Apr 1, 2009

துக்ளக் இணைய இதழ் - இலவசமாய் படிக்க:

இதற்கு முன் போட்ட பதிவில் படம் பெரிதாகாமையால் பலர் ஏப்ரல் 1 என நினைத்துவிட்டனர். இப்போது படங்களின் லின்க்கைத் தருகிறேன்.

தமிழில் வெளிவரும் ஏடுகளில் நடுநிலையான ஒரே ஏடு துக்ளக்தான் என்பது பெரும்பான்மையானோரின் நம்பிக்கை. ஆனால், விகடன் குமுதம் போன்ற விற்பனை உத்திகள் கைவராததால் வெளிநாடுகளில் இந்த ஏடு கிடைப்பது அபூர்வமே.

சென்ற சில வருடங்களாக துக்ளக் இணையத்தில் கிடைத்தாலும், இணையதள சந்தா அதிகமாக (20$ வருடத்திற்கு) இருப்பதால் படிப்பது கஷ்டமாகவே இருந்துவந்தது.

இந்நிலையில் தெரிந்தவர் ஒருவர் ஒரு சுட்டி கொடுத்தார். இலவச தளம்தான். ரெஜிஸ்ட்ரேஷன் கூட தேவையில்லை.. எல்லாவற்றையும்விட, இந்தத் தளத்தின் வேகம் ஆச்சரியப்படவைத்தது. சில வேளைகளில் அதிகாரபூர்வ வலைத்தளத்தைவிடவும் முன்னரே இங்கே அட்டைப்படங்கள் கிடைத்துவிடுகின்றன.

இந்த சுட்டியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு முன் தார்மீகரீதியாக இது சரிதானா என நிறையவே யோசித்தேன். கடைசியில் குடும்பத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்வது தவறாகாது என்பதால் வலைக்குடும்பத்துடன் சில அட்டைப்படங்களை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.
ஏப்ரல் ஒன்றாம் தேதியில் முட்டாள் ஆனது நான் தான் :-( படங்கள் பெரிதாகாத முதல் பதிவினால் சொதப்பிவிட்டது.
துக்ளக் வெவ்வேறு நிலைமாற்றங்களுக்கு எப்படி அட்டைப்படம் போடும் என்பதுதான் கான்செப்ட்!
படம் 1 - 15/05/09, ஜ மு கூ வென்றால்:


படம் 2 : மூன்றாம் அணி வென்றால்:

படம் 3 : தே ஜ கூ வென்றால்:




21 பின்னூட்டங்கள்:

Tech Shankar said...

howzzat?

வடுவூர் குமார் said...

ஆசிரியர்: போ???
இன்றைய தேதிக்கு இப்படித்தான் போட முடியும்!!

வடுவூர் குமார் said...

எல்லாம் மே மாத இதழ்கள் அதுவும் சல்லிக்காசு கூட இல்லாமல் கிடைக்குது.

Raju said...

பகிர்ந்தமைக்கு நன்றி...

சென்ஷி said...

:-))))

காப்பிரைட் போட்டு வச்சுக்குங்க. இட்லி வடையில இதுதான்னு புதுசுன்னு சொல்லி ஏத்திடப்போறாங்க

நாகை சிவா said...

:) கலக்கல்!

இது எல்லாம் கண்டிப்பாக நடக்கும் போல இருக்கே !

என்னமோ போ

முரளிகண்ணன் said...

\\தமிழில் வெளிவரும் ஏடுகளில் நடுநிலையான ஒரே ஏடு துக்ளக்தான் என்பது பெரும்பான்மையானோரின் நம்பிக்கை\\

ஏப்ரல் பூல் பதிவு என்பதற்கு கட்டியம் கூறிவிட்டீர்களே

மெனக்கெட்டு said...

15-05-2009 ல் மூன்று புத்தகங்களா? பலே பலே.

Unknown said...

முட்டாளாவதில் முதலில் நிற்கும் ஆசையால், தெரிந்து கொண்டே தான் திறந்தேன். 2வது அட்டையில் வலைப்பார்வையாளர் படங்கள் வந்திருக்கே, வேற கமெண்டோட?

