தலைமைச் செயலகச் செய்திக் குறிப்பு - காலை 11 மணிக்கு
1. கடலூர் எஸ் பி விழுப்புரத்துக்கும் விழுப்புரம் எஸ் பி வேலூருக்கும் வேலூர் எஸ் பி கடலூருக்கும் மாற்றம்.
2. சட்டசபைக் கூட்டத்தொடர் 19 ஆம் தேதி தொடக்கம்.
3. வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ 3000 உதவித்தொகை
4. தமிழ்ப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் யாரேனும் ஒருவர் பெயர் தமிழில் இருந்தாலும் வரிவிலக்கு.
தலைமைச் செயலகச் செய்திக் குறிப்பு - மாலை 6 மணிக்கு
1. வேலூர் எஸ் பி விழுப்புரத்துக்கும் விழுப்புரம் எஸ் பி கடலூருக்கும் கடலூர் எஸ் பி வேலூருக்கும் மாற்றம்.
2. சட்டசபைக் கூட்டத்தொடர் 18 ஆம் தேதி தொடக்கம்.
3. வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ 5000 உதவித்தொகை.
4. தமிழ்ப்படங்களில் பேசப்படும் வசனங்களில் ஏதேனும் ஒருவரி தமிழில் இருந்தாலும் வரிவிலக்கு.
நடிகர் சங்க அறிக்கை - காலை 11:30க்கு
வரும் 28 ஆம் தேதி வரிவிலக்களித்த முதல்வரைப்பாராட்டி மாபெரும் நட்சத்திரக்கலைவிழா. பங்குகொள்ளாத நடிகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நடிகர் சங்க அறிக்கை -மாலை 6:30க்கு
வரும் 27 ஆம் தேதியும் வரிவிலக்களித்த முதல்வரைப்பாராட்டி மாபெரும் நட்சத்திரக்கலைவிழா. பங்குகொள்ளாத நடிகர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலமைச்சர் அறிக்கை - காலை
கர்நாடக முதல்வர் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. அவர் பேச மறுப்பதில் சற்றும் நியாயம் இல்லை. முடிவெடுப்பதை ஒத்திப்போட்டிருக்கிறேன்.
முதலமைச்சர் அறிக்கை - மாலை
கர்நாடக முதல்வருடன் பேசிவிட்டேன். அவர் பேசுவதில் சற்றும் நியாயமில்லை. பிரச்சினையை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லவிருக்கிறேன்.
முதலமைச்சர் பேட்டி - காலை
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது. விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது. என்பதால் மக்கள் மகிழ்ச்சியோடு இந்த ஆட்சியை ஆதரிக்கின்றனர்.
அதே சமயத்தில் போக்குவரத்துத் துறையில் நடைபெறும் ஊழலால் நாடே தத்தளிக்கிறது. கல்வி நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தத் தயாராக உள்ளோம்.
முதலமைச்சர் பேட்டி - மாலை
தமிழ்நாட்டில் வாகன வசதி மிகவும் அற்புதமாக உள்ளதை உலகவங்கியே வியந்து பாராட்டுகிறது. கல்வியில் குறுகிய காலத்தில் சிறந்துவிட்ட தமிழ்நாட்டைப்பற்றி முனைவர்கள் ஆராய்ச்சி செய்கின்றார்கள்.
ஆனால், அளவுக்கதிகமாக உயர்ந்துவிட்ட விலைவாசியைப்பற்றியும், தாறுமாறாகக் கெட்டுக்கிடக்கும் சட்டம் ஒழுங்கைப்பற்றியும் மக்கள் தெரிவிக்கும் கவலையில் நானும் பங்கேற்கிறேன். அடுத்தமாதம் விலைவாசி உயர்வை எதிர்த்து பிரம்மாண்டப் பேரணி நடத்துவோம்.
