Apr 13, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள் - கலைஞரின் ராஜதந்திரம்!

பொங்கல்தான் புத்தாண்டா என்று ஒரு பதிவு போட்டிருந்தேன், அதில் பெரிய விவாதமெல்லாம் நடந்தது. அதில் இருந்து சில துளிகள்:
 
நான் கேட்டிருந்த கேள்வி:
இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?
கல்வெட்டு இப்படிச் சொல்லி இருந்தார்:
=>தமிழ் நாட்டில், பொங்கல் ஆண்டு முதல் நாளாக அறிவிப்பதற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்?

பொங்கல் இந்துக்களின் திருநாள் என்றால் உலக இந்துக்கள் அனைவரும் "பொங்கல்" கொண்டாடவேண்டும். இது தமிழர் திருநாள், தமிழர் அறுவடைத் திருநாள்,தமிழர் நன்றித் திருநாள்.

பல மதத்தினர் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களின் மத ஆண்டாக எதை வேண்டுமானலும் கொள்ளலாம் அதற்காக சமஸ்கிருத ஆண்டுதான் தமிழ் ஆண்டாக இருக்க வேண்டும் என்று சொல்வது எப்படி? நாளை இஸ்லாமும்,கிறித்துவமும் அவர்கள் ஆண்டை தமிழ் ஆண்டாக வைக்க வலியுருத்தினால் ?

நிச்சயம் "இந்து மதம் அல்லது சனாதன சமஸ்கிருத ஆண்டாக" ஒரு பொதுவான ஒரு தேதியை இந்தியா முழுக்க பயன்படும் வண்ணம் யராவது அறிவிக்கலாம்.

"இந்து" தமிழ் நாட்டில் மட்டும் இல்லை அல்லவா?

அப்படி அகில உலக "இந்து மதம் அல்லது சனாதன சமஸ்கிருத ஆண்டாக" ஒன்று அனைவராலும் ஏற்கப்படும்போது தமிழ்நாட்டில், அந்த மத மக்களுக்காக அதை விடுமுறையாக அறிவிக்கலாம்.
மதம் என்பது தனிப்பட்ட உரிமை. தனிமனித விருப்பம். புத்தாடை உடுத்துவது, கோவில்களுக்கு செல்வது என்பதை தவிர சித்திரைப் புத்தாண்டில் என்னவிதமான சடங்குகள் கொண்டாடப்படுகின்றன என்பதை சொன்னால் அறிந்து கொள்வேன். தை முதல் நாளை புத்தாண்டாக அறிவித்ததால் அவையெல்லாம் தடைபடும் என்று சொன்னால் அவர்களின் மத நம்பிக்கை என்பதை போலித்தனமானது என்றே சொல்வேன்.
இப்படியும் ஒருத்தர் சொல்லி இருந்தார்:
புத்தாண்டை இடம் மாற்றுவதால் உங்களுக்கு என்ன நட்டம் ? உங்களை யாரும் சித்திரையை தவிர்க்கச் சொல்லவில்லையே. அப்படி சொன்னாலும் நீங்கள் கேட்கப்போவதில்லை, பிறகு ஏன் தேவை இல்லாது கவலைப்படுகிறீர்கள் ?
விவாதங்களின் விளைவாக என் புரிதலாக:
1. இனி சித்திரை முதல் நாள் விடுமுறை கிடையாதா? மத ரீதியான சடங்குகள் செய்ய விருப்பமுள்ளோர் தங்கள் சொந்த விடுப்பில் அவற்றைச் செய்யவேண்டுமா?

சித்திரை முதல் நாளுக்கும் விடுமுறை இருக்கும் - இந்து என்போருக்கான சிறப்பு நாளாக அது இருப்பதில் ஆட்சேபணை இல்லை - ஆனால் தமிழ்ப் புத்தாண்டு எனக் கூறப்படக்கூடாது.
 
8. இந்துமதச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் மக்களுக்கு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் எதிர்ப்பாளர்களாய் இருக்கலாம் - அரசாங்கம் இருக்கலாமா?

அரசாங்கம் யாரையும் தடுக்கவில்லை, பெயரை மட்டும்தான் மாற்றி இருக்கிறது..
ஆக, இந்த அறிவிப்பு செய்யப்பட்டபோது, இதை ஆதரித்தவர்களும் கூட, இதனால் நம்பிக்கை சார்ந்த சடங்குகள் செய்யப்படுவதற்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என்றே நம்பினார்கள்.
 
ஆனால், என்ன நடக்கிறது? அரசு ஆணை அனுப்பியதாம் கோயில்களுக்கு, சிறப்பு வழிபாடுகள் - புத்தாண்டு என்ற பெயரில் கூடாது என்று. பஞ்சாங்கம் படிப்பது என்ற வழக்கத்துக்குத் தடையாம்.
 
அரசாங்கம் கொண்டாடப்பட்டு வந்த ஒரு விழாநாளை இடம் பெயர்த்தபோது, அதற்கு மதரீதியான காரணங்கள் இல்லை, தமிழ் இன ரீதியாகத்தான் என்று சொல்லப்பட்டது, பிற்பாடு, இந்துசமய  அறநிலையத்துறை மூலம் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்படுகிறது,
 
அரசின் எதேச்சாதிகாரமான போக்கு, இதைத் துவேஷம் என்று சொல்வதில் தவறில்லை என்பதோடு, பெரும்பான்மையின் வெறுப்பைச் சம்பாதிக்க முனைந்து செய்யப்படும் வேலை - இது இந்துத்துவாவுக்கு அவல் போடும் சாத்தியக்கூறை மறுக்க முடியாது.
 
அப்போதைய விவாதங்களில் கருத்து ஓரளவு மாறி இருந்தாலும், இப்படி ஒரு அறிவிப்பு, அரசாணை - எனக்கு மட்டுமல்ல, அன்று ஆதரித்தவர்களும் சேர்த்தே அதிர்ச்சியை அளித்திருக்கும், அளித்திருக்க வேண்டும்.
 
