May 7, 2008

அவியல் (அ) உள்ளேன் அய்யா (அ) ஆல் இன் ஆல் கருத்து சொல்வோமில்ல! (07 May 08)

ஐபிஎல்லுக்காக சொத்தை அடமானம் வைத்து கேபிள் கனெக்ஷன் வாங்கினேன். 6 கோடி விலைபோன அற்புத டோனியின் செண்டிமெண்ட் அல்வா தாங்க முடியவில்லை. ஹேடனோடு ரன் போம், ஹஸ்ஸியோடு பீல்டிங் போம், ஓரம் ஓடு பவுலிங் போம் என்று காலி பெருங்காய டப்பாவாக ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். 5 பவுலர் மட்டும் உபயோகப்படுத்துவது, எக்ஸ்பெரிமெண்ட் செய்யாமை, ஒரு மேட்ச் சுமாரா ஆடிய வித்யுத்தை காவுகொடுத்து ஸ்ரீகாந்தின் தவப்புதல்வனை உள்ளே நுழைத்தது, ஜோகிந்தர் ஷர்மா கடைசி ஓவர் செண்டிமெண்ட் என்று கேனத்தனமான கேப்டன்ஷிப். (ஜோகிந்தர் எந்த ஓவர் போட்டாலும் அதிலே பாக்கி இருக்கும் அத்தனை ரன்னையும் அடித்து ஆட்டத்தை முடித்துவிடுவதால் அந்த செண்டி வொர்க் அவுட் ஆகிறது).. நான் ராஜஸ்தானுக்கு மாறிட்டேன்!

******************
 
இந்தியர்கள் அதிகம் சாப்பிடுவதால்தான் விலைவாசி ஏறுகிறது என்று புஷ் சொன்னாரோ இல்லையோ தெரியாது. கர்நாடக அரசியல்வாதிகள் தண்ணீர்ப்பஞ்சத்துக்கு தமிழர்கள் மீது பழிபோட்டு நடத்தும் அரசியல் அமெரிக்கா வரை சென்றுவிட்டது. சரி, இதைச் சொல்வதால் பசி அடங்குமா, விலைவாசி குறையுமா?
 
******************
 
சிவாஜிக்கு 1 வருஷம் முன்னாலேயே ப்ளாஷ் செய்தேன், 1 மாசம் முன்னாலேயே விமர்சனம் எழுதினேன்.. தசாவதாரத்துக்கு அப்படியெல்லாம் ஒன்றும் செய்யும் யோசனை இல்லை. ரஜினி ஷங்கர் கூட்டணி என்ன கிழித்துவிடப்போகிறார்கள் என்று தெரியாதா? ஆனால் கமல் ஆச்சர்யங்களை உள்ளே வைத்திருப்பவர். சாகேதராமன் கற்பனை ஆனாலும் நிஜத்துக்கு மிக அருகே வந்தவன் - ரங்கராஜ நம்பி (?) கடலுக்குள் போனாரா, அவரை கடலில் தள்ளிவிட்டவர்கள் சைவரா அசைவரா, பூணூல் சரியாகப் போட்டிருந்தார்களா போன்ற கேள்விகள் படம் ரிலீஸ் ஆகும்வரை காத்திருப்பதில் பிரளயம் வந்துவிடாது. வரட்டுமே, அப்புறம் கிழிக்கலாம் - மும்பை எக்ஸ்பிரஸைக் கிழித்தது போல! ஆனால் பாட்டெல்லாம் அடிக்கும் ஹிந்திவாடையும், 10 வேஷமா.. பேஷன் பரேட் போல வரப்போகிறார்களோ என்ற பயமும் ஆர்வத்தைக் குறைத்திருப்பது உண்மை.
 
*************************
 
இன்று அக்ஷய திருதியையாம். கோல்டு குவெஸ்ட்டில் காசு போட்டால் மும்மடங்காகத் திரும்பி வருமாம். இன்னும் இரண்டு ஆளை இன்றே சேர்த்து வைத்தால் அந்தமான் தீவுகளை உங்கள் பேரில் எழுதிவைத்துவிடுவார்களாம். இது சீன பெங் சுயி படியும் நாஸ்ட்ராடமஸ் வாக்கின் படியும் சத்தியமான உண்மையாம். கேக்கறவன் கேனையா இருந்தா...

இதுபோன்ற மோசடிகளில் பணம் எடுப்பவன், ஏமாற்றுகிறோம் என்று தெரிந்து செய்பவன் மட்டும்தான். மற்றவனுக்கு ஆசை ஏமாறும் வரை இருக்கிறது. வயாகராவிலிருந்து நைஜீரியாவரை ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மெயில் அனுப்பி எவனாச்சும் ஏமாறுவானா என்று பார்த்துக்கொண்டிருக்கும் கூட்டம் வேகமாக அதிகரிக்கிறது. பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்துவைக்கும் வல்னரபிள் மானிடரே கவனம்!

