கலைஞர் லாஜிக் வியக்க வைக்கிறது!
அவர் பேச்சு கேட்கக்கூடிய மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் மாநில ஆட்சியுடனான பிரச்சினையை - இன்னும் சொல்லப்போனால் ஒரு நான் இஷ்யூவை - தீர்க்க, தேர்தல் முடியும்வரை ஒத்திப்போட்டுள்ளது - இதனால் யாருக்குதான் லாபம் என யோசிக்கவைக்கிறது! எலும்புகள் நொறுங்கினாலும் தவிர்க்கமாட்டேன் என்ற திட்டம் எது நொறுங்குவதால் தவிர்க்கப்பட்டிருக்கிறது?
தண்ணீர் திறந்தும் விடமாட்டோம், வெள்ளம் வந்து திறந்தே விட்டாலும் அதை நீங்கள் குடிக்கக்கூடாது, குடித்தால் உங்கள் ஊர் சேனலை நிறுத்துவோம், திரைப்படங்களைக் கிழிப்போம், பஸ்ஸை நிறுத்துவோம் என்று ரௌடித்தனமாகச் செயல்படும் கன்னட அமைப்புக்களைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசை, தான் பங்கேற்கும் - தன் வழிகாட்டுதல்படி செயல்படும் - மத்திய அரசைக் கேள்வி கேட்காமல் வன்முறை ஏற்பட்டுவிடும் என்ற அறிவு இப்போதுதான் வந்தது போல ஒரு முடிவெடுக்க என்ன அவசியம்?
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் தடையில்லாச் சான்றிதழ் வாங்கப்பட்டுவிட்ட திட்டத்தை நிறைவேற்ற யாருக்காக காத்திருக்கவேண்டும்?
வெளிப்படையாகவே சவால் விடுகிறார் கிருஷ்ணா - திமுக விலகினாலும் பெரும்பான்மை இருக்குமாம்! இருந்தால் மட்டும்? (பிஜேபியின் எடியூரப்பா கிளப்பியதால் இதை தமிழகம் Vs பாஜக ஆக்கப்பார்க்கும் ஒரு சிறு கும்பலுக்கு இதெல்லாம் கண்ணில் படாது போலும்! கர்நாடகாவில் எந்தக்கட்சி ஹொகேனக்கல் பிரச்சினை தேவையற்றது என்று சொல்லி இருக்கிறது? (கம்யூனிஸ்டுகள் அங்கே என்ன சொல்கிறார்கள்?) எனக்கு பாஜகவின் மீது எந்த எழவு சாப்ட் கார்னரும் கிடையாது - எல்லாக்கொள்ளியும் ஒரே மாதிரிதான் எரிகிறது.)
சொல்லப்போனால், இதைவிட, இந்தப்பிரச்சினையை முளையிலேயே கிள்ள எந்த வாய்ப்பும் கிடையாது. ஆனால்!
மத்திய அரசு இதில் தலையிடுவது என்றால் ஒரே முடிவுக்குதான் வாய்ப்பு இருக்கிறது.. எடியூரப்பாக்களுக்கும் வாட்டாள் நாகராஜுக்கும் தோன்றிவிட்டது என்பதால் ஹொகேனக்கல் கர்நாடகாவைச் சேர்ந்து விடுமா? வரைவு, ஒப்புதல், தடையில்லாச் சான்றிதழ் என்று ஆயிரம் கடல்மலைதாண்டி வந்த திட்டம் வேலையத்த ரௌடிகள் சொன்னதால் நிறுத்திவைக்கப்படுமா என்ன?
ஆனால், இப்போது தலையிட்டால் அது காங்கிரஸ் செய்த தமிழ் - ஆதரவு - நிகழ்வாக பார்க்கப்பட்டுவிடுமோ என்ற பயம், அது தேர்தல் முடிவைப் பாதித்து விடுமோ என்ற காங்கிரஸ் மேலிடத்தின் பயம் தவிர கலைஞரின் இந்த முடிவுக்கு வேறெந்தக் காரணமும் தெரியவில்லை!
அதனாலேயே லாஜிக்கைவிட அவருடைய டைமிங் அருவருக்கவைக்கிறது! போராடிய அனைத்து தரப்பினரையும் முட்டாளடித்து விட்டார்! காங்கிரஸின் தேர்தல் வெற்றிக்காக எதை காவு கொடுத்திருக்கிறார் என்பதை யோசித்தால்தான்!!
Apr 5, 2008
ஹொகேனக்கல் - நீர் மட்டுமா வீழ்ச்சி அடைகிறது?
Subscribe to:
Post Comments (Atom)
47 பின்னூட்டங்கள்:
//போராடிய அனைத்து தரப்பினரையும் முட்டாளடித்து விட்டார்!//
இதுதான் தற்போதைய சோகம்!
இனியும் இதே பிரச்சனைக்கு போராட ஆட்கள் தயாராக இருந்தாலும் எந்தளவுக்கு அந்த போராட்டத்திறகான பலன் கிட்டும் என்பது...?????
ஓட்டு பொறுக்கும் செயலுக்கு அப்பட்டமான ஒரு சப்பைகட்டு.. கர்நாடகாவில் கவர்னர் ஆட்சி இல்லாமல் மக்களாட்சி இருந்த போது தண்ணீர் பெற முடிந்ததா? எந்த ஆட்சி வந்தாலும் ரவுடி கூட்டமும் மொழி வெறியர்களும் இதை செயல்படுத்த விடப்போவதில்லை. தமிழன் என்றால் குட்ட குட்ட குனிபவன் அல்ல என்ற வீர வசனம் பேசியவன் எல்லாம் பின்பக்கம் புண்ணாகி கிடக்கிறார்கள்.
தர்மபுரியிலும் கிருஷ்ணகிரியிலும் "தமிழர்கள்" சாக்கடை பீக்கு பக்கத்தில் அமர்ந்து நாத்த தண்ணீரை சேந்து குடித்து வாழும்போதே சாவார்கள்.. பேடிகள் தான் 'போகும் வரை' எப்படியாவது நாற்காலியில் ஒட்டிக்கொள்ள "தமிழர்களுக்கு" உயிரை கொடுப்போம் மயிரை கொடுப்போம் என்று கூறிக்கொண்டு செத்து செத்தே வாழ்வார்கள்.
