகாரன் - ஸ்டார் வீக் பதிவு!

சரி,ராமன் சென்னையை அடுத்த பெருங்குடி காரனா அல்லது பெரும் குடிகாரனா(இப்பகூட இது பத்தி பதிவெல்லாம் வந்துச்சே!)அல்லது மேட்டுகுடிகாரனா இப்படியாக வாவ் வாவ், என்னா அழகு ஒரே கல்லில் 3 மாங்க்காய் அடிக்கும் சாமர்த்தியம்!

Radha Sriram said...

சுரேஷ்...அடி பின்னிட்டீங்க...எத சொல்ல்ரது எத விடரது தெரியலயே??கற்பனை கரை புரண்டு ஓடுது.....!!ஹாட் டாபிக்ஸ் எழுத நல்ல ஆப்ஸெர்வேஷன்....பரண் இடுக்கை எழுத நல்ல ஞாபக சக்தி.....அட்டகாசம் போங்க...excellent work.....எந்த பத்ரிகை இதை வெளியிடும்??
தனி மடல்ல அனுப்பிசதுக்கு ரொம்ப நன்றி....:)

ILA (a) இளா said...

:))

பினாத்தல் சுரேஷ் said...

இந்த மாதிரி சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு. இந்த மாதிரி பதிவு போட்டு நம்ம புழைப்புல மண்ணை போடாதீங்க பிளீஸ் :-)

இட்லிவடை

(சாட்டில் கொடுத்த பின்னூட்டம்.. புதுசா எதுவும் கெளப்பி விடாதீங்க:-))

PPattian said...

Great Innovative work! One of the best in recent times.

How long did it take to complete this?

soodaana idugaigal??? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கலக்கிட்டீங்க தல!

நல்ல காலம் 2011இல் நானும் நட்சத்திரம்-னு சரத்குமார் சொல்லலை! :-)

அது எப்படியா, ஒருத்தர் வுடாம், அத்தினி பேரையும் ரவுண்டு கட்டினீரு?...உச்சநீதிமன்றம் உட்பட! :-))

என்ன கொழுப்பு உமக்கு? அப்துல் கலாமுக்கு ஒரு பின்னூட்டம் தானா? வேர் இஸ் கொத்தனார்?

சரி.....மில்லியன் டாலர் கேள்வி!
கலைஞருக்கு அடுத்து நட்சத்திரம் யாரு? :-)))))

முகமூடி said...

நகைச்சுவை மட்டுமில்லாம அப்துல் கலாம் பதிவுக்கு ஒரு பின்னூட்டம் டாக்டர் விஜய் பதிவுக்கு 39 பின்னூட்டம் என்பது வரை இன்றைய வலைப்பதிவு குமுகாயத்தை நுணுக்கமாக கவனித்து பதிவு போட்டதுக்கு ஒரு சப்பாஸு...

// அப்போ நம்ம ஆளுங்க பதிவே போட முடியாதா? கலைஞர் வாரத்தில் லக்கி லுக் கூடவா பதிவு போட முடியாது? //
கலைஞர்னா கலைஞரேவா வலைப்பதிவுல எளுதுவாரு.. எல்லாம் அவரு முரசொலியில எளுதுனத பாத்து உடம்பிறப்பு லக்கி காப்பி பேஸ்ட் செய்றதுதான்.

// நீங்க புதுப் பதிவு போட்டா இராமநாதன் ஏன் தண்டோரா போடறார்னு புரியலியே... // எல்லாம் கட்சி பாசம்தான்.. என்ன கட்சின்னு கேட்டுறாதீங்க. அப்புறம் பமக (பச்சோந்தி மக்கள் கட்சி) பத்தி திருப்பியும் மொத மொதல்ல இருந்து ஆரம்பிக்கணும்...

அறிஞர். அ said...

சிறந்த கற்பனாவாதி என்று இரண்டாம் முறையாக நிரூபித்திருக்கிறீர்கள்.