*****************************
 
தமிழ்மணம் புதுவடிவம் எனக்குப் பிடித்துதான் இருக்கிறது. முழு ஓடையும் கொடுப்பது உப்புமா கிண்டுபவர்களுக்கு சரியான அடியாக இருந்திருக்கும் :-) முழு ஓடையும் கொடுத்து, சீக்கிரமாகவும் தரவிறங்கினால் அதொன்றும் தப்பில்லை என்றே நினைக்கிறேன். நான் புழங்கும் அத்தனை பக்கங்களும் ஒரே பக்கத்தில் வைத்திருப்பதும் வசதியாகத்தான் இருக்கிறது. கூகுள் ரீடர் சில பதிவுகள் (20 அதிகபட்சம்) மட்டும் இருக்கும்வரை உள்ள எக்ஸ்பிரஸ் வேகம், ஓப்பன் ஓடைச் சங்கமத்தின் 430 ஐயும் சேர்த்தவுடன் பாசஞ்சராகி கூட்ஸ் ஆகி நின்றே போனது.. வேறு வழியில்லாமல் அத்தனையும் அழித்தேன். தமிழ்மணத்துக்கு கூகுள் ரீடர் மாற்று இல்லவே இல்லை!
 
**************************
 
"உத்தபுரத்தில் பாதையும் வேண்டும்; மற்ற பிரிவினருக்கு பாதுகாப்பும் வேண்டும்; அதற்குரிய நடவடிக்கையை எடுங்கள் என்று சொன்னேன். அதன்படி அந்த நீண்ட உயர்ந்த சுவரில் ஒரு பெரிய நுழைவாசலை உருவாக்கி வழியை ஏற்படுத்தி அந்த வழியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று உருவாக்கியிருக்கிறோம்." என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் முதல்வர். மற்ற பிரிவினரின் பாதுகாப்பு அந்த வழியினால் பாதிக்கப்படுவது உண்மைதானா? மற்ற சமூகத்தினரின் பாதுகாப்பு  குறிப்பிட்ட சமூகத்தினரால் மட்டுமே அச்சுறுத்தலுக்கு ஆளாகிறது என்று சொல்வது ஒருவகைத் தீண்டாமை அல்லவா? பாதுகாப்பைச் சுவர் தந்துவிடுமா?  பெரிய பூனை போக பெரிய கதவும், சின்ன பூனை போக சின்ன கதவும் வைத்த மேதாவி கற்பனை அல்ல என்று நிரூபிக்கிறார் முதல்வர். சமீபகாலத்தில் ஏறத்தாழ எல்லாச் செயல்பாடுகளிலுமே தெரியும் வழவழ கொழகொழ பாணியை இதிலும் முதல்வர் கடைப்பிடித்திருப்பது அநியாயம். வெளிப்படையான தீண்டாமையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டாமா? அதே போல சன் ஜெயா கலைஞர் மூன்று செய்திகளிலுமே, சுவரைக் கட்டியவர்கள் என்ன ஜாதி என்பதைக் குறிப்பிடாமல் இருந்தது தற்செயல் என்று தோன்றவில்லை. இதிலும் ஓட்டு பார்த்தால் யாராலும் ஜாதிக்கொடுமையை தீர்க்க முடியாது. அசிங்கம்!
 
****************************
சினித்துளி!
  • யாரடி நீ மோகினி பார்த்தேன். டுபாக்கூர். கதை திரைக்கதை செல்வராகவனாம்! அடப்போங்கய்யா!
  • பொம்மரில்லு படம் வசனம் புரியாமல் பார்த்தேன், வசனம் புரிந்திருந்தால் ரசித்திருப்பேனோ என நினைத்ததைப் பொய்யாக்கியது ப்ரேம்-பை-ப்ரேம் ரீமேக் சந்தோஷ் சுப்ரமணியம். ஹ ஹ ஹாசினி மாதிரி ஒரு கேனைக் காதலியை வைத்துக்கொண்டு சந்தோஷ் எப்படித்தான் குப்பை கொட்டப் போகிறானோ பாவம்!
  • நேபாளி திரைக்கதை நன்றாக இருந்தது. பழைய கதையையும் சொல்லும் விதத்தில் சுவாரஸ்யப்படுத்தி இருந்தார்கள். பார்த்ததற்கு வருந்த வைக்கவில்லை.
  • குருவி இனிமேல்தான் பார்க்கவேண்டும் (நான் ஒரு மசாக்கிஸ்ட்). ஆனால் விமர்சனம் போக்கிரிக்கு எழுதியதே பொருந்தும் எனத்தோன்றுகிறது பா ராகவன் விமர்சனத்தைப் பார்த்தால்.

 

43 பின்னூட்டங்கள்:

முரளிகண்ணன் said...