திமுக அரசுக்கு என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில்:
 
இது மிக வெளிப்படையாகவே தெரியும் கலைஞரின் வழக்கமான திசை திருப்பும் உக்தி - ஒகேனக்கல் பிரச்சினையில் இருந்து முக்கியச் செய்திகளை வேறுபக்கம் திருப்பும் நோக்கம் என்றும் நான் நம்புவதால்,
 
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! என்று விட்டுச் செல்கிறேன்.
 
பி கு: தயாராக இருக்கும் கேள்வியாளர்களுக்காக: நான் இன்று வழக்கம் போல அலுவலகம் வந்திருக்கிறேன், எந்தச் சடங்கும் புத்தாண்டுக்காக கொண்டாடும் வழக்கம் இருந்ததும் இல்லை, இன்றும் இல்லை.

33 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

அட போய்யா!! ஆண்டு பிறப்பா இருந்தா என்ன அம்பேத்கர் பிறப்பா இருந்தா என்ன? ஏப்ரல் மாதத்தில் என் லீவு குறையாமல் பார்த்துக்கிட்ட பாசக்கார முதல்வர் வாழ்க அப்படின்னு அவனவன் இருக்கான். முட்டாள்கள் தினம், கூமுட்டைகள் தினம் அப்படின்னு என்ன வேணாலும் ஓக்கேதான் அவங்களுக்கு.

நீரோ ஆபீஸ் போகும் ஆலு, சாரி ஆளு. உமக்கு ஏன் இம்புட்டுப் பொத்துக்கிட்டு வருது? போய் வேலையைப் பாருமய்யா!!

துளசி கோபால் said...

இந்த வருசம் ஞாயித்துக்கிழமையில் சித்திரை முதல்தேதி வந்து புண்ணியம் கட்டிக்கிச்சு:-)

அடுத்தவருசம் என்ன ஆகுதுன்னு பொழைச்சுக் கிடந்தா பார்க்கிறேன்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

இதில் என்ன ராஜதந்திரம் உள்ளது ?
இவர்கள் சிருபான்மைஇனரை சந்தோஷ படுத்த என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் .
எதில் என்ன லாபம் அடைந்தர்களோ !
கடவுள் தான் இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்
அன்புடன்
பாஸ்கர்

ramachandranusha(உஷா) said...

எனக்கு ஓரே ஒரு சந்தேகம். கலைஞர் டீவி புத்தாண்டு இன்று கொண்டாடுகிறதா? அதாவது புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சிகள்,
உலக தொலைக்காட்சியில் முதல் முதலாய் ஸ்பெஷல் படங்கள், விளம்பரங்களில் புத்தாண்டு வாழ்த்துக்கள் இவை எல்லாம்
இருக்கா இல்லையா?
ஊருக்கு போன் செய்துக் கேட்டால், மூணு நாளு லீவுன்னு ஊட்ல யாரும் இல்லை .

சரவணகுமார் said...

உங்கள் கண்டனத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

கருப்பன் (A) Sundar said...

கலைஞர் தனது தந்திரத்தை, காவிரி நதிநீர் பிரச்சனையை முடிப்பதற்க்கும், ஒக்கனேக்கல் பிரச்சனையை முடிப்பதற்க்கும் பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருக்கும் :-(

பார்க்க http://maalaimayakkam.blogspot.com/2008/04/blog-post.html

enRenRum-anbudan.BALA said...

சுரேஷ்,
முக்கியமான மக்கள் நல விஷயங்களில் (எ.கா: ஓகேனக்கல், மின் தடை ..) சொதப்பினாலும், இந்த மாதிரி காலணா பெறாத சங்கதிகளுக்கு அரசாணையெல்லாம் ரெடி பண்ணிடுவாங்க !! என்னத்த சொல்ல !
எ.அ.பாலா

manasu said...

kalagnr tv is celebrating as "sithirai thirunal". they are not using the word "thamil puththandu"

கூடுதுறை said...

தங்களின் கண்டனத்தை நானும் ஆமோதிக்கிறேன்.

சந்தர்ப்பவாத அரசியலுக்கு நல்ல ஒரு குட்டு

திவாண்ணா said...

இந்துக்களின் ஆலயங்களை விட்டு வெளியேறி உண்மையான மத சார்பு இல்லாத அரசாக வேண்டும் என்பதை நடந்தது வலியுறுத்துகிறது.

Anonymous said...

Well Said, MK is always a critic & rude against Hindus. He never going to change that attitude and show maturity, though he grows by age..



- RajKumar

சின்னப் பையன் said...

நானும் ஒரு தடவை சொல்லிக்கிறேன்... அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா!!!

Gopalan Ramasubbu said...

இதுல மகிழ்ச்சியான விசயம் என்னன்னா..இது நாள் வரை ஆங்கிலப்புத்தாண்டை மட்டுமே விமர்சையாகக் கொண்டாடிக்கொண்டு இருந்த எல்லாரும்.. .கலைஞரின் இந்த அறிவிப்பால் அவரை எதிர்ப்பவர்களும் சரி..ஆதரிப்பவர்களும் சரி(Depends on which side of the fence they belong too) ..ரொம்ப கான்ஷியஸ்ஸா தமிழ்ப் புத்தாண்டை அவரவர் விருப்பப்படி சித்திரையிலோ..இல்ல தையிலோ கொண்டாடுராங்க/கொண்டாடுவாங்க இல்லையா..அதுவே நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் நீர்த்துப்போகாமல் இருக்க உதவும். அந்த வகையில் மகிழ்ச்சியே. இதை ராஜதந்திரம் என்றும் சொல்லிக்கொள்ளலாம். :)

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க கொத்தனாரே..

பின்ன, கலைஞருக்கு ஓட்டுப் போட்டவனை கூமுட்டை ஆக்கின தினம்தானே இன்னிக்கு! அப்படிப்பாத்தா நானும் கூமுட்டைதான்.

அக்கா, அடுத்த வருஷம் பிரச்சினையே கிடையாது. அம்பேத்கர் பிறந்த தினமும், சனாதன இந்து சம்ஸ்கிருத தமிழ்ப்புத்தாண்டும் ஒரே நாளில் வரும்.

