Mar 15, 2013

பரதேசி - விமர்சனம்

பாலா படங்கள் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. சேது கடைசி 20 நிமிடத்தில் மனசைப் பிழிந்ததாலும், ராஜாவாலும் மட்டும்தான் ஒரு சப்பைப்படம் தேறியது என்று தீர்மானமாக நம்புபவன் நான். பிதாமகனிலும் நடிப்பு எல்லாம் நன்றாகவே இருந்தாலும் சினிகலாக எடுக்கப்பட்ட கதையில்லாத படம்தான் அது. நான் கடவுள் - ஏழாம் உலகத்தையும் சிதைத்து, அகோரிகளையும் ஊறுகாயாகத் தொட்டுக்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு மாஸ் ஹீரோ படம். அவன் இவன் பார்க்கவே இல்லை..

இந்நிலையில், காரணமே இல்லாமல் பரதேசி முதல்நாளே பார்க்க முடிவெடுத்தேன் - இந்த முடிவுக்காக வருந்துவேன் என்ற திண்ணமான எண்ணம் பின்புலத்தில் இருந்தாலும்.

ஆனால் - என் முதல் பாரா எண்ணங்கள் அத்தனையையும் புரட்டிப்போட்டுவிட்டது பரதேசி.

1939களில் நடந்த மிகப்பெரிய மனிதவளச் சுரண்டலின் ஆவணமாக்கல்தான் கதை. பஞ்சம் தீண்டிய கிராமத்தில் இருந்து இனிக்க இனிக்கப் பேசும் கங்காணிகளால் மூட்டை மூட்டையாக ஆட்கள் தேயிலைத் தோட்டத்துக்குக் கடத்தப்பட்டு அங்கே கொத்தடிமைகளாக வாழ்ந்தவர்களின் கதை. நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கிறது, மிகை உணர்ச்சிகளுக்கான பல வாய்ப்புகள் இருந்தும், தேவதைக்கதை முடிவெல்லாம் இல்லாமல்.

ஏறத்தாழ முதல் பாதி முழுவதுமே அமைதியான பஞ்சத்தில் அடிபட்ட கிராமம்தான். நாஞ்சில் நாடனின் அழகான வட்டார மொழி வசனங்களோடு - நாஞ்சில் நாடன் என்றதும் நினைவுக்கு வரும் காட்சி “ராசா வண்டிய நேரா விட்டுருவேன்” என்று பந்தியில் அவமானப்படுத்தப்படும் விடலைப் பிச்சைக்காரன் - சிறுகதையாகப் படித்திருக்கிறேன், அந்தச் சிறுகதையின் தாக்கத்தை அப்படியே சினிமாக் காட்சி தரும் என்று நம்பி இருக்கவில்லை.

தெளிவான திரைக்கதையுடன்தான் பாலா இறங்கி இருக்கிறார். தேவையற்ற காட்சிகள் பெரும்பாலும் (பாடல்கள் தவிர) இல்லை. கங்காணியும் முழுக்க வில்லனில்லை - அவனும் அடிவாங்குபவன்; மருந்து கலந்து தரும் ‘டாக்டர்’ கூட கால் நரம்பை வெட்டுமுன் பழிபாவத்துக்கு அஞ்சுகிறான், எதோ கொத்தடிமைகள் வாழ்வில் விளக்கேற்ற வந்தவர்கள் போல வரும் டாக்டருக்கும் முதல் குறி தன் மிஷனரி வேலைதான். பாலாவின் பழைய படங்கள் போல கிளைமாக்ஸில் வில்லன்களைப் பந்தாடி வெல்லும் கதாநாயகன் எல்லாம் இல்லை - ஆனால் மொத்தமாக படம் தரும் அழுத்தம் மிக மிக அதிகம். ஏறத்தாழ என்னைப்போன்ற ஒரு கல்நெஞ்சனின் கண்ணிலேயே ஈரம் வரவழைத்தது.

குறைகளைத் தோண்டித் தோண்டிச் சொல்லலாம், இனிவரும் பல விமர்சனங்கள் சொல்லும். நான் அதைச் செய்ய விரும்பவில்லை - Except - THIS FILM NEEDED ILAIYARAJA - more than any other Bala film.

