Apr 9, 2008

நாடாட ஓட்டாட.. 2

வெல்கம் பேக் ஆப்டர் தி ப்ரேக்..
 
நம்ம நிகழ்ச்சியோட அடுத்த கண்டெஸ்டண்ட்.. அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சானே..
 
யெஸ்.. யூ கெஸ்ட் இட் ரைட்.. இட் இஸ் நன் அதர் தன்...
 
வாட்டாள் நாகராஜ்!
 
அதிரடியாகவே உள்ளே நுழைகிறார்.. 

அதாண்டா இதாண்டா வாட்டாளு நான் தாண்டா
அந்தத் தமிழ் ஆளுங்க அனைவருக்கும் எனிமிடா..
எடியூரப்பா ஆரம்பிச்சாண்டா.. நாகராஜு தொடர்ந்திடுவாண்டா..
 
நான் ஆறைப் பங்கு போட விடுவதில்லைடா..
அதிலும் தமிழு பேசும் ஆளை விடுவதில்லைடா.. ஆ ஆ அதாண்டா
!

 கொஞ்சம் கூல்டவுன் ஆகி, ஒரு மெலடியைப் போட்டுத் தாக்குகிறார். 

என்ன விட.. இங்க கன்னடத்தை காக்கறதுக்கு யாரும் இல்லை எவனும் இல்ல..
என்ன விட.. இங்க கலவரத்தை கிளப்பறதுக்கு யாரும் இல்ல.. எவனும் இல்ல..
 
ஆத்துத்தண்ணி குடிச்சா ஒழிப்பேண்டி..
டிவியில தமிழ அழிப்பேண்டி..
பாதி ஊரு எல்லாம் எமக்கேடி..
மீதி ஊரு நாளைக்குக் கேப்பேண்டி..
 
என்ன விட...

முடிக்கும் விதமாக ஒரு குத்துப்பாட்டைப் போட்டு முடிக்கிறார்:

ஏய்.. தாத்தா.. ஆத்தோரமா வாரியா..
நான் பாத்தா.. பம்மிகிட்டே போறியா!
 
அட எங்க பக்கம் நியாயம் இல்ல..
ஆமா அருவி கேட்டா உனக்கு தொல்ல...
 
ஏய்ய்!!
 
அடேங்கப்பா.. இவரு பாடி முடிக்கிற வரைக்கும் எல்லாரும் குலை நடுங்கிகிட்டே தான் உக்காந்திருந்தோம். எதைச்சொன்னா அதை வச்சுக் கலவரம் கிளப்புவாரோன்னு ஒரே பயம்.. ஜட்ஜஸ் உங்களுக்கு?
 
நடுவர் 1: பின்ன? இவரு கான்சப்ட் இல்லாமயே கம்பு சுத்துவாரு. இப்படி ஒரு மேட்டர் கிடைச்சா.. முதல்ல கலவரத்தைக் கிளப்பிட்டுதான் காரணமே கேப்பாரு.. இவருக்கு, வேற வழியில்ல, 10!
 
நடுவர் 2: நான் இதுக்கெல்லாம் பயப்படாது. ஆனா சினிமாவ நிறுத்திடுவாரோன்னுதான் பயப்படுது. சோ, என் மார்க் 8!
 
நடுவர் 3: முதல் அக்கா சொன்னதுகூட சேந்துக்கறேன். ஏன்னா, எனக்கும் பயம்.
 
அடுத்து வரப்போற இந்த ஜோடி காம்படிஷன்லே இல்லாட்டியும், ஒரு பாட்டு மட்டும் பாடி நம்மை மகிழ்விக்கிறதுக்காக வராங்க - எ ஸ்பெஷல் ரீமிக்ஸ் பர்பார்மன்ஸ் ப்ரம் தேசியக்கட்சிகள்!

டூயட் ரீமிக்ஸ்.. கர்நாடக பாஜக, காங்கிரஸ் ஒரு கட்சியாவும், தமிழக காங்கிரஸ் பாஜக இன்னொரு கட்சியாவும்..

