Jun 17, 2009

நாட்குறிப்பாய் ஒரு அ-புனைவு

ஆபீஸுக்குள் நுழைகையில் லேட் ஆகிவிட்டிருந்தது. கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.

காலை வணக்கத்தை தொடர்ந்து இயல்பாகப் பார்ப்பதுபோல கடிகாரத்தைப் பார்த்தான் வெள்ளைக்காரன். ஏற்கனவே ஒரு முறை சொல்லி இருக்கிறேன் - இந்தச் செயல் எவ்வளவு எரிச்சலூட்டுகிறது என்று. (27a)

“என்னாச்சு? லேட்டா?"

"ஆமாம்.. நாறப்பசங்க. என் கார்க்கு முன்னாலதான் டபுள் பார்க் பண்ணுவானுங்க”

“இன்னிக்குமா? சரி விடு”

“ஆற மாட்டேங்குது சார், மத்தவன் டைமை மதிக்காதவனை கொன்னா கூட குத்தம் இல்லை.” (27b)

“கோபத்தை விடு” அவன்மேலெல்லாம் இல்லைடா.. உன்மேலேதான் கோபம்!

“கோபம்ன்ற சாத்தான் மட்டும் இல்லாட்டி நான் மண்ணு!” (8b,28)

கணினி உள்ளே செல்ல நேரம் எடுத்தது.

”இது டைம் சாப்பிடும் அதுக்குள்ள பேனா சாம்பிள் பிரச்சினையை இன்னிக்கு தீத்துடலாம்” வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டிய பேனாக்கள். கோயில் ட்யூப்லைட் போல பேனாவைவிட பெரிசாக உபயம் என்று கம்பெனி பெயர் போட்ட விளம்பரம்.

“ரெண்டே மாடல்தானே.. ஒண்ணு ஒல்லி ஒண்ணு குண்டு..என்ன ரீபிள் போடலாம்?”

‘ப்ளாக்தான் சார்.. வேறெந்த கலர்லேயும் பேனா எனக்கு ஒத்துவராது!” (13)

”சரி இதை ட்ரை பண்ணு”

மஞ்சள் போஸ்ட்-இட் டில் வேகமாகக் கிறுக்கினேன்.

“என்னது இது? எதாச்சும் ட்ராயிங்கா?”

“என் பேர் சார்.. என் மொழிலே எழுதினேன்”

“அழகா இருக்கே”

“பேர் எல்லாம் அழகுதான்.. ஆனா இது எங்க மொழியில கோழிக்கிறுக்கல்!” (1,3)

கணினிக்கு உயிர் வந்துவிட்டிருந்தது.

“உன் சின்னப் பெண் தானே?”

“ஆயிரம் முறை பாத்தாலும் உங்களுக்கு ஞாபகம் வராது! இது மூத்த பெண்”

“போன வாரம் சின்னப்பெண் என்று சொன்னியே!”

“அப்புறம் மாத்திட்டேன்.. இதெல்லாமா பிரச்சினை?” (23)

வெள்ளைக்காரன் எல்லா ரிப்போர்ட்டையும் வாங்கிக்கொண்டு கிளம்ப மணி 9 அடித்துவிட்டது. சக ஊழியன் “இன்னாபா? காபி சாப்பிடப் போலாமா?” என்றான்.

“சரி வரேன்.”

“வெள்ளைக்காரன்கிட்ட பொய்யா? மெய்யா?”

“பொய் சொல்லாம நல்லவனா இருக்க ஆசைதான். விடுதா இந்த சமுதாயம்?” (30) கேண்டீனில் வறட்டு வறட்டு என்று பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தார்கள். “எப்பா.. நான் போற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?”(24)

”என்ன இன்னிக்கு யூனிபார்ம் போடல? பிறந்தநாளா?” வாடிக்கையாளரிடம் செல்லும் எல்லாநாட்களில் மட்டுமாவது யூனிபார்ம் அணிய வேண்டியது விதி. இன்றைக்கு அவனுக்கு ட்யூட்டி இல்லை என்பது கேட்டுவிட்ட பிறகுதான் நினைவுக்கு வந்தது.