நிச்சயம் பாருங்கள். குழந்தைகள் வேண்டாம், இதயம் ரொம்ப பலஹீனமானவர்கள் தவிர்த்து/

17 பின்னூட்டங்கள்:

ராம்குமார் - அமுதன் said...

அநேகமா சிக்சர்னு நெனக்கிறேன்... கண்டிப்பாக பார்க்கனும்... பார்க்கத் தூண்டும் விமர்சனமும் கூட...

குறை சொல்றவங்க எல்லாத்திலயும் தான் சார் குறை சொல்லுவாங்க... அது எப்பேர்ப்பட்ட காவியமாக இருந்தாலும்...

As Always - Perception differs :)

ILA (a) இளா said...

அடடே!

Sridhar Narayanan said...

'பரதேசி' மேல் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. உங்கள் பதிவு அதை இன்னமும் அதிகமாக்குகிறது.

ஜெமோ பாதி செட்டானார். எஸ்ரா ஏமாற்றம். நாஞ்சில் நாடன்தான் சரியான செட்டா? :-)

// “ராசா வண்டிய நேரா விட்டுருவேன்” என்று பந்தியில் அவமானப்படுத்தப்படும் விடலைப் பிச்சைக்காரன் - சிறுகதையாகப் படித்திருக்கிறேன் // இடாலக்குடி ராசா :-)

இங்கே முழுக்கதையும் படிக்கலாம்

வருண் said...

Congrats to Bala!

வருண் said...

Seems like Viswaroopam will be pushed behind by paradesi in foreign oscar competition! Poor Kamlahassan! :(

கும்மாச்சி said...

பார்க்க வேண்டிய படம் போல் தெரிகிறது.

ஜீவன் சுப்பு said...

//பாலா படங்கள் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. சேது கடைசி 20 நிமிடத்தில் மனசைப் பிழிந்ததாலும், ராஜாவாலும் மட்டும்தான் ஒரு சப்பைப்படம் தேறியது என்று தீர்மானமாக நம்புபவன் நான்.// ஓமென். பாலா படங்களின் கடசி அரைமணி நேரம் உச்சபட்ச ரணங்களாலும் , துயரங்களாலும் , வன்முறைகளாலும் நிறைந்தது .

//THIS FILM NEEDED ILAIYARAJA - more than any other Bala film// ட்ரைலர் பார்த்தே இதை உணர்ந்தேன். பாலா நிச்சயமாக வருந்தியிருப்பார்.

Pavals said...

ராஜா இருந்திருக்கனும்.. :( AGREED

Pavals said...

ராஜா இருந்திருக்கனும்.. :( AGREED

Unknown said...

Except - THIS FILM NEEDED ILAIYARAJA - more than any other Bala film.
சத்தியமான வார்த்தை

Dubukku said...

ஜஸ்ட் பார்த்துட்டு வரேன். சேது பிடித்திருந்தது. பிதாமகன் சூர்யா மிகவும் பிடித்திருந்தது. அவன் இவன் காறித்துப்பும் படி இருந்தது.

ஆனால் இந்தப் படம் சும்மா கலக்கல் - absolutely love it.

கில்லாடி ரங்கா said...

ரத்தினச் சுருக்கமா சொல்லிட்டீங்க.. உண்மைலயே என்னையும் அதிகமாக பாதித்த படம் இது தான்.

நேரமிருந்தால் என் பார்வையயும் பார்க்கவும்.
பரதேசி - பாலா செய்த மாபெரும் தவறு

Nagarajan said...

தமிழ்த் திரையுலகம் கண்ட மாபெரும் முத்தாக பாலாவைக் கொண்டாடலாம்... திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு என்ற போக்கை மாற்றி அது ஒரு வரலாறு என்று நிரூபித்த பாலாவுக்கு ஒரு ராயல் சல்யூட்... நாம் அருந்தும் ஒவ்வொரு கோப்பைத் தேனீரிலும் நம் தமிழ் முன்னோர்களின் குருதி உறைந்திருப்பதை நாம் உணர வேண்டும்... இரண்டு நாட்களாக என்னால் இயல்பாய் இருக்க முடியவில்லை... காரணம் பாலா... இதுதான் பரதேசியின் வெற்றியாக இருக்கும். நன்றி... பாலா... அன்புடன்... க. நாகராஜன். திருவாரூர். 7598868760

Anonymous said...