தலை அப்பப்ப வந்து கிண்டுங்க. ரொம்ப இடைவெளி வேண்டாம்

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி முரளி கண்ணன்.

மக்கள்ஸ்,பின்னூட்டம் போடறதில எதாச்சும் பிரச்சினையா என்ன?

ஜாம்பஜார் ஜக்கு said...

//மக்கள்ஸ்,பின்னூட்டம் போடறதில எதாச்சும் பிரச்சினையா என்ன?//

இன்னாத் தலீவா இப்டி கேட்டுட்ட? நம்ம பேட்டைல அல்லாரையும் வரச் சொல்லிகீறேன். பின்னாலயே வந்துகினு கீறாங்க :)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

இலவசக்கொத்தனார் said...

உள்ளேன் ஐயா பதிவு போல! நானும் முதலில் உள்ளேன் ஐயா சொல்லிக்கறேன்.

Boston Bala said...

அடிக்கடி இந்த மாதிரிப் போட்டு விடுங்க

கோபிநாத் said...

\\ஆனால் பாட்டெல்லாம் அடிக்கும் ஹிந்திவாடையும், 10 வேஷமா.. பேஷன் பரேட் போல வரப்போகிறார்களோ என்ற பயமும் ஆர்வத்தைக் குறைத்திருப்பது உண்மை. \\

தல

எனக்கும் மைல்டாக ஒரு பயம் இருக்கு..! ;)

seethag said...

ஏன் சுரேஷ் யாருக்குமே உத்தாபுரம் ஒரு விஷயமே இல்லயா?

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க ஜக்கு.. எங்க யாரையும் காணோம்?

கொத்ஸ், வெறும் உள்ளேன் அய்யாவா? திரும்ப வரீங்களா?

பாபா, அப்பப்ப போட்டு விட்டுறலாம்!!

சீதா, ஆமாம். அதை இதுவரைக்கும் கமெண்டு போட்டவங்க கூட தொடலை.. இந்த மாதிரி அநியாயங்கள் கூட பழக்கமாகிவிட்டனவா?

Anonymous said...

வணக்கம் பினாத்தலாரே

அவியல் என்பதை விட ஃபலூடா என்று வைத்திருக்கலாம் சுவையாகவும் ஜில்லுன்னும் எல்லா நியூஸும் கொடுத்திருக்கீங்க. நீங்க டெய்லி இப்படி நியூஸ் கொடுத்தா நாங்க ஏன் ஒரு பத்திரிகைல படிச்சது சரியான்னு 3 பத்திரிகைய நெட்ல ரெஃபர் பண்ணி எங்க பாஸுங்க BP ஏத்தபோறோம்.

பாவங்க எங்க பாஸ், இங்க படிச்சது போதாதுன்னு சில பதிவுகளை ப்ரின்ட் அவுட் எடுத்துட்டு ட்ரெய்ன்ல போகும்போது படிக்கலாம்னு கொண்டுபோனா எங்க பாஸ் லிஃப்டுல வச்சு 'யங் மேன் டோன்ட் டேக் வொர்க் ஹோம்' அப்படின்னு சொல்லி கண்ணுல கர கரன்னு தண்ணி வர வச்சுட்டாரு, பச்ச புள்ளங்க அவுரு

சரவணன்

மெளலி (மதுரையம்பதி) said...

நானும் உள்ளேனய்யா போட்டுக்கறேன் :)

Sridhar V said...

//நான் ராஜஸ்தானுக்கு மாறிட்டேன்!//

கொத்ஸ் சென்னைக்கு 'ஓ' போட்டார். மூணு பந்தயம் தொடர்ந்து தோல்வி.

நீங்க ராஜஸ்தானுக்கு மாறிட்டீங்கன்னு சொன்னாலும் சொன்னீங்க... 2 பந்தயம் தொடர்ந்து தோல்வி. இன்னிக்கு மும்பை பிரிச்சு மேஞ்சுட்டாங்க போங்க :-))

உங்க ரெண்டு பேரு கூட்டணி நல்லா இருக்கே :-)

உத்தபுரம் விஷயம் கொடுமையானது. இதுக்கு முன்னாலே இந்த மாதிரி நிறைய இருக்கு. 'சுந்தரலிங்கம்' பேருந்து தடம் துவக்கப்பட்டபோது கலவரம் வெடித்தது. திண்ணியம் கிராமத்திலே நடந்தது ஒரு கொடுமையான சம்பவம். ஏன், இப்பவும் எத்தனையோ கிராமத்தில இரட்டை குவளை முறை இருக்கதான் செய்கிறது. யாரும் எதிர்த்து கேட்க முடியாது.

