1982ல் பாரதியாருக்கு நூற்றாண்டு வந்தபோது கல்கியில் ஒரு பரிசுப்போட்டி வைத்திருந்தார்கள் (கோகுலமா கல்கியா எனச்சரியாக நினைவில் இல்லை). பாரதியார் பாடல்களில் சில எண்களைக்கண்டுபிடிக்கச் சொல்லி. சில எண்கள் சுலபமாக இருந்தாலும் (முப்பது கோடி - முப்பது கோடி முகமுடையாள், அறுபது கோடி - அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் கூட்டுவள் தாய்) சில எண்களுக்காக பலமுறை படிக்க வேண்டி வந்தது (நாற்பதாயிரம் - நலமோர் எத்துணையும் கண்டிலேன், இதை நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன் - சுயசரிதை).
போட்டியில் பரிசு கிடைக்கவில்லை - ஆனால் பாரதியார் பாடல்களின் மீதும் தமிழின் மீதும் தீராத ஆர்வத்தை எனக்குள் உருவாக்கிவிட்டதற்காக அந்தப்போட்டிக்கு என்றும் என் நன்றிகள்.
ஆதர்சத்தை வீட்டில் உருவாக்குவது என்றும் மகிழ்ச்சியைத் தருவது.
பாரதியாருக்கு ஓட்டைப்பல் என்பதை சரித்திர ஆசிரியர்கள் மறைத்தது ஏனோ?
அவர் பாட்டை அவரே பின்பாட்டாய்ப் பாடுகிறார்.
Dec 11, 2006
டிசம்பர் 11
Subscribe to:
Post Comments (Atom)
9 பின்னூட்டங்கள்:
இந்த ஓட்டைப்பல் பாரதியார் ரொம்ப நல்லா பின்பாட்டு பாடுறாரே. ஒவ்வொரு வரியும் நாக்கைக் குழறவைக்கும் வரிகள். ஆனால் ரொம்ப நல்லா திருப்பிச் சொல்றாரே. அருமை.
இது யார்? நீங்களா சுரேஷ்? :-)
நன்றி குமரன்.
நானா? நான் முன்பாட்டு மட்டும்தான். ரொம்பக் கஷ்டப்பட்டு, ஒரு 60 நொடிக்கு என் பேச்சைக் கேக்க வச்சேன்:-))
நல்லா இருக்கு. ஆனா பாரதியும் ஏழுவயசில் ஓட்டை பல்லாய் இருந்திருப்பார்.
நன்றி உஷா (பாரதியார் பற்றிய கூடுதல் தகவலுக்கும் சேர்த்து:-))
ஜெய்சங்கர் அரவிந்த்சாமிக்கு சொல்லிக்குடுத்த மாதிரி சொல்லி தந்திங்களா?
பெண்பிள்ளை என்றே நினைக்கிறேன் :))
என் சிறு வயதில் இந்த வரிகளை கேட்கும்போதே ஒருவித ஆவேசம் வருவதாக உண்ர்வேன்.
நன்றி தம்பி.
அதென்ன ஜெய்சங்கர் - அரவிந்தசாமி? எந்தப்படம் தெரியலியே..
தளபதி
அந்த வீடியோ தூள்.
நன்றி தம்பி.. என் அறிவை விசாலப்படுத்தியதற்கு;-)
நன்றி பேட் நியூஸ் இந்தியா. (இந்த மாதிரி சாதாரணமான கமெண்டுக்காவது வேற பேர் வச்சிருக்கலாம்;-))
Post a Comment