Mar 15, 2006

அனில் கும்ப்ளே - 500 (15Mar06)

ஒன்று மேட்சில் 8 விக்கெட் எடுத்து ஜெயித்துக் கொடுப்பார்கள் அல்லது 100 ரன் கொடுத்து எதிரணியை ஜெயிக்க வைப்பார்கள். இதுதான் லெக் ஸ்பின்னர்களின் தலையெழுத்தாக இருந்தது ஒரு காலம்.
 
இதை மாற்றி, அளவாக ரன் கொடுத்து அளவோடோ அல்லது அபரிமிதமாகவோ விக்கெட் எடுத்து ஜெயிக்கத் தோள் கொடுத்து உதவாவிட்டாலும் தோல்விக்கு வழிவகுக்காத லெக் ஸ்பின்னர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனக்குத் தெரிந்த அளவில், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே மற்றும் சிறிது காலத்துக்கு முஷ்டாக் முஹம்மது - அவ்வளவுதான் லிஸ்ட்டே.
 
எப்போதாவது ஸ்பின் போடும் மிதவேகப்பந்து வீச்சாளர் என்று கிண்டலடிக்கத் தயங்காத மீடியா,
எப்போதாவது அதிக ரன்களைக்கொடுக்கையில் திட்டத்தயங்காத மீடியா,
 
கும்ப்ளேவின் 500 விக்கெட் சாதனையைப் புறந்தள்ளியது ஏன்? இந்த டெஸ்ட் மேட்சில் குறிப்பிடும்படியான வேறு எந்த ரிக்கார்டும் உடைக்கப்படவில்லை, யாரும் பெரிய அளவில் பிரகாசிக்கவும் இல்லை எனும்போது வெறும் ஆட்டநாயகன் விருதோடு விட்டுவிட்டது ஏன்?
 
என்றோ ஒரு க்ராண்ட் ஸ்லாமில் வெற்றிக்கு சற்று அருகில் வந்துவிட்ட காரணத்தாலேயே "சமுதாயக்கருத்துக்கள்" வரை சானியா மிர்ஸாவிடம்  கேட்கிறார்கள்.. எந்த மேட்சில் தோற்றாலும் ஜெயித்தாலும் "அதிர்ச்சி" செய்தியாகிறது.
 
"இந்த மேட்சிலாவது சாதனையை சமன் செய்வாரா டெண்டுல்கர்" என்று டாஸிற்கும் முன்பே ஹேஷ்யங்கள் வெளியாகிறது.
 
டோனியின் முடியளவைப்பற்றி முஷாரப் வரை பரபரப்பாகிறது - அவரும் மைசூர் சந்தன சோப் விற்கத் தொடங்குகிறார்..
 
இந்த சாதனையை உடைக்கக்கூடிய அடுத்த இந்தியன் 200 விக்கெட்டுக்கும் மேல் பின்னே இருப்பதால் சாதனை முறியடிக்கப்பட பல ஆண்டுகள் ஆகலாம் என்ற நிலையிலும் பாராமுகம்.. கிரிக்கின்போ இணையத்தளத்திலும் கூட ஒரு மேம்போக்கான தகவலாக மட்டுமே வருகிறது. வலைப்பூக்களிலும் ஆஸ்திரேலியா - தெனாப்பிரிக்கா ஒரு நாள் போட்டி இதை அழுத்திவிட்டது.
 
கும்ப்ளேவின் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாத, நிதானமான சுபாவம் ஒரு முக்கியக்காரணியாக இருக்கலாம். கும்ப்ளேவைவிட சிறந்த டீம் பிளேயர் இந்தியாவில் இல்லை.
 
இவ்வாறு கும்ப்ளே கண்டுகொள்ளாமல் விடப்படுவது இது முதல் முறையும் இல்லை. அவர் உடைத்த பல ரெக்கார்டுகள் கவனிக்கப்படாமல் போனவையே.
 
கும்ப்ளேவின் அபார சாதனைக்கு என் வாழ்த்துக்கள், முரளியும் ஷேன் வார்னேவும் தூரத்தில் இருந்தாலும் எட்டிப்பிடிக்க தளராத உடல் தகுதியும் தேர்வாளர்களின் கருணைப்பார்வையும் பெற பிரார்த்தனை!

8 பின்னூட்டங்கள்:

Muthu said...

சொன்னா கோவிச்சுவீங்க..ஆனா வடஇந்தியா தென்இந்தியான்னு பாகுபாடு பாக்கறாங்கய்யா..அதுதான் காரணம்.....

மற்றபடி கும்ளே கடின உழைப்பாளி....வந்த புதிதில் அவர் பந்துகள் சுழன்றன.போக போக அவர் வேகமாக வீச தொடங்கினார். ஆனால் சாதித்துவிட்டார். எத்தனை டெஸ்ட் மேட்ச்கள் ஜெயிக்க வைத்தார் ..ஒரு நாள் போட்டிகளிலும் ரன் கொடுக்காமல் வீசுவார்.
வாழ்த்துக்கள் ஜம்போ கும்ளே....

வாசகன் said...

Appreciate your appreciation to AnilKumble.

It is our Cricket board's luck to have such a player.

It is Kumble's badluck to have such a ........... .

Unknown said...

கிரிக்.இன்ஃபோ வில் நன்றாகவே எழுதியிருந்தார்கள் சுரேஷ். மற்றவையெல்லாம், நீங்கள் சொன்னது போல - விவரிக்கமுடியாத விஷயங்கள்.

ஊடகங்களுக்கு சில பேர் மட்டும் தான் செல்லப்பிள்ளை, மற்றவர்கள் பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை.

பினாத்தல் சுரேஷ் said...

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி முத்து, கருத்து கந்தசாமி & துபாய்வாசி. (இங்கும் பாருங்கள், கும்ப்ளே மூன்று பேரை மட்டுமே ஈர்த்திருக்கிறார்:-))

முத்து, கிரிக்கெட்டில் வட இந்தியா தென் இந்தியா பிரச்சினை இல்லை என்று நினைக்கிறேன் - மஹாராஷ்ட்ரா vs மிச்ச இந்தியாதான்!

karuththu, I feel appreciated when i saw you appreciation for appreciation!

துபாய், கிரிக் இன்ஃபோவிலும் மேம்போக்காக இருந்ததாகத்தான் நான் நினைக்கிறேன். யோசித்துப்பாருங்கள் - டெண்டுல்கர் இதுபோன்ற சாதனையை நிகழ்த்திருந்தால்??

Sivabalan said...

Anil Kumble is a legend. He was not given captaincy just because of high level politics involved in. I think media also did not give due to respect to him in the past.

Long live Kumble's bowling.

Muthu said...

சுரேஷ்,

சரிதான். யோசித்து பார்த்தால் மகராஷ்ட்ரா மற்றும் மிச்ச இந்தியா பிரச்சினையும் இருக்கும் என்று தோன்றுகிறது(பேட்ஸ்மென்கள் விஷயம்)..ஆனால் பொதுவாக மீடியாவின் நிலை?

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி சிவபாலன்.

முத்து, போர்டிலிருந்தே துவங்குகிறது இந்த மஹாராஷ்ட்ரா விஷயம். மீடியா பற்றித் தெரியாதா? ஒரு பவுந்தரி (மட்டுமே) அடித்த கனித்கரை ஒரு வருடம் புகழ்ந்து கொண்டிருந்தவர்கள்தானே!

லொடுக்கு said...

கும்ப்ளே, இந்திய கிரிக்கட்டின் போற்றப்படாத கதாநாயகன் என்பார்கள். மிக்க சரி.

 

blogger templates | Make Money Online