இவ்வளவு பிரச்சினைகளும் இருக்கும்பொழுது அரசியல் கட்சிகள் யாரும், ஏன் தொண்டு நிறுவனங்கள் கூட பாதிக்கபட்ட பகுதிகளில் நேரடியாக சென்று பணி செய்ய முடியாது. அந்த மாதிரியான மிருகங்களாகத்தான் மனிதர்கள் மாறிவிட்டார்கள் இந்த பகுதிகளில்.

சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகளா (கம்யூனிஸ்ட் உட்பட) இதை தட்டி கேட்கப் போகின்றன? என்னமோ போங்க :-(

Geetha Sambasivam said...

//வழவழ கொழகொழ பாணியை இதிலும் முதல்வர் கடைப்பிடித்திருப்பது அநியாயம். வெளிப்படையான தீண்டாமையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டாமா? அதே போல சன் ஜெயா கலைஞர் மூன்று செய்திகளிலுமே, சுவரைக் கட்டியவர்கள் என்ன ஜாதி என்பதைக் குறிப்பிடாமல் இருந்தது தற்செயல் என்று தோன்றவில்லை. இதிலும் ஓட்டு பார்த்தால் யாராலும் ஜாதிக்கொடுமையை தீர்க்க முடியாது. அசிங்கம்!//

அமீரகத்திலே தானே இருக்கீங்க? நான் சென்னையிலே இருக்கேன், வழக்கம்போல் புரியலைனு சொல்லிடுங்க! ஓகேயா?

Geetha Sambasivam said...

அது என்ன சங்கிலி போட்டு வச்சிருக்காங்கனு கூப்பிட்டிருக்கீங்க, இ.கொ. மூலமாய், ம்ஹும், நமக்கும் இருக்காங்க பாருங்க, நண்பர்கள்னு, யாரும் எட்டிக் கூடப் பார்க்கிறதில்லை, கேட்டால் ஆன்மீகம் எழுதறேனாம், இந்த மாதிரி மொக்கை எல்லாம் எழுதத் தெரியாமலா இருக்கோம்? :P

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க சரவணன். நல்லா கெடச்சாரய்யா ஒரு பாஸ் உங்களுக்கு.. எனக்கும் ஒருத்தர் வந்து வாய்ச்சிருக்காரே.. எதிர்லே ஒருத்தன் சீரியஸா தமிழ்மணம் பாத்துக்கிட்டிருக்கானே, டிஸ்டர்ப் பண்ணாம போவோம்ன்ற பீலிங்கே இல்லாம கதை அடிச்சிகிட்டு! நானும் எவ்ளோ நேரம்தான் அவர் சொல்றதையெல்லாம் கேக்கறா மாதிரியே நடிக்கிறது!

மதுரையம்பதி, அங்க 10, இங்க 1 ஆ? நல்லா இருங்க!

பினாத்தல் சுரேஷ் said...

ஸ்ரீதர்,

ஆமாமில்ல? சரி.. நான் எந்த அணிய ஆதரிக்கணும்னு சொல்லிட்டு போங்க.. நாமினல் சார்ஜஸ்தான்.

கம்யூனிஸ்டு உள்பட// - ஒத்துக்கறேன்.

கீதா,

//அமீரகத்திலே தானே இருக்கீங்க? நான் சென்னையிலே இருக்கேன், வழக்கம்போல் புரியலைனு சொல்லிடுங்க! ஓகேயா?//

யாருக்காவது புரியறதுக்கு வாய்ப்பு இருக்கா மாதிரியா எழுதறீங்க?

//அது என்ன சங்கிலி போட்டு வச்சிருக்காங்கனு கூப்பிட்டிருக்கீங்க//

அப்படிக் கூப்பிட்டாதான் வருவீங்களா?

ஆன்மீகத்துக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.. மொக்கைன்னா ஒரு வரி போடுங்க, ஓடி வரேன் ;-)

rv said...

பெனாத்தலார்,
ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கும் அவியல் ஜோரா இருக்கு.

கமல் சாதா பட்ஜெட்ல படமெடுத்தாலே (ஹே ராம்) ஒருத்தனுக்கும் புரியாது. கொஞ்சம் பெரிய பட்ஜெட்னா (படமெடுத்த தாணுவுக்கே புரியாத) ஆளவந்தான். இப்போ மெகா பெரிய பட்ஜெட். தேவுடா தேவுடா... ஆஸ்கர் பேக்-அப்பா எங்கியாச்சும் பொட்டிக்கடையாவது வாங்கிவச்சுருப்பார்னு அவருக்காக நான் வேண்டிக்கிறேன்.

----------

//இன்னும் இரண்டு ஆளை இன்றே சேர்த்து வைத்தால் அந்தமான் தீவுகளை உங்கள் பேரில் எழுதிவைத்துவிடுவார்களாம். //
முன்னாடி பைனான்ஸ். இப்போ இதுவா..