அது ஒன்றும் இல்லை... விஷ நச்சு பாம்புகளான பாஜக... கர்நாடகாவில் அதிகாரத்தில் வந்து விட கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான்...
இந்த திட்டம் வருவதை யாராலும் தடுக்க முடியாது... ஒரு 2 மாதம் காத்திருப்போமே...
96 ச.பே.உறுப்பினர்களை வைத்துக் கொண்டு வேறு எதை செய்ய முடியும்?.காங்கிரஸ் காரர்கள் எவரும்
வாயை திறக்கவில்லை.பா.ம.க வை நம்பி காங்கிரசை எதிர்க்க முடியுமா?காரைக்குடி வந்துவிட்டு தமிழகத்தின் ஒருமுக்கியப்பிரச்சினையை பேசாமலெ செல்ல முடிகிறது ஒரு கட்சிதலைவரால் என்றால்,தமிழர்களின் இளிச்சவாய்தனத்தை உரறிய சொல்ல இது போதாதா!
//இனியும் இதே பிரச்சனைக்கு போராட ஆட்கள் தயாராக இருந்தாலும் எந்தளவுக்கு அந்த போராட்டத்திறகான பலன் கிட்டும் என்பது...?????//
சரியாச்சொன்னீங்க ஆயில்யன். எல்லாத்தையும் சிம்பிளா புஸ் ஆக்கிட்டார்!
//தமிழன் என்றால் குட்ட குட்ட குனிபவன் அல்ல என்ற வீர வசனம் பேசியவன் எல்லாம் பின்பக்கம் புண்ணாகி கிடக்கிறார்கள்.//
இல்லையாமே! தமிழே அவர்களை பின்வாங்கச் சொல்லிச்சாமே! அதனால இது மகிழ்ச்சியாமே!
நீங்களும் செம கோவத்துலதான் இருக்கீங்க போல!
எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களின் நெருக்குதாலால், இத்தாலிய அம்மையார் சோனியாவின் உத்தரவின் பேரில் எடுத்த முடிவே தவிர தமிழர் நலன் கருதி எடுத்த முடிவாக எனக்குத் தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால், இனி காங்கிரஸ் கலைஞரைத் தொங்கவேண்டியதில்லை. கலைஞர்தான் தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் சொல்வது எல்லாவற்றையும் கேட்கவேண்டும்.(பதவி பெரிதென்று நினைத்தால்)
அன்புடன்,
ஜோதிபாரதி.
தமிழ் குரல்,
//விஷ நச்சு பாம்புகளான பாஜக... கர்நாடகாவில் அதிகாரத்தில் வந்து விட கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான்...//
ஆஹா ஆஹா ஆஹா! விஷ நச்சுப்பாம்புகள் அரசியல் அனாதைகள் ஆகிவிடும் என்றால் கிருஷ்ணகிரியைத் தாரைவார்த்துக் கொடுப்பதும் சரிதானோ?
விஷநச்சுப்பாம்புகள் மட்டுமே கொடி பிடித்தது போலத்தான் உங்கள் கலர் கண்ணாடிக்குத் தெரிகிறதா? எஸ் எம் கிருஷ்ணா எப்போது பாஜகவில் சேர்ந்தார்?
வரவர, இந்த "விஷநச்சுப்பாம்பு" பிரச்சாரம் ஒரு சர்வரோக நிவாரணி ஆகிக்கொண்டு வருகிறது!
கோவை சிபி,
//காரைக்குடி வந்துவிட்டு தமிழகத்தின் ஒருமுக்கியப்பிரச்சினையை பேசாமலெ செல்ல முடிகிறது ஒரு கட்சிதலைவரால் என்றால்,//
பேசாமலே சென்றாரா, பேசவேண்டியவர்களிடம் **மட்டும்** பேசினாரா?
//இனி காங்கிரஸ் கலைஞரைத் தொங்கவேண்டியதில்லை. கலைஞர்தான் தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் சொல்வது எல்லாவற்றையும் கேட்கவேண்டும்.(பதவி பெரிதென்று நினைத்தால்)//
இந்த மாதிரி மேட்டர் எல்லாத்தையும் விட்டுட்டு, புத்தாண்டு கொண்டாடி தமிழைக் காப்பாத்திருவாரு! கவலையே வேணாம்!
இவ்வளவு வன்முறயையவட்கு தடுத்திருக்கலாம்..தண்ணீர் எப்படியும் அரசியல்வாதிகளுக்கு பஞ்சம் இல்லை..
அப்புறம் என்ன?எல்லரும் அவரவ் பதவியை காப்பாற்றினால் போதும்..
//காங்கிரஸின் தேர்தல் வெற்றிக்காக எதை காவு கொடுத்திருக்கிறார் என்பதை யோசித்தால்தான்!!//
அதுதானே.பத்தாம் தேதி பந்த்தில் ஒரு பத்து உசுர காவு கொடுத்திருந்தா உங்க குண்டி குளுந்துருக்கும்.
//காங்கிரஸின் தேர்தல் வெற்றிக்காக எதை காவு கொடுத்திருக்கிறார் என்பதை யோசித்தால்தான்!!//
அதுதானே.பத்தாம் தேதி பந்த்தில் ஒரு பத்து உசுர காவு கொடுத்திருந்தா உங்க பின்பக்கம் குளுந்துருக்கும்.
//விஷ நச்சு பாம்புகளான பாஜக... கர்நாடகாவில் அதிகாரத்தில் வந்து விட கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான்...//
ஆஹா ஆஹா ஆஹா! விஷ நச்சுப்பாம்புகள் அரசியல் அனாதைகள் ஆகிவிடும் என்றால் கிருஷ்ணகிரியைத் தாரைவார்த்துக் கொடுப்பதும் சரிதானோ?
விஷநச்சுப்பாம்புகள் மட்டுமே கொடி பிடித்தது போலத்தான் உங்கள் கலர் கண்ணாடிக்குத் தெரிகிறதா? எஸ் எம் கிருஷ்ணா எப்போது பாஜகவில் சேர்ந்தார்?