அறுவை பாஸ்கர்,

ராஜதந்திரமா? இப்போ இதைப்பத்திப் பேசறீங்களே.. ஒகேனக்கல் பத்தியோ மத்த முக்கியமான மேட்டர் பத்தியோ இல்லாம.. அதான் ராசதந்திரம்!

பினாத்தல் சுரேஷ் said...

உஷாக்கா,

கலைஞர் டிவி சித்திரைத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி கொண்டாடுதாம். சுறவம் திருநாள்தானே கொண்டாடணும்.. சன் டிவிக்கு வசதியா பிறந்தநாள்.. ஜெயா டிவியும் புத்தாண்டுன்னு சொல்லலை. ஆக செய்யறது என்னவோ அதேதான். புத்தாண்டுன்ற வார்த்தைய மட்டும் மாத்திட்டு தமிழர் மானத்தைக் காப்பாத்திட்டாங்க! இப்ப சொல்லுங்க கூமுட்டைதினம்தானே!

நன்றி சரவணகுமார்.

கருப்பன், அவர் தந்திரத்தை பிரயோகித்து அந்தப் பிரச்சினைகளை தீர்த்துத்தானே விட்டார் - அவரோட வழக்கமான ஸ்டைலில்..

பினாத்தல் சுரேஷ் said...

வாங்க எ அ பாலா.

//காலணா பெறாத சங்கதிகளுக்கு அரசாணையெல்லாம் ரெடி பண்ணிடுவாங்க// பின்ன, இதெல்லாம் பண்ண காசு தேவையா பணம் தேவையா.. ஓட்டு போகாதுன்ற தைரியம் வேற!

ஆமாம் மனசு. வெறும்வார்த்தைக்குத் தான் தடா!

நன்றி scssundar.

திவா, இந்து ஆலயங்களை அரசு கையாள்வது தவறல்ல என்பதே என் கருத்து. ஆனால், இதெல்லாம் டூ மச்.

பினாத்தல் சுரேஷ் said...

ராஜ்குமார், சரியாச்சொன்னீங்க.. நன்றி.

சின்னப்பையன், ரிப்பீட்டுக்கு நன்றி.

கோபாலன் ராமசுப்பு, தமிழ்ப் புத்தாண்டு எப்படிக் கொண்டாடப்படவேண்டும் என்ற அரசு சுற்றறிக்கை அடுத்த வருடம் தை மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சித்திரைத் திருநாளையும் கூமுட்டைகள் தினத்தையும்தான் கொண்டாடுகிறோம் - நீங்கள் சொல்லும் அவேர்னெஸ் உடன்!

Anonymous said...

இது எல்லாத்துக்கும் ஒரு நல்ல முடிவு
(இந்துவை திருடன் என்று கேலிபெசியது,இந்து மதக் கடவுள்களையும்,மத நம்பிக்கைகளையும் மட்டும் அடிக்கடி நிந்திப்பது,ராமனை உண்டு இல்லை என்று பண்ணி ஒரு வழி பண்னுவது,etc)

1.கடவுளை நம்புகிறவர்கள்(ஒருவனே தேவன்-என்று)
2.கடவுளை பிரார்த்தனை செய்பவர்கள்
3.கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் இந்து மத கலாச்சார மீது நம்பிக்கையுள்ளவர்கள்
ஒரு முறை ஒரு தேர்தலில் முழுமையான (நல்லாட்சி தந்ததாக மனதில் இருந்தாலும்)
எதிர்ப்பை( கட்சிகளின் ஆர்வக் கோளார்களை தவிர்த்து)எதிர் வாக்குகள் மூலம் தெரிவித்தால் .......

Anonymous said...

கும்மி சூப்பர்.... நடக்கட்டும்.

seethag said...

சுரேஷ்..

நம்ம நாட்டுல "எல்லாரும் எல்லாமும் பெற்று "சுகமா இருக்கும்போது அடுத்த லெவெலுக்கு போக வேண்டாமா?

மாஸ்லோங்ற உளவியல் நிபுணர் சொன்னமாதிரி ஒரு சமூகத்தின் அடிப்படை தேவைகள் நிறைவேறிய பிறகு தத்துவம் பற்றி பேசுவாங்களாம்.தெரிஜொக்கொங்க ப்ளீஸ்...

பினாத்தல் சுரேஷ் said...

அனானி, நீங்க சொல்றது சரிதான். ஆனா, தேர்தல் மூலமா இந்த மேட்டருக்கு எதிர்ப்பு காட்டறதுன்றது அவ்வளவு சரிப்பட்டு வராது. ஏன்எனில்:

எதிர்ப்பு ஓட்டு என்பதை உபயோகப்படுத்திக் கொள்ளக்கூடிய சூழ்நிலையில் உள்ள எந்தக்கட்சியும் உருப்படி இல்லை.

தேர்தலில் தோற்றாலும் அதற்குக் காரணமாக "தமிழன் - சோற்றாலடித்த பிண்டமாக" இருப்பதுதான் தோன்றுமே தவிர, இவை தோன்றாது.

மூன்றாவது, இது நிச்சயமாகவே ஒரு ட்ரிவியல் விஷயம். மேலும் பல காரணங்கள் தயாராகவே இருக்கின்றன.

அடுத்த அனானி, நடக்கும். நன்றி.

சீதா, அடிப்படைத் தேவைகள் எல்லாம் தீர்ந்துபோச்சா, நீங்களாச்சும் ஒரு மெயில் போட்டு சொல்லி இருக்கலாம்!

கல்வெட்டு said...

பினாத்தல் சுரேஷ்,
என்னால் புரிந்து கொள்ளமுடியாத பெயர்களையும், இரண்டு ஆண் கடவுள்கள்(ஒருவர் உடல் உறவுக்காக தன்னை பெண்ணாக நினைத்துக்கொண்டு அல்லது மாறி) உடலுறவு கொண்டு பிறந்த குழந்தைகள் 60 என்றும் சொல்லப்படும் கதைகளையும் அடிப்படையாகக் கொண்ட, பார்ப்பனீய வர்ணாசிரம மரபை கடைபிடிக்கும் மற்றவர்களின் புத்தாண்டையும் அவர்களின் உணர்வுகளையும் மதிக்கிறேன்.