செய்திகளை முந்தித் தருவதற்கும் நன்றி:-)
இப்படிக்கு,
கெ.பி.
32-3-2009

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி தமிழ்நெஞ்சம்.

நன்றி வடுவூர் குமார். Weakly ஐ யாருமே கவனிக்கவில்லையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்!

நன்றி டக்ளஸ்.. என்னங்க நடக்குது?


நன்றி சென்ஷி. இட்லிவடையிலே அதிகாரபூர்வ இணையதளத்துக்குதான் லிங்கு :-)

நன்றி நாகை சிவா. எல்லாமே எப்படி நடக்கும்? எதாச்சும் ஒண்ணுதான் :-)

முரளிகண்ணன் - படம் பாக்கலியா?

மெனக்கெட்டு நன்றி சொல்றேன் :-)

கெக்கேபிக்குணி, வலைப்பதிவர் படமா? என்மேல் என்ன பகை உங்களுக்கு? 32-03 2009 ஆ? அப்ப நாளைக்குதான் உங்களுக்கு மாசப்பொறப்பா?

பினாத்தல் சுரேஷ் said...

முதல் பதிவிலிருந்து காபி பேஸ்ட்:

Sridhar Narayanan said...
//இந்த சுட்டியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு //

சுட்டியைக் காணோம். பதிவு வேற ஏப்ரல் 1-ம் தேதி போட்டிருக்கீங்க. ரொம்பவே டவுட்டா இருக்கே... ம்ம்ம் :-)

மன்னிக்கணும் ஸ்ரீதர் :-(

April 01, 2009 9:09 AM
கோவி.கண்ணன் said...
//தமிழில் வெளிவரும் ஏடுகளில் நடுநிலையான ஒரே ஏடு துக்ளக்தான் என்பது பெரும்பான்மையானோரின் நம்பிக்கை.//

ஏப்ரல் 1 க்கு புது உத்தியா ?
:)

April 01, 2009 9:20 AM

நன்றி கோவி வருகைக்கும் கருத்துக்கும் :)

கோபிநாத் said...

தேர்தலை நினைத்தவுடன் உங்களிடம் இருந்து என்னாட பதிவு எதுவும் வரவில்லையேன்னு நினைச்சேன்..கலக்கல் தல ;)

வெட்டிப்பயல் said...

இப்படி ஒரு அட்டகாசமான பதிவுக்கு ஒரு விளக்கம் சொல்ல வேண்டியதா போச்சே :-))

வெட்டிப்பயல் said...

உங்களோட கிடியேட்டிவிட்டிக்கு ஒரு அளவே இல்லை போல :-)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபிநாத்.

நன்றி வெட்டிப்பயல். விளக்கம் சொல்லும்போது நகைச்சுவை மரணிக்கிறது, மரணங்கள் சோகமே :-)

வெட்டிப்பயல் said...

//நன்றி வெட்டிப்பயல். விளக்கம் சொல்லும்போது நகைச்சுவை மரணிக்கிறது, மரணங்கள் சோகமே :-)//

ஹ்ம்ம்ம் :-((

எட்வின் said...

சூப்பரு ... பகிர்வுக்கு நன்றி

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

Athisha said...

நல்ல கற்பனைண்ணே!

கிராபிக்ஸ் கலக்கல்.

Athisha said...

\\இவ்வளவு தூரம் வந்துட்டீங்க.. நல்ல கமெண்டா போடுங்க.. ஆபாசம் வேணாம், கும்மி வேணாம், மத்தபடி எவ்வளவு வேணும்னாலும் திட்டிக்கங்க!\\

அப்புறம் எப்படி திட்றது.

தடியால அடிக்காதீங்க,கத்தியால குத்தாதீங்க,துப்பாக்கியால சுடாதீங்க ஆனா எவ்வளவு வேணும்னாலும் கொல்லுங்க

 

blogger templates | Make Money Online