“போரடிச்சுப்போச்சு.. என்ன கலர்லே கொடுத்திருக்காங்க.. சாயம்போனாப்பல க்ரீம் கலர்! பேண்டையாவது ப்ளாக்கா இல்லாம நான் சொன்ன ப்ளூ எடுத்திருக்கலாம்” (11)

“சரி என்ன போச்சு? அடுத்தவருஷம் மாத்திக்கலாமே.. மேட்ச் பாத்தியா?”

“ஏன் தான் பாத்தோமோன்னு இருக்கு.. சொல்லி சொல்லி எல்லார்கிட்டயும் தோக்குறானுங்க! கிரிக்கெட்(17) பாக்கறதையே நிறுத்திரபோறேன்.”

“என்னப்பா.. டைட் மேட்சு.. 3 ரன்லதானே விட்டானுங்க!”

பாலா(16a) போட்டானுங்க.. வெட்டிப்பசங்க(16b).. ஒருபக்கமா(16c) ஆளை நிறுத்திட்டு வேற பக்கம் போட்டுகிட்டு இருக்கானுங்க”

”அத்தை விடு.. பசங்க (20) படம் பாத்துட்டயா? நல்லா இருக்கு”

“தைரியமா பேமிலியோட பாக்கலாமா?”

”நான் தனியாத்தான் பார்த்தேன். குழந்தைக்கு எக்ஸாம்.. முடிஞ்சவுடனே அவங்களும் பாப்பாங்க..எங்க அப்பா கூட பாத்தா நல்லா இருந்திருக்கும்.. (10)ஊருக்குப் போய் அவர்கூட ஒருமுறை பாக்கப்போறேன்”

“தனியா எஞ்சமாய் ஆ?”

”யோவ்.. சினிமா பாக்கறதுல என்ன இருக்கு? இதே கோவா பீச்சுல தனியா போனா சுவாரஸ்யம் இருக்கும்!” (31)

”சரி படம் எப்படி?”

“ஆஹா ஓஹோன்னெல்லாம் சொல்ல முடியாது.. பாக்கற 3 மணிநேரம் சுவாரஸ்யமா போவுது.. வேறென்ன வேணும்?(19) அதுவும் இல்லாம

கேரக்டர்ங்களையும் கஷ்டப்படுத்தி பாக்கற நம்மளையும் அழவிட்டு படுத்தலை.”

”ஆமாம்.. உனக்குதான் சிரிப்புன்னாலும் சோகம்னாலும் கண்ணில தண்ணி கொட்டுமே!” (2)

ரகு காபி கப்களை கொண்டு வந்தான். “பழக்கமாயிடுச்சேன்னு இந்த டுபாக்கூரையெல்லாம் காபின்னு குடிக்க வேண்டியிருக்கு.. ஊர்லே எங்கம்மா போடுவாங்க பார் ஒரு காபி.. காலையிலே எழுந்துக்கும்போது அந்த வாசனை(14) ஆளைத்தூக்கும்”

“சரிதான். ரகு கேட்டுட்டா இதுக்கும் உலைதான். லீவு சாங்க்‌ஷன் ஆயிருச்சா?”

“ஆமாம்.. 26 மத்தியானம் ப்ளைட்டு”

“வெறும் ஊரா.. இல்லை வேறெங்கெயும் பிக்னிக்கா?”

“அம்மணிக்கு அந்தமான் போகணுமாம்.. புது ஊருக்கு போனாதான் பிக்னிக்காம்..நசநசன்னு.. கடைசிலே அங்கேதான் போவோம்னு வையி..(9) இருந்தாலும் எனக்கு என்னவோ பேசாம போன முறையாட்டம் பாணதீர்த்தம் போனா போதும்னு தோணுது (29,6).எங்கே போனாலும் ஒரே வெய்யில்.. குளிர்காலமா இருந்தாலும் பரவாயில்லை.” (21)

”சரி வெட்டி அரட்டை போதும்.. தொழிலை கவனிக்கலாமா?”