வரவர, இந்த "விஷநச்சுப்பாம்பு" பிரச்சாரம் ஒரு சர்வரோக நிவாரணி ஆகிக்கொண்டு வருகிறது! //
விஷம் என்பதும் நச்சு என்பதும் ஒரே விஷயம் தானே?? க்யூ வரிசை, நடு சென்டர் என்ற சங்க இலக்கிய மரபுப்படி செம்மொழியாக்கப்பட்ட அப்பட்ட தமிழுணர்வு வார்த்தைப்பிரயோக அந்தஸ்து கிடைத்து கடைந்தேறி இருக்கிறதா??
வாட்டாள், எஸ் எம் கிருஷ்ணா, எடியூர-ஆப்பு,அன்னை அண்டோனியோ மெய்னோ , தமிழின் தமிழ் கருணாநிதி, இவர்களுக்குள்ளே எதிர்மறை இந்தியத் தன்மையைக் காண்கிறேன். வேற்றுமையில் ஒற்றுமை!
சிவகங்கையில் ஏறிய பணவீக்கம், மற்றும் வேலை வாய்ப்பு குறைவு பூஜ்ஜியம் புள்ளி பூஜ்ஜியம் பூஜ்ஜியம் ஐந்து சதவீதம் மட்டுமே என்று புள்ளிவிபரம் பேசும் நிதி அமைச்சரும், அன்னை சோனியாவும் ஒகேனேக்கல் விரைந்து நிறைவேற்றப்படும் என்று ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லையே!
இதுதானா தமிழின் தமிழ் கருணாநிதியின் மத்திய அரசை வழிகாட்டும் திறன்?
கவிதாயினி கனிமொழிக்கு விரிவுபடுத்தப்படும் மத்திய அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சைக் கேட்டு வாங்குவாரா தமிழக முதல்வல் கருணாநிதி?? கலைஞர் டிவிக்காக மீண்டும் தொலை தொடர்புத்துறை / வர்த்தகத்துறை தான் கனிமொழிக்குத் தரப்பட வேண்டும் என்று கேட்பதற்காகவே ஒகேனேக்கல் பிரச்சினையில் தமிழர் உணர்வை தூண்டிவிட்டு பேரம் பேசும் சாணக்கியரா தமிழினத் தலைவர்!
கருணாநிதி பேரம் பேச உரத்துப் பேசி விளம்பரம் செய்து தீர்ந்துவிடாத விஷயமாக்கிய ஒகேனேக்கல் பிரச்சினையில் உணர்வுபூர்வமாக ஈடுபட்டு டவுசர்/தாவு தீர்ந்த தமிழர்களுக்கு என் அஞ்சலி!
அனேகமாக இன்று மாலைக்குள் இந்த புதிருக்கான விடை கிடைக்கும்.
எவ்வளவு நடந்தா என்ன? திருப்பியும் கலைஞர் ஒரு "நான்-இஸ்யூ" வுக்கு கொடி கட்டுவார். இளிச்ச வாய் தமிழர்கள் திருப்பியும் பந்தா காட்டுவார்கள். பங்களூரில் வேலை செய்யும் ஏழை கட்டிட பணியாளர்கள் வேலை இழப்பார்கள். சினிமா தியேட்டர்கள் அடித்து உடைக்கப்படும். ஏஸி அறையில் இருந்து கொண்டு "எலும்பு உடைந்தாலும் நிறைவேற்றியே தீருவோம்" ன்னு பீலா விடுவாங்க. மீண்டும், மீண்டும்... முடிவே கிடையாது.
அன்பின் பெனாத்தலார்,
கருணாநிதியின், சோனியாவின் அரசியல் சந்தர்ப்பவாதத்தைவிட (அரசியல் சந்தர்ப்பவாதம் என்பது ஒரு 'நடுcenter' போலத்தான்)
இந்தக் கூத்துக்களையெல்லாம் துவக்கிவைத்த
எடியூரப்பாவின் இன்வெறித்தூண்டலும், கள்ள மவுனம் காக்கும் பாரதீயஜனதா பதவிசுகத்துக்காக கைக்கொள்ளும் மத, இன வெறிகளும் அதிகம் கண்டிக்கத்தக்கதாகத் தோன்றவில்லையா உங்களுக்கு??!.
//கலைஞர் லாஜிக் வியக்க வைக்கிறது! //
இதில் வியக்க என்ன இருக்கிறது? சரியாகத்தான் நடந்திருக்கிறது.
'இன்னுமொரு காவிரி' என்கிற தலைப்பில் உள்ள என் பதிவிற்கான சுட்டி http://balablooms.blogspot.com/2008/04/blog-post.html
அவரவர் பதவியைக் காப்பாத்திக்கறதுதானே பாலபாடம் சீதா!
ஜாலிஜம்பர்,
//அதுதானே.பத்தாம் தேதி பந்த்தில் ஒரு பத்து உசுர காவு கொடுத்திருந்தா உங்க குண்டி குளுந்துருக்கும்.//
ஆக, அங்க ஆட்சி மாறிட்டா, சுளுவா மேட்டரை விட்டுருவாங்கன்னு கலைஞர் மாதிரியே நீங்களும் நம்பறீங்களா? ஹய்யோ ஹய்யோ!
ஹரிஹரன்,
//இதுதானா தமிழின் தமிழ் கருணாநிதியின் மத்திய அரசை வழிகாட்டும் திறன்? // அதானே!
அனானி,
மத்திய மந்திரிசபை விரிவாக்கமா? சரிதான்!
திவா,
நல்லா சொன்னீங்க.. முடிய விட்டுடுவாங்களா? இன்னொரு சரித்திரம் உருவாகிறது!
புகழேந்தி,
பாஜகவைப் பற்றி மட்டும் ஏன் திட்டவேண்டும்? எஸ் எம் கிருஷ்ணா பேசியதைப்பற்றி காரைக்குடியில் உள்ள சோனியாவுக்குத் தெரியாதா? அவர் ஏன் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை? காங்கிரஸ் தலைமை என்ன கிழித்தது - மறைமுகமாக பேரம் நடத்தியதைத் தவிர?
பாஜகவை வன்மையாகக் கண்டிக்கிறேன் - அதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் கர்நாடகாவில் தேசிய பிராந்திய எந்தக்கட்சியுமே எடியூரப்பா செய்தது தவறு எனச்சொல்லத் துணியவில்லையே! தேசியக்கட்சிகள் எல்லாவற்றுக்கும் இப்போது கர்நாடகத் தேர்தல்தானே முக்கியமாகப் படுகிறது?