நாடொன்று கண்டேன், நியாயம் காணவில்லை, என்னென்று நான் சொல்லலாகுமா.. என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
ஓட்டொன்று கண்டேன், உண்மை காணவில்லை, என்னென்று நான் சொல்லலாகுமா.. என்னென்று நான் சொல்ல வேண்டுமா?

நான் வாங்கும் ஓட்டு நீ பார்ப்பதில்லை, நீ வாங்கும் ஓட்டு நான் பார்ப்பதில்லை..
நான் பார்க்கும் ரீஜன் உன் ரீஜன் இல்லை, என்னோட வோட்பேங்க் உன் பேங்கு இல்லை..
எல்லையிலே கொள்கையில்லை.. ஒற்றுமையில் நாட்டமில்லை..
ஓட்டோடு உறவாடும் கட்சி எங்கள் கட்சியல்லவோ..

நின்றேன்.. ம்ஹூம்.. வென்றேன்.. ம்ஹூம்.. சுருட்டினேன்..

காம்படிஷன்லேயே இல்லாட்டியும் சும்மா கிளப்பிட்டாய்ங்க இல்ல பீதிய!
 
நிக்ழ்ச்சியோட அடுத்த.. அதாவது கடைசியான ஜோடி வரப்போறாங்க! லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்! ஆமாம்.. வி வெல்கம் ஆன் ஸ்டேஜ்.. தெ கிரேட் கலைஞர் கருணாநிதி அண்ட்.. ஹிஸ் உட் பி கர்நாடகா கவுண்டர்பார்ட்.. மிஸ்டர் எஸ் எம் கிருஷ்ணா!
 
டூயட் பாட்டில், கலைஞர் தொடங்குகிறார்:

ஏலே.. ஏலேலே லே..
ஹொகெனக்கல் ஓரத்துல
பாத்திகட்டி பத்திரமா
தண்ணியத்தான் ஊத்தித்தரேன்
தாகமெல்லாம் தீத்துத்தரேன்
வாடி .. நீ வாடி..
 
பத்துவருசம் முன்னாலியே
எல்லாரையும் கேட்டுப்பிட்டேன்
பாச்சலோட ஓடிவாரேன்
எலும்பொடிஞ்சா
கவலையில்ல
வாடி.. நீ வாடி..
 
ஏலே ஏலே லே லே..
 
எல்லைதாண்டி வாராம் பாரு..
அவனைச் சிறையெடுக்கப் போறேன் வாடி..

எஸ் எம் கிருஷ்ணா:

அய்யய்யோ.. என் ஓட்டுக்குள்ளே கைய வச்சான் அய்யய்யோ..
அய்யய்யோ.. என் ஊருக்குள்ளே தண்ணி மொண்டான் அய்யய்யோ..

கலைஞர்:

திண்டாடி நான் தேடித் தேடி..
நானும் கொண்டாந்தது இந்தத் தண்ணி..

 கிருஷ்ணா:

நீ போனாக்கூட குத்தம் இல்லை..
நல்லா ஆட்சி பாக்கும் இந்தப் புள்ள! அய்யய்யோ!

அடடா.. அணுகுண்டை அக்குள்லே சொருகிகிட்டோமோ ன்னு கலைஞர் கொஞ்சம் மாடரேட் பண்றாரு..

உன்னைத்தானே.. பஞ்சம் என்று தண்ணீர் கேட்டேன் நானே
உயிர் போகிறது.. திட்டம் போடவிடு..
குடிநீர் கொடுத்து கொஞ்சம் வாழவிடு!

 விடாம சண்டித்தனம் பண்றாரு கிருஷ்ணா

என்னைத்தானே.. தானமாகத் தண்ணீர் கேட்டாய் நீயே..
ஓட்டு போகிறது.. ஆட்சி போகிறது
நியாயம் பேசிவிட்.. இது நேரமில்லை..