சிரித்து மகிழ்ந்தேன்....

நன்றி...

தகடூர் கோபி(Gopi) said...

:-))))

அருமையான பதிவு! ஆழ்ந்த கருத்துக்கள்! தீர்ந்தது என் சந்தேகம். (சும்மா திருவிளையாடல் ஸ்டைல்ல ஒரு டயலாக் சொல்லிப் பாத்தேன்)

சிறில் அலெக்ஸ் said...

நூறு அரசியல் பதிவுகளுக்குச் சமம் இந்ட ஒரு பதிவு. பின்னிட்டீங். வாழ்த்துக்கள்.

PS: நிஜமாவே இப்படி இருந்தா நல்லாத்தான் இருக்கும் :)

-L-L-D-a-s-u said...

Super Super SuperOSuper

பினாத்தல் சுரேஷ் said...

மீண்டும் பின்னூட்டியவர்களுக்கு ஒரு பெரிய நன்றி.

தருமி said...

நீங்க எங்கேயோ போய்ட்டீங்க :)

-/சுடலை மாடன்/- said...

மிக அருமை! எப்படி ஐயா இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்க :-)

நன்றி - சொ. சங்கரபாண்டி

கண்மணி/kanmani said...

வாவ் னு வாயப் பிளந்துப் பார்க்கத்தான் முடியுது.
உங்க கற்பனையும் தேர்ந்தெடுக்கப் பட்ட இடுகைத் தலைப்புகளும் அருமையோ அருமை.
ஒரு நிமிஷம் மொக்கை பதிவர்களான எங்களை ஜுஜூபி ஆக்கிட்டீங்க.
2007 சிறந்த நக்கல்/நகைச்சுவை பதிவாக உங்கள் பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டு பாச.குடும்பத்தின் சார்பில்....ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப் படுகிறது.

Anonymous said...

பினாத்தலாரே

ரசிக்கவைத்த பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

பதிவு அழகென்றாலும் சில பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களின் நயம் உண்மையிலேயே வாய் விட்டு சிரிக்க வைக்கும்.அந்த வகையில் இந்தப் பதிவின் முகமூடியின் பின்னூட்டம் சிரிக்கவைத்தது.

உங்களிடம் இருக்கும் கிரியேட்டிவிடியை "மொக்கைப் பதிவுகளில்" சீரழிய விடாதீர்கள்

கி அ அ அனானி

வெங்கட்ராமன் said...

தல பின்னீட்டீங்க.

சே என்னமா கற்பனை பண்ணி இருக்கீங்க.

சூப்பர்.

வெங்கட்ராமன் said...

முதலில் தம்பியின் பின்னூட்டத்தை வழிமொழிந்து உங்கள் உழைப்புக்கு ஒரு சபாஷ் சொல்லிக்குறேன்...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்தப் பதிவை கில்லியில் இணைத்துள்ளேன்.
இதோ சுட்டி

MSATHIA said...

Very creative. Amazing effort.

மங்களூர் சிவா said...

Excellent ,

Keep it up Suresh.

ஜோ/Joe said...

Sir ! Neenga engiyo poyiteenga :))))

cheena (சீனா) said...

பினாத்தல்கள் அருமை. தமிழ் மணத்தின் முகப்பு மிக அருமை. கடும் உழைப்பு இதன் பின்னால். ஒவ்வொரு வரியும் மிக மிக சிந்தித்து எழுதப்பட்டிருக்கிறது. பின்னூட்ட எண்ணிக்கைகள் இடுகைக்கு பொருத்தமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. புதியதாக இனைந்தவர்கள் பட்டியல் பிரமாதம். அனைத்துத் தலைப்புகளுமே அருமை. மொத்தத்தில் உண்மையான தமிழ் மணத்தை விட இது மணம் அதிகம் வீசுகிறது

சீனு said...

