Feb 16, 2006

மூன்று மேட்டர்கள் (16 feb 06)

மேட்டர் ஒன்று:

எனக்கு ப்ளாக்கரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. "நீங்கள் விரும்பிக்கேட்டதால், உங்கள் கணக்கு பற்றிய விவரங்களை இந்தச்சுட்டியில் போய் தெரிந்துகொள்ளுங்கள்" என்று.

1. நான் விரும்பியோ வெறுப்புடனோ கேட்கவில்லை. என் சார்பாக யாரோ கேட்டிருக்கிறார்கள். என்னைப்பற்றி அறிய இவ்வளவு ஆர்வம் கொண்ட மக்களும் இருப்பது குறித்து மகிழ்ச்சியே.

2. நல்ல வேளையாக, ப்ளாக்கர் மக்கள் முதலில் பதியப்பட்ட மின்னஞ்சலுக்கு இத்தகவலை அனுப்புகிறார்கள் - கேட்கும் நபருக்கு அனுப்புவதில்லை.

3. இதனால் ஏற்பட்ட இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், நான் என் பாஸ்வேர்டை நானே மறக்கும் அளவிற்கு கஷ்டமானதாக மாற்றிவிட்டேன்.

இருந்தாலும், மோகன் தாஸின் ஹாக்கிங் பற்றிய பதிவைப்படித்ததும் பயம் வரத்தான் செய்கிறது. கணினியில் எழுதப்படும், இணையத்தில் பரவவிடப்படும் எந்த விபரத்தையும் தொழில்நுட்பம் நன்கு அறிந்த ஹாக்கர்கள் சற்று நேரம் செலவழித்தால் அறிய முடியும் போலிருக்கிறது. எனவே மக்களே, கவனம். அடிக்கடி உங்கள் பூட்டுக்களை உறுதி செய்து கொள்ளுங்கள். (பதிவுக்கு நன்றி மோகன், அங்கே பின்னூட்ட முடியவில்லை- சொந்தக்காரணங்களால்)

மேட்டர் ரெண்டு

நீண்ட நாட்களுக்குப் பின், ஒரு நல்ல புத்தகம் கைக்குக் கிடைத்திருக்கிறது.

யூஜீன் பெட்ரோவா - அக்டோபர் மாதத்து ஆலிவ் பூக்கள் (பிரபலமான புத்தகம்தான் என்றாலும், இதுவரை தமிழில் இதைப்பற்றிப் பார்த்ததில்லை)

பிரச்சினை பூமி என்றே நான் அறிந்த செசன்யாவிலிருந்து ஒரு தென்றல், யூஜீன் பெட்ரோவா என்னும் கவிதாயினி. (எரிக்கா யாங்குக்கு செசன்யாவின் இணை என்கிறது முன்னுரை). முக்கியமான பாடுபொருள் காதலும் இயற்கையுமே என்றாலும் ஜார் ஆண்ட சோவியத்தில், புரட்சியின் ஆரம்பம் தென்படத்தொடங்கிய காலத்தில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதால் அதன் தாக்கங்களும் விரவி இருக்கின்றன.

முடியும்போது இக்கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து இடுகிறேன். இப்போதைக்கு, தலைப்புக்கவிதையைத் தமிழில்:

அக்டோபர் மாதத்து ஆலிவ் பூக்கள்

ஆண்டுக்கான சூரியன் அஸ்தமித்த நேரத்தில்
ஆலிவ் பூக்கள் உதிரத்தொடங்கின.
மாஸ்கோவின் தோழர்போல் செஞ்சட்டை அணிந்த ஆலிவ்.
மரத்திலேயே இருந்திருக்கலாமோ என
மனம் அலைபாய்கிற பூக்களும் உண்டு.
பனித்தரையில் பகுக்க முடியா
வெள்ளை நிறப்பூக்கள்
பச்சோந்திகளோ?
எனக்கெனவும் ஒரு பூ இருக்கிறது.
அது என் மரண மலர் வளையத்தில்
மையமாய் இருக்கலாம் -
அல்லது
நந்தவனத்தின் அத்தனை மலர்களையும்
கொய்து அவன் தரப்போகும் பூங்கொத்தின்
பகுதியாயும் இருக்கலாம்.
எப்படியும்
எனக்கான மலர் எனக்குத்தெரியும்.

நன்றாக இருந்தால் சொல்லுங்கள், மொத்த புத்தகத்தையும் மொழிபெயர்த்துவிடுகிறேன்.

மேட்டர் மூன்று

இது ஒரு சோதனைப்பதிவு - மெயில் மூலம் பிளாக்கருக்கு ஏற்றும் முயற்சி. வெல்லுதா பார்க்கலாம்.

7 பின்னூட்டங்கள்:

பினாத்தல் சுரேஷ் said...

Test OK!

மாயவரத்தான் said...

//நான் என் பாஸ்வேர்டை நானே மறக்கும் அளவிற்கு கஷ்டமானதாக மாற்றிவிட்டேன்.//

ஐயையோ...மறந்திட கிறந்திட போறீங்க. அதை என்கிட்ட கொடுங்க. நான் பத்திரமா "பாத்துக்குறேன்".

பழூர் கார்த்தி said...

//நான் என் பாஸ்வேர்டை நானே மறக்கும் அளவிற்கு கஷ்டமானதாக மாற்றிவிட்டேன்.//

யோவ் சுரேசு, உங்க பாஸ்வேர்டை என்னிடம் கொடுத்தால், நான் அதை ஒழுங்காக பராமரித்து வருவதோடு, மாதமொருமுறை அதை மாற்றி உங்களுக்கும் தெரிவிப்பேன்.. இந்த சேவை முழுவதும் இலவசம் :-))

பினாத்தல் சுரேஷ் said...

மாயவரத்தான்... said..
நான் பத்திரமா "பாத்துக்குறேன்".

சோம்பேறி பையன் said...
மாதமொருமுறை அதை மாற்றி உங்களுக்கும் தெரிவிப்பேன்

kiLampittanggayyaa!!!!!!!!!!!!!!!!

Boston Bala said...

கவிதை நல்லாருக்கு

பினாத்தல் சுரேஷ் said...

Thanks BoBa; but I still have a reelation to do about the poems

Anonymous said...

சுரேஷ்,
யூஜின் பெட்ரோவாவை நீங்களும் வாசித்திருக்கிறீர்களா?

அவரது கவிதைகளில் அழகுணர்ச்சியை விட செஞ்சட்டை தோழர்களிடம் வெளிப்படும் எள்ளலும் கருணையும் எனக்கும் பிடிக்கும். கொஞ்சம் புரியாதது போலத் தோன்றினாலும் நிச்சயம் ரசிக்க வைக்கும் கவிதைகள்தான்.

உங்கள் அறிமுகம் பார்த்ததும் மீண்டும் வாசிக்கத் தோன்றுகிறது

சாத்தான்குளத்தான்

 

blogger templates | Make Money Online