பாலா, நன்றி.
தேசத்தின் ஒற்றுமைக்காக ஒரு மாதம் காத்திருப்பது ஒன்றும் தவறு இல்லை.
பாரதத் தாய் தனது குழந்தைகளிடம் பேதம் பார்ப்பதில்லை.
பாரத் மாதா கீ ஜே.
அனானி,
ஒரு மாதம் காத்திருப்பதால் தேச ஒற்றுமை எப்படி ஏற்படும் என்று படம் வரைந்து பாகங்கள் குறிப்பீர்களா? புதிய மத்திய அமைச்சர் யாரிடமேனும் விரிவான் திட்டங்கள் உள்ளனவா?
//ஒரு மாதம் காத்திருப்பதால் தேச ஒற்றுமை எப்படி ஏற்படும் என்று படம் வரைந்து பாகங்கள் குறிப்பீர்களா? புதிய மத்திய அமைச்சர் யாரிடமேனும் விரிவான் திட்டங்கள் உள்ளனவா?//
கோபக் காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள்.
அடித்துக் கொண்டு உயிரை விடுவதற்கு பதிலாக ஒரு மாதம் ஆறப் போட்டால் கோபமெல்லாம் நீர்த்துப் போகும் இல்லையா.
நாம மத்திய அரசைக் குற்றம் சொல்வதை விட்டு விட்டு அவர்கள் நிலையிலிருந்து நாம சிந்தித்துப் பார்க்க வேண்டாமா. இப்பொழுது தேர்தலால் காங்கிரஸ் ஒரு முடிவை எடுக்க முடியாத நிலையில் இருக்கிறது.
பாரத தேசம் நம் தாய் மாதிரி. நமது சகோதரன் தவறு செய்தால் கொல்லவா செய்கிறோம். பெற்றோரிடம் முறையிடுகிறோம் இல்லையா. அதுபோலத்தான்.
பாரத் மாதா கீ ஜே.
1,000 சட்டச்சிக்கல்கள் இருந்தாலும் ராமர்பால விஷயத்தில் விடேன், கொடேன் என்ற நிலை கொண்ட முதல்வர், ஒகேனக்கல் விஷயத்தில் திடீரென்று இவ்வளவு ஏன் மாறினார்? ஏதாவது சட்ட பிரச்சினையா, அரசியல் accmodation-a அல்லது அதையும் தாண்டி ஏதாவது பெரிய சிக்கலா? நம் கண்ணுக்கு தெரிவது கையளவு, தெரியாதது உலகளவு. மத்திய மந்திரி சபையில் இன்னும் ஒரு இடம் காலியாகவே இருப்பதாக electronic media சொல்லிக்கொண்டே இருக்கிறது.
Hershey Choclate விளம்பரத்தில் அம்மாவும், பையனும் மனசுக்குள்ளே சொல்லிக்கொள்ளும் விளம்பர வரிகள் நினைவுக்கு வருகின்றன, " அரசியலில் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு ".
பினாத்தல் சுரேஷ்
நல்ல பதியு.உண்மையான கோபம் தெரிகிறது.
ஜாலி ஜம்பர் முடிந்த அளவு கலைஞரின் நிலைப்பாட்டை ஆதரிக்க முயன்றுள்ளார்..ஆனால் உண்மை பல்லிளிக்கிறது.எலும்பு உடைந்தாலும் நிறைவேற்றுவோம் என்று சூளுரைத்த தலைவரின் நிலை பாட்டையே பத்து பேர் சாவதைத் தடுக்க தள்ளிப் போட்டு விட்டார் என்று சொல்லி கேலி செய்கிரார் ஜாலி ஜம்ப்பர்.
அனானி,
//நாம மத்திய அரசைக் குற்றம் சொல்வதை விட்டு விட்டு அவர்கள் நிலையிலிருந்து நாம சிந்தித்துப் பார்க்க வேண்டாமா.//
அவர்கள் நிலையிலிருந்தெல்லாம் சிந்திப்பதால்தான் இந்த அப்பட்டமான ஓட்டுப்பொறுக்கித் தனமே - இல்லாத பிரச்சினைகளை உருவாக்குபவர்களைக் கேள்வி கேட்கக்கூட நாதி இல்லாத நிலைக்குக் காரணம் என்பது புரிகிறது, எரிகிறது! தேர்தல் நேரம் என்பதால் திருடுபவர்களைப் போலீஸ் கைது செய்வதில்லையா? இல்லை தேர்தல் நேரம், ஒரு மாசம் கழிச்சுக் கைது செஞ்சுக்கலாம் என்று சொல்கிறார்களா?
அடுத்த அனானி,
//Hershey Choclate விளம்பரத்தில் அம்மாவும், பையனும் மனசுக்குள்ளே சொல்லிக்கொள்ளும் விளம்பர வரிகள் நினைவுக்கு வருகின்றன, " அரசியலில் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு// அம்மாவும் பையனுமா, அன்னையும் பையனுமா?
சரவணகுமார், நன்றி.
//ஜாலி ஜம்பர் முடிந்த அளவு கலைஞரின் நிலைப்பாட்டை ஆதரிக்க முயன்றுள்ளார்..ஆனால் உண்மை பல்லிளிக்கிறது.எலும்பு உடைந்தாலும் நிறைவேற்றுவோம் என்று சூளுரைத்த தலைவரின் நிலை பாட்டையே பத்து பேர் சாவதைத் தடுக்க தள்ளிப் போட்டு விட்டார் என்று சொல்லி கேலி செய்கிரார் ஜாலி ஜம்ப்பர்.//
சரவணக்குமார்,
தண்ணீர் பிரச்சினை என்பதைத் தாண்டி இனப்பிரச்சினையாக மாறக்கூடிய அபாயம் நிறையவே இருந்தது.கலைஞரின் அனுபவம் உயிரிழப்புகளை தடுத்துள்ளது என்பதை நிஜமாகவே உணரமுடியவில்லையா?.இந்த அணுகுமுறை தான் நடிகர் ராஜ்குமார் உயிரையும் காப்பாற்றியது.