“நான் கான்பரன்ஸுக்கு போகணும்.. ஒரு ப்ரசண்டேஷன் - 10 மணிக்கு.. அதுவரைக்கும் ஆதவன் சிறுகதையே துணை!” (22)

கான்பரன்ஸில் பலர் பார்க்காத புது ஆட்கள். சில கண்களில் சினேகம் (7), சில கண்களில் “இவன்-என்ன-எனக்கு-சொல்லி-தருவது”.. வாங்கடா

வாங்க.. பத்து நிமிஷம் போதும்டா எனக்கு. சாயங்காலத்துக்குள்ள நீங்க அத்தனைபேரும் என் விசிறி.(8a) என்ன, நண்பன்னு வெளிய சொல்லிப்பீங்க..(5)

மதிய உணவு இடைவேளைக்குள்ளேயே நான் நினைத்தது நடந்துவிட்டது. “ரொம்ப நாளா இந்த கான்சப்ட் புரியாம இருந்துது.. நீங்க கொடுத்த எக்ஸாம்பிள்ஸ் எல்லாமே சிம்பிள்.. சுலபமா புரிய வச்சுட்டீங்க”(26)

“தொழிலே இதானேங்க.” பிஸிபேளாபாத்தை அப்பளம் சகிதம் நொறுக்கிக் கொண்டே சொன்னேன். “அருமையான சாப்பாடு!” (4)

“அந்த அனிமேட்டட் டயக்ராம் எல்லாம் நான் இதுக்கு முன்னாலே பாத்ததே இல்லை”

“ஸ்பெயின் ஆபீஸ்லே (25) யூஸ் பண்னிகிட்டிருந்தாங்க.. பாத்தவுடனே அமுக்கிட்டேன்!”

அவன் என்கூடவே ஆபீஸுக்கு வந்தான். சேரை பின்பக்கம் அபாயகரமாக சாய்த்துக் கொண்டு ஸ்பீக்கரின் மௌனம் கலைத்தேன்.

“எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன்.. பி ற ந் தி ளை த் தே ன்..பி ற ந் தி ளை த் தே ன்” என்றார் ராஜா. (12)

”என்ன சார் இவ்ளோ கம்மி ரெசொல்யுஷன் வச்சிருக்கீங்க? எழுத்து எல்லாம் தெரியுதா?”

“என் கண்ணு ரொம்ப பவர்புல் சார்..அதோ அங்க தூரத்துல 10 பாயிண்ட்லே எழுதி இருக்கே கண்டிஷன்ஸ் அப்ளைன்னு.. அதுகூட தெரியுது.” (18)

ஏமாந்துவிட்டான்.. அதை ப்ரிண்ட் எடுத்ததே நான் தான்.

போன் அடித்தது. எடுத்தேன். “ஹலோ ஹூ இஸ் திஸ்?” என்றது எதிர்க்குரல்

“யோவ்.. கால் பண்ணது நீ.. என்னை கேக்கறியா?”

“இல்லை சார், இந்த நம்பர்லே இருந்து மிஸ்டு கால் வந்தது”

“இது ஆபீஸ் நம்பர்.. போர்டு நம்பர்.. நான் யாரையும் கூப்பிடலை!” (15)

போனை எரிச்சலாக வைத்துவிட்டு.. "Life is one Damn thing after another" என்றேன் எதிரிலிருந்தவனிடம். (32)

பி கு1: இந்தக் கதைக்குள் ஒரு கதை இருக்கிறது. அதைப் புரிந்துகொள்வது அவசியம். புரிந்தவர்கள் புரியாதவர்கள் இருசாராரும் பின்னூட்டலாம் :-)

பிகு2: உரையாடலாகவே சென்றாலும் உரையாடல் போட்டிக்கு அல்ல.

பிகு3: நாளை இப்பதிவில் சில திருத்தங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகு4: திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன. பாலா போடறானுங்க, வெட்டிப்பசங்க, ஒருபக்கமா போட்டானுங்க - இவர்கள்தான் என்னை அழைத்த பதிவர்கள், அவர்கள் பதிவில் பிடித்த பதிவை சுட்டியாகக் கொடுத்துவிட்டேன்.