-------------
தமிழ்மணம் புதுவடிவம் முத நாள் வேலை செஞ்சுது. அதுக்கப்புறம் நெருப்புநரி/இண்டர்நெட் எலி எத பயன்படுத்தினாலும் கம்பூட்டரையே க்ராஷ் செஞ்சுடுது.
-------------------
உத்தபுரம் மேட்டர் பத்தி என்ன சொன்னாலும் க்ளிஷேவாக இருக்கும்/இவன் வேறென்னெத்த சொல்வான் அப்படின்னு ரியாக்‌ஷன் வர ரிஸ்க் அதிகம். அதனால் அதெல்லாம் சாட்டில்! சரியா? :P

--------------
யாரடி மோகினி.. காலக்கொடுமை. அதுவும் கிராமத்துல அக்ரகாரத்துல காமெடிங்கிற பேர்ல கழுத்தறுக்கறது. அநியாயத்துக்கு படம் நீளம்.

சந்தோஷ் சுப்பி ஓகே.. ஜெனிலீயாவுக்காகவே அந்தப்படத்தை பார்த்தவன் என்ற முறையில் உம்ம ஒற்றைவரி விமர்சனத்தை கடுமையாக எதிர்க்கிறேன். இந்த பாசிச போக்கு தொடருமானால் வரும் மே 9-ஆம் தேதி 'வேலூர் கோட்டை ஜெனிலீயாவுக்கே' என்று தடையை மீறி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

நேபாளி, குருவியெல்லாம் பார்க்க தெகிரியம் வரவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால், ஜெஜெ திருட்டிவிசிடி/டிவிடி தயாரிக்க பெருமளவு பணவுதவி செய்வதால்தான், அருமையான திரைப்படம் (குருவி) திரையரங்குகளில் காற்று வாங்குகிறது என்று கேள்விப்பட்டேன்.

மங்களூர் சிவா said...

நானும் உள்ளேனய்யா போட்டுக்கறேன் :)

கப்பி | Kappi said...

இன்னுமா ஐபிஎல் பார்க்கறீங்க?? ரைட்டு!!

ஓகை said...

//ஹ ஹ ஹாசினி மாதிரி ஒரு கேனைக் காதலியை வைத்துக்கொண்டு சந்தோஷ் எப்படித்தான் குப்பை கொட்டப் போகிறானோ பாவம்! //

முழுக்கேனை மாதிரி அந்த கதாபாத்திரம் தெரியலையே!. காரியப் பைத்தியம் போல காரியக் கேனை போலருக்கே! வெகு நாட்களுக்குப் பிறகு முழுக்க முழுக்க ரசித்த படம். முழுக்க முழுக்க ரசித்த பாத்திரம்.

இராம்/Raam said...

/பொம்மரில்லு படம் வசனம் புரியாமல் பார்த்தேன், வசனம் புரிந்திருந்தால் ரசித்திருப்பேனோ என நினைத்ததைப் பொய்யாக்கியது ப்ரேம்-பை-ப்ரேம் ரீமேக் சந்தோஷ் சுப்ரமணியம். ஹ ஹ ஹாசினி மாதிரி ஒரு கேனைக் காதலியை வைத்துக்கொண்டு சந்தோஷ் எப்படித்தான் குப்பை கொட்டப் போகிறானோ பாவம்!//

ஹி ஹி....

மேலே என்னனொவ்வோ அரசியல் எல்லாம் பத்தி பேசினதை விட சினி துளிதான் படிக்க இண்ட்ரெஸ்ட்'ஆ இருந்துச்சுகிறதை உண்மையாக ஒத்துக்கிறேன்.... :)

Sridhar V said...

//கமல் சாதா பட்ஜெட்ல படமெடுத்தாலே (ஹே ராம்) ஒருத்தனுக்கும் புரியாது. கொஞ்சம் பெரிய பட்ஜெட்னா (படமெடுத்த தாணுவுக்கே புரியாத) ஆளவந்தான். //

பட்ஜெட்படி ஆளவந்தானும் ஹேராமும் ஒரே அளவுதான். ஹே ராம்ல பென் கிங்க்ஸ்லி, எல் சுவாமிநாதன்னு பெருந்தலைகள் எல்லாம் முதலில இருந்தாங்க. பின்ணணி இசைக்கு ஹங்கேரி போய் பண்ணிட்டு வந்தாங்கன்னு டிவியில காமிச்சாங்க. எல்லாம் முடிஞ்சு கமல்ஹாசனுக்கு 17 கோடி நட்டமாச்சாம்.

ஆனா ஒண்ணு... இந்த படங்கள் எல்லாம் டிவியில ரொம்ப நல்லா ஓடிச்சு (உதா - அன்பே சிவம்). படத்தை சரியா சந்தை படுத்துதல் முக்கியம்.

இந்த மாதிரி காண்டிரவர்ஸி மேட்டர் வந்தால் படத்துக்கு ஒரு பப்ளிசிட்டிதானே.