//எஸ் வி சேகர் சினிமாக்காரரா? அரசியல்வாதியா?//

கலைஞர் முன்னாள் கதாசிரியர் மாதிரி, அம்மா முன்னாள் நடிகை மாதிரி (எதுக்கு வம்பு எதிர்கட்சியையும் சேர்த்தே சொல்லிடலாம்), எஸ்.வி.சேகர் முன்னாள் நடிகர்.

தங்கரின் பதிவு சூப்பர்...

பாண்டி-பரணி said...

உக்கந்து யோசிப்ங்கலோ...

கதிரவன் said...

சூப்பர் சுரேஷ் !!

உங்க கற்பனை ரொம்ப அருமை.இத்தனை நுணுக்கமா பல விசயங்களையும்,படங்களையும் ஒரே பக்கத்தில் கொண்டு வந்திருக்கின்ற‌ உங்க உழைப்பும், ஈடுபாடும் ரொம்பவே பிரமிக்க வைக்கின்றது !!

வாழ்த்துக்கள் !!!

ரசிகன் said...

//அன்னை சோனியா விரும்பினால் வலைப்பதிவோம்-தமிழக காங்கிரஸ்-அ //
//அன்னை சோனியா விரும்பினால் வலைப்பதிவோம்-தமிழக காங்கிரஸ்-ஆ //
அடடா.. என்னா ஒரு சூப்பர் பன்ச்........கலக்கிட்டிங்க...

குமரன் (Kumaran) said...

உங்க கனவுல வந்திருக்கே?! எங்க கனவுல வரக்கூடாதா? :-)

நல்லா இருக்கு பெனாத்தலாரே. என்னைக் கவர்ந்த டாப் 10 மட்டும் சொல்றேன்.
1. தந்தை பெரியார் தமிழினத்தின் 'கடவுள்' - கி. வீரமணி
2. இராமன் பெருங்குடிகாரன் & மத நல்லிணக்கம் பேணுவோம் - கலைஞர் கருணாநிதி
3. ராமர் பாலம் கட்டியதற்கு வீடியோ ஆதாரம் - சோ
4. வேதாந்தியின் பதிவில் இருக்கும் தொடக்க வார்த்தைகள்
5. இலைக்காக ஏங்கும் தாமரை - இல கணேசன்
6. தமிழக அரசை ஏன் டிஸ்மிஸ் செய்யக்கூடாது & தண்ணீர் விட வேண்டும் கர்நாடகத்திற்குக் கோரிக்கை - உச்சநீதிமன்றம்
7. கனவு (மட்டும்) காணுங்கள் - அப்துல் கலாம்
8. நாங்கள் கொண்டுவந்த சேது சமுத்திரம் - ஜெயலலிதா
9. மக்கள்விரோத ஆட்சிக்கு ஆதரவு தொடரும் - பொலிட்பீரோ
10. தமிழக அரசை எதிர்த்து உயிருள்ளவரை போராடுவோம் - மருத்துவர் ஐயா & கூட்டணிகட்சி எதிர்க்கட்சி ஆகக்கூடாது - கலைஞர் கருணாநிதி

ஒரே ஒரு கேள்வி: அதென்ன கலைஞர் கருணாநிதிக்கு மட்டும் கலைஞர் என்ற பட்டத்தோடு பெயரை இட்டிருக்கிறீர்கள்? ஜெயலலிதாவை பெயர் மட்டும் சொல்லி இட்டிருக்கிறீர்கள்? ஏன் இந்த சார்பு நிலை?

Sanjai Gandhi said...

உங்களுக்கு மூளை தலைல மட்டும் தானா? எப்படி சாமி இப்படி எல்லாம்..

ARV Loshan said...

SUPER SUPER SUPER.... (JODI NUMBER 1 PAATHIPPU).. GOOD JOB NANBARE.. NOW UR PAGE S IN MY FAVOURITES

 

blogger templates | Make Money Online