பிகு5: ஆமாங்க, இது 32ஏதான். அ-புனைவுன்னு ஏன் சொன்னேன்னா, இது புனைவு இல்லை, என்னைப்பற்றின நிஜம்ன்றதால :-)

41 பின்னூட்டங்கள்:

ramachandranusha(உஷா) said...

32 :-)

நட்புடன் ஜமால் said...

நல்லாத்தான் கீது

பி.கு:3 வெளி வரட்டும் ...

இலவசக்கொத்தனார் said...

ஜூப்பரு!!

ரூம் போட்டு யோசிப்பீரு போல!! :))

ஆயில்யன் said...

//புரிந்தவர்கள் புரியாதவர்கள் இருசாராரும் பின்னூட்டலாம் :-)//


சில புரிந்தும் சில புரியாமலும் புரிந்துக்கொள்ளமுடியாமலும் ஒரு பின்னூட்டம் :))

ஆயில்யன் said...

//இலவசக்கொத்தனார் said...
ஜூப்பரு!!

ரூம் போட்டு யோசிப்பீரு போல!! :))
//

ஆஹா கொத்ஸ்ண்ணாச்சிக்கு இது மாதிரி பதிவெல்லாம் அல்வா மாதிரி போல...! :))

சென்ஷி said...

//இலவசக்கொத்தனார் said...

ஜூப்பரு!!

ரூம் போட்டு யோசிப்பீரு போல!! :))//

ரிப்பீட்டே :-))

நாங்கள்லாம் ஆரு!

சென்ஷி said...

// ஆயில்யன் said...

//இலவசக்கொத்தனார் said...
ஜூப்பரு!!

ரூம் போட்டு யோசிப்பீரு போல!! :))
//

ஆஹா கொத்ஸ்ண்ணாச்சிக்கு இது மாதிரி பதிவெல்லாம் அல்வா மாதிரி போல...! :))//

எங்களுக்கும் தான்!

சென்ஷி said...

32

MSATHIA said...

சந்துல சிந்து பாடறது இதுதானா?
பி.கு 3க்கு வெயிட்டிங். ;-)))

Ramesh said...

இது நிஜ வாழ்க்கையில் நடந்திட்ட ஒரு புனைவு. உங்கள் அலுவலகம்? அதில் என்ன கதை? காண்டீன் வேலைக்காரர்களின், சிறு குணாதிசயம்! அதை அப்படியே உங்கள் வேலை ( வாழ்க்கையிலும் ) ஜூம் பிட். அவரவர் லெவல் அப்படி! ;-)

அரசாங்கத்தில் வேலை பார்த்த சமயம், பிஸ்கட் இல்லாவிட்டால், வரும் வரை டீ குடிக்காமல் அரட்டை அடித்த சக சீனியர் ஆபிசர்களை நினைத்தால், இந்தியாவின் நிலையை எண்ணி கண்களில் செந்நீர் தான் வருகிறது!

ப்ரைவேட் தொழில் மிக நன்று. வேலை செய்தால் பணி. இல்லாவிட்டால் பிணி.


வேலை இல்லாமல் வாடும் நெருங்கிய நண்பர்கள் ( சம்பாரித்து வைத்திருப்பதை சாப்பிட்டு வாழ்ந்தாலும் ) பார்த்தால் யாரை பார்த்து கோபப்படுவது என்று தெரியவில்லை!

மணியன் said...

கொக்கிக் காய்ச்சல் உங்களுக்கும் தொற்றிவிட்டதா ? அட, எடுத்தவுடனேயே 27(a)தானா ?

காய்ச்சலிலும் கசாயம் தராமல் கஞ்சி கொடுத்ததிற்கு நன்றி !உங்க டச்..இரசித்தேன் :)

வால்பையன் said...

32 கேள்விகளுக்கான பதில் சொல்லும் முறை அப்படியே என்னை கட்டிபோட்டு விட்டது!

