Jan 17, 2008

காமா சோமா பீமா!

பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ -- நீண்ட நாட்களுக்குப் பிறகு! ஆனால் என்னவோ தனிப்பட்ட பிரிவியூ மாதிரிதான் இருந்தது கூட்டம் - வேலை நாள் மதியம் என்பதாலும் வரலாறு காணாத மழை துபாய் ஷார்ஜாவை ஆட்டி இப்போதுதான் அடங்கியதால் கூட இருக்கலாம்.
 
கதையா? உப்புமாதான் கிண்டி இருக்காங்க!
 
சத்யா (ஹிந்தி) படத்தின் திரைக்கதையை அப்படியே சுட்டு, அதில் கொஞ்சம் தளபதி, கொஞ்சம் புதுப்பேட்டை அதன் மேல் கொஞ்சம் தாராளமாக நாயகன் அள்ளித்தெளித்து, தீபாவளி சரவெடி மாதிரி எந்நேரமும் துப்பாக்கி சப்தம் போட்டு தாளித்து (துப்பாக்கி இல்லாத வேளைகளில் கத்தியும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் - ஆனால் ரத்தம் முக்கியம்) ரௌடிக் கதைகளாக வரும் நேரத்தில் இறக்கி இருக்கவேண்டிய படம், இறக்கும் நேரம் தவறிவிட்டதால் சூடு ஆறிப்போய் பரிமாறி இருக்கிறார்கள்.
 
சத்யா கதைக்கும் பீமா கதைக்கும் ஒரே வித்தியாசம்தான். அதில் நாயகன் வேறு வழியில்லாமல் ரௌடி ஆவான். இதில் கம்பெனியின் க்ரெடின்ஷியல் எல்லாம் தெளிவாகத் தெரிந்துகொண்டு, வாக் இன் இண்டர்வியூ போல ரௌடிக் கும்பலுக்குத் தேவையான ஆளை பேக் செய்து வேலையில் சேர்கிறான்! கஷ்டம்! விக்ரமின் உழைப்பும் நடிப்பும் அனாவசியத்துக்கு வீணாகி இருக்கின்றன!
 
நாயகிக்கு நாயகன் மேல் காதல் ஏற்பட ஒரே காரணம் அவன் கூரையைப் பிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்ததுதான். ஏன் வில்லன்களுக்கு இப்படிப்பட்ட டெக்னிக் தெரிவதில்லை? டூயட் நேரத்துக்கு கடனாக வந்து அழகாகப் போகிறார் திரிஷா.. சும்மா சொல்லக்கூடாது, பேட்டிகளில் மறக்காமல் சொல்லும் கெமிஸ்ட்ரி (அதை ஏன் வரலாறு புவியியல் என்றெல்லாம் சொல்வதில்லை?) நன்றாகத்தான் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. 
 
பிரகாஷ்ராஜ் நல்ல ரௌடியாம், ரகுவரன் கெட்ட ரௌடியாம். ரெண்டு கூட்டமுமே யாரையாவது சுட்டுக்கொண்டும் வெட்டிக்கொண்டும்தான் திரிகிறது.. என்ன நல்லதோ கெட்டதோ!
 
லிங்குசாமியின் முந்தைய படங்களில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் இடைவேளைக்குச் சற்றுமுன் வரும்.. இந்தப்படத்தில் அது காத்திருந்து காத்திருந்து கிளம்பப்போகும் வேளையில் படம் முடிய 5 நிமிஷத்துக்கு முன் மட்டுமே வருகிறது.. பொறுமை செத்துப் போய்விடுகிறது!
 
நல்ல விஷயங்கள் ஒரு கைவிரலைத் தாண்டவில்லை - பிரகாஷ்ராஜ் நடிப்பு, விக்ரமின் உழைப்பு, திரிஷாவின் அழகு..பல பழைய பாடல்களை நினைவுபடுத்தினாலும், காதைப் படுத்தாத பாடல்கள்..அப்புறம்.. அப்புறம்.. ஒன்றுமில்லை!
 
கடைசி 5 நிமிஷம் நன்றாகத்தான் இருக்கிறது-- அதற்காக 2 மணி 55 நிமிஷத்தைப் பொறுத்துக்கொள்ள விரும்பினால் தாராளமாகப் பார்க்கலாம்.

12 பின்னூட்டங்கள்:

Sridhar Narayanan said...

என்ன தினம் ஒரு பதிவா? :-))

//பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ//
இந்த படத்துக்கா?

விமர்சந்த்துக்கு நன்றி. நமக்கு நேரம் மிச்சம் பாருங்க :-)

கப்பி | Kappi said...

//கடைசி 5 நிமிஷம் நன்றாகத்தான் இருக்கிறது-- அதற்காக 2 மணி 55 நிமிஷத்தைப் பொறுத்துக்கொள்ள விரும்பினால் தாராளமாகப் பார்க்கலாம்.//

ரொம்ம்ம்ப கஷ்டம் :)))

இலவசக்கொத்தனார் said...

பீமா பார்க்க வேண்டாமா? ரொம்ப நன்றி. இந்த மாதிரி எல்லா படங்களையும் பார்த்துட்டு முடிவு சொல்லிடுங்க ப்ளீஸ்.

Boston Bala said...