மும்பை பாய்ஸ்-ங்கிற படத்துல நஸ்ருதின் ஷா தன்கிட்ட இருக்கிற கறுப்பு பணத்தை வெள்ளையாக்க ஒரு 'தோல்வி' படம் எடுப்பார். :-) அந்த மாதிரி ஆஸ்கர் மாதிரி சினிமா தயாரிப்பாளர்களுக்கு நட்டம் வந்தாலும் இலாபம்தான்பா.

இப்ப இருக்கற சாட்டிலைட் யுகத்துல தசாவதாரம் மாதிரி பின்புலம் உள்ள படங்கள் எல்லாம் தோல்வியுற வாய்ப்புகள் கம்மி. B, C சென்டர்கள் மட்டும் நம்பியிருந்த காலம் மலையேறி போச்சுன்னுதான் நினைகிறேன்.

குமரன் (Kumaran) said...

உள்ளேன் ஐயா.

ஆயில்யன் said...

//இராம்/Raam said...
/பொம்மரில்லு படம் வசனம் புரியாமல் பார்த்தேன், வசனம் புரிந்திருந்தால் ரசித்திருப்பேனோ என நினைத்ததைப் பொய்யாக்கியது ப்ரேம்-பை-ப்ரேம் ரீமேக் சந்தோஷ் சுப்ரமணியம். ஹ ஹ ஹாசினி மாதிரி ஒரு கேனைக் காதலியை வைத்துக்கொண்டு சந்தோஷ் எப்படித்தான் குப்பை கொட்டப் போகிறானோ பாவம்!//

ஹி ஹி....

மேலே என்னனொவ்வோ அரசியல் எல்லாம் பத்தி பேசினதை விட சினி துளிதான் படிக்க இண்ட்ரெஸ்ட்'ஆ இருந்துச்சுகிறதை உண்மையாக ஒத்துக்கிறேன்.... :)
///

ஆமாம்! ஆமாம்! எனக்கும் கூட...! :)))

ஆனாலும்

/ஹ ஹ ஹாசினி மாதிரி ஒரு கேனைக் காதலியை வைத்துக்கொண்டு சந்தோஷ் எப்படித்தான் குப்பை கொட்டப் போகிறானோ பாவம்//

:((((

Anonymous said...

அவன் அவன் ஆணிபுடுங்கிட்டு வீட்டுக்கு போய் ஒரு நாள் தூங்கி எழுந்தே வந்தாச்சு, ஒரிஜினல் உம்ம பதிவு காணோம் தமிழ்மண முகப்புல.. ஆன கொத்சு பதிவு இன்னும் ச்ச்சூடான இடுகைகள்ள இருக்கு என்னய்யா நடக்குது. இதை எதிர்த்து நீர் எதிர் பதிவு போட்டே ஆக வேண்டும் தலைப்பு வேணும்னா இதுல இருந்து எதுனா ஒண்ணு எடுத்துகங்க காபிரைட்லாம் கேக்கமாட்டோம்

1. ஹெல்லோ மை டியர் வ்ராங்க் மெம்பர்
2. அம்மணகுண்டி - மொழி ஆராய்ச்சி
3. தமிழச்சி ( அதுக்கு அப்புரம் ரெண்டு ஸ்பேஸ் விட்டு ஒரு ஹைஃபன் அப்புறம் உமக்கு தெரிஞ்ச எதாவது வார்தைய போட்டுவிடும் எப்படியும் க்ளிக் பண்ணி உள்ள வந்து பார்து உம்ம பதிவை சூடான இடுகைல் வரவைச்சுடுவாங்க, கொத்சுவ பொகை விட வைக்கலாம் )


சரவணன்

பினாத்தல் சுரேஷ் said...

//கமல் சாதா பட்ஜெட்ல படமெடுத்தாலே (ஹே ராம்) ஒருத்தனுக்கும் புரியாது. //

டாக்குட்டர், யாரு அந்த ஒருத்தன்? குருவி பாக்கறதுக்கு ரஷ்யலேருந்து டிக்கட் போட்டுகிட்டு தமிழ்நாடு வந்தாரே அந்த ஒருத்தனா? வேணாம்.. மோதாதீங்க!

//வரும் மே 9-ஆம் தேதி 'வேலூர் கோட்டை ஜெனிலீயாவுக்கே' என்று தடையை மீறி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.//

அவசியம் செய்ங்க.. அந்தக்கூட்டத்துக்கு ஹ ஹ ஹாசினி தலைமை தாங்கினா, வெற்றி நிச்சயம்!

மங்களூர் சிவா,

ரிப்பீட்டுக்குக் கூடவா ஒரு வரி கிடைக்கலை? ;-(

கப்பி பய,

நாங்க கென்யா பி வெர்சஸ் ஹாலந்த் பி யே பாப்போமாக்கும்!