*****
என்னடா இது கலாட்டான்னு பாக்கறீங்களா? தமிழ்நாட்டோட சோகம் எல்லாம் முதலமைச்சரா இல்லாதப்ப மட்டும்தான் அம்மாவுக்கும் சரி, கலைஞருக்கும் சரி - கண்ணுல படுது. இதே ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல ஒருத்தரை காலை நேர முதல்வராவும், இன்னொருத்தரை மாலை நேர முதல்வராவும் முதலமைச்சராக ஆக்கிட்டா?
24 பின்னூட்டங்கள்:
சுரேஷ்!
உங்களோட வலைப்பதிவில என்னோட முதல் மறுமொழி இது! இதுவரைக்கும் சங்கப்போட்டி தொடர்பான சிலருடய இடுகைகளை (பா.பா, ச்சின்னப்பையன், ...) படிச்சிருக்கேன். ஆனா எதுவும் இவ்வளவு சுவாரசியமா இல்லை! கடைசி வரை சஸ்பென்சை கட்டி காத்ததற்கு வாழ்த்துக்கள்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
நல்லா வித்தியாசமா இருக்கு உங்க கற்பனை. நீங்க தொட்டிருக்கிற விசயங்களும் நுணுக்கமா இருக்கு :-)
இதைத்தான் நுண்ணரசியல்னு சொல்வாங்களா?
மரு. இராமதாஸ்: இந்த ஆட்சியில் விலைவாசி ஏறிவிட்டது. சட்டம் ஒழுங்கு சரியில்லை. மாநகர விரிவாக்கம் கூடாது. விமானநிலையத்தையும் விரிவு படுத்தக்கூடாது என்று அந்தந்த ஊர் மக்கள் திரள் திரளாக வந்து என்னிடம் மனு கொடுக்கிறார்கள். நாளை தொடர்ச்சியாக போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெறும்...
ஜி கே மணி சொல்கிறார்:
ஐயா இப்ப ராத்திரி 8:11 ஆயிடுச்சு (20:11).. இப்ப நம்ம ஆட்சி
மரு. ஐயா: பத்திரிகையாளர்கள் நான் சொன்னதை திரித்துவிடக்கூடாது. தெளிவாக சொல்கிறேன். நாளையிலிருந்து காலை 6 முதல் 12 மணி வரை தமிழகமெங்கும் ஆர்பாட்டங்கள் நடைபெறும்
காலையில் காலை உடைத்தாலும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வர வைப்போம். மாலையில் அடுத்த மாநில தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் போன்ற கூத்துக்கள் நடக்கும் இந்நாளில் இதை எல்லாம் போட்டிக்கு அனுப்பும் உம்ம தைரியத்தைப் பாராட்டுகிறேன்.
ஸ்ரீதர், நாட்டு நடப்பை அப்படியே எழுதறதுக்கு எல்லாம் பேரு நுண்ணரசியல் இல்லை. பதிவுக்குப் பெயில் மார்க்தான்.
அப்புறம் கற்பனைன்னு சொல்லறீங்க? இது என்னமோ நியூஸ் பேப்பர் படிச்சா மாதிரி இல்ல இருக்கு....
ஜெயமோஹன் முதர்கொண்டு எல்லாரும் ஜகா வாங்கும் போது இவங்க ரெண்டுபேரு மட்டும் ஏன் செயய்யக்கூடாது..அதுவும் இவங்க இப்பொடி டமால் குட்டிகரணம் போடறதிலே ஆச்சரியமே இல்லை
போன வருஷம் சாரு நிவே..ரஜினி மற்றும் கமலைப்பற்றி எழுதினதர்க்கும் ,இந்த வருஷம் எழுதினதையும் படிச்சு பாருங்கள்..
சூப்பர் கலாட்டா தல ;))
//இது என்னமோ நியூஸ் பேப்பர் படிச்சா மாதிரி இல்ல இருக்கு....//
ரீப்பிட்டே!!!
KALAKKALSSSSSSSSSSSS
ILA
நன்றி வெங்கட்ரமணன்.
