தமிழ் பேப்பர் என்று ஆரம்பிக்கப் போகிறோம். நீ தொடர்கதை எழுது. கட்டளையிட்டார் பாரா.
தொடர்கதையா? காமெடி பண்ணாதீர்கள். ஏதோ சீவக சிந்தாமணியை உல்டா பண்ணச் சொன்னீர்கள், செய்தேன். தொடர்கதை ஃபார்மட்டுக்கு எல்லாம் என் எழுத்து சரிப்பட்டு வராது என்றேன்.
இப்படியே சொல்லிகிட்டிருந்தா எப்படி. தலைப்பு அல்வா. இந்தா பிடி நாட். பினாத்தல் சுரேஷ் அரபு ஷேக்கோட பொண்டாட்டியோட ஜல்சா பண்றான். அது ஷேக்குக்குத் தெரிஞ்சு போயிடுது. பினாத்தல் ஓடறான். இதை டெவலப் பண்ணி எழுது.
சரிதான். இந்த ஆசாமி கதை எழுதச் சொல்லவில்லை, என்னை ஜெயிலுக்குப் போகவைக்கத் திட்டமிடுகிறார் என்று புரிந்தது.
ஆனாலும் முதல் வாரத்தில் ஆளை மற்றும் மாற்றி ஏறத்தாழ இதே நாட்டைத்தான் எழுதினேன். எழுதும்போதே இந்த மேட்டரைத் தொடரக்கூடாது, எதாவது உருப்படியா எழுதலாம். உடனே நினைவுக்கு வந்தது ஆயில் ரிக்குகள். வேலை விஷயமாக அடிக்கடி போயிருக்கிறேன். ஹெலிகாப்டரில் இருந்து பிடிமானம் இல்லாத இடத்தில் இறக்கி விடுவார்கள். சிறை மாதிரி வாழ்க்கை. பல அறைகளுக்கு உள்ளே போகக்கூடாது என்று கட்டுப்பாடு. உள்ளே தனி அரசாங்கம். க்ரைம் கதைக்கு ஏற்ற செட்டப். ஹீரோவை இங்கே கொண்டு வரலாம்.
ஏன் ஹீரோ இங்கே வருகிறான்? கிட்நாப் செய்யப்பட்டு வருகிறான்.. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிமானம் கிடைத்து கதை உருவாகத் தொடங்கியது.
பர்ப்பெச்சுவல் எனர்ஜி என்பது எல்லா அறிவியல்வாதிகளுக்கும் என்றும் மாறாப் பேராசை. இதைக் கொண்டு வரலாமா? ஃப்யூயல் செல்களில் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன். ஜியாலஜி சாட்டிலைட்டுகள் எப்படி ஒரு இடத்தில் குறிப்பிட்ட கனிமம் இருக்கிறது என்று கண்டுபிடிக்கின்றது? இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி.
பல்ப் ஃபிக்ஷன் வகைதான். படித்தவுடன் மறக்கும் கதைதான். ஆனால் அதற்காக எதோ ஒன்றை எழுதிவிடக்கூடாது. யாராவது ஒருவர் சீரியஸாக எடுத்துக்கொண்டு இதெல்லாம் ஒரு லாஜிக்கா? விமர்சனம் எழுதும்போது மட்டும் ஏத்த இறக்கமா எழுதறே? என்று கேட்டுவிட வாய்ப்பிருக்கிறது.
பார்த்த பழகிய இடங்களை மட்டும் எழுதலாம். தெரியாத இடங்களைக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கொள்ளலாம்.
யூபிஎஸ் பார்சல் சர்வீஸ் சீருடையில் நட்சத்திரங்கள் மின்னின என்று எழுதி, வெளியிடுவதற்கு முன்னால் நண்பர் டைனோபாய்க்கு அனுப்பினால் அடிக்கவே வந்துவிட்டார். யூபிஎஸ் ஆசாமிகள் எப்போதும் ஷார்ட்ஸ்தான். தெரிஞ்சுகிட்டு எழுது என்று சொல்ல, மாற்றினேன்.
தீவிரவாதப்பணம் எப்படியெல்லாம் கைமாறுகிறது என்று நாராயண் விளக்கமாகச் சொன்ன விஷயங்களைக் கதையில் தேவையான இடத்தில் புகுத்தினேன்.
கதையே படிக்காத கொத்தனாரைப் படுத்தி எடுத்தேன். உனக்காகப் படிக்கிறேன். இங்கே ச் வரணும் ப் வரணும் என்று சந்தி திருத்தினான்.
கதைக்கான விமர்சனமாக, என் சுதந்திரத்தைச் சில மணித்துளிகள் அதிகப்படுத்திய தங்கமணியை மறந்தால் மறுவேளை சோறு கிடைக்காது.
பல்ப் ஃபிக்ஷன்தான். ஆனால் நிறைய உழைப்பையும் நம்பகத் தன்மைக்கான தேடலையும் கொண்ட பல்ப் ஃபிக்ஷன்.
தமிழ் பேப்பரில் தொடராக வந்தபோதே பலர், இது நாவல் ஃபார்மட். மொத்தமாகப் படித்தால்தான் நன்றாக இருக்கும் என்றார்கள். இப்போது மொத்தமாக.. இன்னும் சில நாட்களில்..
7 பின்னூட்டங்கள்:
வாழ்த்துகள் :)
முன்னொரு முறை என்னிடம், இங்கு தோஹாவில் கூறிய அந்த க்ரைம் நாவல் எப்ப ரீலிசாகும் ? :)
சூப்பர் தல...மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))
நன்றி ஆயில்யன், கோபிநாத்.
ஆயில்யன், அந்தக் கதைதான் ‘பதறாதே..படுக்காதே’ என்ற தலைப்பில் ரிலீஸ் ஆகிறது. இரண்டும் ஒரே நேரத்தில்.
பட்டைய கிளப்புங்க தலைவா..வாழ்த்துக்கள்..
Nice , my best wishes...
காத்திருக்கேன்...
mm
Post a Comment