கலைஞரை கடுமையாக விமர்சிக்கும் ஞாநி இமயம் டிவி பேட்டியில் நேற்று இரவு சொன்னது.
"இந்த முடிவு கலைஞர் கருணாநிதியின் நீண்ட அரசியல் அனுபவ முதிர்ச்சியைக் காட்டுகிறது.இது வரவேற்கப்பட வேண்டிய ,பாராட்டப்பட வேண்டிய ஒன்று"
மேல் நோக்கி விழும் நீர்வீழ்ச்சி- நீங்கதான் எழுதினீங்க அப்படிங்கிறதையும் ஞாபகம் வந்துச்சு
உள்குத்துடன்
இளா
///சரவணக்குமார்,
தண்ணீர் பிரச்சினை என்பதைத் தாண்டி இனப்பிரச்சினையாக மாறக்கூடிய அபாயம் நிறையவே இருந்தது.கலைஞரின் அனுபவம் உயிரிழப்புகளை தடுத்துள்ளது என்பதை நிஜமாகவே உணரமுடியவில்லையா?.இந்த அணுகுமுறை தான் நடிகர் ராஜ்குமார் உயிரையும் காப்பாற்றியது.
கலைஞரை கடுமையாக விமர்சிக்கும் ஞாநி இமயம் டிவி பேட்டியில் நேற்று இரவு சொன்னது.
"இந்த முடிவு கலைஞர் கருணாநிதியின் நீண்ட அரசியல் அனுபவ முதிர்ச்சியைக் காட்டுகிறது.இது வரவேற்கப்பட வேண்டிய ,பாராட்டப்பட வேண்டிய ஒன்று"////
இனப் பிரச்சினையாக மாறக் கூடிய அபாயம் இருப்பது இப்போதுதான் தெரிந்ததா? நம்பி விட்டோம்.
அப்புறம் "ஞாநியின்" சர்டிபிகேட்டை உலக மக்கள் அனைவரும் ஏற்க வேண்டுமா என்ன? அப்படியானால் கொஞ்ச நாளைக்கு முன்னால் கூட ஞாநி முதியவர்கள் பற்றி ஏதோ சொன்னதாக ஞாபகம்.அப்போது இதே ஞாநியின் சட்டைக்குள் என்ன நெளிகிறது என்று நிறையப் பேர் தேடிக் கொண்டிருந்தார்கள்.
உங்கள் கூற்றுப் படியே முதலிலேயே "மூட்டி விடாமல் இருந்தால்" அடி பட்ட பத்து தமிழனும் தப்பித்திருப்பான் இல்லையா?ஒரு வேளை கர்நாடகக் காரர்களும் மனசு மாறி கிருஷ்ணராஜ சாகர் அணையை அவர்களாகவே பாம் வைத்து தகர்த்து விட்டு காவிரித் தண்ணீர் முழுவதையும் தமிழ் நாட்டுக்கே திருப்பி விட்டு இருப்பார்களோ என்னவோ.
கலைஞர் ஆன் பண்ணினால் எறியவும், ஆப் பண்ணினால் அணையவும் செய்யும் "ட்யூப் லைட்"டாக தமிழனை வைத்திருக்கும் நிலைக்கு ஒரு சபாஷ் போட்டே ஆக வேண்டும். அதிலும் இந்த புரட்டல் பேச்சை ராஜ தந்திரம், அனுபவ முதிர்ச்சி,அரசியல் ஞானம் என்று வருணிப்பது "பல்லே ரக்கா" "பல்லே ரக்கா" தான்.
அப்புறம் நீங்கள் குறிப்பிட்டிருந்தாலும் கூட ராஜ் குமார் கடத்தல் காமெடிக்குள் நான் போகத் தயாரில்லை. ஒன்லி வாட்டர் மேட்டர் ஹியர் :)
மேலும் ஜா ஜவின் பதிலுக்கு மேலேயுள்ள முகமூடியின் "எந்த ஆட்சி வந்தாலும் ரவுடி கூட்டமும் மொழி வெறியர்களும் இதை செயல்படுத்த விடப்போவதில்லை. தமிழன் என்றால் குட்ட குட்ட குனிபவன் அல்ல என்ற வீர வசனம் பேசியவன் எல்லாம் பின்பக்கம் புண்ணாகி கிடக்கிறார்கள்." என்ற
பின்னூட்டத்திலும் ஓரளவு பதில் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்
:((
கோவி கண்ணன் அவர்களது பதிவில் இட்ட இந்தப் பின்னூட்டமும் இந்தப் பதிவிற்கு சம்மந்தமானதாக இருப்பதாலும் ஜாலி ஜம்பருக்கு விளக்கும் வகையில் இருப்பதாலும் இங்கும் பின்னூட்டமாக இடுகிறேன்.
///கோவி
உண்மையில் உங்கள் கோபம் யார் மீது? பாஜக மீது தானா அல்லது பல்டி அடித்து விட்ட கலைஞர் மீதா? பாஜக வைத் திட்டி எல்லாம் கலைஞரின் இந்த சறுக்கலை நியாயப் படுத்த முடியாது என்றே எண்ணுகிறேன்.
உண்மையில் ஆட்சி மீதல்லாது தமிழர் நலன் மீது அக்கறை இருந்தால் குறைந்த பட்சம் காங்கிரசை அல்லது மத்திய அரசை சொல்ல வைத்திருக்க வேண்டும் "தேர்தல் முடிந்ததும் இதற்கு சுமுக தீர்வை பேச்சு வார்த்தை மூலியமாக ஏற்பட நாங்களே வழி செய்கிறோம் " என்று. ஓட்டு வங்கியை பாதிக்கும் என்று அதைக் கூட சொல்ல தயாரில்லாத நிலையில் காங்கிரசார் அதையும் கலைஞர் வாயால் சொல்ல வைத்திருக்கிறார்கள். இல்லை அவராகவேதான் மக்கள் நலம் கருதி இந்தக் கருத்தை வெளியிட்டார் என்று சொல்வீர்களானால் அதைப் படிக்கும் (ஒருவேளை படித்தால்) கலைஞரே சிரித்து விடுவார்.
