Jun 19, 2006

டா கில்லி கோட் - பாகம் 6

முந்தைய பாகங்கள்: பாகம் 1,  பாகம் 2, பாகம் 3 , பாகம் 4, பாகம் 5
 
அத்தியாயம் 15
 
இன்ஸ்பெக்டர் வீராச்சாமி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தார். எதிரே வந்த சப் இன்ஸ்பெக்டர், "அய்யா, அவங்கள நீலாங்கரை ரோட்லே இருந்து பாத்ததா தகவல் வந்திருக்குது"
 
"அப்போ உடனடியா ஹெலிகாப்டர் தயார் பண்ணுங்க - வளைச்சுடலாம்"
 
"அய்யா, உங்க வயிறு ஹெலிகாப்டர் பயணத்தைத் தாங்குமா?"
 
"அதையெல்லாம் பாத்தா முடியாது. கடமைதான் முதல்லே. அதுவும் தவிர, கிளைமாக்ஸ் வந்திடுச்சின்னு எப்படி வாசகர்களுக்குத் தெரியப்படுத்தறதாம்?"
 
"சரி அய்யா, ஏற்பாடு பண்ணிடறேன்"
 
அத்தியாயம் 16
 
"குருவே சரணம்"
 
"சிஷ்யா, போலீஸ்காரங்க ஹெலிகாப்டர்ல நீலாங்கரைக்கு வந்துகிட்டிருக்காங்க"
 
"உங்களுக்கு எப்படித் தெரியும் குருவே, நீங்கதான் போலீஸா?"
 
"அப்படி ஒரு டவுட் இருக்கறதும் நல்லதுக்குதான். அதுக்குதானே இந்த பில்ட்-அப்பே!"
 
"சரி அவங்க இருக்கிற வீட்டு வாசல்லே இருந்துதான் நான் பேசறேன். உள்ளே பூந்து தூக்கிடவா?"
 
"வேணாம். அவங்க நாம தேடற பொருளை நெருங்கிட்டாங்க. கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்"
 
ரட்ட டட்ட ரட்ட டட்ட என்று சத்தம் கேட்டது.
 
"ஹெலிகாப்டர் நெருங்கிடுச்சி போல இருக்கு. அலெர்ட்டா இரு"
 
அத்தியாயம் 17
 
ராமசாமிக்கும் கருப்பாயிக்கும் காபி கொண்டு வந்துகொண்டே "உனக்குத் தெரியுமா? எப்படித் தெரியும்?" என்றார் சீனிவாசன்.
 
"எல்லாம் என் சொந்த மூளையை உபயோகப்படுத்தி, ரங்கனோட கோடை உடைச்சேன்."
 
"என்ன கோட் அது? எப்படி உடைச்சே?"
 
தொட்டனைத்தூறும் மணற்கேணி
ட்வின்கிள் ட்வின்கிள் லிட்டில் ஸ்டார்
சீறி அடிச்சா கில்லி பறக்கும்
லாலாக்கு டோல்டப்பி மா
அண்ணா நாமம் வாழ்க!
"இதுதான் கோடு! - இதுலே இருந்துதான் கண்டுபிடிச்சேன்."
 
"கிளம்பிட்டான்யா.. இப்போ பாருங்க எவனுக்கும் புரியாத ஒரு விளக்கம் கொடுக்கப்போறான் விளக்கெண்ணை!" கருப்பாயி வெறுத்துப்போயிருந்தாள்.
 
"சும்மா இரு கருப்பாயி. என்ன கண்டுபிடிச்சே சொல்லு?"
 
"தொட்டனைத்தூறும் மணற்கேணின்னா என்ன? இன்னி டேட்டுக்கு தமிழ்நாட்டுல எங்கயாவது தொட்டவுன்னே தண்ணி வருமா?"
 
"ஏன் குழாய் டேப்பில வருமே"
 
"அதுலே எங்க மண்ணு இருக்கு?"
 
"அதனாலே?"
 
"மெரினா பீச்சிலே ஊத்து தோண்டி தண்ணி விப்பாங்களே - கவனிச்சதில்லையா?"
 
"இதுதானா? நல்ல வேளை - நீ சல்பேட்டா ஊறல் பத்திதான் சொல்லப்போறேன்னு பயந்து போயிருந்தேன்"
 
"அது கூட யோசிச்சேன். ஆனா லாஸ்ட் லைன் பாருங்க - அண்ணா நாமம் வாழ்க! அதுக்கு என்ன அர்த்தம் - அண்ணா சமாதிக்குப் பக்கத்திலன்னுதானே அர்த்தம்?"
 
"சரி ட்வின்க்கிள் ட்வின்க்கிள் லிட்டில் ஸ்டாருன்னா?"
 
"அதே பீச்சுதான். இந்தியால இருக்க எல்லா லிட்டில், மீடியம், சூப்பர் ஸ்டார் கட் அவுட்ட வச்சு போட்டோ எடுக்கற ஸ்டூடியோ பீச்சுலே பாத்ததில்ல?"
 