மனிதன் அவன் விரும்பும் எந்த நாளையும் மாதத்தையும் அவனின் விழாக்கொண்டாட்டங்களுக்கு என்று வகைப்படுத்திக் கொள்ளலாம்.
அது அவர்களின் உரிமை. எந்த ஜீவனும் அதுக்குப் பிடித்த உணவைச் சாப்பிட உரிமை உள்ளது.

அரசு தலையிடக்கூடாது.
அதற்கு எனது எதிர்ப்புகளைப் பதிவு செய்கிறேன்.


***

பார்ப்பனீய வர்ணாசிரம பற்றாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்:


எப்படி மொஹரம்/பக்ரீத்/கிறித்மஸ்/புத்த ஜெயந்தி போன்ற மதவிழாக்களை தமிழ்விழா என்ற அடையாளத்தின்கீழ் கொண்டுவர முடியாதோ , அதே போல் நீங்கள் உங்களின் மரபை /குழு விழாவை /அல்லது புத்தாண்டை தமிழன் விழா என்று சொல்லி எங்களையும் (பார்ப்பனீய வர்ணாசிரமத்தை ஏற்காதவர்களை) புனிதப்படுத்த அல்லது கேவலப்படுத்த அல்லது காயப்படுத்த வேண்டாம்.

*********************

இது மேலதிகத் தகவல்.

Caution:
I am just making a statement here and not trying to sell any product or concept.


ஏற்கனவே இரத்னேஷ் பதிவில் நான் சொன்னது. (http://rathnesh.blogspot.com/2008/02/83.html)

**

தமிழன் என்பதை ஒரு குழு அடையாளமாகக் கொள்ளலாம்.மொழி வழி வந்த குழு அடையாளம். எந்த காலத்தில் இருந்தாலும், மனிதனுக்கு ஏதேனும் ஒரு குழு அடையாளம் இருக்கும். நாளையும் இருக்கும் என்றே நம்புகிறேன்.

பேசும் மொழி,பிறந்த இடம், முப்பாட்டன் அடையாளம் எல்லாம் தாண்டி... இன்று ,இந்தக் கணத்தில் நீ எந்தக் குழு அடையாளத்தை முதலில் விரும்பி (மனதால்) ஏற்கிறாய் என்பதைப் பொறுத்தது.

ஒரு கூட்டத்தில் போய், "தமிழனெல்லாம் இந்தப் பக்கம் வாங்க, xxxx எல்லாம் அந்தப் பக்கம் போங்க" என்று சொல்லும் போது எளிதாக அவர்கள் விரும்பி ஏற்கும் அடையாளம் தெரிந்து விடும்.

ஒரு மனிதனுக்கு பல அடையாளங்கள் இருக்கலாம். ஆனால் அந்த அடையாளங்களில் எதில் அவன் மிகுந்த மன நிறைவு அடைகிறானோ அல்லது கொடுக்கப்பட்ட பல அடையாளங்களில் எதை அவன் முதலில் வரித்துக்கொள்ள விரும்புகிறானோ அதைப் பொறுத்து அவனை அடையாளம் காணலாம்.


**

இந்த xxx தொழில் செய்யும் கனவான்கள் எல்லாம் இந்தப்பக்கம் வாங்க, தெருவோரக் கலைஞன் எல்லாம் அந்தப்பக்கம் போங்க என்றால் , நான் மிகவும் மகிழ்ச்சியாக Street artist கூட்டத்தில்தான் சேருவேன். எனக்கு சம்பாத்யம் தரும் தொழில் வேறு (What I do for living ) ஆனால் நீங்கள் யார் என்று என்னைக் கேட்டு , சுய அடையாள அறிமுகம் செய்து கொள்ளச் சொன்னால், தெருவோரக் கலைஞன் (Street artist) என்று அடையாளப்படுத்திக் கொள்ளவே செய்வேன்.

**

அது போலத்தான், xxx ஆக இருந்தாலும் yyy ஆக இருந்தாலும் தமிழன் என்று குழு அடையாளத்தை கொடுக்கப்பட்ட அடையாளங்களில் முதல் அடையாளமாக் தேர்ந்தெடுக்கும் யாவரும் தமிழர்களே. தை-தமிழ் பு்த்தாண்டு எனது அவர்களுக்கு மட்டுமே ஆனது.

யாரும் யாருக்கும், எந்த அளவு கோளின் படியும் இந்தைகைய சுய அடையாள அந்தஸ்துகளை தர முடியாது. விரும்பி ஏற்பவை இவை.

**

உதாரணத்திற்கு ஒரு விளையாட்டு.. இது தமிழனைக் கண்டுபிடிக்கும் அளவுகோல் அல்ல. விளையாட்டு விளையாட்டு. மட்டுமே .


இதை நீங்கள் பல இடங்களில் செயல்படுத்தி பார்க்கலாம். எந்த விளக்கமும் கொடுக்கக்கூடாது. சுய அடையாளபடுத்தல் அவர்கள் விருப்பமாக இருக்க வேண்டும்.

பலபேர் உள்ள ஒரு கூட்டத்தில்..

1.)தமிழன் இந்தப்பக்கம் வா
2.)இஸ்லாமியன் அந்தப்பக்கம் போ
3.)இந்து அப்பால போ
4.)கிறித்தவன் கிழக்கே நில்
5.)அய்யங்காராக பிறக்க புண்ணியம் செய்த ஜென்மங்கள் அந்தப்பக்கம் போ
-:நன்றி விஜய் டி.வி நீயா/நானா லாவண்யா (தவறாகச் சொல்லவில்லை,ஜென்மம் மறு ஜென்மம் என்பதனை ஒட்டி பிறப்பு/பிறந்தவர்கள் என்ற அர்தத்தில்)

.....
6.)...
7.)...

....

என்று சொல்லிப் பாருங்கள்.