 சோகத்தின் உச்சத்தில் தொடர்கிறார் கலைஞர்:

ஓடும் கட்சிகளே..
ஒருசொல் கேளீரோ..
ஆடும் ஆட்சியிலே
ஆதரவு தாரீரோ..
 
நாடாளும் சட்டசபையில்
மைனாரிட்டிக்கு நான் தலைவன்,,
கூட உள்ள கட்சிகளின்
தலைமைக்கு நீ தோழன்..
 
தண்ணீரிலே உன் ஓட்டு..
பிஜேபி போட்ட ரூட்டு
பிரச்சினையில் என் கூட்டு.
 
இதில் நான் அந்த ப்ளான்
பற்றிப் பாடுவதெங்கே பாட்டு!

அரங்கம் ஒளிரத்தொடங்க, எல்லாரும் அவசரமாக கண்ணைத்துடைக்க கர்சீப் தேடுகிறார்கள்.
 
ஆஹா.. நவரசமும் கலந்த கான்சப்ட்.. ஜாலியா டூயட் பாடினாலும் கடைசியில எல்லாரையும் அழவைச்சுட்டாங்க! நடுவர்கள் உடனே எதுவும் சொல்ல முடியாத நிலைமையில இருக்காங்க.. ஜட்ஜஸ், கண்ணைத் தொடச்சுக்கிட்டு கமெண்ட் சொல்லுங்க..
 
நடுவர் 1: என்னன்னு சொல்லுவேன்.. எக்ஸ்ட்ரா ஆர்டினரி பர்பார்மன்ஸ். வேற எங்க இருந்து வராட்டியும், கண்ணுல இருந்து தண்ணி வரதை நிறுத்தவே முடியல.. என் மார்க் 10!

நடுவர் 2: ஆமாக்கா.. வழக்கமா நாமதான் இவர் முன்னாடி ஆடுவோம், இப்ப நம்ம முன்னாடி இவர் ஆடுறாரேன்றதப் பாத்ததும் கண்ணுலேயே அருவி.. அது என்னோட எல்லைக்குள்ளதான் இருக்கு! நானும் 10!

நடுவர் 3: நீங்க ரெண்டு பேரும் சொன்ன பிறகு நான் சொல்ல என்ன இருக்கு.. (விசும்பியபடி) நானும் 10 மார்க்தான்.

வாவ்.. புல் மார்க் எடுத்து போட்டியிலே பரிசைத் தட்டிக்கிட்டுப் போறாங்க கலைஞர்-கிருஷ்ணா ஜோடி.. அவங்களோட சூப்பர் பர்பார்மன்ஸ் இப்படியே கண்டின்யூ ஆனாதான் எடியூரப்பா அண்ட் கோ தோக்க முடியும்..

நாம நிகழ்ச்சியோட சோகமான கட்டத்துக்கு வந்துட்டோம். (எல்லாருக்கும் கிளிசரின் சப்ளை பண்ணியாச்சாப்பா?) இன்னிக்கு எலிமினேட் ஆகப்போற டீம் யாருன்னு பார்க்கப்போறோம்! யார் அந்த பாவப்பட்ட டீம்?

அழாதீங்க.. இன்னிக்கு இல்லாட்டியும் அடுத்த சான்ஸுல நீங்க உள்ள வர வாய்ப்பு இருக்கு..

இல்ல மேடம்.. இதுவரைக்கும் எந்த காம்படிஷன்லேயும் ஜெயிச்சதே இல்லை..

உங்க பர்பார்மன்ஸை இம்ப்ரூவ் பண்ணனும்.. ஆனா நம்பிக்கையத் தளர விடாதீங்க!

பொதுமக்கள் டீம் அழுதுகொண்டே விலக க்ரெடிட் டைட்டில்ஸ் ஓட ஆரம்பிக்கிறது.

24 பின்னூட்டங்கள்:

தருமி said...

எனக்குப் பிடிச்ச் டீம் போட்டியில் கலந்த்துக்காமலே களத்தில இறங்கிய பி ஜே பி - காங். தாங்க.