நீங்கள் போட்டியே வைத்திருக்கலாம்.

வெட்டிப்பயல் said...

பிரில்லியண்ட்...

32 கேள்விகள் தொடரை இவ்வளவு பிரில்லியண்டா சொல்வீங்கனு எதிர்பார்க்கல பாஸ்...

எப்பவும் போல நீங்க ஒரு கிரியேட்டிவிட்டு கிங் :)

புரியாதவங்க, Cntl + a பண்ணி பாருங்க...

வெறும் உப்புமாவா இருக்காதுனு யோசிச்சி Cntl + a பண்ணது நல்லதா போச்சு :)

Brilliant!!!

Anonymous said...

நிறைய நம்பர் ஒளிச்சுவெச்சிருக்கீங்க (வெள்ளை ஃபாண்ட்ல), ஆனா அதையெல்லாம் எடுத்துத் தொகுத்துப் பார்த்தா ஐடியா புரியலை ... நான் அம்பேல், நீங்களே பதிலைச் சொல்லிடுங்க!

- என். சொக்கன்,
பெங்களூர்.

Sridhar Narayanan said...

பி.கு. 3 மட்டும் தெரியவே மாட்டேங்குது. பதிவுல எங்கியாவது ஒளிச்சு வச்சிருக்கீங்களா என்ன? :)

மங்களூர் சிவா said...

கதைக்குள் எதற்கோ அங்கங்க நம்பர் ஒளிச்சி வெச்சிருக்கீரு!?

மங்களூர் சிவா said...

அந்த ஒளிஞ்சிருக்கிற நம்பரை யோசிச்சிகிட்டே படிச்சதுல ஒன்னும் வெளங்கலை
:))))))))))))))

மங்களூர் சிவா said...

(சரி நாமளும் ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டு வைப்போம்)


ஜூப்பரு!!

ரூம் போட்டு யோசிப்பீரு போல!! :))

Unknown said...

Andaman appo poga porenga?

கைப்புள்ள said...

32 கேள்வி-பதில்களுக்கான சங்கிலித் தொடர் பதிவா இது?

கலர் பேனா? அழுகை? சாத்தான்? சுற்றுலா இடம்? கையெழுத்து? பிடிக்காத சத்தம்? தனித் திறமை? இதெல்லாம் கண்டுபிடிக்க முடிஞ்சது. இந்த கமெண்ட் போடும் போது Show Original Post செஞ்சி பாக்கறேன்...அப்படியே கேள்வி எண்ணெல்லாம் வந்து நிக்குது. ஆனா பதிவோட Bodyல தெரியலை. பதிவுல மட்டும் கேள்வி எண் வெள்ளை ஃபாண்ட்ல போட்டுட்டீங்களோ? Creativityன்னா என்னன்னு உங்க கிட்டத் தான் கத்துக்கனும்.

...and the distances that you are willing to go to do something creative. Hats off!

பினாத்தல் சுரேஷ் said...

சில பின்னூட்டங்கள் கம்பெனியாரின் மனதுக்கு உகந்த வகையில் எழுதப்படாததால் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

ராமச்சந்திரன் உஷா, சென்ஷி, வெட்டிப்பயல், மணியன், வால்பையன், கைப்புள்ள ஆகியோரே அப்படிப்பட்ட பின்னூட்டங்களை எழுதியவர்க்ள். அவர்களுக்கு நன்றி :-)

ஸ்ரீதர் நாராயணன், இலவசக்கொத்தனார், சத்தியா ஆகியோர் கண்டுபிடித்தபின்பும் நாசூக்காக பின்னூட்டம் போட்டதற்கு ஸ்பெஷல் நன்றி.

நட்புடன் ஜமால், ஆயில்யன், ரமேஷ், சொக்கன், நான் - உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. இன்னொரு முறை படிச்சா புரிஞ்சிடும்.. இதென்ன அல்ஜீப்ராவா இல்லை பின்நவீனமா புரியாம போக!

ஷண்முகப்ரியன் said...