பினாத்தல் சுரேஷ் said...

ஓகை,

//முழுக்கேனை மாதிரி அந்த கதாபாத்திரம் தெரியலையே!// உண்மைதான். முழுக்கேனையா இருந்தா ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடலாமே, தொந்தரவு இல்லையே :-)

ராம்,

பின்ன, குமுதம் வாங்கினாலும் லைட்ஸ் ஆன் தானே முதல்லே படிப்போம் :-)

ஸ்ரீதர்,

//ஆனா ஒண்ணு... இந்த படங்கள் எல்லாம் டிவியில ரொம்ப நல்லா ஓடிச்சு (உதா - அன்பே சிவம்)// இதை வச்சு, நான் ஒரு போஸ்ட் எழுத ஆரம்பிச்சு ட்ராப்டுல நிக்குது.. பாப்போம் தசாவதாரத்துல தலைவர் கவுக்காம இருந்தா முடிச்சு போட்டுர்றேன்.

வாங்க குமரன்.

ஆயில்யன், சந்தோஷ் கவலைக்கு நீங்க ஏன் :-((((( ஆகிறீங்க?

சரவணன், சூடான இடுகைக்கு டுட்டோரியல் எல்லாம் போட்டிருக்கேன் ஒரு காலத்துல.. இப்ப திருந்தி வாழ நினைச்சிருக்கேன், காதுல புகையோட ;-)

Radha Sriram said...

என்ன சுரேஷ் நல்லா இருக்கீங்களா??:):) டிபிக்கல் பெனாத்தல் ஸ்டைல் பதிவுக்கு வெயிட்டிங்.:):)

Unknown said...

ஆல் இன் ஆல் பெனாத்தல் நல்லாத்தான் இருக்கு. ஒவ்வொண்ணுக்கும், தனித்தனியா கருத்து சொல்லலாம். நேரமின்மை காரணமாக, 'அவியல் அருமை' :)

Geetha Sambasivam said...

//அமீரகத்திலே தானே இருக்கீங்க? நான் சென்னையிலே இருக்கேன், வழக்கம்போல் புரியலைனு சொல்லிடுங்க! ஓகேயா?//

//யாருக்காவது புரியறதுக்கு வாய்ப்பு இருக்கா மாதிரியா எழுதறீங்க?//

என்ன அரசியல் செய்யறீங்க? அமீரகத்துக்கு ஆட்டோ வேண்டாம், சென்னைக்கு ஆட்டோ போதும், அதான் ஒண்ணும் சொல்றதில்லை, இப்படி உடைச்சுச் சொன்னாத் தான் புரியுமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மெளலி (மதுரையம்பதி) said...

என்னங்க பினாத்தலாரே, கொத்ஸு பதிவுல நீங்க பினாத்தியிருக்கறது நெசந்தேன் போல....ஒரு 30 கூட தேறல்ல... :-).

மெளலி (மதுரையம்பதி) said...

வச்ச அடகு மூட்டாச்சா?, இல்லேன்னா சொல்லுங்க கொத்ஸு செட்டில் பண்றாராம்...இது மாதிரித்தான் என்னை பாட்னர்ஷிப்-ல சேத்துக்கிட்டிருக்காரு..

மெளலி (மதுரையம்பதி) said...

//கமல் சாதா பட்ஜெட்ல படமெடுத்தாலே (ஹே ராம்) ஒருத்தனுக்கும் புரியாது. கொஞ்சம் பெரிய பட்ஜெட்னா (படமெடுத்த தாணுவுக்கே புரியாத) ஆளவந்தான். இப்போ மெகா பெரிய பட்ஜெட். தேவுடா தேவுடா... ஆஸ்கர் பேக்-அப்பா எங்கியாச்சும் பொட்டிக்கடையாவது வாங்கிவச்சுருப்பார்னு அவருக்காக நான் வேண்டிக்கிறேன்.//

பதிவை விட மேலே இருக்கும் பின்னூட்டம் நல்லாயிருக்கு... :)

மெளலி (மதுரையம்பதி) said...

//கீதா சாம்பசிவம் said...
அது என்ன சங்கிலி போட்டு வச்சிருக்காங்கனு கூப்பிட்டிருக்கீங்க, இ.கொ. மூலமாய், ம்ஹும், நமக்கும் இருக்காங்க பாருங்க, நண்பர்கள்னு, யாரும் எட்டிக் கூடப் பார்க்கிறதில்லை, கேட்டால் ஆன்மீகம் எழுதறேனாம், இந்த மாதிரி மொக்கை எல்லாம் எழுதத் தெரியாமலா இருக்கோம்? :P//

ஆமா ராமாயணம் சொல்றேன்னு தினமும் ஒரு உண்மைத்தமிழன் பதிவு,
படிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போகுது...