எஸ் எம் கிருஷ்ணா அடக்கி வாசித்தார் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அடக்கி வாசிப்பின் சிறந்த உதாரணம் " தி மு க ஆதரவை விலக்கிக் கொண்டாலும் மத்தியில் ஆட்சி கவிழாது " என்று சொன்னதுதான். :) எனவே அடக்கி வாசித்தார் என்பதை கலைஞரை "அடக்கி" கிருஷ்ணா "வாசித்தார்" என்று வேண்டுமானால் கொள்ளலாம்.:)
பாஜக, எடியூரப்பா மற்ற சில்லரைகள் குறித்து பேச ஒன்றும் இல்லை. அவர்களுக்கு ஓட்டு கிடைக்கும் என்றால் அதற்கு பாதி காரணம் குமாரசாமி & கம்பனியும் மீதி காரணம் தொலை நோக்கில்லாத கலைஞரின் உதார் பேச்சுகளும் என்றுதான் கொள்ள வேண்டும்///
எலும்பை உடைத்தாலும் உரிமையை விட மாட்டேன் என்று வீர வசனம் பேசிய முதல்வரின் தற்போதைய சோக வசனங்கள்
" மக்களாட்சி அமைந்த பிறகு அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும்"
"குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்க மாட்டோம் என்று கூறப் போகிற ஆட்சியா கர்நாடகத்தில் வந்து விடப் போகிறது "
" பயிர் வாழத்தான் தண்ணீர் இல்லை என்கிறார்கள்.உயிர் வாழ வரும் தண்ணீரையுமா தடுப்பார்கள்"
இதே பாணியில் அடுத்த வசனம் என்னவாக இருக்கும்.
" தண்ணீர் திறந்து விடாவிட்டாலும் பரவாயில்லை. அதை மினரல் வாட்டர் பாட்டிலில் அடைத்து விற்கும் போது அதை காசு குடுத்து வாங்கிக் குடித்து தமிழன் தன் உரிமையை நிலை நாட்டுவதை யாராலும் தடுக்க முடியாது.( அப்படித் தடுக்க நினைத்தால் அன்னை சோனியாவின் உத்தரவு பெற்று ,மினரல் வாட்டர் குடித்தால் தமிழனுக்கு தொண்டை கட்டிக் கொள்ளும் அதனால் நான் அடுத்து சொல்லும் வரை குடிக்க வேண்டாம் என மறு அறிக்கையும் விடுவோம்) என்பதாக இருக்குமோ) :)
இதுல போடவேண்டிய கமெண்ட அதுல மாத்தி போட்டுட்டேன்...
----காப்பி வித் பேஸ்ட்------
உமக்கு மெல்ல அவல் கெடச்சுட்டதா? வாழ்க வளமுடன்..
அப்புறம் திட்டத்தை ஒத்திப்போட்டது அரசியல் சாணக்கியமய்யா...கடந்த நூற்றாண்டுல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கருநாடக அரசுடன் சுமுகமா பேசி காவிரி மேட்டர தீத்துவச்சது போல, இதுலயும் செஞ்சிடலாம்னு யோசிச்சுகிட்டிருக்காரு போல. உமக்கேன் எரியிது?
///உங்கள் கூற்றுப் படியே முதலிலேயே "மூட்டி விடாமல் இருந்தால்" அடி பட்ட பத்து தமிழனும் தப்பித்திருப்பான் இல்லையா?///
முதலிலேயே மூட்டிவிட்டவனுக்கு பதிலாகத்தான் கருணாநிதியின் வசனம் வெளியானது என்பது ஒருபுறமிருக்க; முதலிலேயே மூட்டிவிட்டவனை கண்டித்து "உங்களில்" எவரும் ஒருபதிவும் எழுதியதாகத் தெரியவில்லையே-
"திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் " என சட்ட சபையில் ஒரு மனதாக அனைத்துக் கட்சியின் ஆதரவோடு தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு " இந்தத் தீர்மானத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு அதன் பிறகு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து முடிவு செய்வோம் " என்று31.03.08 அன்று பேசிய முதலமைச்சர் கருணநிதி "தள்ளிப் போடும் " முடிவை மட்டும் தனிச்சையாக எடுத்தது எந்த அரசியல் "சாணித்தனம்" சாரி "சாணக்கியம்" என்று ஜாலி ஜம்பரால் விளக்க முடியுமா?
அப்புறம் பாஜாக வை சாடும் தலைவர் கிருஷ்ணா கடுமையான வார்த்தையை உபயோகித்தார் என்று சொல்லும் போது "இல்லையே " என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி விட்டு "நகலை" கிருஷ்ணாவின் பார்வைக்கு அனுப்பி வைத்தது எந்த "தன்மான உணர்ச்சி" என விளக்கினாலும் நலம். இதற்கு "நானும் அந்தக் கூட்டத்தில் இருந்தேன்.அப்படி எதுவும் பேசவில்லை" என்று டி ஆர் பாலுவின் ஜிங்குசாங் வேறு. பேசவில்லை என மத்திய அரசுக்கு தெளிவு படுத்தியது சரி..பேப்பரில் அறிக்கையும் சரி..கிருஷ்ணாவுக்கு நகல் அனுப்பிய தூ..தூ..தூ...ஹி.ஹி.ஹி.
கருணாநிதி கடுமையாக பேசினார் என்று "பொய் சொல்லி " இன உணர்வை (வெறியை ???) தூண்டி விட்ட எஸ் எம் கிருஷ்ணாவுக்கு பாராட்டுப் பத்திரமாக அனுப்பியதாக இருக்குமோ?
//மோகன் said...
///உங்கள் கூற்றுப் படியே முதலிலேயே "மூட்டி விடாமல் இருந்தால்" அடி பட்ட பத்து தமிழனும் தப்பித்திருப்பான் இல்லையா?///
முதலிலேயே மூட்டிவிட்டவனுக்கு பதிலாகத்தான் கருணாநிதியின் வசனம் வெளியானது என்பது ஒருபுறமிருக்க; முதலிலேயே மூட்டிவிட்டவனை கண்டித்து "உங்களில்" எவரும் ஒருபதிவும் எழுதியதாகத் தெரியவில்லையே-///
மோகன்
ஒட்டு மொத்த தமிழகமும் ,மேலும் ஒரு சில தமிழக வாழ் கன்னடர்களும் கண்டித்து விட்டு இப்போது தலைவர் அடுத்து எப்ப சுவிச்சை ஆன் பண்ணுவார் ..அவுத்துப் போட்டு ஆடலாம்..என தயாராக நிற்கிறோமே.