அதுசரி, அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த உங்க கற்பனா சக்தி பிரமிக்க வைக்குதுங்க. நீங்கல்லாம் சொந்தமாவே பாட்டெழுதி கலக்கலாமோ - கோலிவுட்ல !!

ஆயில்யன் said...

//அய்யய்யோ.. என் ஓட்டுக்குள்ளே கைய வச்சான் அய்யய்யோ..
அய்யய்யோ.. என் ஊருக்குள்ளே தண்ணி மொண்டான் அய்யய்யோ//

:))))))))))))))

Mathi said...

:))))))))))))))

tommoy said...

எதையும் ஆராயாமல், படித்த போது நன்றாக சிரிக்க முடிந்தது.. தங்களின் கற்பனை சக்தி மிக மிக அருமை. அபாரமான அசத்தல் பதிவு நாடாட ஓட்டாட 1 & 2, வாழ்துக்கள்

manjoorraja said...

என்ன அதுக்குள்ளே முடிஞ்சிடிச்சா!

அடுத்த வாரம் மீண்டும் புதுசா வரும் இல்லே....

பின்னே வராமெ... இதெ நம்பி தானே நம்ம தொலைக்காட்சியே இருக்கு...

ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்.

கோபிநாத் said...

அட்டகாசம் பண்ணியிருக்கிங்க தல ;))

சரவணகுமார் said...

//ஏய்.. தாத்தா.. ஆத்தோரமா வாரியா..
நான் பாத்தா.. பம்மிகிட்டே போறியா!///

இதெல்லாம் வட்டாளுக்கே கொஞ்சம் ஓவர்தான் :)

சரவணகுமார் said...

/// நீங்கல்லாம் சொந்தமாவே பாட்டெழுதி கலக்கலாமோ - கோலிவுட்ல !!///

தருமி சார்

பெனாத்தலை எப்படி பதிவுலகிலிருந்து தூக்கலாமுன்னு ஒரு ஐடியா குடுத்தீங்க.சரிதான் :) இம்சை தாங்க முடியலை :)

சரவணகுமார் said...

/// முரளி said...
எதையும் ஆராயாமல், படித்த போது நன்றாக சிரிக்க முடிந்தது.. தங்களின் கற்பனை சக்தி மிக மிக அருமை. அபாரமான அசத்தல் பதிவு நாடாட ஓட்டாட 1 & 2, வாழ்துக்கள்
////

இதெல்லாம் அனுபவிக்கணும் ..ஆராயக் கூடாது :)

seethag said...

பேசாம சினிமாவுக்கு எழுத போகலாம் நீங்க...சும்மா "மாங்கா தலையா தேங்கா தலையா" எல்லாம் ஒரு காமெடின்னும்போது....

வால்பையன் said...

உங்கள் பணி கலக்க போவது யாரு பாணியிலும் தொடர வேண்டுகிறான்

வால்பையன்

பினாத்தல் சுரேஷ் said...

தருமி.. நன்றி. சொந்தமா பாட்டெழுதறதா? என்னைக் கவுஞன்னே முடிவு பண்ணிட்டீங்களா?

ஆயில்யன், நன்றி.

ஏலியன், நன்றி.

முரளி, நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

மஞ்சூர் ராசா,

வாராவாரம் அவங்களுக்கு வேணா தாங்கலாம்.. நம்மால முடியாது சாமி :)

கோபிநாத், நன்றி.

சரவணகுமார்,
//இதெல்லாம் வட்டாளுக்கே கொஞ்சம் ஓவர்தான் :)// அவருக்கு.. ஓவரா? எந்த ஊர் நீங்க?

//பெனாத்தலை எப்படி பதிவுலகிலிருந்து தூக்கலாமுன்னு ஒரு ஐடியா குடுத்தீங்க.சரிதான் :) இம்சை தாங்க முடியலை :)// சினிமாக்கு பாடெழுதறதை இப்ப நான் செய்யற வேலைமாதிரி வச்சுக்கிட்டா?