எல்லோருக்குள்ளும் சதா கனன்று கொண்டிருக்கும் இனம் புரியாத கோபத்தை அப்படியே கொண்டு வந்திருக்கிறீர்கள்.
படித்தவரகள் கோபம் சற்றே இளகும்.
வாழ்த்துகள்,சுரேஷ்.
நண்பர் ரமேஷ் மூலம்தான் உங்கள் பதிவு அறிமுகமானது.அவருக்கும் என் நன்றி.

கோபிநாத் said...

\\பி கு1: இந்தக் கதைக்குள் ஒரு கதை இருக்கிறது. அதைப் புரிந்துகொள்வது அவசியம். புரிந்தவர்கள் புரியாதவர்கள் இருசாராரும் பின்னூட்டலாம் :-)\\

தல

கலக்கிட்டிங்க...கலர் சொல்லும் போதே கண்டுபிடிச்சிட்டேன் ;))

தலைவர் இன்னா சும்மாவா!!!!ஏய்ய்ய்ய்ய்ய்ய ;))

Anonymous said...

கலக்கலா இருக்கு சுரேஷ்.

www.narsim.in said...

கலக்கலா இருக்கேன்னு படிச்சுட்டே வந்தா.. பின்குறிப்ப பார்த்து மீண்டும் படிக்க வச்சுட்டீங்க.. மீண்டும் கலக்கல்.

நர்சிம்

Vinitha said...

ரெண்டு கலர் கதையையும் தனியா பிரிச்சு போடுங்க! புண்ணியமா போகும்! :-)

இராம்/Raam said...

wow... kalakkal.... :))

தகடூர் கோபி(Gopi) said...

கலக்கல்... :-) வழக்கம் போல!

முரளிகண்ணன் said...

கிரியேட்டிவிட்டி கிங்குங்கிறத
அடிக்கடி நிரூபிக்கிறீங்க தலைவா.

Sanjai Gandhi said...

பின்றிங்களே பினாத்தலாரே.. இதுகெல்லாம் அசாத்திய திறமை வேணும். க்ரேட். :)

anujanya said...

Lateral. Awesome.

Kumky said...

எக்ஸலண்ட் ..
ஆரம்ப ஹிண்ட் கொடுத்திருக்கலாம்.
இரண்டு முறை படிக்க வைத்துவிட்டீர்கள்.

சத்யராஜ்குமார் said...

"இந்த மனுஷன் அன்னிக்கு இப்படி ஏன் எழுதினான்னு இன்னமும் புதிராவே இருக்கு."

"அடடா, இதை 33-வது கேள்வியா சேர்க்க மறந்துட்டேனே!"

Boston Bala said...

கலக்கல் :)

நிஜமா நல்லவன் said...

super!

Kathir said...

ரொம்ப நல்லா இருந்ததுங்க....

Anonymous said...

பெனாத்ஸ் -

நுங்கெடுத்துட்டீங்க போங்க. செம ட்யூப்லைட் நான். பின்குறிப்பு போடலைன்னா மண்டையே வெடிச்சிருக்கும்யா! க்ரியேட்டிவிட்டிய்யா உமக்கு!

டைனோ

Anonymous said...

I did not understand anything. Pl help.

enRenRum-anbudan.BALA said...

பிரில்லியண்ட்...

Mind Bogglingly Creative, Fantabulous, Exceptional...

I am unable to think of a good adjective to describe this :)

anbudan
BALA

துளசி கோபால் said...

ஜுரவேகத்தில் பினாத்தறீங்களோன்னு ஒரு வினாடி தோணிப்போச்சு:-))))

ஆமாம். நம்ம 'கிளாஸ் லீடர்' இங்கே என்ன செய்யறார்?

வகுப்புக்கே வர்றதில்லைன்னு பார்த்தால்......

கார்த்திக் பிரபு said...

தல நலமா மறுபடி வந்துருக்கேன் சில பதிவுகள் போட்டிருக்கே நேரம் இருக்கும் பொது பாருங்க

 

blogger templates | Make Money Online