ஓ பதி எழுதலை அப்படீன்னு கோச்சுக்கிட்டீங்களா..இதே பினாத்தலும் ஒரு பதிவு போட்டிருக்காரு பாருங்க.
சுரேஷ்,
இருக்கின்ற தலைவர்களில் தமிழர் நலன் மேல் அக்கறை கொஞ்சமாவது இருப்பது கலைஞருக்கு மட்டுமே(on a comparitive level) என நினைத்து இருந்தேன். சறுக்கியும் ஏமாற்றியும் விட்டார். நமக்கு இயலாமையும் ஆற்றாமையும் மட்டுமே மிஞ்சுகிறது.
பத்தாததற்கு கலைஞர்/ஜெயா எது செய்தாலும் குற்றம்/நியாயம் என அவற்றை நியாயப்படுத்தும் கூட்டம்.. எரிச்சலே மிச்சம்.
அனைவரையும் பைத்தியக்காரர்கள் ஆக்கி விட்டார்.
//சொல்லப்போனால், இதைவிட, இந்தப்பிரச்சினையை முளையிலேயே கிள்ள எந்த வாய்ப்பும் கிடையாது. // இருந்தும்....
சரி யார் ஆட்சிக்கு வந்தால் இதனை நிறைவேற்றப்போகிறார்களாம்? காங்கிரஸ் வந்தாலா? கவர்னர் ஆட்சியிலேயே அனுமதிகாத காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து அனுமதிக்கப்போகிறதா? கலைஞர் நம்புகிறாரா? நம்ப முடியவில்லை.
பாஜகா வந்தா???? மேற்கொண்டு சொல்லவேண்டுமா?
சரி.. இதன் மூலம் வன்முறையை தடுக்க வழிசெய்து விட்டார். கூடவே பின்னாளில் வன்முறை செய்தால் பின்வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையை கொடுத்து (கெடுத்து)விட்டார்.
இன்னும் என்னென்னவோ சொல்லவேண்டும் என தோன்றுகிறது. ஆனால் சொல்லி ஒன்றும் ஆகப்போவது இல்லை என்பதால் இத்தோட ஸ்டாஆஆப்.
ஆனாலும் ஜெயா இருந்து இப்படி நடந்திருந்தா இந்த திட்டம் முன்னேறி இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிற்க முடியவில்லை. (நேற்று முதல்முறையாக ஜெயாவின் அறிக்கையை முழுவதும் கேட்டேன்:-( என் நிலைமையை பார்த்தீங்களா????)
சரவணக்குமார்,
'பொணந்தின்னி' அரசியல் செய்யும் பிஜேபி வரும் கர்நாடக தேர்தலில் இந்த ஒகனேக்கல் பிரச்சினையை பகடைக்காயாக பயன்படுத்த முயன்றதற்கு அழகாக செக் வைத்து விட்டார் கலைஞர்.சிந்திக்கத்தெரிந்த மனிதனுக்கு இது புரியும்.
இந்த விசயத்தில் இந்தக் குதி குதிக்கிறீர்களே ராமர் பாலம் விசயத்தில் உங்கள் கருத்து என்ன?
ஜாலி ஜம்பர்
///'பொணந்தின்னி' அரசியல் செய்யும் பிஜேபி வரும் கர்நாடக தேர்தலில் இந்த ஒகனேக்கல் பிரச்சினையை பகடைக்காயாக பயன்படுத்த முயன்றதற்கு அழகாக செக் வைத்து விட்டார் கலைஞர்.சிந்திக்கத்தெரிந்த மனிதனுக்கு இது புரியும்.////
இதுதான் மேட்டரா? அப்ப தமிழர் நலன், எலும்பு முறிவு சிகிச்சை எல்லாம் வேஷம்தானா?
///இந்த விசயத்தில் இந்தக் குதி குதிக்கிறீர்களே ராமர் பாலம் விசயத்தில் உங்கள் கருத்து என்ன?////
நானா குதிக்கிறேன் :"ஜம்பர் " என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படி சொல்லலாமா ?:)
இந்த மாதிரி கேள்வியை உங்களிடமிருந்து எதிர் பார்த்து தான் ஏற்கனவே பல பின்னூட்டங்களுக்கு முந்தைய பின்னூட்டத்தில் பதில் சொன்னேனே.ஒன்லி வாட்டர் மேட்டர் ஹியர் :)
அதுல உங்க கருத்தென்ன , இதுல உங்க கருத்தென்ன எல்லாம் அந்த அந்த மேட்டர் வரும் போது பேசுவோம்.
ச.குமார்,
ராமர் பால விசயத்தில் கலைஞரின் பிடிவாதமான நிலையை நீங்கள் வரவேற்று இருந்தால் , இப்போது ஒகனேக்கல் பிரச்சினையில் கலைஞரின் பின்வாங்கலை குறை சொல்ல தார்மீக நியாயம் இருக்கிறது.
அப்படியில்லாமல் அவர் எதைச் செய்தாலும் எதிர்மறை விமர்சனம் செய்வது தான் அரசியல் தெளிவு என்று நீங்கள் கருதினால் அதைத்தான் நாங்கள் சோ மாரிச்சிந்தனை என்று சொல்கிறோம்.
//தெளிவு என்று நீங்கள் கருதினால் அதைத்தான் நாங்கள் சோ மாரிச்சிந்தனை என்று சொல்கிறோம்//
ஜாலி ஜம்பர் அய்யா,
"நாங்கள்" னாக்கா யார்?மஞ்ச துண்டு எது செய்தாலும்/செய்யவில்லை என்றாலும் கண்மூடித்தனமாக ஜல்லி அடிக்கும் ஓசி பிரியாணி/சாராயம் உடன் பிறப்புக்களா?
பாலா
ஜா ஜம்பர்
///ச.குமார்,
ராமர் பால விசயத்தில் கலைஞரின் பிடிவாதமான நிலையை நீங்கள் வரவேற்று இருந்தால் , இப்போது ஒகனேக்கல் பிரச்சினையில் கலைஞரின் பின்வாங்கலை குறை சொல்ல தார்மீக நியாயம் இருக்கிறது.////
சூப்பர்.