"எப்படியோ இழுத்து கொண்டுவந்துட்டான்யா! மத்த ரெண்டு வரிக்கு என்ன அர்த்தம்?"
 
"அது இன்னும் சரியாப் புரியல! மெரினா பீச்சுக்குப் போயி தேடினா கண்டுபிடிச்சிடலாம்."
 
அப்போதுதான் அவர்களுக்கும் ஹெலிகாப்டர் சத்தம் கேட்கத் தொடங்கியது.
 
"போச்சுடா. போலீஸ் வந்துட்டாங்க. இனிமே எப்படி மெரினா பீச்சுக்குப் போறது"
 
சீனிவாசன் சிரித்தார்.
 
"கவலைப்படாதே, என்கிட்டே ஒரு கட்டுமரம் இருக்கு. அதைக் கடல்லே இறக்கி கடல் வழியாவே மெரினா பீச்சுக்குப் போயிறலாம்"
 
தொடரும்..

11 பின்னூட்டங்கள்:

தகடூர் கோபி(Gopi) said...

கோட்டை பாதி ஒடச்சாச்சி... மீதியும் நாளைக்கே ஒடஞ்சிரும் போல...

:-)

பினாத்தல் சுரேஷ் said...

நாளைக்கு கதையே முடிஞ்சுடும் கோபி. கோட் உடையுமான்னு தெரியாது:-) ஏன்னு நாளைக்கு கதையின் கதையை சொல்றேன் அப்ப தெரியும்

கப்பி | Kappi said...

//நீ சல்பேட்டா ஊறல் பத்திதான் சொல்லப்போறேன்னு பயந்து போயிருந்தேன்//

நீங்களும் ரெண்டு ரவுண்டு அடிச்சுட்டுதான் எழுதறீங்களோனு டவுட்டா இருக்கு :)

பினாத்தல் சுரேஷ் said...

என்ன கப்பி சார் சொல்றீங்க? திட்றீங்களா, வாழ்த்தறீங்களா?

துளசி கோபால் said...

சீக்கிரம் சொல்லுமைய்யா. சஸ்பென்ஸ் தாங்கலை.

ஆமா ஹெலிகாப்டர் ரைடுலே இன்ஸ்பெக்டர் வயித்துக்கு (!) ஒண்ணும்
ஆகலைதானே?

Anonymous said...

'kappi paya' said, what i wanted to say. its praising only but little " vul kuththu"
(kandukaathenga )

karuppaayee nallaave kalaaikkira (i love her ; don't thing anything but "dialogues" )

:-))))))

பினாத்தல் சுரேஷ் said...

இன்ஸ்பெக்டருக்கு சரி ஆயிடுச்சி துளசி அக்கா. அவருக்கு அடுத்த பார்ட்லே மூளையே கொஞ்சம் வளர்ந்துடுச்சுன்னா பாத்துக்குங்களேன்:-))

உள்குத்தோடு புகழ்ந்து குரு அவர்களே? எங்கே உங்கள் பின்னூட்டம் பாகம் 7 க்கும் 8க்கும் இல்லை? ரெகுலராப்போட்டு வளர்த்துவிட்டா இதான் பிரச்சினை..

இலவசக்கொத்தனார் said...

துளசி டீச்சர் பதிவுக்குப் போனா அங்க கோபால் சாருக்கு வயிறு சரி இல்லை. இங்க வந்து பார்த்தா இன்ஸ்பெக்டர் கஷ்டப்படறாரு. என்னங்கப்பா பண்ணறீங்க. தமிழ்மணம்ன்னு சொல்லிக்கிட்டு ஒரு மாதிரி வாசமா இல்ல இருக்கு.....

பினாத்தல் சுரேஷ் said...

கோபால் சாருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் உள்ள நிலையைப்பற்றி மனிதாபிமானக்கண்ணோட்ட்மே இல்லாமல் இப்படிப்பேசுகிறீர்களே இலவசம்!

பொன்ஸ்~~Poorna said...

//அது கூட யோசிச்சேன். ஆனா லாஸ்ட் லைன் பாருங்க - அண்ணா நாமம் வாழ்க! அதுக்கு என்ன அர்த்தம் - அண்ணா சமாதிக்குப் பக்கத்திலன்னுதானே அர்த்தம்?"

"சரி ட்வின்க்கிள் ட்வின்க்கிள் லிட்டில் ஸ்டாருன்னா?"

"அதே பீச்சுதான். இந்தியால இருக்க எல்லா லிட்டில், மீடியம், சூப்பர் ஸ்டார் கட் அவுட்ட வச்சு போட்டோ எடுக்கற ஸ்டூடியோ பீச்சுலே பாத்ததில்ல?"

"எப்படியோ இழுத்து கொண்டுவந்துட்டான்யா! //

ultimate!!! :))) நல்ல வேளை ரூம்ல உட்கார்ந்து படிக்கிறேன்.. இல்லைன்னா, ஆபீஸ்ல ஒரு மாதிரி பார்த்திருப்பாங்க!! :)

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி பொன்ஸ்.

 

blogger templates | Make Money Online