வர-வர அழகான மொக்கைகளை பார்க்கவே முடியல்ல....இதுல சொன்னா கோவம் வேற வந்துடுது..:)

மெளலி (மதுரையம்பதி) said...

//டாக்குட்டர், யாரு அந்த ஒருத்தன்? குருவி பாக்கறதுக்கு ரஷ்யலேருந்து டிக்கட் போட்டுகிட்டு தமிழ்நாடு வந்தாரே அந்த ஒருத்தனா? வேணாம்.. மோதாதீங்க!//

ஆஹா, டாக்டர், இதல்லாம் வேற நடக்குதா...என்னையா ஆச்சு, ஏய்யா இப்படி, போயிம்-போயிம் குருவிக்காகவா?

மெளலி (மதுரையம்பதி) said...

//மதுரையம்பதி, அங்க 10, இங்க 1 ஆ? நல்லா இருங்க!//

ஆகா, இந்த பினாத்தலுக்காகவே ஒரு 50க்கு வழிபண்ணிடணுமுன்னு தோணுது....பார்க்கலாம்.

மெளலி (மதுரையம்பதி) said...

//யாருக்காவது புரியறதுக்கு வாய்ப்பு இருக்கா மாதிரியா எழுதறீங்க?//

அதானே...நல்லா கேளுங்க சுரேஷ்.
ஏதோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய அளவுல பதிவுகள்...பார்த்தாலே தலை சுத்துது. :)

மெளலி (மதுரையம்பதி) said...

ஏதோ என்னாலான உதவியை பண்ணிட்டேன் சுரேஷண்ணாச்சி..

50 காரண்டி, நூறு எல்லாம் சொல்ல முடியாது, ஏதாவது லேட் பிக்கப்புல கிடைச்சாலும் கிடைக்கலாம்... பார்ப்போம் :)

மெளலி (மதுரையம்பதி) said...

ஏதோ என்னாலான உதவியை பண்ணிட்டேன் சுரேஷண்ணாச்சி..

50 காரண்டி, நூறு எல்லாம் சொல்ல முடியாது, ஏதாவது லேட் பிக்கப்புல கிடைச்சாலும் கிடைக்கலாம்... பார்ப்போம் :)

மெளலி (மதுரையம்பதி) said...

என்னாச்சு, அப்படியே இருக்கே 38க்கு மேல ஒரு பின்னூட்டம் கூட வரல்ல?

பினாத்தல் சுரேஷ் said...

ராதா,

அதென்ன டிப்பிகல்? அவியல் போடறதும் அப்பப்ப பண்றதுதானே?

நன்றி தஞ்சாவூரான்.. நீங்களாச்சும் பதிவைப்பத்தி கருத்து சொன்னீங்களே!

கீதா,

//அமீரகத்துக்கு ஆட்டோ வேண்டாம், சென்னைக்கு ஆட்டோ போதும், // சரி, அதுனால என்ன? இப்பவும் புரியலையே!!!
இதுல உடைச்சுச் சொன்னேன்னு வேற சொல்றீங்க!

பினாத்தல் சுரேஷ் said...

மதுரையம்பதி,

//ஒரு 30 கூட தேறல்ல... :-).//

கஷ்டப்பட்டுத் தேத்திட்டோமில்ல!

//இது மாதிரித்தான் என்னை பாட்னர்ஷிப்-ல சேத்துக்கிட்டிருக்காரு..//

நெனச்சேன். அங்க 10 - 20ன்னு பறந்தபோதே!

//பதிவை விட மேலே இருக்கும் பின்னூட்டம் நல்லாயிருக்கு... :)//

பின்னூட்டம் நல்லா இருக்குன்னு சொல்லுங்க, அதென்ன பதிவை விட? யாராச்சும் கேட்டாங்களா :-)

பினாத்தல் சுரேஷ் said...

//வர-வர அழகான மொக்கைகளை பார்க்கவே முடியல்ல....இதுல சொன்னா கோவம் வேற வந்துடுது..:)//

அதைச்சொல்லுங்க!

//ஏய்யா இப்படி, போயிம்-போயிம் குருவிக்காகவா?//

சேச்சே அவர் சாம் ஆண்டர்சன் படம் பாக்க வந்தாரு, அதுக்கு டிக்கட் கிடைக்காததால் குருவி..


//50க்கு வழிபண்ணிடணுமுன்னு தோணுது....//

ஹூம்.. பாப்போம்..

உங்க உதவிக்கு நன்னி!

மெளலி (மதுரையம்பதி) said...

//சேச்சே அவர் சாம் ஆண்டர்சன் படம் பாக்க வந்தாரு, அதுக்கு டிக்கட் கிடைக்காததால் குருவி..//

என்னாது சாம் ஆண்டர்சன் படமா?...நான் வேற ஏதோல்ல கேள்விப்பட்டேன் :)

 

blogger templates | Make Money Online