அனைவரும் சான்றிதழ் படி தமிழராகவே தமிழ்நாட்டில் இருந்தாலும், யார் எதை முதன்மைக் குழு அடையாளமாக எடுக்க விரும்புகிறார்கள் என்று தெரிந்துவிடும். :-))


அப்படி தமிழ் நாட்டில் இருந்தாலும் xxx,yyy என்ற வேறு அடையாளங்களில் தன்னை அடையாளாம் காண்பவர்களை தவறு என்று சொல்லி, அவர்கள் தமிழன் இல்லை என்றும் நிராகரிக்க முடியாது.ஏனென்றால் சில சமயம் அது அவர்களின் இரண்டாவது சாய்ஸ் ஆக இருக்கலாம். ஈழத்தில் இஸ்லாம் மதம் தழுவும் தமிழர்கள், இஸ்லாமியர் என்றே முதல் அடையாளம் காண்கிறார்கள். பல அரசியல் காரணங்கள் அவர்களுக்கு.

***

குழு அடையாளம் என்பதும் ஒரு அரசியல் அது தமிழ் அடையாளமாகவே இருந்தாலும்.

வஜ்ரா said...

இந்துத் தமிழர்கள் கொண்டாடும் புத்தாண்டை தைக்கு மாற்றிய கலைஞர், இஸ்லாமியத் தமிழர் கொண்டாடும் புத்தாண்டையும், கிருத்தவத் தமிழர்கள் கொண்டாடும் புத்தாண்டையும் மாற்றுவாரா ?

ஓகை said...

//அது போலத்தான், xxx ஆக இருந்தாலும் yyy ஆக இருந்தாலும் தமிழன் என்று குழு அடையாளத்தை கொடுக்கப்பட்ட அடையாளங்களில் முதல் அடையாளமாக் தேர்ந்தெடுக்கும் யாவரும் தமிழர்களே. தை-தமிழ் பு்த்தாண்டு எனது அவர்களுக்கு மட்டுமே ஆனது.//

இது உண்மையாயின் நான் தமிழன் இல்லையென்பதும் உண்மையாகும்.

என் கவிதை:

தளிர்மா துளிர்க்க முந்திடுமா?


தையே என்று சொல்லிவிட்டால்
---- தளிர்மா துளிர்க்க முந்திடுமோ?
மெய்யும் குளிரும் முன்பனியை
---- முட்டி உடைக்க இரண்டாமோ?
வெய்யில் நாளைத் தொடங்குதற்போல்
---- வேனில் ஆண்டைத் துவக்கிடுமே
அய்யே என்ன அரசானை
---- அடியேன் நைந்து நொந்தேனே!


தைத்திருநாள் தமிழ்ப்புத்தாண்டு என்பதற்கு எந்தவொரு வரலாற்று ஆதாரமும் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. மறைமலை அடிகள் தலைமையில் கூடி முடிவெடுத்தவர்கள் எந்தெந்த ஆதாரங்களின் படி அவ்வாறு செய்தார்கள் என்பதனை யாராவது அறியத் தருவீர்களா?

பினாத்தல் சுரேஷ் said...

கல்வெட்டு,

//அரசு தலையிடக்கூடாது.
அதற்கு எனது எதிர்ப்புகளைப் பதிவு செய்கிறேன். //

உங்கள் நேர்மைக்கு என் வாழ்த்து. சுதந்திர நாட்டில், யாரும் எப்படியும் எதையும் கொண்டாட உரிமையை அரசு மறுக்கக்கூடாது என்பது மட்டும்தான் என் கட்சியும். நான் இச்சடங்குகளைச் செய்வதில்லை என்றும் சொல்லி இருக்கிறேன்.

//குழு அடையாளம் என்பதும் ஒரு அரசியல் அது தமிழ் அடையாளமாகவே இருந்தாலும்.//

இதையும் முழுக்க முழுக்க ஒப்புக்கொள்கிறேன்.

//புத்தாண்டை தமிழன் விழா என்று சொல்லி எங்களையும் (பார்ப்பனீய வர்ணாசிரமத்தை ஏற்காதவர்களை) புனிதப்படுத்த அல்லது கேவலப்படுத்த அல்லது காயப்படுத்த வேண்டாம்.//

இவ்விடத்தில் சற்றே மாறுபடுகிறேன். தமிழர் தலைவர் எனச் சொல்லப்படுபவர்கள் எல்லாத்தமிழர்களின் முழு ஒப்புமை பெற்றவர்களா? அவர்கள் சொல்லிக்கொண்டு போகிறார்கள், ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.

பினாத்தல் சுரேஷ் said...

வஜ்ரா,

ஆர்மி பத்தி எல்லாம் எழுதறீங்க, Safe Playing Field னா என்னன்னு தெரியாதா?

ஓகை,

அறிவியல்பூர்வமான காரணங்கள் பற்றிய விவாதங்கள் என் பழைய பதிவில் நிறைய ந்டந்தாலும், அவை என் கருத்துக்கு ஏறவில்லை. ஆனால் தமிழறிஞர்கள் சொன்னதால் ஏற்கலாம் என்ற நிலைக்கு வந்தது வாஸ்தவம்.

உங்கள் சந்தப்பா நன்றாக இருக்கிறது.

இலவசக்கொத்தனார் said...

//1.)தமிழன் இந்தப்பக்கம் வா
2.)இஸ்லாமியன் அந்தப்பக்கம் போ
3.)இந்து அப்பால போ
4.)கிறித்தவன் கிழக்கே நில்
5.)அய்யங்காராக பிறக்க புண்ணியம் செய்த ஜென்மங்கள் அந்தப்பக்கம் போ//

என்னதான் தமிழை ஒரு மதமாக்க இவ்வளவு பேர் பாடுபடறாங்கன்னாலும் அதை இப்படி ஓப்பனாவா சொல்லறது?

தமிழ் ஹிந்துவோ தமிழ் இஸ்லாமியரோ, தமிழ் கிருத்துவரோ இருக்கக்கூடாதா? அவங்க எங்க போய் நிக்கணும்? கொஞ்சம் தெளிவா சொல்லிடுங்க கல்வெட்டாரே!

Sridhar Narayanan said...