தமிழா, நீ என்னைக் கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாக மாறுவேன்.. விட மாட்டேன்!

நன்றி சீதா.

வால்பையன், கலக்க/அசத்தப் போவது யாரு, மானாட மஸ்தானா டான்ஸர் எல்லாத்துக்கும் என்னதான் வித்தியாசம்னு மொதல்ல சொல்லுங்க :)

திவாண்ணா said...

ஏனய்யா! நல்ல மேட்டரே கிடைக்கலன்னு ...
சொன்னது நீதானா சொல் சொல் சொல்..... சுரேஷே!

பினாத்தல் சுரேஷ் said...

ஆமாம் திவா,

நான் தான் சொன்னேன்.. கிடைச்சவுடனே போட்டுட்டமில்ல ;)

rv said...

:))))

ஆமா.. கோர்வையா போயிட்டிருந்த அந்தாக்‌ஷரியில நடுவுல பூந்து தப்புத்தாளங்கள் போட்ட மொய்லியை கண்டுக்காம விட்டது ஏனோ?

Radha Sriram said...

அசத்தல் தான்.:):) எப்படித்தான் தோணுமோ இந்த மாரில்லாம்??!

//என்னன்னு சொல்லுவேன்.. எக்ஸ்ட்ரா ஆர்டினரி பர்பார்மன்ஸ். வேற எங்க இருந்து வராட்டியும், கண்ணுல இருந்து தண்ணி வரதை நிறுத்தவே முடியல//(சிரிச்சு சிரிச்சு!!)..
இதையே நானும் சொல்லிக்கரேன்!!

சிறில் அலெக்ஸ் said...

வாசகர் கடிதம்.
=============

அன்பு நிலையத்தாருக்கு வணக்கம்,
உங்கள் பெனாத்தல் தொலைக்காட்சியில் நாடாட ஓட்டாட நிகழ்ச்சியைக் கண்டேன். மிக அருமையாக இருந்தது.

கண்ணீரோடு பொதுமக்கள் வெளியேறியபோது கண்ணுல... ஹ்ம்ம். அப்போதே வெங்காயம் வெட்டுவதை நிறுத்திவிட்டேன். வேலை ஓடவில்லை.

மொத்தத்தில் அரசியல் ஆட்டம் அட்டகாசம்.

சென்ஷி said...

கலக்கல் நகைச்சுவை :)

Boston Bala said...

:) :))

பினாத்தல் சுரேஷ் said...

ராம்ஸு, மொய்லி மேட்டர் லேட்டர் டெவலப்மெண்ட் இல்லியா? அதனாலதான் காம்படிஷன்லே எண்டர் ஆவலை. வேணும்னா இப்படிப்பாடலாம்:

"அறியாத காங்கிரஸ்..
புரியாத திமுக..
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்..

எதோ ஒரு ஊருக்குள்ளே தேர்தல்வந்தா
மத்த திட்டம் திட்டம் திட்டமெல்லாம் போய்விடும்..'

இன்னும் டெவலப் பண்ணலாம்..

ராதா ஸ்ரீராம், நன்றி.

அன்பு நேயர் சிறில் அவர்களுக்கு,

தங்கள் கடிதம் கிடைத்தது. தங்களைப்போன்ற நேயர்கள்தான் பினாத்தலை வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். (இது போதாது, அதுக்குக் காரணம் நீங்கதான்னு தெரிஞ்சா உங்க ஊருக்குள்ளே கலவரம் வராது?)

வாங்க பாபா.. இது என்ன சிரிப்பு விமர்சனம், முதல் பகுதி ஒரு சிரிப்பு, ரெண்டாவது பகுதி ரெண்டு சிரிப்புன்னு வச்சுக்கலாமா?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நல்ல (சோக) காமெடி

பினாத்தல் சுரேஷ் said...

நன்றி ஸ்டாக்சிவா..

ரொம்ப நாளாச்சு!

குமரன் (Kumaran) said...

நல்லா கீதுபா....

:-))))

 

blogger templates | Make Money Online