The film insults the poor.

Anonymous said...

'பதறாதே, படுக்காதே' படித்தேன். ஆரம்பப் பாதி சற்று வளவள. ஏகப்பட்ட பாத்திரங்கள். கணினி-கேமரா செட் செய்யும் ஆசாமிகள் மட்டும் மூணு பேர் (அன்வர், ரஷீத், ஹமீது). வில்லன்கள் அல்லது சதிகாரர்கள் நாலு பேர் (கம்ரான், ஓஸ்மான், இத்தாலியன், மார்க்) கொஞ்சம் குறைத்திருக்கலாம். யார் என்ன சதி பண்ணுகிறார்கள், அவர்கள் நோக்கம் என்ன என்று புரிந்துகொள்ளவே நேரம் பிடிக்கிறது. ஆனால் 100 பக்கத்துக்கு அப்புறம் வேகமெடுத்து விறுவிறுப்பாகச் செல்கிறது. சென்னைக்கார சப் இன்ஸ்பெக்டர் துரைராஜ்தான் (இல்லை கான்ஸ்டபிளா) கடைசியில் ஜனாதிபதியைக் காப்பாற்றுவான் என்று நினைத்தால் கடைசியில் அவனை டம்மி ஆக்கிவிட்டது அநியாயம். அட் லீஸ்ட் தனக்கே தெரியாமல் தற்செயலாக அவன் செய்யும் ஒரு அற்ப காரியத்தினால்தான் கடைசியில் சதிக்கும்பல் சிக்கியது என்று இருந்திருக்கலாம். பரவாயில்லை. முடிவு கடைசிவரை ஊகிக்க முடியாமல் இருப்பது பெரிய ப்ளஸ்.

ஒரு யோசனை. கதையை குலசேகரனிலிருந்து ஆரம்பியுங்கள். ஹமீது, ரஷீத் போன்ற உதிரிகளில் தொடங்குவதற்குப் பதிலாக. இல்லையென்றால் அன்வர் பென் டிரைவைத் தவறவிடும்வரை உள்ள பகுதியை ப்ரோலோக் என்று போடுங்கள்.

எப்படியோ.. அல்வாவை விட நன்றாக இருக்கிறது. அடுத்த கதை எப்போது?

சரவணன்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி அனைவருக்கும்.

ஸ்பெஷல் நன்றி சரவணனுக்கு :-) இந்தக்கதையை (ஏன் அல்வாவையும் கூட) எழுதும்போது, நாயகத்தன்மை யாருக்கும் இல்லாமல் நம்பகத்தன்மையை அதிகம் முக்கியமாகக்கொண்டு எழுதினேன். எனவே துரைராஜ் போன்ற பாத்திரங்கள் அவர்களால் என்ன செய்யமுடியுமோ அதை மட்டுமே செய்தனர் :-)

Anonymous said...

பதறாதே... பற்றி

இன்னொன்றை விட்டுவிட்டேன்! அதாவது காமெரா இருப்பதைக் கண்டுபிடித்த பின்னும் சதிக்கும்பல் இப்படியா அதில் லைவ் டெலிகாஸ்ட் பண்ணிக்கொண்டே இருப்பார்களா? மஞ்சு ஹாண்ட்பேக் வைத்த இடத்தைப் பார்க்கிறாளா என்று பார்க்க வேண்டும் - சரி. அதற்கு காமெராவை ஆஃப் செய்தோ, மூடியோ அல்லது சுவர்ப்புறம் திருப்பியாவது வைத்திருக்கலாம். மஞ்சுவையும், ரஷீதையும் பிடித்துவைத்த பிறகு காமெராவை உடைத்து விடலாமே?

இதுதான் கதையில் ஆகப்பெரிய ஓட்டை!

சரவணன்

 

blogger templates | Make Money Online