---அதை ஏன் வரலாறு புவியியல் என்றெல்லாம் சொல்வதில்லை?---

வரலாறு என்றால் சிம்பு - நயந்தாரா மாதிரி சொல்லலாமே.

புவியியலுக்கு கால்ஷீட் ஒத்து வர வேண்டாமா? நாயகன் கொடுக்கும் நாற்பது நாளில், நாயகிக்கு நார்வேயில் படப்பிடிப்பு இருந்தால்...

பௌதிகம் - உங்களுக்கு வீட்டுப்பாடம்.

Unknown said...

பெனாத்தலாரே,

எச்சரிக்கைக்கு நன்றி! கொத்சு சொல்றமாதிரி எல்லாப் படத்துக்கும் இப்பிடி பண்ணீங்கன்னா, ரத்த சேதாரத்தைத் தவிர்க்க உதவுமே? :)

வடுவூர் குமார் said...

சிரிப்பான் போடாமலே குபுக்குன்னு சிரிப்பு வரவழைக்கிறது எப்படி என்பதை இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
பீமா பார்க்க வேண்டாமா? ரொம்ப நன்றி. இந்த மாதிரி எல்லா படங்களையும் பார்த்துட்டு முடிவு சொல்லிடுங்க ப்ளீஸ்.

பினாத்தல் சுரேஷ் said...

பர்ஸ்ட் டே யோசிச்சு எல்லாம் போகலை ஸ்ரீதர். ப்ரீயா இருந்தேன், தியேட்டருக்கு போன் பண்ணா ப்ரீயா இருக்குதுன்னான்.. கிளம்பிட்டேன். அங்கே போனபிறகுதான் தெரிஞ்சுது இன்னிக்குதான் யு ஏ இ ல ரிலீஸ்னு :-)

ஆமாம் கப்பி பய - ரொம்பவே கஷ்டம்!

சரிங்க கொத்தனார். இந்தத் தியாகத்தை செய்ய நான் தயாராவே இருக்கேன். ஆனா, ஒரு தியாகி விருதாவது ஏற்பாடு பண்ணீங்கன்னா.. வேணாம்.. இப்பல்லாம் பாரதரத்னாதான் பேஷனாம்.. அதுக்கு பரிந்துரை செஞ்சு விளம்பரம் போட்டீங்கன்னா போதும்.

பினாத்தல் சுரேஷ் said...

பௌதிகம் - வீட்டுப்பாடமா? ஏற்கனவே வீட்டுல நிறைய வேலை செய்யச் சொல்லி physical exertion கொடுக்கறாங்களே அதைச் சொல்றீங்களா?

தஞ்சாவூரான், ரத்த சேதாரமா? அவ்ளோ மோசமில்லைங்க ;) சில படம் பாத்துட்டு குத்துயிரும் குலையுயிருமா வீடு திரும்பியிருக்கோம் - இது அவ்ளோ மோசமில்லை!

என்ன வடுவூர் குமார்.. இவ்ளோ தூரம் வந்துட்டு கொத்ஸை புகழ்ந்துட்டு போயிட்டீங்கன்னா எப்படி? நம்ம பதிவைப் பத்தி ஒண்ணியும் சொல்லாம!

Unknown said...

//பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ -- நீண்ட நாட்களுக்குப் பிறகு! ஆனால் என்னவோ தனிப்பட்ட பிரிவியூ மாதிரிதான் இருந்தது கூட்டம்//
நீங்க ஜபல் அலியில் படம் பார்த்திருக்கிறீர்களா? வார இறுதி, விடுமுறை நாட்கள் ஆகியவை தவிர மற்ற நாட்களில் அதிக பட்சம் ஆறு பேர் இருப்பார்கள். இங்கு நான் பார்த்த படமெல்லாம் ப்ரீ வியூவில் பார்த்த மாதிரிதான். ஒரு ஆளுக்கு மேல் டிக்கட் வாங்கியிருந்தால் கண்டிப்பாக படம் ஓட்டுவார்கள்.
தாரே ஜமீன்பர் பார்க்க, ஒரு குடும்பத்தோடு, மொத்தம் ஆறு பேர்தான்.

படம் ட்ரெயிலரில் பார்த்த போதே தெரிந்து விட்டது. ஆறு பேர் கையில் கைத்துப்பாக்கியுடன், ஹீரோ நூறு அடிக்குள் இருந்து கொண்டு அவர்களை வெறுங்கையால் பந்தாடுவது- சூப்பர் ஹீரோ
உங்களைப் போலவே, மூளையை கழட்டிட்டு படம் பார்ககலாம் என்று ஜஸீலாவும் போட்டிருக்கிறார்கள்.
தப்பிக்க வைத்ததற்கு நன்றி.

மங்களூர் சிவா said...

இன்னைக்குதான் என் கலீக் ஒருத்தன் இந்த படம் பாத்துட்டு சூப்பரா இருக்குன்னான் அவன உதைக்கணும்.

Anonymous said...

enna nanba... konjam ushara irunthirukka vendaama pa? 2008 nallapadiya irukka vendama? parava illai.. pirivom santhipom parthu equal panniko...

அழிப்பான் said...

அந்த கருமத்த நானும் பார்த்தம்பா ! ஒரே போரு
அழகப்பன் அதை விட ,
வாழ்த்துக்கள் ஒன்னு தான்
பரவால்ல ...

 

blogger templates | Make Money Online