//1.)தமிழன் இந்தப்பக்கம் வா
2.)இஸ்லாமியன் அந்தப்பக்கம் போ
3.)இந்து அப்பால போ
4.)கிறித்தவன் கிழக்கே நில்
5.)அய்யங்காராக பிறக்க புண்ணியம் செய்த ஜென்மங்கள் அந்தப்பக்கம் போ
//

கல்வெட்டு அவர்களே,

இந்த விளையாட்டு புரியவில்லை. தமிழ் இந்து, மலையாள முஸ்லீம் என்பதெல்லாம் அடையாளம் இல்லையா?

நிற்க! ஒருவேளை நீங்கள் தமிழரின் (அங்கீகரிக்கப்பட்ட) மதமாக சமணத்தை மட்டும் கருதுகிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. உங்கள் நிலையை தெளிவாக்குவீர்களா?

எனக்கு எந்தவித மதங்களின் மேலும் தனிப்பட்ட பிரேமையும் கிடையாது என்பதையும் பதிவு செய்கிறேன். நான் இறை மறுப்பாளனுமல்ல.

வஜ்ரா said...

//
வஜ்ரா,

ஆர்மி பத்தி எல்லாம் எழுதறீங்க, Safe Playing Field னா என்னன்னு தெரியாதா?
//

இந்துக்களுக்கு எதிராக மட்டுமே பேசுவது என்பது எத்தகயை பின்விளைவுகளைக் கொடுக்கும் என்பது தெரியாமலா இருக்கிறார் இந்த ராஜதந்திரி ?

தமிழகத்தில் சமயச் சார்ப்புடைய கட்சிகள் கை ஓங்க கலைஞர் அடிக்கல் நட்டுள்ளார். இத்தகய செய்ல்களினால் பெரும்பாலான மக்கள் மனம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமலும் சிறுபான்மை ஓட்டுக்காகச் செய்யப்படும் வேலை என்ற குற்றம் நிரூபணமாகிறது.

அடுத்ததாக இந்துத் தமிழர்கள் கொண்டாடும் புத்தாண்டை மாற்றியது போல், இந்துத் தமிழர்கள் கொண்டாடும் தீபாவழியையும் மாற்றலாம்.

அதோடு, பொங்கல் ஏற்கனவே வடநாட்டில் மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுவதால், வடநாட்டு ஆரியர்களிடமிருந்து திராவிடத் தமிழினத்தை வேறுபடுத்த, கிரிஸ்துமஸுடன் சேர்ந்து கொண்டாடவேண்டும் அப்போது தான் அது சமத்துவப் பொங்கலாக அமையும் என்று சொல்லி அடுத்த "சங்கமம்" விழாவில் பொங்கலை டிசம்பர் 25க்கும், தமிழ் புத்தாண்டை ஜனவரி 1 க்கும் மாற்றலாம்.

கல்வெட்டு said...

//பினாத்தல் சுரேஷ் said

உங்கள் நேர்மைக்கு என் வாழ்த்து.
..

பினாத்தல் சுரேஷ்,

முதலில் நேர்மையாளன் என்ற பட்டம்/வட்டம் அல்லது பார்வை எனக்கு வேண்டாம். :-) இதையே நான் மறுத்து இருந்தால், அதாவது இன்றைய எனது நிலையில் கருணாநிதி செய்ததை ஆதரித்து இருந்தால் என்னை நேர்மையாளன் இல்லை என்று நீங்கள் சொல்லியிருக்க வாய்ப்பு உண்டு அல்லவா?

அல்லது நான் இங்கே வராமல் (பணி/நேரமின்மை/சோம்பேறித்தனம்...) போய் இருந்தால், எந்தக் கருத்தும் சொல்லாத நிலையில் நீங்கள் வேறு அர்த்தம் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது அல்லவா?

நேர்மை என்பது எடுத்துக் கொண்ட கருத்துக்களின் மீது கொண்ட எப்போதும் மாறாத நிலைப்பாடு என்பதை என்னளவில் ஏற்றுக் கொள்வது இல்லை.

இன்று நம்பிய கருத்துகள் நாளை மாறலாம்.

நேற்று தவழ்ந்தேன் என்பதும் உண்மை.

இன்று நடக்கிறேன் என்பதும் உண்மை.

நாளை மீண்டும் தவழ்வேனா என்பது காலம்/எனது அனுபவம்/ அப்போதைய புரிதல் சார்ந்த விசயம்...

இடம், காலம்,நம் அரசியல் சார்பு போன்றவை பல நேரங்களில் நம்மை நாம் அறியாமல் மாற்றிக் கொண்டே இருக்கும். இன்றைய புரிதலில்,காலத்தில் நான் கருணாநிதி செய்வதை எதிர்க்கிறேன். அவ்வளவே அதைத்தாண்டி எனது நேர்மை,குணம் ..இதர விசயங்களை இது மட்டும் நிர்ணயிக்கப்போவது இல்லை.

நடுநிலைவாதி,நல்லவன்,நேர்மையாளன்,கெட்டவன்,புண்ணாக்கு,அல்லக்கை..etc., என்ற எந்த வட்டத்திலும் சிக்க விரும்பவில்லை. அவ்வளவே.

விளக்கமாகச் சொல்லலாம் நேரம் இல்லை. புரிந்தவரை சரி... :-)) அடுத்து, கேள்விக்கிச் செல்வோம்

....

// இவ்விடத்தில் சற்றே மாறுபடுகிறேன். தமிழர் தலைவர் எனச் சொல்லப்படுபவர்கள் எல்லாத்தமிழர்களின் முழு ஒப்புமை பெற்றவர்களா? அவர்கள் சொல்லிக்கொண்டு போகிறார்கள், ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.//

நான் இதுவரை யாரையும் எந்த விதத்திலும் எனக்கு தலைவனாக ஏற்றுக் கொண்டது இல்லை. கருணாநிதியை எனது வழிகாட்டியாகவோ அல்லது தலைவனாகவோ என்றும் நினைத்தது இல்லை. என்னால் அப்படி செய்யவும் முடியாது.

பிரச்சனைகளின் அடிப்படையில் அவரது தமிழ் , தமிழ் சார்ந்த சில நிலைகள் எனது எண்ணங்களோடு ஒத்துப் போகும்போது ஒத்திசைவு ஏற்படுகிறது . அவ்வளவே அதைத்தாண்டி, இவர்தான் தலைவர் என்று ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்வது தனி நபர் விருப்பம்.