நன்றி ஸ்ரீதர். நுண்ணரசியல் எக்ஸ்பர்ட் என்னவோ இல்லைன்றாரே!
ஆஹா.. டாக்டர்.. இந்த மேட்டர் சூப்பரா இருக்கே.. இதானா அந்த 2011 ல நான் முதல்வர் மேட்டர்? அப்ப ராத்திரி எட்டு இருவதுக்கு இந்தியா வல்லரசாயிடுமா?
--கடைசி வரை சஸ்பென்சை கட்டி காத்ததற்கு--
--நல்லா வித்தியாசமா இருக்கு உங்க கற்பனை--
இதை நான் வழிமொழிகிறேன்...
அடுத்த படைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் :-)
கொத்ஸு.. ஒரே ஆள்தானே மாத்தி மாத்தி பேசறாரு? ரெண்டு ஆளுங்க வெட்டி ஒட்டி பேசறது புதுசுதானே?
நுண்ணரசியலுக்கு நீர்தான் சர்டிபையிங் அத்தாரிட்டியோ?
அஞ்சு வருஷம் கழிச்சுப் படிக்கப்போற மேட்டரை இப்பவே முந்தித்தர நியூஸ்பேப்பர் இங்கதானே உண்டு?
நன்றி சீதா. ஜெயமோகன் சாரு சண்டை எல்லாம் இதைவிட ரொம்ப ஸ்ட்ராங்க்!
நன்றி கோபி..
மதுரையம்பதி.. கொத்ஸுக்கு ரிப்பீட்டா? அவர்தான் தெளிவா சொல்லலை. நீங்களாச்சும்?
இளா, நன்றி (ஏன் அனானியாக?)
வாங்க வெட்டி.. அடுத்த படைப்பை எதிர்பார்க்கிறேன்லே இருக்க உள்குத்தை புரிந்துகொண்டேன்.
தூள்!
நல்ல கற்பனை! வளர்க!
ஹாஹா
கலக்கல்!!!
நன்றி பாஸ்டன் பாலா, திவா & மங்களூர் சிவா!
கலக்கல் தல, நல்ல சுவாரஸ்யமா இருந்திச்சி.
//கும்மி வேணாம்,//
எல்லாரும் கும்மி வேணுமுன்னு சொல்லுறாங்க நீங்க என்ன இப்படி சொல்லுறீங்க?
//
இதே ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல ஒருத்தரை காலை நேர முதல்வராவும், இன்னொருத்தரை மாலை நேர முதல்வராவும் முதலமைச்சராக ஆக்கிட்டா?
//
அண்ணன் விஜயகாந்தை லஞ்ச் டைமுக்கு தட்டிவிட மறந்துட்டீங்க போல!!??
ரெண்டு கலாட்டா முற்றிவிட்டது:)0
நம்பிவிட்டேன் சுரேஷ்.
ஒரே கலகலா.கலாய்ப்பு.
சந்தோஷ், நன்றி.
கும்மிக்கு நான் எதிரி இல்லை. ஆனால் கும்மியின் ஆதாரவிதியான உடனடி மாடரேஷன் என்னால் ஆகாது என்பதால் வேண்டாம் என்கிறேன்.
நன்றி கருப்பன். அப்ப சரத்குமார்? டாக்டர்? விஜய டி ஆர்? 10 நிமிஷத்துக்கு ஒரு முதல்வர் போட்டாதான் முடியும் போல :-)
வல்லி சிம்ஹன், நன்றி. நம்பணும்னுதானே இவ்வளவு மெனக்கெடறேன் :-)
அட இன்னாவா இருக்கும்னு கட்சீ வரீக்கும் ஒரே மூச்சுல படிக்க வச்சுட்ட வாத்யார். மெய்யாலுமே கலாட்டா பதிவுதான் :))
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
கலக்கல்!!!
anbudan
KRP
Post a Comment