இது எந்த ஊர் ஞாயமுங்கோவ்? இதைப் பத்தி பேசுனாதான் அதைப் பத்தியும் பேசலாம் அப்படீங்குறது ?
ஆனாலும் திரும்பவும் நான் சொல்கிறேன். அதைப் பற்றி இந்தப் பதிவில் பேசி திசை திருப்ப /திரும்ப மாட்டேன்.
ஒன்லி வாட்டர் மேட்டர் ஹியர்.
///அப்படியில்லாமல் அவர் எதைச் செய்தாலும் எதிர்மறை விமர்சனம் செய்வது தான் அரசியல் தெளிவு என்று நீங்கள் கருதினால் அதைத்தான் நாங்கள் சோ மாரிச்சிந்தனை என்று சொல்கிறோம்.///
எது செய்தாலும் எதிமறை என்று எப்படிங்க தெளிவா கண்டு புடிச்சீங்க. கருணாநிதி ஒகனேகல் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற போது ஆதரித்தோம். சந்தர்ப்ப வாதத்திற்காக பல்டி அடிக்கும் போது எதிறர்கிறோம்.சரியா.
மாறாக கருணாநிதி எது செய்தாலும் அதை கண்மூடிக் கொண்டு ஆதரிப்பது என்ற நிலைபாடுதான்
" மாங்கொட்டைத்தனம் " என மக்கள் மன்றத்தில் சொல்கிறார்கள்
ஜாலி ஜம்பர் மற்றும் சரவணகுமார்,
உங்கள் விவாதங்களை தயவு செய்து இதே போலத் தொடருங்கள். வேறு பதிவில் மும்முரமாய் விட்டதால் தனித்தனியாக பதில் சொல்லமுடியாததை மரியாதைக்குறைவாகக் கருதிவிடாதீர்கள்.
ஜாலிஜம்பர், மற்றவருக்காக நான் பேச முடியாது. ஆனால் நான், எல்லாப்பக்கமும் நாறும் ராமர் பாலம் என்று மதரீதியான காரணங்களுக்காக சேதுசமுத்திரத் திட்டம் கைவிடப்படுவதை எதிர்த்தும், கட்டாயத்தமிழ்க் கல்வியை ஆதரித்தும், ஹோகெனக்கல் பிரச்சினையில் ஆரம்பத்தில் தமிழக அரசின் நிலையை ஆதரித்தும் எழுதியிருந்தேன் - என் பக்கத்தில் தேடினாலே கிடைக்கும். எனக்கு இதை எழுதத் தகுதி இருக்கிறதா இல்லையா? :-)
ச.குமார்,
பார்ப்பனர்களிலும் நூலைக் கழற்றிப் போட்டவர்கள் உண்டு,அதைப் போல பார்ப்பனர் அல்லாதவர்களிலும் நூலைப் பிடித்து தொங்கிக் கொண்டு பார்ப்பனக்கனவிலே திளைப்பவர்களும் உண்டு.அவ்வாறானவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டுமென்று என் அப்பன் பிரிடேட்டரைக் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.
பாலா அய்யா,
பிரியாணியும்,குவாட்டரும் ஒரு லட்ச ரூபாயா?வாங்கி சும்மா சாப்பிடுங்கையா.ஓயாம அதையே நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.
பினா.சு,
நீங்க டோண்டுவின் சாதிவெறிக்கு எதிரானவர் என்று தெரியும்,அதனால உங்க அறச் சீற்றத்துக்கு ஒரு சலாம்.
உங்கள் உணர்வு சரியானதுதான்.
ஆனால், காங்கிரசின் உதவியுடன் ஆட்சி நடத்தும் ஒரு மைனாரிட்டி அரசு வேறு என்ன செய்யமுடியும்?
காங்கிரசுக்கு கர்நாடக சட்டசபை தேர்தலும் வரும் மக்களவைத்தேர்தலும் மிகமுக்கியம், ஆட்சிஅதிகாரத்தை கைப்பற்ற வாய்ப்பிருப்பதால். தமிழகத்தில் திமுகவைவிட்டால் அதிமுக, தேமுதிக என எப்படியும் பிழைப்பு நடத்தமுடியும்.
திமுக இப்போதே திட்டத்தை வற்புறுத்தி ஆட்சியை வேண்டுமானால் இழக்கலாம். அதனால் தமிழருக்கு என்ன லாபம்? அடுத்த ஆட்சிவரும் வரை தாமதம் ஏற்படும்.
இத்திட்டத்தை எப்படியும் செயல்படுத்திடமுடியும், ஆட்சியை தக்கவைப்பதுதான் இன்று முக்கியம்.
ஒருமாதஅமைதி என்பது முதல்வர் - கட்சிதலைவர் என்ற இருநிலைகளுக்கிடையில் எடுக்கப்பட்ட சமயோசித முடிவுதாகத்தான் தெரிகிறது.
திமுக மெஜாரிட்டி அரசாக இருந்தால் காட்சிகள் வேறாக இருக்கும் என்பது என் எண்ணம்.
-தமிழன்
ஜ.ஜம்பர்
கருத்தால் எதிர்க்க முடியாவிட்டால் இந்த மாதிரி தனி மனித மற்றும் ஜாதிய தாக்குதல்களில் இறங்குவது நாம் பார்க்காத ஒன்றா என்ன? இதற்கு அதே தொனியில் பதில் சொல்ல முடிந்தாலும் , பதில் சொல்லி நானும் அதே தராசில் நிற்க மாட்டேன்.
கருத்துக் களத்தில் சந்திக்க எப்போதும் தயாராகவே இருக்கிறேன்.போய் வாருங்கள்.
//
அதனாலேயே லாஜிக்கைவிட அவருடைய டைமிங் அருவருக்கவைக்கிறது!
//
அவருடைய லாஜிக்கும், டைமிங்கும் அருவருக்கதக்கது மட்டுமல்ல, மிகுந்த அவமானம் ஏற்படுத்தக்கூடியதுமாகும். இப்போது ஒக்கேனேக்கலுக்கு வருவது தண்ணீர் அல்ல, "தமிழர்கள் எல்லாம் கோழைகள்" என்று கூறி கன்னடர்கள் நம்மீது துப்பிய காறிதான்!!
Post a Comment