....

கருணாநிதி இதைச் சட்டமாக்குவற்கு முன்பே நான் பொங்கலை தமிழர் திருநாளாக அறிவிக்க வேண்டும் என்று பல முயற்சிகள் என்னளவில் எடுத்தேன். வலைப்பதிவிலும் சில தகவல்களை பதிந்து வைத்தேன்.

இதுவரை எனக்கு தலைவர்( அரசிஅயல்,மதம்,ஆன்மீகம்,வாழ்க்கை...) என்று யாரும் இல்லை.

.....

பொங்கல் தமிழர் திருநாளாக சாதி,மதம் இல்லாமல் அனைவரும் கொண்டாடப்படவேண்டிய ஒன்று . அல்லது அதை அப்படி மாற்றவேண்டும் என்பதுதான் எனது நிலை.

கருணாநிதியின் சட்டம் இப்போது பொங்கலில் இருந்த மத அடையாளத்தை பிரித்து விட்டது. அதாவது தமிழர் ஆண்டு தொடக்கம் எனும் போது தமிழ் அடையாளம் காண்போர் மனத்தடை/மதத்தடை இல்லாமல் பொங்கல் அன்று தமிழ் ஆண்டைக் கொண்டாடலாம்.

பார்ப்பனீய வர்ணாசிரம ஆபாசக் கதைகளில் இருந்து தமிழ் ஆண்டை பிரித்து எடுத்தது மகிழ்ச்சி.

அதைக் கொண்டுபோய் பொங்கல் நாளில் வைத்தது இரட்டை மகிழ்ச்சி.


அவர் எண்ணங்களுக்கு நான் ஒத்துப்போகிறேன் என்பது அல்ல. எனது எண்ணங்களுக்கு அவரின் செயல் ஒத்துப் போவதால்தான் தமிழ் ஆதரவு.

***************

//இலவசக்கொத்தனார் said...
தமிழ் ஹிந்துவோ தமிழ் இஸ்லாமியரோ, தமிழ் கிருத்துவரோ இருக்கக்கூடாதா? அவங்க எங்க போய் நிக்கணும்? கொஞ்சம் தெளிவா சொல்லிடுங்க கல்வெட்டாரே!//

இலவசக்கொத்தனார் ,
ஒருவனே பிள்ளையாகவும், கணவனாகவும்,அப்பாவாகவும், மாமனாராகவும்,தாத்தாவாகவும், அலுவலகத்தில் மேனஜராகவும் ஒரே சமயத்தில் இருக்க முடியும்.

உங்கள் தந்தைக்கு நீங்கள் மகன் என்பதும் உண்மை, உங்கள் குழந்தைக்கு நீங்கள் அப்பா என்பதும் உண்மை, அதே நேரத்தில் அலுவலகத்தில் ஒரு பணியாளன் என்பதும் உண்மை...

ஒரே நேரத்தில் அனைத்தும் உண்மை. ஒன்று உண்மை என்பதற்காக மற்ற ஒன்று பொய்யல்ல. அது போல ஒன்று மட்டுமே உண்மையும் அல்ல.

....

நான் வாழும் இந்த வாழ்க்கையில் எந்த அடையாளம் எனக்கு மிகவும் பிடித்தது என்று கேட்டால், 1,2,3 என்று சிலவற்றை வரிசைப்படுத்த முடியும்.

....

தமிழ்-ஹிந்துவோ தமிழ்- இஸ்லாமியரோ, தமிழ்-கிருத்துவரோ இருக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை.

மதம் சார்ந்த ஒரு அடையாளமும் (பார்ப்பனீய வர்ணாசிரமம்,இஸ்லாம்,கிறித்துவம்....) மொழி சார்ந்த ஒரு அடையாளமும் (தமிழ்,இந்தி,மலையாளம்...) ஒருங்கே இருக்கும் பட்சத்தில் , உனது மனதளவில் எந்த அடையாளத்தை நீ அதிகம் விரும்புகிறாய் என்பதுதான் எனது கேள்வி அல்லது நான் சொன்ன விளையாட்டின் கரு.

ஒன்றை அதிகம் நேசிக்கிறாய் என்பதற்காக அடுத்த ஒன்றை மறுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஈழத்தில் இஸ்லாம் மதம் தழுவும் தமிழர்கள், இஸ்லாமியர் என்றே முதல் அடையாளம் காண்கிறார்கள். பல அரசியல் காரணங்கள் அவர்களுக்கு.

....

"யார் எதை முதன்மைக் குழு அடையாளமாக எடுக்க விரும்புகிறார்கள்?" என்பதுதான் எனது விளையாட்டின் கரு.

***********************

//
Sridhar Narayanan said...
இந்த விளையாட்டு புரியவில்லை. தமிழ் இந்து, மலையாள முஸ்லீம் என்பதெல்லாம் அடையாளம் இல்லையா?
நிற்க! ஒருவேளை நீங்கள் தமிழரின் (அங்கீகரிக்கப்பட்ட) மதமாக சமணத்தை மட்டும் கருதுகிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. உங்கள் நிலையை தெளிவாக்குவீர்களா?
எனக்கு எந்தவித மதங்களின் மேலும் தனிப்பட்ட பிரேமையும் கிடையாது என்பதையும் பதிவு செய்கிறேன். நான் இறை மறுப்பாளனுமல்ல.//

Sridhar Narayanan ,
இலவசக்கொத்தனாருக்கு சொன்ன பதிலில் உங்களின் கேள்விக்கான் விடையும் உள்ளது.

தமிழ் இந்து = (தமிழ் மொழி)+ (இந்து மதம்)
என்பது ஒரு அவியல் போன்ற அடையாளம்.

அவியலில் பல காய் இருந்தாலும் உங்களுக்கு பிடித்த காய் எது ? என்பதுதான் எனது கேள்வி.

தமிழன்(மொழி அடையாளம்) என்பவனுக்கு ஒரே மதம்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் இன்னும் நீர்த்துப் போய்விடவில்லை என்றே நம்புகிறேன். ஒரு வேளை எனது கருத்துகள் உங்களுக்கு அந்த எண்ணத்தை கொடுத்து இருக்கலாம்.

