சாஃப்ட்வேர் ஆசாமி குலசேகரனுக்குத் தெரியாது - சாதாரணமாகத் தொடங்கிய நாளின் முடிவில் பிரம்மாண்டமான சதிப்பின்னலில் தானும் ஒரு அங்கமாகப் போவது.
மும்பை நடிகை மஞ்சுவுக்குத் தெரியாது - தான் சந்திக்கப் போகும் அரபியின் கையில்தான் தனது முடிவு என்பது.
அரபிப் பணக்காரன் கம்ரானுக்குத் தெரியாது - தன் சக்திக்கும் மீறிய எதிரிகளின் கையில் சிக்கி இருப்பது.
கூலிக் கொலைகாரன் மார்க்குக்குத் தெரியாது - இது தன்னுடைய கடைசி அசைன்மெண்ட் என்று.
சிறப்புக் காவல்படை துரைராஜுக்குத் தெரியாது - தன் முதல் வேலையில் இருக்கும் பிரம்மாண்டமான ரிஸ்க்!
எல்லாத் தெரியாதவர்களும் ஆடும் சம்பவங்களின் சதிராட்டம்....
________________
ஆக்கும் சக்தி எல்லாமே அழிக்கவும் வல்லவைதான். கண்டுபிடித்த விஞ்ஞானியைவிட உபயோகிக்கும் தீவிரவாதிக்கு அழிக்கும் திறன் அதிகமாகத் தெரியும். தீவிரவாதிக்குத் தெரியாத விஷயங்களும் தெரிந்திருந்தால்தான் காவல்படைகள் தன் வேலையைச் செய்ய முடியும்.
அமெரிக்காவின் ஒரு மூலையில் தன்பாட்டுக்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் விஞ்ஞானியை ஏன் ஒரு அரேபிய எண்ணெய்க் கிணற்றுக்குக் கடத்த வேண்டும்? இங்கிலாந்து நடிகையுடன் கள்ள உறவு வைத்திருக்கும் பாலிவுட் இயக்குநரைக் காப்பாற்ற ஏன் இண்டர்போல் ஆர்வம் காட்டவேண்டும்? வேலையை விட்டு நீக்கப்பட்ட தொழிற்சாலை செக்யூரிட்டி ஆஃபீஸரை மீண்டும் கூட்டிவர ஏன் எஃப் பி ஐ உயிரை விட வேண்டும்?
சர்வதேசத் தீவிரவாதம்..
சர்வதேசக் காவல்படை..
சர்வதேசமும் சுற்றும் கதை...
_____________________________________________________________________
ஆகஸ்ட் மூன்று - ஈரோடு புத்தகக் கண்காட்சியில் வெளியீடு.
உங்கள் ஆதரவையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்.
12 பின்னூட்டங்கள்:
அல்வா.............. கொடுக்கலைன்னா... வாங்கிக்கணும்.
இனிய பாராட்டுகள்.
சூப்பர் தலைவா..வாழ்த்துக்கள்..!!
வாழ்த்துக்கள். எந்த பதிப்பகம் வெளியீடு?
http://kgjawarlal.wordpress.com
எழுத்தாளர் சுரேஷுக்கு வாழ்த்துகள்..!
வாழ்த்துக்கள்!
How to get those books @ Bangalore? :-)
வாழ்த்துக்கள்!
சார் , நீங்க எங்கேயோ போயிட்டீங்க
வாழ்த்துகள்.
ஐதராபாத்தில் கிடைக்காது... ஊருக்கு வரும்போது கிடைத்தால் படித்துவிடுகிறேன்.
இ-புக்/பிடிஎஃப் வடிவில் வெளியிடும் எண்ணம் உண்டா?
ஆஹா வாழ்த்துக்கள். சென்னை வரும்பொழுது நம்ம பதிவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் புத்தகங்களை மறக்காம வாங்கிக்கணும்.
Best wishes Ram Suresh.
i am reading this book now...
யுவன்,
படித்துவிட்டு கருத்து சொல்லவும். (sudamini AT gmail)
I was unable to accept Mike or Meek's dead in alwa novel. that character has shown enough intelligence and cleverness from the beginning of the story.. but he was shot at the end... at least you could have poisoned him... Except this upset, I liked the entire flow... honestly speaking I could understand 100 % of your story by second walk through... I should appreciate your time and effort for this good novel. since I have been liking only Action English movies, your novel had given such feel... thanks a lot and keep writing... :-)
Post a Comment