Jun 20, 2006

டா கில்லி கோட் - பாகம் 7

 
அத்தியாயம் 18
 
"உன்னை அறிவாளின்னு நெனச்சு உன்கிட்டே வந்தேனே.. என்னைச் சொல்லணும். ஹெலிகாப்டர்ல இருந்து பாத்தா கட்டுமரத்தை கடல்ல இறக்கறது தெரியாதா?" ராமசாமிக்கே சந்தேகம் வரும் அளவிற்கு சீனிவாசனின் ஐடியா இருந்தது.
 
"ராமசாமி, சும்மாவே கதை நடுவுலே கேள்வி கேக்கக் கூடாது. அதுவும் கிளைமாக்ஸில - மூச்சு விடக்கூடாது. நாம பின் வாசல் வழியாப் போயிடலாம் - நான் போயி கட்டுமரத்தை தயார் பண்ணிட்டு வந்து உங்களைக் கூப்பிடறேன்"
 
***
"குருவே சரணம்"
 
"அவங்க கட்டுமரத்துலே போறாங்க. நீ நேரா மெரினா பீச்சுக்கு வந்து காத்துக்கிட்டு இரு. அவங்க இன்னும் ரெண்டு வரிக்கு அர்த்தம் சொன்ன உடனே அமுக்கிடலாம்"
 
"உங்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்?"
 
"அதைக்கேக்காதே.. இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கே விளங்கிடும்"
 
***
"ஹலோ சூப்பர் வில்லனா?"
 
"சீக்கிரம் சொல்லுங்க ஐ சி சி சேர்மன், நான் வேலையா இருக்கேன்"
 
"அவங்கள விட்டுடுங்க. புனித கில்லிய கண்டுபிடிச்சா கண்டுபிடிச்சுட்டு போகட்டும். என்ன ICC ய ICGன்னு மாத்த வேண்டியிருக்கும், அவ்வளவுதான். நாங்க கொலையில எல்லாம் இன்வால்வ் ஆக விரும்பல"
 
"என்ன திடீர்னு?"
 
"ஆமா, கதைய படிச்சுட்டு ஐ சி சி பெனாத்தல் மேல கேஸ் எதாவது போட்டுட்டா? அதனால ஐ சி சிய கெட்டவங்களா காமிக்க வேணாம்னு முடிவு பண்ணிட்டோம்"
 
"அப்போ எனக்கு யார் பணம் தருவாங்க?"
 
"யாராச்சும் லோக்கல் கிரிக்கெட் கிளப்னு மாத்திறலாம்"
 
"அப்போ நான் கண்டின்யூ பண்றேன் - யாராவது பணம் கொடுத்தா சரி!"
***
வீட்டுக்குள்ளே அவசரமாக உள்ளே நுழைந்த சீனிவாசன், "கிளம்புங்க, எல்லாம் ரெடி" என்றார்.
 
கட்டுமரம் மெதுவாக  நீலாங்கரையை விட்டுக்கிளம்பியது.
 
அத்தியாயம் 19
 
வீராச்சாமி கோபமாக இருந்தார்.
 
"ஹெலிகாப்டர் எல்லாம் எடுத்துப்போயும் பிரயோஜனம் இல்லை! எங்கே போயிட்டாங்க இப்போ? ரோட் எல்லாம் பிளாக் பண்ணித்தானே இருக்குது?"
 
"ஆமாம் சார். அவங்க கடல் வழியாத்தான் தப்பிச்சிருக்கணும்"
 
"இப்போ எனக்கு புரிஞ்சு போச்சு. சூப்பர் வில்லன் யாருன்னு"
 
அத்தியாயம் 20
 
"ராமசாமி - அந்த மிச்சம் ரெண்டு வரிக்கும் அர்த்தம் கண்டு பிடிச்சயா?"
 
"இன்னும் இல்ல சீனிவாசன். பீச்சுக்குப் போயி தேடினா எதாவது தட்டுப்படும். அதோ கரை தெரியுதே"
 
"அது வரைக்கும் உன்னை உயிரோட விட்டுவைப்பனா நான்?"
 
"சீனிவாசன் என்ன பண்றீங்க"
 
"என்னத்துக்கு இப்போ அனாவசியமா ஆச்சரியப்படறே? நான் தான் சூப்பர் வில்லன்னு உனக்குத் தெரியாதா? ஒன்னு ரெண்டு சீன்ல போலீஸ்தான் வில்லன்னு நெனைக்க வைக்கும்போதே நீ ஊகிச்சுருக்க வேணாமா? மிச்சம் இருக்க ஒரே கேரக்டர் நான் தான் -வேஸ்டுடா நீ.."
 
"உங்களுக்கு எதுக்கு சார் புனித கில்லி?"
 
"அதை வச்சு காசு பாக்கத்தான் - ICC யிலிருந்து மயிலாப்பூர் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் வரைக்கும் யார்கிட்டயாவது காசு கறந்துருவேன் - நீ உன் கடைசி ஆசை என்னன்னு சொல்லு"
 
"உங்க கடைசி ஆசையச் சொல்லுங்க - போலீஸ் மெரினாவில் வலை வீசி வைச்சுருக்காங்க - அங்கே பாருங்க!"
 
"வர வர யார்தான் மெரினாவில வலை வீசறதுன்னு இல்லாம போச்சு. மீனவர்ங்களுக்கு போலீஸும் காம்படிஷனா?"
 
அவர்கள் கட்டுமரத்தில் இருந்து இறங்கியதும் காத்திருந்த வீராச்சாமி
சீனிவாசனைக் கைது செய்தார்.
 
"எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?"
 
"எப்படியோ கண்டு பிடிச்சேன், இன்னும் எவ்வளவுதான் இந்த டுபாக்கூர் கதைய வளர்த்தறது? சரி நீ போய் மிச்சம் ரெண்டு வரிய ஆராய்ச்சி செய்."
 
அடுத்த பாகத்தில் முடியும்.. 

6 பின்னூட்டங்கள்:

Geetha Sambasivam said...

ஒரு ரெண்டு நாள் தமிழ் மணம் பக்கம் வரலை. அதுக்காக இப்படியா எழுதித் தள்ளறது? நல்லாவே கதை அடிக்கிறீங்க!கற்பனை வளம் ஜாஸ்தி.

பினாத்தல் சுரேஷ் said...

அதை ஏன் கேக்கறீங்க கீதா.. சும்ம தமஷதன் ஆரம்பிச்சேன்.. கதை என்னை எழுதியதுன்னு ஜல்லி அடிச்சா நம்பவா போறீங்க?

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப டக்கு டக்குன்னு காட்சி மாத்தறீங்க. யாரு என்ன பேசறாங்கன்னு புரியறதுக்குள்ள தலை சுத்துது. கொஞ்சம் என்னை மாதிரி ஆசாமிங்களும் படிக்கிறாங்கன்னு ஞாபகத்தில் வச்சு எழுதக்கூடாதா? :((

பினாத்தல் சுரேஷ் said...

இலவசம், எல்லாம் ஒரு ரிபீட் ஆடியன்ஸுக்காகத்தான். ஷங்கர் பண்ணா டெக்னிக்கு, பெனாத்தல் பண்ணா தப்பா?

தகடூர் கோபி(Gopi) said...

யப்பா.. கத எங்கெங்கையோ போவுது ...
:-)))

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி கோபி. ஒரு வழியா ஆரம்பிச்ச இடத்துலேயே முடிச்சுட்டேன் கவனிச்சீங்களா?

 

blogger templates | Make Money Online