சாதி,மத,சம்பிரதாய ....சிக்கல்களில் இருக்கும் தமிழனக்கு அவை சாராத ஒரு பொது அடையாளம் , அதுவும் முதன்மை அடையாளம் வேண்டும் என்பதே எனது நிலை.

கொண்டாட்டங்கள் மனித வாழ்வுக்கு தேவையானது. அனைவரும் சேர்ந்து கொண்டாடும் வகையில் தமிழ் புத்தாண்டு/பொங்கலில் இருந்து மதம்/சாதி போன்றவற்றை விலக்க வேண்டும்.


*******

*******



என்னை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எனது நிலையை சொல்லிவிட்டேன். இதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை.

களம் அமைத்துக் கொடுத்து கபடி விளையாட அனுமத்தித்த "அண்ணன் பினாத்தாலாருக்கு" இந்த மலர் மாலையை மாணிக்க மாலையாக அணிவித்து, உரையாடலில் பங்கெடுத்த வலைக்கழக கண்மணிகளுக்கு நன்றி கூறி அடுத்த முறை நாம் வேறொரு தளைத்தில் குஸ்தி போடும் வரை விடை கூறி அமர்கிறேன்.


நன்றி.... ஜோடா ப்ளீஸ்... :-))


**********

பிட் நோட்டீஸ் நேரம்..

இருந்தால் பார்க்க.....

பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_113294177394608479.html

கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
http://kalvetu.blogspot.com/2005/10/10.html

குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
http://kalvetu.blogspot.com/2005/10/12-thanks-giving-day.html

தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
http://kalvetu.blogspot.com/2005/10/15.html

தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?
http://kalvetu.blogspot.com/2005/10/16-halloween.html

போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_15.html

பொங்கல் கொண்டாட்டம்- தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_21.html

Anonymous said...

இன்றில்லாவிட்டால் நாளை, நாளை தவறினால் அடுத்த நாள், நிச்சயமாக பெற்றே தீருவோம். ஏனென்றால் தமிழுக்கு ஏற்றம் கிடைக்க, தமிழுக்குப் பெருமை கிடைக்க- மன்னிக்கவும்- நாம் தமிழன்தான் என்று சொல்லிக்கொள்ள இன்னும் நாம் உரிமை பெறவில்லை.அந்த அவமானகரமான ஒரு பள்ளத்தாக்கில் இன்றைக்கு நாம் இருக்கிறோம்.


கடந்த கவர்னர் உரையின்போது அறிவிக்கப்பட்டது-பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாக அறிவித்து அந்நாள் முதல் நம்முடைய ஆண்டு கணக்கை மேற்கொள்வோம். இது நாம் கணித்தது அல்ல. பெரும்புலவர் மறைமலை அடிகளார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட புலவர்கள் கூடி அன்றைக்கு பெரியார் போன்றோருடைய ஆலோசனைகளை எல்லாம் பெற்று அவர்கள் யாத்துத்தந்தது, வகுத்துத் தந்தது நம்முடைய தமிழ் வருட கணக்கு.

நமக்கு இருக்கிற வருடங்கள் எல்லாம் வருடப்பிறப்பு என்றாலும் கூட- ஒரு ஆண் வருட, இன்னொரு ஆண் வருடி அதன் மூலமாக பிறந்த வருடப்பிறப்புகள்தான் அந்த வருடப்பிறப்புகள் என்ற காரணத்தால் நம்முடைய வருடப்பிறப்பு, தமிழனுடைய வருடப்பிறப்பு இதுதான்-வள்ளுவருடைய ஆண்டு தான் நாம் வருடப் பிறப்பாக ஆண்டுப் பிறப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறுதியிட்டு முடிவு செய்து அரசின் சார்பாக சட்டப்பேரவையிலே அனைவருடைய ஏகோபித்த கருத்தையும் பெற்று வெளியிடப்பட்ட அந்த செய்தியை இன்றைக்கு பத்திரிகைகளிலே பார்த்தால் கேலிக்குரியதாக, கிண்டலுக்குரியதாக, அவை எல்லாம் விமர்சிக்கப்படுகிற காட்சியை நாம் காண்கிறோம்.






அவற்றை பார்க்கும்போது எனக்கு வருத்தம் இல்லை. எனக்கு ஒருவகையிலே இதில் மகிழ்ச்சிதான். நம்முடைய தமிழனை எப்படியாவது, யாராவது, கேலிசெய்து தூண்டிவிட்டால்தான் அவன் சொரணையோடு எழுந்து நடமாடுவான். அவன் உலகத்திற்காக செய்ய வேண்டிய, தமிழுக்காக ஆற்ற வேண்டிய காரியத்தை செய்வான் என்ற முறையிலே தான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சியை நீடிக்க வைக்கிற வீரம், இந்த மகிழ்ச்சியை நாமெல்லாம் இன்று பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் எல்லாம் சிந்திக்கும் வகையில் இந்த நாள் பயன்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

.இவ்வாறு கருணாநிதி பேசினார்.

Anbezhilan said...

இடையில் வந்தவர்களுக்கு வடமொழி பெயரில் அறுபது ஆண்டுகளை தமிழகத்தில் திணிக்க உரிமை இருந்திருக்கிறது என்றால் இப்பொழுது மானமுள்ள தமிழனுக்கு அதை மாற்ற உரிமை இல்லையா?

பினாத்தல் சுரேஷ் said...

அனானி மற்றும் அன்பெழிலன்,

நீங்கள் சொல்வது தைமுதல் தேதியில் ஏன் புத்தாண்டு கொண்டாடக்கூடாது என்பதற்கான வாதம்.. அதைப்பற்றி பொங்கல்தான் புத்தாண்டா என்ற பதிவில் என் கருத்துக்களையும் வாதங்களையும் வைத்திருக்கிறேன்.

இங்கே கலஞரின் அரசாணை பற்றி மட்டுமே சொல்கிறேன்.. அது பற்றி உங்கள் கருத்து?

 

blogger templates | Make Money Online